என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தனியார் தொழிற்சாலை தொழிலாளர்கள் ஊர்வலம் -  போலீசாருடன் தள்ளு முள்ளு
    X

    தொழிலாளர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்ட காட்சி.

    தனியார் தொழிற்சாலை தொழிலாளர்கள் ஊர்வலம் - போலீசாருடன் தள்ளு முள்ளு

    • புதுவை சேதராப்பட்டில் இயங்கிவரும் தனியார் தொழிற்சாலை திடீர் கதவடைப்பு செய்துள்ளது.
    • இவர்களுக்கு ஆதரவாக ஜனநாயக தொழிலாளர் சங்கம் சார்பில் கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலம் நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை சேதராப்பட்டில் இயங்கிவரும் தனியார் தொழிற்சாலை திடீர் கதவடைப்பு செய்துள்ளது.

    இங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் மீண்டும் பணி வழங்கக்கோரி பல கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக ஜனநாயக தொழிலாளர் சங்கம் சார்பில் கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலம் நடந்தது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் பலர் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

    பணி நீக்கம் செய்யப்பட்ட 300 பேருக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும், தொழிலாளர் நலச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அண்ணா சாலையில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது.

    தள்ளு முள்ளு

    நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்த தொழிலாளர்களை ஆம்பூர் சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது தொழிலாளர்களுக்கும் போலீசாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    Next Story
    ×