என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • காலாப்பட்டு தொகுதி கனகசெட்டிக்குளத்தில் மீனவர்கள் சந்திப்பு மற்றும் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது. கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. வரவேற்றார்
    • எம்.பி. பா.ஜனதா பொதுச் செயலாளர் மோகன் குமார், பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    காலாப்பட்டு தொகுதி கனகசெட்டிக்குளத்தில் மீனவர்கள் சந்திப்பு மற்றும் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது. கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. வரவேற்றார். இதில் பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் சாமிநாதன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், செல்வகணபதி

    எம்.பி. பா.ஜனதா பொதுச் செயலாளர் மோகன் குமார், பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மத்திய மீன்வளத் துறை இணை மந்திரி எல்.முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    குறைகேட்பு நிகழ்ச்சியில் மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகள் மத்திய மந்திரி எல்.முருகனுக்கு கோரிக்கை வைத்து பேசியதாவது:-

    மீனவ சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும். சுருக்கு வலையால் பல்லாயிரம் மீனவ குடும்பங்கள் பிழைக்கிறது.

    எனவே சுருக்கு வலையை அனுமதிக்க வேண்டும். தமிழக பகுதியான பொம்மை யார்பாளையத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டதால் காலாப்பட்டு மீனவ பகுதிகளில் 4 கிராமங்கள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது.

    4 கிராமங்களும் பாதிக்காத வகையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். 

    மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய கடல் மீன்வள மசோதாவை திரும்ப பெற வேண்டும். மரக்காணத்திலிருந்து புதுவை வரை அமைக்கப்படவுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும்.

    புதுவை மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் 2 தொகுதிகளை மீனவ பிரதிநிதிகளுக்கு ஒதுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதில் அளித்து மத்திய மந்திரி எல். முருகன் சுபேசியதாவது:-

    சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பில் இருந்த பொழுதும், காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியில் இருந்த பொழுதும் இதுவரைக்கும் மீனவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி வெறும் 3000 கோடி.

    2014 முதல் இதுவரை நரேந்திர மோடி பிரதமராக ஆட்சி பொறுப்பேற்று 8 ஆண்டுகளில் மீனவ மக்களுக்காக மீன்வள புரட்சிக்காக துறைமுகங்கள் கட்டுவதற்காக கடல் சார்ந்த மேம்பாட்டிற்காக மீன் தொழில் ஏற்றுமதிக்காக இதுவரை 32,500 கோடி மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.

    கொரோனா கால கட்டத்தில் அனைத்து துறைகளும் பாதிப்படைந்த பொழுது இந்திய நாட்டிற்கு ஏற்றுமதியில் 30 சதவீத அதிக வருவாயை கொடுத்தது மீன்கள் ஏற்றுமதி தான். நாட்டின் வளர்ச்சிக்கு மீனவர்கள் முக்கியமானவர்கள். வெளி நாட்டு கப்பல்கள் இந்திய கடலோர எல்லையில் 200 நாட்டிக்கல் மைல் தாண்டி வருவதை தடுப்பதற்காக திட்டங்கள் போடப்பட்டுள்ளது.

    நம் நாட்டு மீனவர்கள் 12 நாட்டிக்கல் மைல் வரை மீன்பிடிப்பதற்கு எந்த தடையும் இல்லை. ஆழ் கடலில் மீன் பிடிக்கும் படகு வாங்குவதற்கு மத்திய அரசு ரூ. 1,065 கோடி ஒதுக்கி உள்ளது.

    இதில் 60 சதவீதம் மத்திய அரசு மாநில மானியமாக வழங்குகிறது. மீனவ கிராம வளர்ச்சிக்காக 100 மீனவ கிராமங்களை தேர்வு செய்து ஒவ்வொரு மீனவ கிராமத்தில் உள்கட்டமை வசதிக்காக 5 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருகிறது.

    மீன்பிடி தொழில் மட்டுமல்லாது கடல் சார்ந்த மாற்று தொழில்களில் மீனவர்கள் முன்னேறுவதற்கும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அக்குவா ஸ்போர்ட்ஸ், கியூபா டிரைவிங், மீன்வள அருங்காட்சியகம் ஆகிய தொழில்களில் மீனவர்கள் ஈடுபட வேண்டும்.

