என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய மந்திரி முருகன்"

    • வில்லியனூரில் நரிக்குறவர்களுடன் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்துரையாடி நலத்திட்ட உதவிகள் வழங்கி குறைகளை கேட்டறிந்தார்.
    • வில்லியனூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆயுஷ்மான் மருத்துவமனையை பார்வையிட்டு பணிகள் குறித்து விபரங்களை கேட்டறிந்தார்.

    புதுச்சேரி:

    புதுவையில் 3 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட மத்திய மந்திரி முருகன், வில்லியனூர் கூடப்பாக்கம் சாலையில் வசிக்கும் நரிக்குறவர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    அப்போது, நரிக்குறவர்கள் மனைப்பட்டா வழங்கி, அடிப்படை வசதி செய்து தரக்கோரினர். அவர்களிடம், இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய மந்திரி கூறினார்.

    அதனை தொடர்ந்து வில்லியனூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆயுஷ்மான் மருத்துவமனையை பார்வையிட்டு பணிகள் குறித்து விபரங்களை கேட்டறிந்தார். அப்போது ஆயுர்வேத மருத்துவத்துறை இயக்குனர் ஜெயந்தி, மருத்துவமனை இந்த ஆண்டு இறுதிக்குள் திறப்பு விழா நடத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், மாநில தலைவர் சாமிநாதன், பொதுச்செயலாளர் மோகன்குமார், மாவட்டத் தலைவர் ஆனந்தன், தொகுதி பொறுப்பாளர்கள் கண்ணபிரான், செந்தில்குமரன், மாவட்ட துணைத் தலைவர் விஜயலட்சுமி கலந்துகொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதுவைக்கு வந்த அவர் பா.ஜனதா சார்பில் நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
    • மத்திய மந்திரி எல்.முருகன் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை பா.ஜனதா பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளராக மத்திய இணை மந்திரி எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    3 நாள் பயணமாக புதுவைக்கு வந்த அவர் பா.ஜனதா சார்பில் நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இன்று பா.ஜனதாவின் சமூக ஊடகம், தகவல் தொழில்நுட்பம், ஊடகப் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மறைமலை அடிகள் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.

    இதில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், செல்வகணபதி எம்.பி., அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய். ஜெ.சரவணன் குமார், வி.பி. ராமலிங்கம் எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர் மோகன்குமார், ஊடகப்பிரிவு பொறுப்பாளர் அகிலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    8 ஆண்டாக பிரதமர் மோடி சிறந்த ஆட்சியை கொடுத்துள்ளார். எண்ணற்ற சாதனைகளை மத்திய அரசு செய்துள்ளது. மத்திய அரசின் தாரக மந்திரம், சேவை, நல்ல அரசாங்கம், ஏழைகளின் நண்பன் என்பதுதான்.

    75-வது சுதந்திர தின ஆண்டை சிறப்பாக கொண்டாடி வருகிறது. 2047-ல் சுதந்திர ஆண்டில் நாடு சிறப்பான வளர்ச்சி மிக்க நாடாக, அனைத்து மக்களுக்கும், அனைத்து அடிப்படை தேவைகளும் கிடைத்திருக்க வேண்டும் என்ற நோக்கோடு செயல்படுகிறது. அனைவரும் இணைந்து, நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதே அரசின் நோக்கம்.

    பெஸ்ட் புதுவையை உருவாக்க பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. 8 ஆண்டில் ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேலான திட்டங்களை புதுவைக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புதுவை ரெயில்நிலையம் ரூ.90 கோடியில் மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஆயுஷ் மருத்துவமனைகள் ரூ.30 கோடியில் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஊரக மேம்பாடு கட்டமைப்புக்கு ரூ.50 கோடி, ஜிப்மருக்கு ரூ.500 கோடி, ஆயுஷ்மான்பாரத் திட்டத்தின் கீழ் ரூ.1.77 லட்சம் பேர் காப்பீடு அட்டை பெற்றுள்ளனர். விவசாயிகளுக்கு ரூ.21 கோடி வழங்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.ஆயிரத்து 830 கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கி பணிகள் நடந்து வருகிறது.

