search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நிதி நிறுவனம் நடத்தி பல கோடி மோசடி
    X

    கோப்பு படம்.

    நிதி நிறுவனம் நடத்தி பல கோடி மோசடி

    • பல கோடி மோசடி செய்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பார்வதி நிதி நிறுவனத்தில் செலுத்திய தொகையை பெற்றுக்கொள்ள சென்றார்.

    புதுச்சேரி:

    புதுவையில் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி மோசடி செய்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை லெனின் வீதியில் தனியார் நிதி நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தை தங்கபழம், ஜெயவேல், பிரேம் ஆகியோர் நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தின் மேலாளராக பெருமாள் மற்றும் கலெக்ஷன் ஏஜெண்டாக ஸ்டெல்லா, கிளை மேலாளராக கன்னியக்கோவிலை சேர்ந்த ரவிச்சந்திரன், அவரது மகள் சிவாகணேஷ் ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.

    இந்த நிதி நிறுவனத்தில் லெனின் வீதியை சேர்ந்த ராம் என்பவரின் மனைவி பார்வதி (வயது56) என்பவர் ரூ.4 லட்சம் வைப்பு தொகையை செலுத்தினார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பார்வதி நிதி நிறுவனத்தில் செலுத்திய தொகையை பெற்றுக்கொள்ள சென்றார். அப்போது நிதி நிறுவனம் பூட்டப்பட்டு இருந்தது. பல நாட்கள் சென்று பார்த்தும் நிதி நிறுவனம் திறக்கப்படவில்லை.

    இதனால் அதிர்ச்சிய டைந்த பார்வதி செல்போன் மூலம் கிளை மேலாளரான ரவிச்சந்திரன் மற்றும் அவரது மகள் சிவாகணேசை தொடர்பு கொண்டார். ஆனால் அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. இதையடுத்து பார்வதி நிறுவனத்தின் மேலாளர் பெருமாள் மற்றும் கலெக்ஷன் ஏஜெண்ட் ஸ்டெல்லா ஆகியோரை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்களும் சரியான பதில் கூறவில்லை.

    இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை பார்வதி உணர்ந்தார்.

    இதுபோல் இந்த நிதி நிறுவனம் பலரிடம் பல கோடி ரூபாய் வைப்பு தொகையாக பெற்று பணத்தை மோசடி செய்து விட்டு நிதி நிறுவனத்தை மூடிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பார்வதி உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×