என் மலர்
நீங்கள் தேடியது "Theni Jayakumar"
- புதுவை வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து திருக்காஞ்சி கிராமத்தில் கங்கைவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது.
- செஞ்சியாறு, கிளிஞ்சி யாறு, வராக நதி என அழைக்கப்படும் சங்கரா பரணி ஆறு கோவிலின் முக்கிய தீர்த்த மாகும்.
புதுச்சேரி:
புதுவை வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து திருக்காஞ்சி கிராமத்தில் கங்கைவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது.
செஞ்சியாறு, கிளிஞ்சி யாறு, வராக நதி என அழைக்கப்படும் சங்கரா பரணி ஆறு கோவிலின் முக்கிய தீர்த்த மாகும். கோவிலின் கருவறை தஞ்சை பிரகதீஸ்வரர், கங்கை கொண்ட சோழபுரம் கோவில்களின் கருவறை களை ஒத்துள்ளது.
கங்கைவராக நதீஸ்வரரின் லிங்கம் 16 பட்டைகளைக் கொண்ட மிக அபூர்வமான ஷோடசலிங்க மாகும். இந்த லிங்கத்தை வணங்கினால் முன்னோர் சாபம் நீங்கும். நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்வு உட்பட 16 செல்வங்களையும் அளிக்கும் என்பது ஐதீகம்.
சுமார் 3 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சிவலிங்கத்தை மாமுனிவர் அகஸ்தியர் பிரதிஷ்டை செய்துள்ளதாக தல புராணம் கூறுகிறது.
சிறியதாக இருந்த இக்கோவில் சோழர் காலத்தில் உன்னத நிலையை அடைந்தது. ஒவ்வொரு ஆண்டும் மக நட்சத்திரத்தில் நடைபெறும் மாசிமகம் மிகவும் சிறப்பு பெற்றதாகும். சங்கராபரணி ஆறு கிழக்காக திரும்பிக் கடலை நோக்கிச் செல்லும்போது, திருக்காஞ்சியில் வடக்கு நோக்கித் திரும்பிய பின் வங்கக்கடலில் சேர்கிறது. இத்தீர்த்தத்தில் அமாவாசை, பவுர்ணமி, (வெள்ளிக்கிழமை) , மாதப்பிறப்பு, கார்த்திகை, சிவராத்திரி ஆகிய நாட்க ளில் புண்ணிய நீராடலாம்.
புகழ்பெற்ற இக்கோவி லில் 2023-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு புஷ்கரணி திருவிழா நடக்க உள்ளது.
இவ்விழாவில் தமிழகம், புதுவையிலிருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக மகா ஆரத்தி உட்பட பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாக படித்துறைகள் கட்டப்பட்டு வருகிறது. காசி விஸ்வநாதர் ஆலயத்தில் உள்ளதுபோல சுவாமியை பொதுமக்களே வழிபடும் வகையில் சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சங்கரா பரணி ஆற்றங்கரையில் 64 அடி உயர பிரம்மாண்ட சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. 20 அடியில் தியான பீடம் அமைக்கப்படுகிறது. இங்கு பக்தர்கள் சிவனின் பாதத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்யலாம். இதற்கு மேல் 44 அடியில் பிரம்மாண்ட 8 அடுக்கு கள் கொண்ட சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்
படுகிறது. 8 அடுக்குகளிலும் சிவ லிங்கங்கள் அமைக்கப் பட உள்ளது. சிவனின் சிரசு வரை சென்று பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் சிலை அமைக்கப்பட உள்ளது.
சிவன் சிலை அமைப்பதற்கான பூமிபூஜை விழா இன்று காலை நடந்தது. வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அடிக்கல் எடுத்து வைத்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள், தலைமை அர்ச்சகர் சரவணன் சிவாச்சாரியார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் டெல்லியில் மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது பங்கீட்டுத்துறை மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதியை சந்தித்தார்.
- பெரும்பாலான விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் நெல் நிர்ணயிக்கப்பட்ட தரம் இல்லை என்று கொள்முதல் செய்யப் படுவதில்லை.
புதுச்சேரி:
இந்திய உணவு கழகம்பு துவையில் நெல் கொள்முதலுக்கு தளர்வு அளிக்க வேண்டும் என்று மத்திய உணவு மந்திரியிடம் தேனீ.ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் டெல்லியில் மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது பங்கீட்டுத்துறை மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதியை சந்தித்தார்.
அப்போது, புதுவை யில் இந்திய உணவு கழகம் மூலமாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதில் உள்ள இடர்பாடுகளை தெரிவித்து அதற்கு தீர்வு காணும் விதமாக சில தளர்வுகளை அறிவிக்குமாறு கோரிக்கை வைத்தார்.
புதுவை, காரைக்காலில் 3 ஆண்டுகளாக இந்திய உணவு கழகம் நெல் கொள்முதல் செய்து வருகிறது. ஆனால் உற்பத்தியில் 1-2 சதவீதம் மட்டுமே விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
பெரும்பாலான விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் நெல் நிர்ணயிக்கப்பட்ட தரம் இல்லை என்று கொள்முதல் செய்யப் படுவதில்லை.
கடற்கரை ஓரமாக அமைந்திருப்பதால் பருவகாலத்தில் காற்றின் ஈரப்பதம் அதிகரிப்பதால் அறுவடை நேரத்தில் நெல்மணிகளில் சற்று கருப்பு நிறம் ஏற்படுகிறது.
இதனை ஒரு காரணமாகக் கொண்டு தரம் குறைவாக இருப்பதாக கூறி விவசாயிகளிடமிருந்து இந்திய உணவு கழகம் நெல் கொள்முதல் செய்வதை தவிர்க்கிறது.
எனவே, இந்த காரணத்தை கருத்தில் கொள்ளாமல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்திட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதுகுறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய மந்திரி தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலர் மனோஜ் அஹூஜாவை அமைச்சர் சந்தித்தார். அப்போது மத்திய அரசின் திட்டமான தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் மூலமாக புதுவைக்கு 3 ஆண்டுகளாக நிதி ஒதுக்கவில்லை. இந்த ஆண்டு தேவையான நிதி ஒதுக்க வேண்டும்.
5 ஆண்டுகளாக இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது. இப்போது ரூ.3 கோடி மதிப்பில் திட்ட வரைவு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் தர வேண்டும்.
2020-21 சம்பா பயிர் செய்த விவசாயிகளுக்கு காப்பீடு தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வலியுறுத்தினார்.
இவை அனைத்தையும் உடனடியாக கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய வேளாண்துறை செயலர் உறுதியளித்தார். மேலும் கூடுதல் செயலர் சஞ்சீவ் குமார், கூடுதல் செயலர் அபிலாஷ் லிக்கி, இணைச் செயலர் டாக்டர் விஜயலட்சுமி, இணைச் செயலர் சாவி ஜா, இணைச் செயலர் சாமுவேல் பிரவீன்குமார் மற்றும் இயக்குனர் விஜய் ராஜ்மோகன் ஆகியோரையும் சந்தித்து புதுவைக்கு தேவையான நிதியினை ஒதுக்க அமைச்சர் கோரிக்கை வைத்தார்.
இந்த சந்திப்பின்போது புதுவை வேளாண் செயலர் ரவி பிரகாஷ், அமைச்சரின் தனி செயலர் மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.






