search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் அ.தி.மு.க. ஆட்சி மலரும்-அன்பழகன் பேச்சு
    X

    மகளிர் தின விழாவையொட்டிபெண்களுக்கு அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் நலத்திட்ட உதவிகள் வழங்கிய காட்சி.

    புதுவையில் அ.தி.மு.க. ஆட்சி மலரும்-அன்பழகன் பேச்சு

    • அ.தி.மு.க. சார்பில் உப்பளம் கட்சி தலைமை அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
    • பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சியில் அமைந்து 23 மாதம் ஆகியும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஸ்டாலின் நிறைவேற்ற வில்லை.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் உப்பளம் கட்சி தலைமை அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

    அ.தி.மு.க. மாநில அவைத் தலைவர் அன்பானந்தம் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் அன்பழகன் பெண்களுக்கு தள்ளுவண்டி, இலவச புடவை, தையல் மிஷின் ஆகியவற்றை வழங்கி பேசியதாவது:-

    தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடுவது போன்று முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி தமிழக விடியா அரசின் முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு வென்சாரம் வீசுகிறார்.

    பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சியில் அமைந்து 23 மாதம் ஆகியும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஸ்டாலின் நிறைவேற்ற வில்லை. ஆனால் புதுவையில் அந்தத் திட்டம் அறிவிக்கப்படாமலேயே நிறைவேற்றப்பட்டது.

    தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் முதியோர் மற்றும் விதவைகளுக்கு மாதம் ரூ.1000 மட்டுமே நிதி உதவியாக வழங்கப்படுகிறது.

    ஆனால் புதுவையில் முதியோர் மற்றும் விதவைகளுக்கு மாதம் ரூ. 2500 வழங்குவதை மறந்து விட்டு நடக்கும் ஆட்சி டுபாக்கூர் ஆட்சி என்றும் முதல்-அமைச்சர் டம்மி முதல்-அமைச்சர் என்றும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார்.

    தனது ஆட்சி காலத்தில் ரெஸ்ட்ரோ பார்களையும், அதில் பெண்களை வைத்து நடனம் நடத்தவும் அனுமதி வழங்கிவிட்டு தற்போது உத்தமர் போன்று அறிக்கை விடுகிறார்.அனைத்து துறைகளிலும் ஊழல் என தினம்தோறும் பேசும் நாராயணசாமி எந்த ஒரு ஊழலையாவது இன்று வரை ஆதாரத்துடன் கூறியுள்ளாரா.? இது போன்று முழு வேக்காட்டு அரசியல்வாதிகளின் உண்மை நிலையை மக்கள் உணர்ந்து உள்ளார்கள். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மாபெரும் வெற்றியை கட்சிக்கு பெற்று தருவார்.

    2026-ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி மலரும் போது, புதுவையிலும் அ.தி.மு.க. ஆட்சி மலரும். அதற்கு துணையாக மகளிர் இருக்க வேண்டும். இவ்வாறு அன்பழகன் பேசினார்.

    விழாவில், மாநில இணை செயலாளர்கள் வீரம்மாள், திருநாவுக்கரசு,கணேசன், மகாதேவி, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர்கள், கருணாநிதி, பி.எல்.கணேசன், நாகமணி ,காந்தி, கிருஷ்ணமூர்த்தி,குமுதன், மணவாளன், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் செல்வம், மாநில இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை இணை செயலாளர் தீபிகாவதி உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×