என் மலர்
புதுச்சேரி
- தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறையும் இணைந்து வன மகோற்சவம் விழாவினை நடத்தியது.
- மரங்களின் பயன்பாடு குறித்தும் அதை எவ்வாறு பாதுகாப்பது குறித்தும் பேசினார்
புதுச்சேரி:
மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியும், புதுவை அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறையும் இணைந்து வன மகோற்சவம் விழாவினை நடத்தியது.
ஆசிரியர் சசிக்குமார் வரவேற்றார். பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிசாமி விழாவிற்கு தலைமை தாங்கி வனம் மற்றும் மரங்களின் பயன்பாடு குறித்தும் அதை எவ்வாறு பாதுகாப்பது குறித்தும் பேசினார். அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் ஒருங்கிணைப்பாளர் நித்யா சிறப்புரையாற்றினார்.பள்ளி ஆசிரியர்கள் சுமதி ராகவன், ஜெயசுந்தர், பாவாடைசாமி, பாலிவிஜய், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்
இறுதியாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தென்னரசு, வினோத், சதீஷ், வெங்கடேசன், செல்வபிருந்தா ஆகியோர் செய்திருந்தனர்.
- திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்றம் சார்பில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க கோரி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- விழிப்புணர்வு பேரணிக்கு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்
புதுச்சேரி:
திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்றம் சார்பில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க கோரி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பஸ் நிலையத்தில் தொடங்கிய பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணிக்கு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வானூர் சேர்மன் உஷா பி .கே.டி. முரளி கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்து துணிப்பையை அறிமுகப்படுத்தினார்.
இதில் தி.மு.க. கவுன்சிலர் புவனேஸ்வரி ராமதாஸ், மற்றும் 12 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- முதலியார்பேட்டை தொகுதியில் கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வார கோரிக்கை விடுத்ததின் பேரில் அசோக்பாபு எம்.எல்.ஏ. இதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்.
- அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் டாக்டர் பாலாஜி
புதுச்சேரி:
முதலியார்பேட்டை தொகுதியில் கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வார கோரிக்கை விடுத்ததின் பேரில் அசோக்பாபு எம்.எல்.ஏ. இதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்.
முதலியார் பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் டாக்டர் பாலாஜி தலைமையில் சுகாதார ஆய்வாளர் ரமேஷ், உதவியாளர் அருணாச்சலம் மற்றும் மல்லிகா ஆகியோர் அசோக்பாபு எம்.எல்.ஏ.வை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோயிலிருந்து பொதுமக்களை காக்கும் வகையில் முதலியார்பேட்டை ஜெயமூர்த்தி ராஜா நகரில் உள்ள கழிவுநீர் வாய்க்கால், பாரதிதாசன் நகர் வாய்க்கால் மற்றும் தென்றல் வீதி கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வாரி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இதனையடுத்து அசோக் பாபு எம்.எல்.ஏ. உடனடியாக புதுவை பொதுப்பணித்துறை சுகாதார கோட்ட செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன் கவனத்துக்கு கொண்டு சென்றார். அப்போது கழிவுநீர் வாய்க்கால்களை உடனடியாக தூர்வாரி சுத்தம் செய்வதாக செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் உறுதி அளித்தார்.
- புதுவைக்கு வந்த அவர் பா.ஜனதா சார்பில் நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
- மத்திய மந்திரி எல்.முருகன் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை பா.ஜனதா பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளராக மத்திய இணை மந்திரி எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
3 நாள் பயணமாக புதுவைக்கு வந்த அவர் பா.ஜனதா சார்பில் நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இன்று பா.ஜனதாவின் சமூக ஊடகம், தகவல் தொழில்நுட்பம், ஊடகப் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மறைமலை அடிகள் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.