    மத்திய உள்துறை மந்திரி ரூ.600 கோடி திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இன்னும் புதுவையின் வளர்ச்சிக்கு பல திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளது.

    காரைக்கால் மீன்பிடி துறைமுகத்துக்கு ரூ.80 கோடி கோரியுள்ளனர். விரைவில் இந்த நிதி வழங்கப்படும். நடமாடும் கால்நடை மருத்துவமனை 5 கோரியுள்ளனர். முதல்கட்டமாக ஒன்று வழங்கப்பட்டுள்ளது. விரைவில் கூடுதலாக கால்நடை மருத்துவமனை வழங்கப்படும். மத்திய அரசின் பல திட்டங்கள் இங்கு நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது.

    35 ஆயிரம் குடிநீர் இணைப்புகள், கழிப்பறைகள் என மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏழைகளின் நலனுக்காகவும், நல்லாட்சி தரும் அரசாகவும், அடிப்படை தேவைகளை நிறைவேற்றித்தரும் அரசாகவும் செயல்பட்டு வருகிறது. புதுவையின் வளர்ச்சி தேசிய ஜனநாயக கூட்டணியின் வளர்ச்சியாக கருதி பணிகளை செய்து வருகிறோம்.

    புதுவையில் இரட்டை ஆட்சி கிடையாது. புதுவை மாநில வளர்ச்சிக்காகவும் மக்கள் நலனுக்காகவும் கவர்னரும், முதல்-அமைச்சரும் இணைந்து பணியாற்றுகிறார்கள். மத்திய அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அவற்றை விரைவுபடுத்த அறிவுறுத்தி உள்ளோம்.

    இலங்கை அரசு தொடர்ந்து இந்திய மீனவர்களை கைது செய்து வருகிறது. அவர்களை மீட்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காரைக்கால் மீனவர்களை மீட்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    இலங்கை-இந்திய கூட்டு கூட்டம் நடத்தி பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். இந்த கூட்டத்தை கூட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 8 ஆண்டில் எண்ணற்ற சாதனைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
    • 70 ஆண்டு காலம் காங்கிரஸ் செய்யாததை 8 ஆண்டுகளில் பாரதிய ஜனதா அரசு செய்து முடித்துள்ளது.

    சேலம்:

    மத்திய மந்திரி எல்.முருகன் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய பா.ஜ.க. அரசு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. அந்த வகையில் 8 ஆண்டில் எண்ணற்ற சாதனைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. 70 ஆண்டு காலம் காங்கிரஸ் செய்யாததை 8 ஆண்டுகளில் பாரதிய ஜனதா அரசு செய்து முடித்துள்ளது.

    வீடு தோறும் கழிவறை வசதி, சுகாதாரமான குடிநீர் திட்டம், அனைவருக்கும் வங்கி கணக்கு ,விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் நிதி உதவி, உணவு பாதுகாப்பு சட்டம் ,சிறு நகரங்களில் விமான நிலையம்,கடல்பாசி ஆராய்ச்சி மையம் என ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    தி.மு.க. அரசு குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாகவும் மானிய விலையில் டீசல் வழங்குவதாகவும் , மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி செய்வதாகவும் வாக்குறுதிகளை கூறி ஆட்சியை பிடித்தது. ஆனால் தி.மு.க. அந்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

    இதனால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே சட்டம்-ஒழுங்கு மோசமாகும் .அதேபோல் தற்போது மோசமான நிலையில் உள்ளது. சேலத்தில் ராணுவ உதிரி பாகங்கள் தொழிற்சாலை, ஜவுளி பூங்கா விரைவில் அமைக்கப்பட உள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க உத்தரவிட்டுள்ளார். இதனால் வேலை இல்லாத இளைஞர்கள் பயன்பெறுவார்கள் . தமிழக கவர்னர் விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட சில அரசியல் கட்சியினர் விளம்பரத்துக்காக பேசி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×