என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவை சட்டசபையில் பேனர், பதாகைகளை எடுத்துவரக்கூடாது என உறுப்பினர்களுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தடை விதித்திருந்தார்.
    • உங்களிடம் விளக்கம் கேட்கப்படும் என்றார் அப்போது நேரு எம்.எல்.ஏ. குறுக்கிட்டு, ஜனநாயகப்படி பேனர் காட்டுவது அனைத்து சட்டமன்றத்திலும் உள்ளது என்றார்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பேனர், பதாகைகளை எடுத்துவரக்கூடாது என உறுப்பினர்களுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தடை விதித்திருந்தார். இந்நிலையில் கூடிய பட்ஜெட் உரையின்போது சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு பேனரை எடுத்து வந்து காட்டினார்.

    பின்னர் வெளிநடப்பு செய்தார். பின்னர் 15 நிமிடம் கழித்து மீண்டும் சபைக்கு திரும்பினார். கவர்னர் உரை முடிந்ததும் அவரை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழியனுப்பி வைத்துவிட்டு மீண்டும் சபைக்கு வந்தார்.

    அப்போது நேரு எம்.எல்.ஏ. எழுந்து, நான் பதவியில் இருக்கிறேனோ? இல்லையா? நான் சபையில் இருக்க வேண்டுமா? வெளியேற வேண்டுமா? மாநில உரிமைக்காக என் கருத்தை தெரிவித்தேன் என கூறினார். அப்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம், கடந்த சட்டசபை கூட்டத்தின்போதே, சபைக்குள் பேனர், பதாகை போன்றவற்றை எடுத்து வரக்கூடாது என கூறினோம். அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் இது பொருந்தும்.

    சட்டசபைக்கு ஒரு மாண்பு உள்ளது. அதை மீறினால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். உங்களிடம் விளக்கம் கேட்கப்படும் என்றார் அப்போது நேரு எம்.எல்.ஏ. குறுக்கிட்டு, ஜனநாயகப்படி பேனர் காட்டுவது அனைத்து சட்டமன்றத்திலும் உள்ளது எனறார்.

    அதற்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம், தமிழக சட்டசபையில் ஒரு பேப்பரை கிழித்ததற்கு பதவிநீக்கமே செய்துள்ளனர். உங்களுக்கென தனியாக சட்டம் கிடையாது, விளக்கம் திருப்தியளிக்காவிட்டால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.

    • அ.தி.மு.க. சார்பில் உப்பளம் கட்சி தலைமை அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
    • பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சியில் அமைந்து 23 மாதம் ஆகியும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஸ்டாலின் நிறைவேற்ற வில்லை.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் உப்பளம் கட்சி தலைமை அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

    அ.தி.மு.க. மாநில அவைத் தலைவர் அன்பானந்தம் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் அன்பழகன் பெண்களுக்கு தள்ளுவண்டி, இலவச புடவை, தையல் மிஷின் ஆகியவற்றை வழங்கி பேசியதாவது:-

    தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடுவது போன்று முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி தமிழக விடியா அரசின் முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு வென்சாரம் வீசுகிறார்.

    பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சியில் அமைந்து 23 மாதம் ஆகியும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஸ்டாலின் நிறைவேற்ற வில்லை. ஆனால் புதுவையில் அந்தத் திட்டம் அறிவிக்கப்படாமலேயே நிறைவேற்றப்பட்டது.

    தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் முதியோர் மற்றும் விதவைகளுக்கு மாதம் ரூ.1000 மட்டுமே நிதி உதவியாக வழங்கப்படுகிறது.

    ஆனால் புதுவையில் முதியோர் மற்றும் விதவைகளுக்கு மாதம் ரூ. 2500 வழங்குவதை மறந்து விட்டு நடக்கும் ஆட்சி டுபாக்கூர் ஆட்சி என்றும் முதல்-அமைச்சர் டம்மி முதல்-அமைச்சர் என்றும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார்.