இதில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், செல்வகணபதி எம்.பி., அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய். ஜெ.சரவணன் குமார், வி.பி. ராமலிங்கம் எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர் மோகன்குமார், ஊடகப்பிரிவு பொறுப்பாளர் அகிலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
8 ஆண்டாக பிரதமர் மோடி சிறந்த ஆட்சியை கொடுத்துள்ளார். எண்ணற்ற சாதனைகளை மத்திய அரசு செய்துள்ளது. மத்திய அரசின் தாரக மந்திரம், சேவை, நல்ல அரசாங்கம், ஏழைகளின் நண்பன் என்பதுதான்.
75-வது சுதந்திர தின ஆண்டை சிறப்பாக கொண்டாடி வருகிறது. 2047-ல் சுதந்திர ஆண்டில் நாடு சிறப்பான வளர்ச்சி மிக்க நாடாக, அனைத்து மக்களுக்கும், அனைத்து அடிப்படை தேவைகளும் கிடைத்திருக்க வேண்டும் என்ற நோக்கோடு செயல்படுகிறது. அனைவரும் இணைந்து, நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதே அரசின் நோக்கம்.
பெஸ்ட் புதுவையை உருவாக்க பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. 8 ஆண்டில் ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேலான திட்டங்களை புதுவைக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புதுவை ரெயில்நிலையம் ரூ.90 கோடியில் மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆயுஷ் மருத்துவமனைகள் ரூ.30 கோடியில் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஊரக மேம்பாடு கட்டமைப்புக்கு ரூ.50 கோடி, ஜிப்மருக்கு ரூ.500 கோடி, ஆயுஷ்மான்பாரத் திட்டத்தின் கீழ் ரூ.1.77 லட்சம் பேர் காப்பீடு அட்டை பெற்றுள்ளனர். விவசாயிகளுக்கு ரூ.21 கோடி வழங்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.ஆயிரத்து 830 கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கி பணிகள் நடந்து வருகிறது.
மத்திய உள்துறை மந்திரி ரூ.600 கோடி திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இன்னும் புதுவையின் வளர்ச்சிக்கு பல திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளது.
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்துக்கு ரூ.80 கோடி கோரியுள்ளனர். விரைவில் இந்த நிதி வழங்கப்படும். நடமாடும் கால்நடை மருத்துவமனை 5 கோரியுள்ளனர். முதல்கட்டமாக ஒன்று வழங்கப்பட்டுள்ளது. விரைவில் கூடுதலாக கால்நடை மருத்துவமனை வழங்கப்படும். மத்திய அரசின் பல திட்டங்கள் இங்கு நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது.
35 ஆயிரம் குடிநீர் இணைப்புகள், கழிப்பறைகள் என மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏழைகளின் நலனுக்காகவும், நல்லாட்சி தரும் அரசாகவும், அடிப்படை தேவைகளை நிறைவேற்றித்தரும் அரசாகவும் செயல்பட்டு வருகிறது. புதுவையின் வளர்ச்சி தேசிய ஜனநாயக கூட்டணியின் வளர்ச்சியாக கருதி பணிகளை செய்து வருகிறோம்.
புதுவையில் இரட்டை ஆட்சி கிடையாது. புதுவை மாநில வளர்ச்சிக்காகவும் மக்கள் நலனுக்காகவும் கவர்னரும், முதல்-அமைச்சரும் இணைந்து பணியாற்றுகிறார்கள். மத்திய அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அவற்றை விரைவுபடுத்த அறிவுறுத்தி உள்ளோம்.
இலங்கை அரசு தொடர்ந்து இந்திய மீனவர்களை கைது செய்து வருகிறது. அவர்களை மீட்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காரைக்கால் மீனவர்களை மீட்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை-இந்திய கூட்டு கூட்டம் நடத்தி பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். இந்த கூட்டத்தை கூட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சீட்டு பணத்தை கேட்ட போது மிரட்டியதால்பெ ண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- புவனேஸ்வரியும், சம்பத்தும் சென்னை கே.கே.நகரில் வசித்து வருகிறார்கள். நீலா தனது இளையமகன் சதீசுடன் காலாப்பட்டில் வசித்து வந்தார்.