    சுருக்குவலையை பொறுத்த வரை ஒரு கிராமம் ஒரு மாதிரி இருக்கிறது. மற்றொரு கிராமம் ஒரு மாதிரி இருக்கிறது.

    எனவே அனைத்து கிராம மீனவ பிரதிநிதிகளை அழைத்துப் பேசி சுருக்கு வலைக்கு உரிய தீர்வு காணப்படும். மேலும் மீனவர் பிரதிநிதிகள் கொடுத்துள்ள மனுக்கள் மற்றும் கோரிக்கைகளை பரிசீலனை செய்து மீனவர்களின் நலனில் அக்கறை செலுத்தும் கட்சியாக பா.ஜனதா திகழும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவனை சமூக வலைதளங்களில் அர்ஜுன் சம்பத் இழிவாக விமர்சித்துள்ளார்.
    • ஏம்பலம் தொகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    புதுச்சேரி:

    விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவனை சமூக வலைதளங்களில் அர்ஜுன் சம்பத் இழிவாக விமர்சித்துள்ளார்.

    இது விடுதலை சிறுத்தை கட்சியினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனை கண்டித்து பாகூர் மற்றும் ஏம்பலம் தொகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    வபம்பாபேட் விடுதலை சிறுத்தை கட்சியின் முகாம் செயலாளர் சதீஷ் தலைமை தாங்கினார். வண்ணாங்குளம் முகம் செயலாளர் இரா சதீஷ், ஜெகன், விஜயகுமார் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர்.

    பாகூர் தொகுதி பொறு ப்பாளர் காளியப்பன் கண்டன உரை நிகழ்த்தினார். தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் கிருமாம்பாக்கம் கடலூர்- புதுவை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    அப்போது அர்ஜுன் சம்பத் உருவப்படத்தை திடீர் என்று எரித்து கோஷம் எழுப்பினர். அர்ஜுன் சம்பத்தை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்தனர். இந்த திடீர் சாலை மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • புதுவை சுகாதார துறையின் கீழ் இயங்கும் 108 ஆம்புலன்ஸ்களுக்கு 42 டிரைவர்கள் உள்ளனர்.
    • இவர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படவில்லை. இதற்காக அடிக்கடி போராடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை சுகாதார துறையின் கீழ் இயங்கும் 108 ஆம்புலன்ஸ்களுக்கு 42 டிரைவர்கள் உள்ளனர்.

    இவர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படவில்லை. இதற்காக அடிக்கடி போராடி வருகின்றனர். இந்நிலையில்ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜா என்பவர் சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமலு அலுவலகத்திற்கு வந்தார். அவர் திடீரென கையில் வைத்திருந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றி கொண்டார். பின்னர் தீப்பெட்டியை இயக்குனரிடம் கொடுத்து கொளுத்தும்படி கூறினார்.

    42 டிரைவர்களுக்கு சம்பளம் வழங்க முதல்-அமைச்சர் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்களை கொளுத்தி கொல்லுங்கள் என வேதனையுடன் தெரிவித்தார். அவரை சமாதானப்படுத்திய இயக்குனர், சம்பளம் வழங்க நிதித்துறையைத்தான் அனுக வேண்டும் என தெரிவித்தார்.

    அங்கிருந்த ஊழியர்கள் ராஜா மீது தண்ணீரை ஊற்றி இயக்குனரின் காரில் முன் இருக்கையில் அமரவைத்து அனுப்பினர். இதனால் இயக்குனர் அலுவலக வளாகத்தில் 15 நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது.

    • இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் ஓமியோபதி மருத்துவர்கள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் காமராஜ் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.
    • இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் ஓமியோபதி மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் பிரகாஷ் ராவ் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் ஓமியோபதி மருத்துவர்கள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் காமராஜ் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.

    இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் ஓமியோபதி மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் பிரகாஷ் ராவ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் டாக்டர் பாலாஜி முன்னிலை வைத்தார், சிறப்பு விருந்தினராக தேசிய ஓமியோபதி ஆணையத்தின் தலைவர் டாக்டர் திரிவேதி, புதுவை மாநிலத்தில் மாநில ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் தொடங்குவதால் ஏற்படும் நன்மைகளையும், வருங்கால வளர்ச்சி குறித்தும் விவரித்தார்.

