என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விளையாட்டுக்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் புதுவை ஒலிம்பிக் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

    புதுச்சேரி:

    விளையாட்டுக்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் புதுவை ஒலிம்பிக் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

    புதுவை மாநில ஒலிம்பிக் சங்க தலைவரான அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமையில் நிர்வாகிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    விளையாட்டு துறை புதுவையில் விளையாட்டுத்துறை ஏற்படுத்த வேண்டும். பட்ஜெட்டில் விளையாட்டுக்கு 5 சதவீத நிதியை ஒதுக்க வேண்டும். அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு கிராமம் ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி கோரிக்கைகள் குறித்து உடனடியாக ஆவண செய்வதாக உறுதியளித்தார். இந்நிகழ்ச்சியின் போது சங்க நிர்வாகிகளான சிவசங்கரன் எம்.எல்.ஏ., கராத்தே வளவன், செயலாளர் தனசேகர், பொருளாளர் நாராயணசாமி, கபடி சங்கம் ஜெயராமன், சி.இ.ஓ. சங்க முத்து கேசவன், துணை தலைவர்கள் குணசேகரன், கோபு ஜெயபால், பூபாலன், முத்துகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

    • பேரக்குழந்தையை பார்க்க முடியாத ஏக்கத்தில் ஓய்வு பெற்ற மில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • விஷம், குடித்து, தற்கொலை,

    புதுச்சேரி:

    பேரக்குழந்தையை பார்க்க முடியாத ஏக்கத்தில் ஓய்வு பெற்ற மில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    புதுவை கோவிந்தசாலை குபேர் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள். ஓய்வு பெற்ற ரோடியர் மில் தொழிலாளி. இவரது மகன் சந்துரு. இவருக்கும் நெய்வேலியை சேர்ந்த பூவியா என்ற பெண்ணுக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இதற்கிடையே சந்துரு தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தையை பிரிந்து பெற்றோர் வீட்டில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

    ஆனால் அவ்வப்போது கலிய பெருமாள் பேரக் குழந்தையை பார்க்க நெய் வேலிக்கு பார்க்க செல்வது வழக்கம். அதுபோல் கலியபெருமாள் பேரக்குழந்தையை பார்க்க நெய்வேலிக்கு செல்வதாக தனது மனைவி ருக்குமணியிடம் கூறினார். அதற்கு ருக்குமணி ஏற்கனவே உடல்நிலை சரியில்லாததால் தற்போது அங்கு செல்ல வேண்டாம். உடல் நிலை சரியான பிறகு பேரக்குழந்தையை பார்க்க செல்லுமாறு அறிவுறுத்தினார்.

    இதனால் கலியபெரு மாள் பேரக்குழந்தையை பார்க்க முடியாமல் மனசோர்வு அடைந்தார்.

    இந்தநிலையில்  கலியபெருமாள் சாப்பிட்டு விட்டு வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு தூங்க செல்வதாக கூறி சென்றார்.

    ஆனால் வெகு நேரமாகியும் டீக்குடிக்க கலியபெருமாள் எழுந்து வராததால் அவரது மனைவி ருக்குமணி மாடி அறைக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு விஷம் குடித்து கலியபெருமாள் வாயில் நுரை தள்ளியபடி பிண மாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பேரக்குழந்தையை பார்க்க முடியாத வேதனை யில் கலியபெருமாள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அவரது மனைவி ருக்குமணி கொடுத்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுவை அருகே கதிர்காமத்தில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 2001 முதல் இந்திராகாந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது.
    • தற்போது 1,030 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை அருகே கதிர்காமத்தில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 2001 முதல் இந்திராகாந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இங்கு மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி, புள்ளியியல், பி.காம் (அயலகவாணிபம்) பி.சி.ஏ. ஆகிய 5 துறைகள் தொடங்கப்பட்டன. இங்கு தற்போது 1,030 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இக்கல்லூரி, நிர்வாக வசதிக்காக இந்திராநகர் காவலர் பயிற்சி பள்ளிக்கு அருகே உள்ள இந்திராகாந்தி அரசினர் மேல்நிலைப் பள்ளி கட்டிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் கிஷோர் ஜான் வரவேற்றார். அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ்

    எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ. பேசுகையில் எல்லோரும் நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், இக்கல்லூரி இங்கு மாற்றப்பட்டுள்ளது. இன்னும் 2 ஆண்டுகளுக்குள் இக்கல்லூரி புதிய பொலி வுடன், புதிய கட்டிடத்தில் தொடங்கப்படும்.

