என் மலர்
புதுச்சேரி

அதிகாரியை கென்னடி எம்.எல்.ஏ., சந்தித்த காட்சி
ஹைமாஸ் விளக்குகளை சரிசெய்ய வேண்டும்- அதிகாரியிடம் கென்னடி எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
- உப்பளம் தொகுதியில் 14-க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைமாஸ் மற்றும் மினிமாஸ் மின்விளக்குகள் எரியாமல் இருந்து வந்தது.
- இது குறித்து தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி மின்துறை ஹைமாஸ் பிரிவு உதவி பொறியாளர் மோகன் ராஜாவை சந்தித்து பேசினார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதியில் 14-க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைமாஸ் மற்றும் மினிமாஸ் மின்விளக்குகள் எரியாமல் இருந்து வந்தது. இது குறித்து தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி மின்துறை ஹைமாஸ் பிரிவு உதவி பொறியாளர் மோகன் ராஜாவை சந்தித்து பேசினார். எம்.எல்.ஏ.வின் கோரிக்கை ஏற்று 2 நாட்களில் மின்விளக்குகள் சரி செய்து தரப்படும் என மின்துறை உதவி பொறியாளர் மோகன் ராஜா உறுதியளித்தார். இந்த சந்திப்பின் போது தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல், அவை தலைவர் ரவி, மாநில இளைஞர் துணை அமைப்பாளர் ஆரோக்கிய ராஜ், அசோக், கணேசன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story