    தேசிய ஹோமியோபதி ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் செந்தில்ஜெகதீசன் வாழ்த்தி பேசினார். விழிப்புணர் நிகழ்ச்சியில் புதுவை மாநில ஓமியோபதி பயிற்சி பெற்ற மருத்துவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • புதுவை நெல்லித்தோப்பு பெரியார் நகர் 9-வது குறுக்குத் தெருவை சேர்ந்த வர்லெனின்.
    • மூக வலைதளத்தில் சென்னை விமான நிலைய நிறுவனத்துக்கு கஸ்டமர்ஸ் சர்வீஸ் பணிக்கு ஆட்கள் தேவை என்று தகவல் வந்ததையடுத்து அந்த நிறுவனத்துக்கு இ.மெயில் மூலம் விண்ணப்பித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பு பெரியார் நகர் 9-வது குறுக்குத் தெருவை சேர்ந்த வர் லெனின். இவரது மனைவி ஜனனி.

    கடந்த ஆண்டு இவர் சமூக வலைதளத்தில் சென்னை விமான நிலைய நிறுவனத்துக்கு கஸ்டமர்ஸ் சர்வீஸ் பணிக்கு ஆட்கள் தேவை என்று தகவல் வந்ததையடுத்து அந்த நிறுவனத்துக்கு இ.மெயில் மூலம் விண்ணப்பித்தார்.

    அப்போது அந்த நிறுவன பெண் அனுசிங் மற்றும் பங்கஜ் ஆனந்த், ஹேமாகோபால்ரத்தினம் ஆகிய 3 பேர் ஜனனியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு சிறுக சிறுக ஜனனியிடம் ரூ.16 லட்சத்து 48 ஆயிரத்து 680-ஐ பெற்றனர்.

    ஆனால் அவர்கள் விமான நிறுவனத்தில் வேலை வாங்கி தரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஜனனி இதுகுறித்து புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட்ட டெல்லியை சேர்ந்த லனன் குமாரை கைது செய்தனர்.

    இதேபோல் புதுவையை சேர்ந்த அன்லா ஜெயில் என்பவரிடம் கனடாவிலிருந்து போன்மூலம் தொடர்பு கொண்டு ரூ.41 லட்சத்து 71 ஆயிரத்தை மோசடி செய்த மணிப்பூரை சேர்ந்த ரோனால் சிங் என்றவரையும்,

    இதேபோல் புதுவையை சேர்ந்த சுைனனா நாரக்கிடம் கல்யாணம் செய்வதாக ஆன்லைன் ஆப் மூலம் தொடர்பு கொண்டு பேசிய கனடாவை சேர்ந்த அந்த மர்ம நபர் நான் டாக்டர் எனவும் சொந்தமாக ஆஸ்பத்திரி கட்டுவதற்காக பணம் தேவபைடுவதாக கூறி அந்த பெண்ணிடம் ரூ.54 லட்சம் மோசடி செய்தார். பின்னர் அந்த நபர்குறித்து விசாரணை நடத்தியதில் அந்த நபர் நைஜீரியாவை சேர்ந்த இமானுவேல் என்பது தெரியவந்தது. இந்த 3 மோசடி வழக்கிலும் தொடர்புடைய 3 பேரை சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் கைது செய்து இன்று புதுவை அழைத்து வந்தனர்.பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிலைறயில் அடைக்கின்றனர்.லனன்குமாரிடமிருந் ரூ.4.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

    • புதுவை சேதராப்பட்டில் இயங்கிவரும் தனியார் தொழிற்சாலை திடீர் கதவடைப்பு செய்துள்ளது.
    • இவர்களுக்கு ஆதரவாக ஜனநாயக தொழிலாளர் சங்கம் சார்பில் கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலம் நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை சேதராப்பட்டில் இயங்கிவரும் தனியார் தொழிற்சாலை திடீர் கதவடைப்பு செய்துள்ளது.

    இங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் மீண்டும் பணி வழங்கக்கோரி பல கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக ஜனநாயக தொழிலாளர் சங்கம் சார்பில் கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலம் நடந்தது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் பலர் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

    பணி நீக்கம் செய்யப்பட்ட 300 பேருக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும், தொழிலாளர் நலச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அண்ணா சாலையில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது.

