என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு சார்பில் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • புதுவையில் கவர்னர் தமிழிசை 75 அரசு பள்ளிகளுக்கு நேரடியாக செல்ல உள்ளார்.

    புதுச்சேரி:

    நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு சார்பில் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    புதுவையில் கவர்னர் தமிழிசை 75 அரசு பள்ளிகளுக்கு நேரடியாக செல்ல உள்ளார். இதனை தொடங்கினார். இன்று நீடராஜப்பர் வீதியில் உள்ள சவரிராயலு நாயக்கர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார். அவரை மாணவிகள் வரவேற்றனர்.

    பின்னர் அங்கு நடந்த விழாவில் கவர்னர் தமிழிசை பங்கேற்றார். அங்கு பொம்மலாட்ட நிகழ்ச்சி நடந்தது. அதில் விரைவு உணவை தவிர்ப் பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    தொடர்ந்து பள்ளி ஆசிரியர் பொம்மைகள் மூலம் கவர்னரிடம் கேள்வி கேட்கும் நிகழ்ச்சியை நடத்தினார். அதில் தம்பதிகள் கவர்னரிடம் கேள்வி கேட்பதுபோல நிகழ்ச்சி அமைந்தது.

    இதில் புதுவையில் உங்களுக்கு பிடித்த இடம் எது? என கேள்வி கேட்டனர். அதற்கு கவர்னர், பாரதியார் நினைவு இல்லம்தான் எனக்கு பிடித்த இடம் என்று தெரிவித்தார். மேலும் மாணவர்கள் நன்றாக படிக்கவும், விளையாடவும், சாப்பிடவும் வேண்டும். மாணவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றார். உ ங்களுக்கு டாக்டராக இருப்பது விருப்பமா? கவர்னராக இருப்பது விருப்பமா? என்ற கேள்விக்கு பதிலளித்த கவர்னர், டாக்டர் கவர்னர் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    கவர்னராகவோ டாக்டராகவோ வர நம் வேலைகளை, கடமைகளை நிறைவாக செய்ய வேண்டும். அப்போது நீங்கள் விரும்புவது கிடைத்து விடும் என்றார். கொரோனாவை தடுப்பது எப்படி? என கேட்டபோது அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். கிருமிகள் வாய், மூக்கு வழியாகத்தான் நுரையீரலுக்கு செல்கிறது. எனவே வாய், முகத்தை அடைத்துவிட்டால் கிருமி ஏமாந்துபோகும். கைகளை சுத்தமாக வைக்க வேண்டும். வீட்டுக்கு சென்று அம்மா, அப்பா, தாத்தா, பாட்டியிடம் தடுப்பூசி போட்டாச்சா? என கேளுங்கள். போடாவிட்டால் தடுப்பூசி போட சொல்லுங்கள் என்றார்.

    இறுதியில் ஒரு மாணவி, நான் சைக்கிளில் பள்ளிக்கு வருகிறேன். மிகவும் போக்குவரத்து நெரிசலாக உள்ளதே? என கேட்டார். அதற்கு பதிலளித்த கவர்னர், போக்குவரத்து நெரிசலை சீரமைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சைக்கிளில் வரும்போது பாதுகாப்பாகவும், சாலையின் ஓரமாகவும் வர வேண்டும். விரைவில் நெரிசல் சீர் செய்யப்படும் என்று பதிலளித்தார்.

    • காரைக்காலில் வயிற்றுப் போக்கு காரணமாக அப்பகுதி மக்களிடையே பதட்டம் நிலவி வருகிறது.
    • சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை மேற்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காரைக்காலில் வயிற்றுப் போக்கு காரணமாக அப்பகுதி மக்களிடையே பதட்டம் நிலவி வருகிறது. சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 பேருக்கு காலரா நோய் ஏற்பட்டுள்ளது. ஒரு சில அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    முதல்-அமைச்சர் நேரில் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறியதுடன் ரூ.80 கோடியில் பணிகளை தொடங்க உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

    இந்த பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், கண்காணிக்கவும் ஒரு சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரியை அரசு நியமிக்க வேண்டும். மக்களின் பதட்டம் தணியும் வரை தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களை அரசு நடத்த வேண்டும். 30 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட குடிநீர் குழாய்களின் காரணமாகவே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதை இரவு, பகல் பாராமல் பணிகளை மேற்கொண்டு முடிக்க வேண்டும்.