    தனது ஆட்சி காலத்தில் ரெஸ்ட்ரோ பார்களையும், அதில் பெண்களை வைத்து நடனம் நடத்தவும் அனுமதி வழங்கிவிட்டு தற்போது உத்தமர் போன்று அறிக்கை விடுகிறார்.அனைத்து துறைகளிலும் ஊழல் என தினம்தோறும் பேசும் நாராயணசாமி எந்த ஒரு ஊழலையாவது இன்று வரை ஆதாரத்துடன் கூறியுள்ளாரா.? இது போன்று முழு வேக்காட்டு அரசியல்வாதிகளின் உண்மை நிலையை மக்கள் உணர்ந்து உள்ளார்கள். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மாபெரும் வெற்றியை கட்சிக்கு பெற்று தருவார்.

    2026-ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி மலரும் போது, புதுவையிலும் அ.தி.மு.க. ஆட்சி மலரும். அதற்கு துணையாக மகளிர் இருக்க வேண்டும். இவ்வாறு அன்பழகன் பேசினார்.

    விழாவில், மாநில இணை செயலாளர்கள் வீரம்மாள், திருநாவுக்கரசு,கணேசன், மகாதேவி, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர்கள், கருணாநிதி, பி.எல்.கணேசன், நாகமணி ,காந்தி, கிருஷ்ணமூர்த்தி,குமுதன், மணவாளன், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் செல்வம், மாநில இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை இணை செயலாளர் தீபிகாவதி உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    • மகளிர் அதிகார அமைப்பு மற்றும் கல்லூரியின் மாணவர் அமைப்பும் இணைந்து சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடினர்.
    • இந்நிகழ்ச்சியில் இசை,நடனம், கவிதை மற்றும் பேச்சுப் போட்டி நடைபெற்றது.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    ஆறுபடைவீடு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஸ்கூல் ஆப் அலைடுல்த் சயின்ஸ் துறையின் மகளிர் அதிகார அமைப்பு மற்றும் கல்லூரியின் மாணவர் அமைப்பும் இணைந்து சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடினர்.

    அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில் குமார் ஆலோசனையின் படி, இயக்குநர் (பொறுப்பு) ஆண்ட்ரு ஜான் தலைமை தாங்கி வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாகூர் பேராசிரியர் அண்ணுசாமி பள்ளியின் முதல்வர் டாக்டர் நீலம் அருள்செல்வி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் இசை,நடனம், கவிதை மற்றும் பேச்சுப் போட்டி நடைபெற்றது.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. முடிவில் கல்லூரியின் விரிவுரையாளர் தமிழ்செல்வன் நன்றி உரை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் 400-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்குபெற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சந்துரு, கல்லூரியின் அனைத்து ஆசிரியர்கள், மாணவர் சபை மாணவ-மாணவிகள் மற்றும் நாட்டு நலப் பணித்திட்ட , சுற்றுச்சூழல் அமைப்பின் மாணவ- மாணவிகள் மற்றும் கல்லூரியின் இளைஞர் அமைப்பு மாணவ-மாணவிகள் மற்றும் நுண்கலை மாணவ-மாணவிகள் செய்திருந்தனர்.

    • புதுவை மாநில பா. ஜனதா அரியாங்குப்பம் தொகுதி செயற்குழு கூட்டம், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • அனைத்து இல்லங்களுக்கும் நேரில் சென்று பிரதமரின் திட்டங்களை விளக்கி பா.ஜனதா கட்சிக்கு வலு சேர்க்க முடிவு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா. ஜனதா அரியாங்குப்பம் தொகுதி செயற்குழு கூட்டம், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொகுதி தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ராமு, விவசாய அணி தேசிய செயற்குழு உறுப்பினர் பாரதிமோகன், மாநில மீனவர் பிரிவு அமைப்பாளர் பழனி, மாநில வக்கீல் பிரிவு அமைப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக, மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார், மாநில செயலாளரும் அரியாங்குப்பம் மாவட்ட பொறுப்பாளருமான நாகராஜ், மாவட்ட தலைவர் தெய்வசிகாமணி அலுவலக செயலாளர் மகேஷ், மற்றும் சிவ செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் சட்டமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடி புதுவை மாநிலத்தை பெஸ்ட் புதுவையாக மாற்ற உறுதி அளித்ததை போலவே, பல நல்ல திட்டங்களை நமது மாநிலத்திற்கு அளித்து வருவதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    மேலும் இவற்றையெல்லாம் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வருகிற 11-ந் தேதி முதல் 21-ம் தேதி வரை, புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் நேரில் சென்று பிரதமரின் திட்டங்களை விளக்கி பா.ஜனதா கட்சிக்கு வலு சேர்க்க முடிவு செய்யப்பட்டது.

