என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "giving permission"

    • புதுவை மாநிலத்தில் 4 பிராந்தியங்களிலும் புதிய நில வணிகத்திற்கு அனுமதி வழங்காமல் கடந்த ஓராண்டாக அரசுக்கு ரூ.100 கோடிக்குமேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது
    • புதிய நில வணிக மனை முறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பு பணிகள் தொடர்ந்து அரசு துறைகளில் நடை பெற்று வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. துணை அமைப்பாளரும், உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் 4 பிராந்தியங்களிலும் புதிய நில வணிகத்திற்கு அனுமதி வழங்காமல் கடந்த ஓராண்டாக அரசுக்கு ரூ.100 கோடிக்குமேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. புதிய நில வணிக மனை முறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பு பணிகள் தொடர்ந்து அரசு துறைகளில் நடை பெற்று வருகிறது. 

    இது முதல்-அமைச்ச ருக்கு தெரிந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. புதிய மனைப்பிரிவுக்காக காத்துக் கொண்டுள்ளனர்.

    தமிழ்நாட்டில் புதிய மனைப் பிரிவிற்கு விண்ணப்பித்தால் 40 நாட்களில் அனுமதி கிடைத்து விடுகிறது. மேலும் அரசுக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கிறது. சின்னஞ்சிறிய மாநிலமான புதுவையில் மிக மோசமான நிலைமைக்கு யார் இட்டு சென்றார்கள்? என்பதனை கண்டறிந்து உடனடி நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.

    மேலும் புதிய மனைப்பிரிவுக்கு விண்ண ப்பித்த அனைவருக்கும் அனுமதி அளித்து, நில வணிகம் மேம்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலவணிகம் செம்மையுடன் நடை பெற்றால் புதுவை மாநிலத்தினுடைய வருவாய்பெருகும், நட வடிக்கை எடுக்காவிட்டால் தி.மு.க. சார்பில் மிகப் பெரிய போராட்டத்தை நடத்த நேரிடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×