    அசாதாரணமான சூழலில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி அரசியல் செய்வது ஏற்கத்தக்கதல்ல. கூட்டணி அரசு அமைந்து ஒரு ஆண்டுதான் ஆகிறது. இதில் பாதி நாட்கள் கொரோனா பணிகளில் சென்று விட்டது. அரசின் மீது வீண் விமர்சனங்களை நாராயணசாமி வைப்பது ஏற்புடையதல்ல.

    5 ஆண்டுகளாக ஆட்சி செய்த தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி அரசு காரைக் காலுக்கு என்னென்ன பணிகளை செய்தது என்பதை நாராயணசாமி பட்டியலிடுவாரா?

    காரைக்கால் மாவட்டத் திற்கு காங்கிரஸ் கட்சியில் எந்த நலத்திட்டத்தையும் செய்யவில்லை என மக்கள் நன்கு அறிவர். இதுபோன்ற அசாதாரணமான சூழலில் மக்களுக்கும் அரசுக்கும் நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். காரைக்கால் மீது அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • காலரா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை
    • காரைக்காலில் காலரா பரவி நிலை மோசமானதற்கு அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணமாகும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டத்தில் காலரா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தலைமை

    யில் அ.தி.மு.க.வினர் சந்தித்து ஆறுதல் கூறி பிஸ்கட், ரொட்டி, பழம் வழங்கினர். பின்னர், அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

    காரைக்காலில் காலரா பரவி நிலை மோசமானதற்கு அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணமாகும்.

    காரைக்கால் மாவட்ட மக்கள் அதிகாரிகளின் தவறான செயல் பாட்டி னால் விரக்தியின் விளிப்பிற்கு தள்ளப்பட்டு உள்ளனர். முதல்-அமைச்ர் காரைக்கால் மாவட்ட வளர்ச்சி, உட்கட்டமைப்பு, சுகாதாரம் போன்றவற்றில் தனி கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காலராவால் மரணமடைந்த குடும்பத்தினருக்கு நிவாரண உதவியை

    முதல்-அமைச்சர் உடனடியாக அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஓமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. அசனா, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழக உடையார், மாவட்ட இணை செயலாளர் ஜீவானந்தம், துணை செயலாளர் குரு மூர்த்தி மற்றும் காரைக்கால் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

    • புதுவை வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து திருக்காஞ்சி கிராமத்தில் கங்கைவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது.
    • செஞ்சியாறு, கிளிஞ்சி யாறு, வராக நதி என அழைக்கப்படும் சங்கரா பரணி ஆறு கோவிலின் முக்கிய தீர்த்த மாகும்.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து திருக்காஞ்சி கிராமத்தில் கங்கைவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது.

    செஞ்சியாறு, கிளிஞ்சி யாறு, வராக நதி என அழைக்கப்படும் சங்கரா பரணி ஆறு கோவிலின் முக்கிய தீர்த்த மாகும். கோவிலின் கருவறை தஞ்சை பிரகதீஸ்வரர், கங்கை கொண்ட சோழபுரம் கோவில்களின் கருவறை களை ஒத்துள்ளது.

    கங்கைவராக நதீஸ்வரரின் லிங்கம் 16 பட்டைகளைக் கொண்ட மிக அபூர்வமான ஷோடசலிங்க மாகும். இந்த லிங்கத்தை வணங்கினால் முன்னோர் சாபம் நீங்கும். நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்வு உட்பட 16 செல்வங்களையும் அளிக்கும் என்பது ஐதீகம்.

    சுமார் 3 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சிவலிங்கத்தை மாமுனிவர் அகஸ்தியர் பிரதிஷ்டை செய்துள்ளதாக தல புராணம் கூறுகிறது.

