என் மலர்

  புதுச்சேரி

  அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பாட புத்தகம்- கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
  X

  இலவச பாடபுத்தகங்களை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.

  அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பாட புத்தகம்- கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இலவச பாடப்புத்தகம் வழங்குதல் நடைபெற்றது.
  • தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கென்னடி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

  புதுச்சேரி:

  உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வாம்பகீரபாளையத்தில் உள்ள தட்சணாமூர்த்தி அரசுபள்ளியில் 6முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரசிடமிருந்து இலவச பாடப்புத்தகம் வழங்குதல் நடைபெற்றது.

  இந்நிகழ்ச்சிக்கு அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி மாணவ - மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கினார். பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் செயல்படாமல் உள்ளதாக தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கென்னடி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

  அதனை ஏற்று அவர் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் இயங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

  இதில் ஊர் பஞ்சாயத்து தலைவர் தனசேகரன், தி.மு.க. தொகுதி செயலாளர் சக்தி வேல் அவை தலைவர் ரவி, தி.மு.க. பிரமுகர் நோயல், இளைஞர் அணி ராஜி, மீனவர் அணி விநாயக மூர்த்தி, கிளை செயலாளர் செல்வம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×