புதுச்சேரி:
சீட்டு பணத்தை கேட்ட போது மிரட்டியதால்பெ ண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். புதுவை பெரிய காலாப்பட்டு செல்லியம்மன் நகரை சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி நீலா (வயது58). இவர்களுக்கு ரமேஷ், வெங்கடேசன், சதீஷ் ஆகிய 3 மகன்களும், புவனேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.
புவனேஸ்வரியும், சம்பத்தும் சென்னை கே.கே.நகரில் வசித்து வருகிறார்கள். நீலா தனது இளையமகன் சதீசுடன் காலாப்பட்டில் வசித்து வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு முதல் நீலா பெரிய காலாப்பட்டை சேர்ந்த பாண்டியன் என்பவரிடம் ஏலச்சீட்டு கட்டி வந்தார். தனது பெயரில் 2 சீட்டும், தனது மகள் புவனேஸ்வரி பெயரில் 2 சீட்டு என மாதந்தோறும் பணம் கட்டி வந்தார். ஆனால் ஏலச்சீட்டு முடிந்தும் பாண்டியன் நீலாவுக்கு பணம் தரவில்லை. இதனை அவ்போது நீலா கேட்டு வந்தார். ஆனால் பணம் கொடுக்காமல் பாண்டியன் காலம் தாழ்த்தி வந்தார்.
கடந்த 6-ந் தேதி நீலாவின் 2-வது மகன் ரமேஷ் பாண்டியனிடம் சென்று தனது தாய் மற்றும் சகோதரிக்கு சேரவேண்டிய ஏலச்சீட்டு பணத்தை கொடுக்கும்படி வற்புறுத்தினார். அதற்கு பாண்டியன் உனது அம்மாவிடம் நேரில் பேசிக்கொள்கிறேன் என்று கூறி தகாத வார்த்தையால் திட்டினார். பின்னர் ரமேஷ் அங்கிருந்து சென்று விட்டார்.
இதனைத்தொடர்ந்து நீலா தனது மகன் சதீஷ் மற்றும் புவனேஸ்வரியுடன் வீட்டில் இருந்தார். அப்போது பாண்டியன் 3 பேருடன் அங்கு வந்து நீலாவிடம் பிரச்சினை செய்து பணம் தரமுடியாது. மேலும் உங்களால் எங்களை ஒன்றும் செய்யமுடியாது. மீறி பணம் கேட்டால் குடும்பத்தோடு தீர்த்து கட்டி விடுவோம் என்று மிட்டி விட்டு சென்றனர்.
இதையடுத்து நீலா தனது மகள் புவனேஸ்வரியிடம் சென்று காலாப்பட் போலீசில் புகார் செய்தார். போலீசார் இதன் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் நீலாவும், புவனேஸ்வரியும் வீடு திரும்பினர்.
ஆனால் வீடு திரும்பிய நீலா தொடர்ந்து சோகமாகவே இருந்து வந்தார். மேலும் பாண்டியன் கொலை மிரட்டல் விடுத்ததை எண்ணி நீலா அழுது புலம்பிக்கொண்டிருந்தார். நேற்று மாலை சதீஷ் வெளியே சென்றிருந்தார். அவரது சகோதரி புவனேஸ்வரி குளிக்க சென்ற போது நீலா செடிகள் மற்றும் மாமரத்துக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து விட்டார். சிறிது நேரம் கழித்து புவனேஸ்வரி குளித்து விட்டு வந்து பார்த்த போது தாய் நீலா மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவரை ஆட்டோவில் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியலேயே நீலா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து நீலாவின் மகன் சதீஷ் காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். புகாரில் பாண்டியன் தன்னுடன் 3 பேரை அழைத்து வந்து தனது தாயை மிரட்டியதால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திருமணமான பெண்ணுடன் போட்டோ எடுத்து ஆசைக்கு இணங்க மறுத்ததால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இவர் அருகில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்த திருமணமான 34 வயதுள்ள பெண்ணுடன் பழகி வந்தார்.