    இக்கூட்டத்தில் சாந்தி, செல்வராஜ், புகழேந்தி, பாண்டு, அய்யனார், முருகேசன், ரவிச்சந்திரன், ராமன், சம்பத், குமரன், ஆனந்தராஜ், சுகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் தொகுதி பொதுச்செயலாளர் . பிச்சை முத்து நன்றி கூறினார்.

    • பல கோடி மோசடி செய்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பார்வதி நிதி நிறுவனத்தில் செலுத்திய தொகையை பெற்றுக்கொள்ள சென்றார்.

    புதுச்சேரி:

    புதுவையில் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி மோசடி செய்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை லெனின் வீதியில் தனியார் நிதி நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தை தங்கபழம், ஜெயவேல், பிரேம் ஆகியோர் நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தின் மேலாளராக பெருமாள் மற்றும் கலெக்ஷன் ஏஜெண்டாக ஸ்டெல்லா, கிளை மேலாளராக கன்னியக்கோவிலை சேர்ந்த ரவிச்சந்திரன், அவரது மகள் சிவாகணேஷ் ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.

    இந்த நிதி நிறுவனத்தில் லெனின் வீதியை சேர்ந்த ராம் என்பவரின் மனைவி பார்வதி (வயது56) என்பவர் ரூ.4 லட்சம் வைப்பு தொகையை செலுத்தினார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பார்வதி நிதி நிறுவனத்தில் செலுத்திய தொகையை பெற்றுக்கொள்ள சென்றார். அப்போது நிதி நிறுவனம் பூட்டப்பட்டு இருந்தது. பல நாட்கள் சென்று பார்த்தும் நிதி நிறுவனம் திறக்கப்படவில்லை.

    இதனால் அதிர்ச்சிய டைந்த பார்வதி செல்போன் மூலம் கிளை மேலாளரான ரவிச்சந்திரன் மற்றும் அவரது மகள் சிவாகணேசை தொடர்பு கொண்டார். ஆனால் அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. இதையடுத்து பார்வதி நிறுவனத்தின் மேலாளர் பெருமாள் மற்றும் கலெக்ஷன் ஏஜெண்ட் ஸ்டெல்லா ஆகியோரை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்களும் சரியான பதில் கூறவில்லை.

    இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை பார்வதி உணர்ந்தார்.

    இதுபோல் இந்த நிதி நிறுவனம் பலரிடம் பல கோடி ரூபாய் வைப்பு தொகையாக பெற்று பணத்தை மோசடி செய்து விட்டு நிதி நிறுவனத்தை மூடிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பார்வதி உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுவை அருகே ரெட்டியார்பாளையத்தில் பல்கலைக்கழக என்ஜினீயரை கத்தியால் குத்திய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • அப்போது கத்தியோடு வந்த வசந்தராஜ் திடீரென கஜேந்திரனை வழிமறித்து கத்தியால் தலையில் வெட்ட முயன்றார்.

    புதுச்சேரி:

    ரெட்டியார்பாளையத்தில் பல்கலைக்கழக என்ஜினீயரை கத்தியால் குத்திய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுவை ரெட்டியார்பாளையம் மரியாள் நகரை சேர்ந்தவர் கஜேந்திரன்(வயது54). இவர் புதுவை தொழிற்நுட்ப பல்கலைக்கழகத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் மரியாள்நகர் நலவாழ்வு சங்க சேர்மனாகவும் உள்ளார்.