    சிறியதாக இருந்த இக்கோவில் சோழர் காலத்தில் உன்னத நிலையை அடைந்தது. ஒவ்வொரு ஆண்டும் மக நட்சத்திரத்தில் நடைபெறும் மாசிமகம் மிகவும் சிறப்பு பெற்றதாகும். சங்கராபரணி ஆறு கிழக்காக திரும்பிக் கடலை நோக்கிச் செல்லும்போது, திருக்காஞ்சியில் வடக்கு நோக்கித் திரும்பிய பின் வங்கக்கடலில் சேர்கிறது. இத்தீர்த்தத்தில் அமாவாசை, பவுர்ணமி, (வெள்ளிக்கிழமை) , மாதப்பிறப்பு, கார்த்திகை, சிவராத்திரி ஆகிய நாட்க ளில் புண்ணிய நீராடலாம்.

    புகழ்பெற்ற இக்கோவி லில் 2023-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு புஷ்கரணி திருவிழா நடக்க உள்ளது.

    இவ்விழாவில் தமிழகம், புதுவையிலிருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக மகா ஆரத்தி உட்பட பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாக படித்துறைகள் கட்டப்பட்டு வருகிறது. காசி விஸ்வநாதர் ஆலயத்தில் உள்ளதுபோல சுவாமியை பொதுமக்களே வழிபடும் வகையில் சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சங்கரா பரணி ஆற்றங்கரையில் 64 அடி உயர பிரம்மாண்ட சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. 20 அடியில் தியான பீடம் அமைக்கப்படுகிறது. இங்கு பக்தர்கள் சிவனின் பாதத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்யலாம். இதற்கு மேல் 44 அடியில் பிரம்மாண்ட 8 அடுக்கு கள் கொண்ட சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்

    படுகிறது. 8 அடுக்குகளிலும் சிவ லிங்கங்கள் அமைக்கப் பட உள்ளது. சிவனின் சிரசு வரை சென்று பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் சிலை அமைக்கப்பட உள்ளது.

    சிவன் சிலை அமைப்பதற்கான பூமிபூஜை விழா இன்று காலை நடந்தது. வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அடிக்கல் எடுத்து வைத்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள், தலைமை அர்ச்சகர் சரவணன் சிவாச்சாரியார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவை விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் சார்பில் சாரம் அவ்வை திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு புதுவை மாநில தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினர்.

    புதுச்சேரி:

    ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரிலும் மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி நகரிலும் 2 பேரை பயங்கரவாதிகள் படுகொலை செய்ததை கண்டித்து புதுவை விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் சார்பில் சாரம் அவ்வை திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு புதுவை மாநில தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினர். துணைத் தலைவர் இளங்கோ முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் வட தமிழ்நாடு மாநில சமுதாய நல்லிணக்க ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் ஆர்ப்பாட்டத்தில் புதுவை செயலாளர் ரவிவர்மன், இணை செயலாளர் தினகரன், பொருளாளர் கோவிந்தன் உள்பட பல கலந்துக் கொண்டனர்.

    • முழுமையான பட்ஜெட் தொடர்பான திட்டக்குழு கூட்டம் தலைமை செயலக கருத்தரங்கு அறையில் இன்று நடந்தது.
    • கடந்த ஆண்டு ரூ.10 ஆயிரத்து 100 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசிடம் புதுவை அரசு அனுமதி கோரியது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச்சில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக பல்வேறு குறுக்கீடுகள் காரணமாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    தொடர்ந்து ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த மார்ச் மாதமும் 5 மாதத்துக்கான இடைக்கால பட்ஜெட்டைதான் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.

    முழுமையான பட்ஜெட் தொடர்பான திட்டக்குழு கூட்டம் தலைமை செயலக கருத்தரங்கு அறையில் இன்று நடந்தது. கவர்னர் தமிழிசை தலைமை வகித்தார். முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய்.ஜெ.சரவணன்குமார், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், செல்வகணபதி, எதிர்கட்சித்தலைவர் சிவா, தலைமை செயலர் ராஜீவ்சர்மா, அரசு செயலர்கள், உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கடந்த ஆண்டு ரூ.10 ஆயிரத்து 100 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசிடம் புதுவை அரசு அனுமதி கோரியது. மத்திய அரசு ரூ.9 ஆயிரத்து 924 கோடிக்கு அனுமதி அளித்தது.