புதுச்சேரி:
திருமணமான பெண்ணுடன் போட்டோ எடுத்து ஆசைக்கு இணங்க மறுத்ததால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெட்டப்பாக்கம் அருகே ராமரெட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் என்ற விக்கி. இவர் அருகில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்த திருமணமான 34 வயதுள்ள பெண்ணுடன் பழகி வந்தார். அந்த பெண்ணுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒரு மகன் கல்லூரியிலும், மற்றொரு மகன் பிளஸ்-1 வகுப்பும் படித்து வருகிறார்கள்.
நண்பர் முறையில் பழகி வந்த அந்த பெண்ணிடம் அரவிந்தன் தன்னை காதலிக்குமாறு வலியுறுத்தி வந்தார். ஆனால் அந்த பெண் தனக்கு கணவர் மற்றும் 2 மகன்கள் இருப்பதால் பிரச்சினை ஆகிவிடும் என்று காதலிக்க மறுத்து வந்தார். ஆனால் அரவிந்தன் காதலிக்காவிட்டால் செல்போனில் மட்டும் பேசி பழகி வரலாம் என கூறி அந்த பெண்ணிடம் செல்போன் நம்பரை வாங்கி அடிக்கடி பேசி வந்தார்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணின் கணவர் மற்றும் மகன்கள் இல்லாத நேரத்தில் அரவிந்தன் அங்கு சென்றார். அப்போது போட்டோ எடுத்துக்கொள்ளுமாறு தொடர்ந்து அரவிந்தன் வற்புறுத்தியதால் அந்த பெண் அரவிந்தனுடன் செல்போனில் செல்பி எடுத்துக்கொண்டார்.
அதுமுதல் அரவிந்தன் செல்போனில் பேசி தன்னுடன் ஆசைக்கு இணங்க வேண்டும், இல்லை யென்றால் தன்னுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை உனது கணவர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி அசிங்கப்படுத்தி விடுவேன் என மிரட்டி வந்தார்.
இந்த நிலையில் அந்த பெண் வீட்டில் தனியாக இருந்த போது அங்கு வந்த அரவிந்தன் என்ன புதிய சேலை கட்டிக்கொண்டு மினுமினுக்கிறாய்? என்று கூறி ஆபாச வார்த்தைகளால் திட்டி அந்த பெண்ணின் தலைமுடியை இழுத்து போட்டு கழுத்திலும், முதுகிலும் தாக்கியதோடு கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து அந்த பெண் நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புதுவை கந்தப்ப முதலியார் வீதியை சேர்ந்தவர் காந்திராஜ். பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்.
- விஜய் மோசடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
புதுச்சேரி:
புதுவை கந்தப்ப முதலியார் வீதியை சேர்ந்தவர் காந்திராஜ். பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். இவர் புதுவை பிரெஞ்சு துணை தூதரகத்தில் பரபரப்பு புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
புதுவை கந்தப்ப முதலியார் வீதியில் எனது மாமா செல்வமணி என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. பிரெஞ்சு குடியுரிமை பெற்ற அவர் தற்போது பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீட்டில் லாஸ்பேட்டையை சேர்ந்த விஜய் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு வாடகைக்கு சென்றார். ஆனால் அவர் சரியாக வாடகை செலுத்தாததால் வீட்டை காலி செய்யும்படி கூறியும், அவர் காலி செய்யவில்லை.
இதற்கிடையே விஜய் மோசடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில்சிறையில் இருந்து வெளியே வந்த விஜய், ரவுடிகள் மூலம் அந்த வீட்டை அபகரித்துக் கொண்டார். மேலும் ரவுடிகளை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்
இது தொடர்பாக ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தும், அதனை போலீசார் ஏற்றுக் கொள்ளவில்லை .