    இதற்கிடையே அதே பகுதியில் வசிக்கும் வசந்தராஜ் என்பவர் அடிக்கடி மது குடித்து விட்டு குடிபோதையில் அப்பகுதியில் வசிப்பவர்களிடம் பிரச்சினை செய்வது வழக்கம். இதுபற்றி அப்பகுதியை சேர்ந்தவர்கள் கஜேந்திரனிடம் முறையிட்டனர்.

    இதையடுத்து வசந்த ராஜை அழைத்து கஜேந்திரன் கண்டித்தார். இதனால் கஜேந்தின் மீது வசந்தராஜ் ஆத்திரத்தில் இருந்து வந்தார். வசந்தராஜ் மது குடித்து விட்டு கஜேந்திரனின் வீட்டு கதவை தட்டினார். ஆனால் கஜேந்திரன் கதவை திறக்கவில்லை.

    இந்த நிலையில் கஜேந்திரன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்ல தயாரானார். அப்போது கத்தியோடு வந்த வசந்தராஜ் திடீரென கஜேந்திரனை வழிமறித்து கத்தியால் தலையில் வெட்ட முயன்றார். இதனை சுதாரித்துக்கொண்டு கஜேந்திரன் தலையை சாய்த்துக்கொண்டார். ஆனால் சத்தி கஜேந்திரனின் மார்பில் வெட்டியது.

    இதனால் நிலைகுலைந்து போன கஜேந்திரன் அலறல் சத்தம் போட்டார். உடனே அங்கிருந்தவர்கள் திரண்டு வந்ததால் வசந்தராஜ் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

    பின்னர் கத்தி வெட்டில் காயமடைந்த கஜேந்திரன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வசந்தராஜை தேடி வருகிறார்கள்.

    • துவை ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர் தருண் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார்.
    • தனதியாகு பொன்னாடை போர்த்தி கவுரவித்ததுடன் பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்தினார்.

    புதுச்சேரி:

    மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி சமீபத்தில் நடந்தது. இதில் சப்-ஜூனியர் பிரிவில் புதுவை ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர் தருண் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார்.

    மேலும் தெலுங்கானா மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியிலும் தங்கப் பதக்கம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார். சாதனை படைத்த மாணவரை ஆல்பா கல்விக்குழும இயக்குனர் தனதியாகு பொன்னாடை போர்த்தி கவுரவித்ததுடன் பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்தினார்.

    நிகழ்ச்சியின்போது மாணவரின் பெற்றோர் மற்றும் பயிற்சியாளர்கள் உடன் இருந்தனர்.

    • கொரோனவால் பெற்றோர்களை இழந்த 12 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு செய்யப்பட்டு, சுகாதார அட்டை வழங்கியுள்ளோம்.
    • குழந்தைகள் மெட்ரிக் வகுப்புக்கு முற்பட்ட, பிற்பட்ட திட்டங்களின் கீழ் பதியப்பட்டு கருணைத்தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கடந்த 12 ஆண்டாக இடைக்கால பட்ஜெட் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

    இந்த ஆண்டு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்-அமைச்சர் ரங்கசாமி நடவடிக்கை எடுத்தார்.

    மாநில திட்டக்குழு கூட்டத்தில் வரைவு பட்ஜெட் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. மத்திய அரசு புதுவை பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்தது.

    இதைத்தொடர்ந்து புதுவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்கி வைக்க கவர்னர் தமிழிசை இன்று காலை 9.30 மணிக்கு கவர்னர் மாளிகையிலிருந்து கார் மூலம் சட்டசபைக்கு வந்தார்.

    அவருக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வரவேற்பு அளித்தார். பின்னர் சட்டசபை வளாகத்தில் போலீசார் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து சட்டசபை மைய மண்டபத்துக்கு கவர்னர் தமிழிசை வந்தார்.

    சபாநாயகர் இருக்கையில் துணை நிலை கவர்னர் தமிழிசை அமர வைக்கப்பட்டார். தொடர்ந்து 9.45 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் சபை நிகழ்ச்சிகள் தொடங்கியது.