    தற்போது ரூ.11 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேநேரத்தில் ஜி.எஸ்.டி. இழப்பீடு காலக்கெடு முடிவடைந்துள்ளது. இதனால் புதுவை அரசுக்கு ஜி.எஸ்.டி. மூலம் ரூ.ஆயிரத்து 300 கோடி வருவாய் கிடைக்காது.

    இதனால் மத்திய அரசு ஜி.எஸ்.டி. இழப்பீட்டை மேலும் 5 ஆண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என புதுவை அரசு வலியுறுத்தியுள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை செயல்படுத்தவும், புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் நீண்ட விவாதம் நடந்தது.

    • பாகூர் பகுதியை சேர்ந்த மாணவ-மாணவர்கள்
    • ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

    புதுச்சேரி:

    பாகூர் பகுதியை சேர்ந்த மாணவ-மாணவர்கள் செந்தில் குமார் எம்.எல்.ஏ,வை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் படிக்கும் மாணவ மாணவிகள் பயணிப்பதற்கு ஒரு ரூபாய் கட்டணத்தில் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பெருந்தொற்று காலத்திலிருந்து நிரந்தரமாக பஸ்கள் நிறுத்தப்பட்டு விட்டது. அதை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

    மாணவ-மாணவிகளுக்கு வழங்கப் படும் சீருடைகள் காலத்தோடு வழங்கப்படவில்லை அந்த சீருடைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

    மதிய உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் முட்டை வழங்கப்படுவதில்லை அதையும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    மனுவை பெற்றுக் கொண்ட செந்தில்குமார் எம்.எல்.ஏ., இது குறித்து கல்வி துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை இயக்குனரிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

    • தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கருணாநிதி பிறந்தநாள்
    • மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பில் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதி தி.மு.க. சார்பில் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பில் நடைபெற்றது.

    தொகுதி செயலாளர் செயலாளர் செல்வ.பார்த்திபன், பொறுப்பாளர் முகிலன் அல்லிமுத்து தலைமை தாங்கினர்.புதுவை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா, தி.மு.க. செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா ஆகியோர் 1000 பெண்களுக்கு புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா பேசியதாவது:-

    கொரோனா காலத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்ற கடன்கள் ரத்து, மகளிருக்கு இலவச பேருந்து, 2 ½ லட்சம் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு, அரசுப்பணிக்கு வாய்ப்பு இழந்த இளைஞர்களுக்கு 5 ஆண்டுகள் வரை தளர்வு, முந்தைய அரசால் மூடப்பட்ட அனைத்து நூற்பாலைகள், பஞ்சாலைகள் மற்றும் கூட்டுறவு நூற்பாலைகள் திறக்கப்படும்,

    தீவிர சிகிச்சைப் பிரிவில் ரூ.5 ஆயிரத்திற்கு அதிகமாகும் செலவுகளை அரசே ஏற்கும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு தனி தொழில்முனைவோர் மையம் அமைத்து தரப்படும். ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வெள்ளை அரிசி 30 கிலோ வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை தேர்தலின்போது ஆட்சியாளர்கள் வெளியிட்டனர்.

    ஆனால் இதில் ஒன்றைக்கூட செய்யவில்லை. பல ஆயிரம் கோடி மதிப்புடைய மின்துறையை தனியாருக்கு தாரை வார்த்து விட்டனர். உள்ளாட்சி தேர்தலையும் நடத்தவில்லை. அரசு காலிப் பணியிடங்களை நிரப்பவில்லை. இதனால் புதுவை மக்கள் ஆட்சியாளர்கள் மீது அதிருப்தியில் உள்ளனர். விரைவில் புதுவையில் தி.மு.க. ஆட்சி அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பொதுக்கூட்டத்தில் அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், தொகுதி பொறுப்பா ளர்கள் கோபால், கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • இலவச பாடப்புத்தகம் வழங்குதல் நடைபெற்றது.
    • தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கென்னடி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வாம்பகீரபாளையத்தில் உள்ள தட்சணாமூர்த்தி அரசுபள்ளியில் 6முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரசிடமிருந்து இலவச பாடப்புத்தகம் வழங்குதல் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி மாணவ - மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கினார். பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் செயல்படாமல் உள்ளதாக தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கென்னடி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

    அதனை ஏற்று அவர் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் இயங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    இதில் ஊர் பஞ்சாயத்து தலைவர் தனசேகரன், தி.மு.க. தொகுதி செயலாளர் சக்தி வேல் அவை தலைவர் ரவி, தி.மு.க. பிரமுகர் நோயல், இளைஞர் அணி ராஜி, மீனவர் அணி விநாயக மூர்த்தி, கிளை செயலாளர் செல்வம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டனர்.
    • ஆஸ்பத்திரியில் நர்சுகள் தினம் கொண்டாடப்பட்டது.