    தள்ளு முள்ளு

    நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்த தொழிலாளர்களை ஆம்பூர் சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது தொழிலாளர்களுக்கும் போலீசாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    • புதுவையில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக படிப்படியாக உயர்ந்து வருகிறது.
    • இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 194 பேருக்கு புதிதாக தொற்று பரவியுள்ளது. புதுவையில் 2 ஆயிரத்து 377 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 194 பேருக்கு புதிதாக தொற்று பரவியுள்ளது. புதுவையில் 2 ஆயிரத்து 377 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 159, காரைக்காலில் 28, ஏனாமில் 6 , மாகியில் ஒருவர் என புதிதாக 194 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    புதுவையில் 9, காரைக்காலில் 2, ஏனாம், மாகியில் தலா ஒருவர் என 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 588, காரைக்காலில் 113, ஏனாமில் 34 பேர் என 735 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவையில் 82, காரைக்காலில் 13, ஏனாமில்12, மாகியில் 2 பேர் என 109 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.

    மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 49 ஆயிரத்து 414 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

    இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா நெறி முறைகளை தொடரவும், அனைவரும் முக கவசம் அணியவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடற்கரை சாலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுத்தப்படுத்தும் பணி நடந்தது.
    • புதுவையில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் தவிர்க்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா பொறுப்பாளராக மத்திய மந்திரி எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதையடுத்து மத்திய மந்திரி எல்.முருகன் புதுவைக்கு அடிக்கடி வந்து மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.

    அதுபோல் 3 நாள் பயணமாக மத்திய மந்திரி எல்.முருகன் புதுவைக்கு நேற்று வந்தார். நேற்று காரைக்கால் மாவட்டத்துக்கு சென்ற அவர் அங்கு காலராவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அரசு ஆஸ் பத்திரியில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

    2-வது நாளாக இன்று புதுவையில் பா.ஜனதா சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிககளில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார்.

    கடற்கரை சாலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுத்தப்படுத்தும் பணி நடந்தது. கடற்கரை சாலை தலைமை செயலகம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் குப்பைகளை அள்ளி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இசைஞானி இளைய ராஜாவிற்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கொடுத்திருப்பது நாட்டிற்கே கிடைத்த கவுரவம். இளையராஜாவின் திறமையின் மூலமும், இசையின் சாதனைகள் மூலமும் நாட்டு மக்களை கட்டிப்போட்டவர்.

    புதுவையில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் இல்லாத புதுவையை உருவாக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக துணிபையை பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உப்பளம் தொகுதியில் 14-க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைமாஸ் மற்றும் மினிமாஸ் மின்விளக்குகள் எரியாமல் இருந்து வந்தது.
    • இது குறித்து தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி மின்துறை ஹைமாஸ் பிரிவு உதவி பொறியாளர் மோகன் ராஜாவை சந்தித்து பேசினார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதியில் 14-க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைமாஸ் மற்றும் மினிமாஸ் மின்விளக்குகள் எரியாமல் இருந்து வந்தது. இது குறித்து தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி மின்துறை ஹைமாஸ் பிரிவு உதவி பொறியாளர் மோகன் ராஜாவை சந்தித்து பேசினார். எம்.எல்.ஏ.வின் கோரிக்கை ஏற்று 2 நாட்களில் மின்விளக்குகள் சரி செய்து தரப்படும் என மின்துறை உதவி பொறியாளர் மோகன் ராஜா உறுதியளித்தார். இந்த சந்திப்பின் போது தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல், அவை தலைவர் ரவி, மாநில இளைஞர் துணை அமைப்பாளர் ஆரோக்கிய ராஜ், அசோக், கணேசன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சென்னை - நாகப் பட்டினம் 4 வழி சாலை விரிவாக்க பணிக்காக எம்.என்.குப்பத்திலிருந்து கெங்கராம் பாளையம் வரை 500-க்கும் மேற்பட்ட மின்விளக்குகளை சாலையில் இருந்து அகற்றி உள்ளார்கள்.
    • சாலையின் இரு புறமும் உயர் மின்ன ழுத்த டவர்கள் மற்றும் சாலை ஓரம் சிறிய டவர்கள் அமைத்து மின்சாரத்தை வழங்கி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    சென்னை - நாகப் பட்டினம் 4 வழி சாலை விரிவாக்க பணிக்காக எம்.என்.குப்பத்திலிருந்து கெங்கராம் பாளையம் வரை 500-க்கும் மேற்பட்ட மின்விளக்குகளை சாலையில் இருந்து அகற்றி உள்ளார்கள். சாலையின் இரு புறமும் உயர் மின்ன ழுத்த டவர்கள் மற்றும் சாலை ஓரம் சிறிய டவர்கள் அமைத்து மின்சாரத்தை வழங்கி வருகிறார்கள். தமிழ்நாடு மற்றும் புதுவை துறையுடன் இணைந்து சாலை போடும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் கண்டமங்கலம், திருவண்டார்கோயில், திருபுவனை, மதகடிப்பட்டு, கெங்கராம்பாளையம் ஆகிய 5-க்கும் மேற்பட்ட முக்கிய பஸ் நிறுத்த பகுதிகள், சாலையோர பகுதிகள், கடைவீதிகள், மக்கள் நடமாடும் முக்கிய வீதிகளில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறும் இடங்களில், மின்விளக்கு கள் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது.

    இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. முக்கியமாக இரவு நேரங்களில் போதிய மின்விளக்கு வசதி இல்லாத நிலையில், அனைத்து வாகனங்களும் இருளில் செல்ல முடியாமல், வாகனங்கள் ஆங்காங்கே நின்று பின்னர் செல்கின்றன.

    இதனால் இரவு நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது. இந்த பகுதியில் 7 தற்காலிக மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என்று, வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சாலைகள் விரிவாக்க பணியின் போது அகற்றப்பட்ட மின் கம்பங்களை தற்போது கிராமப்புறங்களில் உள்ள தெருக்களில் மின்துறை ஊழியர்கள் நட்டு மின்சார த்தை வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரியாங்குப்பத்தில் கட்டிடத் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • கண்ணம்மாள் என்ற மனைவியும் 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பத்தில் கட்டிடத் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    அரியாங்குப்பம் கலைஞர் நகர் 2-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பாலு. (வயது 52). கட்டிடத் தொழிலாளி இவருக்கு கண்ணம்மாள் என்ற மனைவியும் 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது.

    இதற்கிடையே பாலுவிற்க்கு குடி பழக்கம் காரணமாக இடது காலில் காயம் ஏற்பட்டதால் அவர் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு பாலுவிற்க்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவரை குடும்பத்தினர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று காண்பித்த போது அவருக்கு வயிற்றில் கேன்சர் கட்டி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அது முதல் பாலு மனவருத்தத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற பாலு அதன் பிறகு வீடு திரும்ப வில்லை. அவரை பல இடங்களில் குடும்பத்தினர் தேடினர். பின்னர் விசாரித்த போது பாலு மணவெளி சாராயக்கடை பின்புறம் சென்றதாக சிலர் தெரிவித்தனர்.

    இதையடுத்து அங்கு சென்று தேடிய போது அங்குள்ள தென்னந் தோப்பில் பூவரச மரத்தில் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து அவரது மனைவி கண்ணம்மாள் கொடுத்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆலயத்தில் மாதத்தின் முதல் வியாழக்கி ழமையையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது
    • 12 விதமான அபிஷேகம் நடைபெற்றது

    புதுச்சேரி:

    கோரிமேடு அருகே பட்டானூர் சர்வ சக்தி படைத்த 108 மூலைகைகளால் அபிஷேக காப்பு பெற்ற கருடக் கருங்கல்லாலான 6 உயரம் உள்ள ஓம் வழிகாட்டும் சாய்பாபா ஆலயத்தில் மாதத்தின் முதல் வியாழக்கி ழமையையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. பஞ்சகாவியம், அரிசி மாவு, மஞ்சள் தூள், பால் தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் கரும்பு சாறு, சந்தனம், திருநீறு, பன்னீர் ஆகிய பொருட்களால் 12 விதமான அபிஷேகம் நடைபெற்றது.

    மேலும் 108 மலர்களால் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மங்கள ஆரத்தி நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்களுக்கு பாபா பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை ஆலய அறங்காவலர் சாய் சசி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.  

    ×