2 எம்.எல்.ஏ.க்கள் தூண்டுதலின்பேரில் போலீசார் புகாரை ஏற்க மறுக்கின்றனர். எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ.க்கள் உதவியுடன் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவரின் வீடு அபகரிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகாரால் புதுவை அரசியல் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தவளக்குப்பத்தை அடுத்த பூரணாங்குப்பம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்தர்
- இவர் தனது வீட்டில் நாட்டுக் கோழிகளை வளர்த்து வருகிறார்.
புதுச்சேரி:
கோழிகளை விஷம் வைத்து கொன்றதாக போலீஸ்காரர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
தவளக்குப்பத்தை அடுத்த பூரணாங்குப்பம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்தர் (வயது 34). இவர் தனது வீட்டில் நாட்டுக் கோழிகளை வளர்த்து வருகிறார். இதற்கிடையே அவர் வளர்த்து வந்த நாட்டுக்கோழிகள் மர்மமான முறையில் அவ்வப்போது இறந்தும், சில கோழிகள் மாயமாவதுமாக இருந்து வந்தது.
சில நாட்களுக்கு முன்பு இவர் வீட்டு அருகில் வசிக்கும் ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர் சிவக்குமார் என்ற குமாரின் மகன்கள் பாலச்சந்தரின் 2 கோழி குஞ்சுகளை கொன்று விட்டனர். சிறுவர்கள் என்பதால் அவர்களை பாலசந்தர் கண்டு கொள்ள வில்லை. இந்த நிலையில் பாலசந்தருக்கு சொந்தமான கோழிக்குஞ்சுகள் மற்றும் கோழிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பாலச்சந்தர் தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் தனக்கு சொந்தமான கோழி மற்றும் கோழி குஞ்சுகளை ஐ .ஆர்.பி.என். போலீஸ்காரர் சிவக்குமார் விஷம் வைத்து கொன்று இருக்கலாம் என சந்தேகப்படுவதாக தெரிவித்தார். போலீஸ் உதவி- இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- மாணவனின் இறப்பு இந்த குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு மிகுந்த வருத்தமாக உள்ளது.
- போலீஸ் நிலையத்தில் எந்த புகார் வந்தாலும் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகின்றனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே கூடப்பாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் பிளஸ்-2 மாணவர் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
சாலை விபத்தில் ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு போலீசார் மற்றும் வக்கீல் மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக அந்த மாணவர் வாட்ஸ்-அப் வீடியோ பதிவு செய்திருந்திருந்தார்.
இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் வீட்டிற்கு முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி. காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் ஆகியோர் நேரில் சென்று மாணவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.
அப்போது மாணவனின் பெற்றோர் என் மகன் இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும். அவனது ஆத்மா சாந்தியடைய வீடியோவில் கூறியபடி அனைவருக்கும் தண்டனை கிடைக்க வேண்டும் என்றனர்.
தொடர்ந்து முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
மாணவனின் இறப்பு இந்த குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு மிகுந்த வருத்தமாக உள்ளது.
மாணவனின் இறப்புக்கு காரணமான காவல்துறை அதிகாரி வக்கீல் ஆகியோர் மீது வழக்கு பதியாமல், எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். தற்போது புதுவையில் போலீஸ்துறை ஸ்தம்பித்து போய் உள்ளது.
போலீஸ் நிலையத்தில் எந்த புகார் வந்தாலும் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகின்றனர். கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் இடமாக போலீஸ் நிலையம் மாறியுள்ளது.
இதற்கு காரணம் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆட்சியில் போலீஸ் துறை சீரழிந்துள்ளது தான். மாணவர் மரண வாக்குமூலம் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் போலீசார் எடுக்க வில்லை. கட்டப்பஞ்சாயத்து செய்ய போலீஸ் துறைக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இதுபோன்ற நூற்றுக்கணக்கான வழக்குகள் நடந்து வருகிறது. இந்த வழக்கு தற்போது வெளியே வந்துள்ளது.
