என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dig sewers"

    • முதலியார்பேட்டை தொகுதியில் கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வார கோரிக்கை விடுத்ததின் பேரில் அசோக்பாபு எம்.எல்.ஏ. இதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்.
    • அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் டாக்டர் பாலாஜி

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை தொகுதியில் கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வார கோரிக்கை விடுத்ததின் பேரில் அசோக்பாபு எம்.எல்.ஏ. இதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்.

    முதலியார் பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் டாக்டர் பாலாஜி தலைமையில் சுகாதார ஆய்வாளர் ரமேஷ், உதவியாளர் அருணாச்சலம் மற்றும் மல்லிகா ஆகியோர் அசோக்பாபு எம்.எல்.ஏ.வை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோயிலிருந்து பொதுமக்களை காக்கும் வகையில் முதலியார்பேட்டை ஜெயமூர்த்தி ராஜா நகரில் உள்ள கழிவுநீர் வாய்க்கால், பாரதிதாசன் நகர் வாய்க்கால் மற்றும் தென்றல் வீதி கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வாரி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இதனையடுத்து அசோக் பாபு எம்.எல்.ஏ. உடனடியாக புதுவை பொதுப்பணித்துறை சுகாதார கோட்ட செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன் கவனத்துக்கு கொண்டு சென்றார். அப்போது கழிவுநீர் வாய்க்கால்களை உடனடியாக தூர்வாரி சுத்தம் செய்வதாக செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் உறுதி அளித்தார்.

    ×