search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
    X

    திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்த காட்சி.

    திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

    • குருவிநத்தம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • இதை தொடர்ந்து அம்மன் இரவில் வீதி உலாவும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    குருவிநத்தம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து அம்மன் இரவில் வீதி உலாவும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழி நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, மாலை 7 மணிக்கு தீமிதி நடைபெற்றது. இதில், பாகூர், குருவிநத்தம், சோரியாங்குப்பம் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    திருவிழாவில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    Next Story
    ×