    புதுச்சேரி:

    தனியார் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் ஓய்வு அறையில் வைத்து சென்ற நர்சின் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டனர்.

    வில்லியனூர் அருகே செம்பியம் பாளையம் கோர்க்காடு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பால பாஸ்கரன். இவரது மகள் மோனிகா (வயது 21). இவர் கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இந்த மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் நர்சுகள் தினம் கொண்டாடப்பட்டது.

    இந்த விழாவில் மோனிகா பரதநாட்டியம் நிகழ்ச்சியில் பங்கேற்க தனது 3 பவுன் தங்க நகைகளை கழற்றி கைபையில் வைத்து ஓய்வு அறையில் வைத்துவிட்டு சென்றார்.

    பின்னர் நிகழ்ச்சி முடிந்துவந்து கைபையை திறந்து பார்த்த போது நகையை காணாமல் மோனிகா அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம நபர்கள் நகையை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

    இது குறித்து மோனிகா கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்தால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆதி திராவிடர் மேம்பாட்டு வரைநிலைக்கழகம்
    • ரூ.48 லட்சம் செலவில் சமுதாய நலக்கூடம்

    புதுச்சேரி:

    புதுவை அரசின் ஆதி திராவிடர் மேம்பாட்டு வரைநிலைக்கழகம் சார்பில் திருபுவனை தொகு திக்குட்பட்ட சின்னபேட்டில் ரூ.26 லட்சம் செலவில் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியும், பெரியபேட் பகுதியில் ரூ.48 லட்சம் செலவில் சமுதாய நலக்கூடம் மற்றும் ரூ.4¼ லட்சம் செலவில் விடுப்பட்ட பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கப்படும் பணியும், கொத்தபுரி நத்தம் சுடுகாட்டு பாதைக்கு ரூ.12¼ லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணிகளை அங்காளன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஆதி திராவிட மேம்பாட்டு வரைநிலைக்கழக அதிகாரிகள், கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கோட்டக்குப்பம் அருகே பா.ஜனதா பிரமுகர் மோட்டார் சைக்கிள் நள்ளிரவில் எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த கோட்டக்குப்பம் சோதனைக்குப்பத்தைச் சேர்ந்தவர் விஜயன் (வயது 38). மீனவரான இவர் பா.ஜனதா கிளை தலைவராக உள்ளார்.

    சம்பவத்தன்று நள்ளிரவு அவரது வீட்டில் வெளியே பலத்த சத்தம் கேட்டது. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த விஜயன் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த போது அவரது மோட்டார் சைக்கிள் தீ பிடித்து எரிந்தது.

    இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு விஜயன் தகவல் தெரிவிக்கவே கோட்டக்குப்பம் போலீசாரும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது விஜயன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கான அடையாளம் இருந்தது. பா.ஜனதா பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட சம்பவம் அறிந்து பா.ஜனதா பிரமுகர்கள் தங்க. சிவகுமார், மாநில மீனவர் அணி செயலாளர் விநாயகம் உள்ளிட்ட பலர் அவரது வீட்டிற்கு வந்து ஆறுதல் தெரிவித்தனர்.

    மேலும் பா.ஜனதாவினர் திரண்டு கோட்டக்குப்பம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராபின்சனிடம் குற்றவாளிகளை கைது செய்ய கோரி புகார் அளித்தனர். மேலும் இது குறித்து கோட்டக்குப்பம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோட்டக்குப்பத்தில் கடந்தாண்டு அ.தி.மு.க. நகர செயலாளர் கணேசன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது மர்மநபர்கள் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசி எரித்த நிலையில் பா.ஜனதா பிரமுகர் விஜயன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கோட்டக்குப்பத்தில் பதட்டத்தை உருவாக்கி உள்ளது.

    ×