search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற வேண்டும்- எல்.முருகன்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற வேண்டும்- எல்.முருகன்

    • புதுவையில் வெற்றி பெறுவதற்கான பணிகளை தொடங்க வேண்டும்.
    • மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதா சார்பில் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், மைய குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தமிழ் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் புதுவை பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா பொறுப்பாளரான மத்திய மந்திரி எல்.முருகன் கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:-

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுவை, ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 144 தொகுதிகளை தேர்வு செய்து அதில் பா.ஜனதா கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணக்கப்பட்டுள்ளது.

    அதில் புதுவை பாராளுமன்ற தொகுதியும் ஒன்றாகும். எனவே புதுவையில் வெற்றி பெறுவதற்கான பணிகளை தொடங்க வேண்டும். மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். கட்சியை பலப்படுத்தும் வகையில் வாக்குச்சாவடி அளவில் உறுப்பினர்களை சேர்ப்பது போன்ற பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×