    துணை நிலை கவர்னர் தமிழிசை தமிழில் தனது உரையை பாரதியார் கவிதை வரிகளுடன் தொடங்கினார். அவரது உரையில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் வருமாறு:-

    சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.28 கோடியில் 6.83 லட்சம் கனமீட்டர் மணல் தூர்வரப்பட்டு துறைமுக செயல்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளது. உள்வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க தடுப்புச்சுவர், பாலம் அமைக்க மத்திய அரசு ரூ.4.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க ரூ.40 கோடி வழங்கப்பட்டுள்ளது. 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க ரூ.4.88 கோடி, மழைகோட் வழங்க ரூ.60 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது.

    நிலமற்ற ஏழை மக்களுக்கு உதவும் நோக்கில் 65 குடும்பத்திற்கு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்ப தலைவிகளுக்கு மாதந்திர நிதியுதவி வழங்கும் திட்டம் கடந்த ஜனவரி மாதம் முதல் செயல்படுத்தப்படுகிறது. மாத நிதியுதவியாக ரூ.ஆயிரம் வீதம் 13 ஆயிரத்து 339 பயனாளிகளுக்கு ரூ.1.33 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

    கொரோனவால் பெற்றோர்களை இழந்த 12 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு செய்யப்பட்டு, சுகாதார அட்டை வழங்கியுள்ளோம்.

    இந்த குழந்தைகள் மெட்ரிக் வகுப்புக்கு முற்பட்ட, பிற்பட்ட திட்டங்களின் கீழ் பதியப்பட்டு கருணைத்தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    ஏற்பு ஆதரவு திட்டத்தின் கீழ் 12 குழந்தைகளுக்கு நிதியுதவியாக ரூ.11 லட்சத்து 42 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஆட்சிப்பரப்பை சமூக பொருளாதாரத்தில் முன்னேற்றமடைய செய்து வறுமையை போக்குவதில் அரசு உறுதியாக உள்ளது.

    அனைத்து பிராந்தியங்களுக்கும் நிதி ஒதுக்கீடுகளை துல்லியமாக விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்தளித்து பிராந்திய ஏற்ற தாழ்வுகளை போக்கியுள்ளது.

    ஆட்சிப்பரப்பில் செயல்படுத்த பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கான ஆதரவையும், பரிந்துரைகளையும் உறுப்பினர்கள் நல்குவீர்கள் என உறுதியாக நம்புகிறேன். இந்த அரசால் மக்களுக்காக தொடங்கப்படும் அனைத்து பணிகளும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் உரையாற்றினார்.

    • உருளையன்பேட்டை முத்தமிழ் நகரைச் சேர்ந்த தி.மு.க. மாநில துணை அமைப்பாளர் குணாதிலீபன், கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஆக்கிரமித்து வேலி அமைத்தார்.
    • தி.மு.க. நிர்வாகி ஆக்கிரமித்து வைத்திருந்த நிலம் மீட்கப்பட்ட சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை வெங்கட்டா நகரை சேர்ந்தவர் வைத்தியநாதன் (வயது55) வக்கீல். இவரது தாய் குப்புலட்சுமி. இவருக்கு சொந்தமான 22 ஆயிரம் சதுர அடி நிலம் புதுவையில் கிருஷ்ணா நகர் கிழக்கு கடற்ரை சாலையில் உள்ளது.

    இந்த நிலத்தை, உருளையன்பேட்டை முத்தமிழ் நகரைச் சேர்ந்த தி.மு.க. மாநில துணை அமைப்பாளர் குணாதிலீபன், கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஆக்கிரமித்து வேலி அமைத்தார்.

    இதுகுறித்து குப்புலட்சுமி நில அபகரிப்பு பிரிவில் புகார் செய்தார். நில அபகரிப்பு பிரிவு தலைவரான தாசில்தார் ராஜேஷ் கண்ணன், புகார் குறித்து விசாரணை மேற்கொண்டார். அதில், குப்புலட்சுமியின் நிலத்தை, குணாதிலீபன் ஆக்கிரமித்திருப்பதை உறுதி செய்து, அறிக்கை சமர்ப்பித்தார்.

