என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விடுதலை சிறுத்தைகள் போராட்டம்
    X

    கிருமாம்பாக்கம் அருகே அர்ஜுன் சம்பத்தை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் ஈடுபட்டு அவரது படத்தை தீ வைத்து கொளுத்திய காட்சி.

    விடுதலை சிறுத்தைகள் போராட்டம்

    • விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவனை சமூக வலைதளங்களில் அர்ஜுன் சம்பத் இழிவாக விமர்சித்துள்ளார்.
    • ஏம்பலம் தொகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    புதுச்சேரி:

    விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவனை சமூக வலைதளங்களில் அர்ஜுன் சம்பத் இழிவாக விமர்சித்துள்ளார்.

    இது விடுதலை சிறுத்தை கட்சியினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனை கண்டித்து பாகூர் மற்றும் ஏம்பலம் தொகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    வபம்பாபேட் விடுதலை சிறுத்தை கட்சியின் முகாம் செயலாளர் சதீஷ் தலைமை தாங்கினார். வண்ணாங்குளம் முகம் செயலாளர் இரா சதீஷ், ஜெகன், விஜயகுமார் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர்.

    பாகூர் தொகுதி பொறு ப்பாளர் காளியப்பன் கண்டன உரை நிகழ்த்தினார். தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் கிருமாம்பாக்கம் கடலூர்- புதுவை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    அப்போது அர்ஜுன் சம்பத் உருவப்படத்தை திடீர் என்று எரித்து கோஷம் எழுப்பினர். அர்ஜுன் சம்பத்தை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்தனர். இந்த திடீர் சாலை மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×