போலீஸ் துறையினரின் தவறால் மாணவனை இழந்துள்ளோம். இதற்கு முதல்-அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்.
இந்த துறை அமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? போலீஸ்துறை தலைவர் போலீஸ்துறையை சீரமைக்க வேண்டும். மாணவனின் வாக்குமூலத்தின் படி பணம் பறிக்க முயன்ற காவல் துறை அதிகாரி மற்றும் இறந்ததாக இழப்பீடு கேட்ட வக்கீல் ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதுவையில் வெற்றி பெறுவதற்கான பணிகளை தொடங்க வேண்டும்.
- மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ஜனதா சார்பில் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், மைய குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தமிழ் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் புதுவை பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா பொறுப்பாளரான மத்திய மந்திரி எல்.முருகன் கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:-
2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுவை, ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 144 தொகுதிகளை தேர்வு செய்து அதில் பா.ஜனதா கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணக்கப்பட்டுள்ளது.
அதில் புதுவை பாராளுமன்ற தொகுதியும் ஒன்றாகும். எனவே புதுவையில் வெற்றி பெறுவதற்கான பணிகளை தொடங்க வேண்டும். மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். கட்சியை பலப்படுத்தும் வகையில் வாக்குச்சாவடி அளவில் உறுப்பினர்களை சேர்ப்பது போன்ற பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- குருவிநத்தம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- இதை தொடர்ந்து அம்மன் இரவில் வீதி உலாவும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
புதுச்சேரி:
குருவிநத்தம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து அம்மன் இரவில் வீதி உலாவும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழி நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, மாலை 7 மணிக்கு தீமிதி நடைபெற்றது. இதில், பாகூர், குருவிநத்தம், சோரியாங்குப்பம் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவிழாவில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- புதுவை மாநிலத்தில் 4 பிராந்தியங்களிலும் புதிய நில வணிகத்திற்கு அனுமதி வழங்காமல் கடந்த ஓராண்டாக அரசுக்கு ரூ.100 கோடிக்குமேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது
- புதிய நில வணிக மனை முறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பு பணிகள் தொடர்ந்து அரசு துறைகளில் நடை பெற்று வருகிறது.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க. துணை அமைப்பாளரும், உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் 4 பிராந்தியங்களிலும் புதிய நில வணிகத்திற்கு அனுமதி வழங்காமல் கடந்த ஓராண்டாக அரசுக்கு ரூ.100 கோடிக்குமேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. புதிய நில வணிக மனை முறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பு பணிகள் தொடர்ந்து அரசு துறைகளில் நடை பெற்று வருகிறது.
இது முதல்-அமைச்ச ருக்கு தெரிந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. புதிய மனைப்பிரிவுக்காக காத்துக் கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் புதிய மனைப் பிரிவிற்கு விண்ணப்பித்தால் 40 நாட்களில் அனுமதி கிடைத்து விடுகிறது. மேலும் அரசுக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கிறது. சின்னஞ்சிறிய மாநிலமான புதுவையில் மிக மோசமான நிலைமைக்கு யார் இட்டு சென்றார்கள்? என்பதனை கண்டறிந்து உடனடி நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.
மேலும் புதிய மனைப்பிரிவுக்கு விண்ண ப்பித்த அனைவருக்கும் அனுமதி அளித்து, நில வணிகம் மேம்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலவணிகம் செம்மையுடன் நடை பெற்றால் புதுவை மாநிலத்தினுடைய வருவாய்பெருகும், நட வடிக்கை எடுக்காவிட்டால் தி.மு.க. சார்பில் மிகப் பெரிய போராட்டத்தை நடத்த நேரிடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