    அதன்பேரில் சப்-கலெக்டர் கந்தசாமி , நிலத்தை 15 நாளில் உரியவரிடம் ஒப்படைக்குமாறு குணாதிலீபனுக்கு கடந்த ஜனவரி மாதம் நோட்டீஸ் அளித்தார்.

    ஆனால் நிலத்தை ஒப்படைக்காததால், தாசில் தார் ராஜேஷ்கண்ணன் போலீஸ் பாதுகாப்புடன், குணாதிலீபன் அமைத்திருந்த இரும்பு வேலியை அகற்றி, நிலத்தை மீட்டு குப்புலட்சுமியிடம் ஒப்படைத்தார். இந்த நிலத்தின் மதிப்பு ரூ.7 கோடி ஆகும்.

    தி.மு.க. நிர்வாகி ஆக்கிரமித்து வைத்திருந்த நிலம் மீட்கப்பட்ட சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வடமாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் புதுவைக்கு கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் ரெயில்வே போலீசார் இணைந்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து புதுவைக்கு வந்த ரெயிலில் சோதனை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திருட்டுத்தனமாக கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. போலீசார் கஞ்சா விற்பவர்களை அடிக்கடி கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் வடமாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் புதுவைக்கு கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் ரெயில்வே போலீசார் இணைந்து நேற்று மதியம் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து புதுவைக்கு வந்த ரெயிலில் சோதனை நடத்தினர்.

    அப்போது ஒரு இருக்கைக்கு அடியில் ஒரு பையில் 4 பார்சல்கள் இருந்தன. அதனை போலீசார் பிரித்து பார்த்தபோது, அதில் 8 கிலோ 400 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சாவை ரெயில் மூலம் புதுவைக்கு கடத்தி வந்தது யார் என்று விசாரணை நடத்தி அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • மாமூல் தர மறுத்ததால் பொருள்களை சூறையாடினர். அதைத் தடுத்த கடை ஊழியர் சிவராஜைத் தாக்கினர்.
    • ரவுடிகள் மீதான வழக்கு விசாரணை புதுவை தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை காந்தி வீதியில் பேக்கரி வைத்திருப்பவர் சண்முகசுந்தரம். இவரது பேக்கரிக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் புதுவை வைத்திகுப்பத்தைச் சேர்ந்த எலி கார்த்திகேயன் (30), வாணரப்பேட்டையை சேர்ந்த மதி மணிகண்டன் (29) ஆகியோர் மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

    மாமூல் தர மறுத்ததால் பொருள்களை சூறையாடினர். அதைத் தடுத்த கடை ஊழியர் சிவராஜைத் தாக்கினர். இதில் காயமடைந்த அவர், சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து பெரியகடை போலீசார் வழக்குப் பதிவு செய்து எலி கார்த்தி, மதி ஆகியோரைக் கைது செய்தனர்.

    அவர்கள் மீதான வழக்கு விசாரணை புதுவை தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிவில் குற்றஞ்சாட்டப்பட்ட எலிகார்த்திக், மதி ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.16 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 4 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி மோகன் உத்தரவிட்டார்.

    • மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் சார்பில் வில்லியனூர் கோபாலசாமி நாயகர் திருமண மண்டபத்தில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது.
    • விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், வேளாண் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் சார்பில் வில்லியனூர் கோபாலசாமி நாயகர் திருமண மண்டபத்தில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது.

    கவர்னர் தமிழிசை குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், வேளாண் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் செயலர் உதயகுமார், இயக்குனர் முத்து மீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் மகளிர் தினத்தையொட்டி கவர்னர் தமிழிசைக்கு, முதல்-அமைச்சர் ரங்கசாமி பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

    விழாவில் நடைபெற்ற பெண்களின் நாட்டிய நிகழ்ச்சியை அனைவரும் கண்டுகளித்தனர்.

    ×