    புதுவையில் சிறந்த கல்லூரியாக செயல்பட்டு இந்திய அளவில் பேசப்படும் இக்கல்லூரி, உலக அளவிலும் பேசப்பட வேண்டும் என்றார். விழாவில் பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். கல்லூரி புள்ளியியல் துறை பேராசிரியர் ஜாஸ்மின் நன்றி கூறினார்.

    • மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் மகளிர் தின விழா புதுமை மற்றும் தொழல்நுட்பம் பாலின சமத்துவம் என்ற தலைப்பில் கொண்டாடப்பட்டது.
    • கல்லூரி இயக்குனர் மற்றும் முதல்வருமான வெங்கடாஜலபதி வரவேற்புரையாற்றினார்.

    புதுச்சேரி:

    மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் மகளிர் தின விழா புதுமை மற்றும் தொழல்நுட்பம் பாலின சமத்துவம் என்ற தலைப்பில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு புதுவை கெமின் கன்ட்ரோல் மற்றும் இன்ஸ்டுமென்டேசன் கம்பெனி இணை நிர்வாக இயக்குனர் ராதிகாரகு, சுகாதாரம் மற்றும் குடும்ப நல இயக்குனர், தலைமை பல் அறுவை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கவிபிரியா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சி்றப்புரையாற்றினர்.

    நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி இயக்குனர் மற்றும் முதல்வருமான வெங்கடாஜலபதி வரவேற்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் அப்பாஸ் மொய்தீன், ஜெயக்குமார், அன்புமலர், அறிவழகர், வேல்முருகன், கைலாசம், முத்துலெட்சுமி, முகம்மது யாசின் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் அப்பாஸ் மொய்தீன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பயோமெடிக்கல் துறைத்தலைவி விஜயலட்சுமி செய்திருந்தார்.

    • தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு புதுவை அரசு சார்பில் சிலை அமைக்க வேண்டும் என தி.மு.க. சார்பில் சட்ட பேரவையில் கோரிக்கை வைத்தோம்.
    • அதற்கான முயற்சியை அரசு எடுக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமியை எதிர்கட்சித் தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. ம்.எல்.ஏ.க்கள் கென்னடி, சம்பத், செந்தில்குமார், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் ஆகியோர் சந்தித்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராக இருந்து எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை கொண்டு வந்து தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ செய்தவர். தி.மு.க.வின் தலைவராக 50 ஆண்டு காலத்திற்கும் மேலாக இருந்து வழிநடத்தியவர்.

    தமிழகம் மற்றும் புதுவை மாநில வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர். பொது வாழ்வில் 80 ஆண்டுகாலம் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பணியாற்றிய முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு புதுவை அரசு சார்பில் சிலை அமைக்க வேண்டும் என தி.மு.க. சார்பில் சட்ட பேரவையில் கோரிக்கை வைத்தோம்.

    எங்கள் தலைவர் கருணாநிதியின் 4–-ம் ஆண்டு நினைவு தினத்தன்று நாங்களும், எங்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தங்களை நேரில் சந்தித்து சிலை நிறுவ வலியுறுத்தினோம். தாங்களும் தலைவர் கருணாநிதியோடு நெருங்கிய தொடர்பும், நட்பும் இருந்தது என்றும் அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு என்றும் தெரிவித்ததோடு, புதுவை அரசு சார்பில் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படும் என்று உறுதியளித்தீர்கள்.

    ஆனால் அதற்கான முயற்சியை அரசு எடுக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. கருணாநிதி மறைந்து வருகிற ஆகஸ்ட 8–-ந் தேதியோடு 5 ஆண்டுகள் நிறைவு பெற இருக்கிறது. எனவே அவரது நினைவு நாளுக்குள் புதுவை அரசு சார்பில் சிலை அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

    • கவர்னர் உரை உண்மையில் இந்த மாநிலத்திற்கு உகந்ததா? கவர்னரே வேண்டாம் என்பதுதான் தி.மு.க.வின் கொள்கை.
    • புதுவைசிவம், தமிழ்ஒளி ஆகியோர் பெயரில் விருதுகள் வழங்க வேண்டும். கூட்டுறவு நிறுவனங்களை புனரமைக்கும் திட்டம் ஏதும் இல்லை.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதம் நடந்தது. இதில் தி.மு.க., எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பேசியதாவது:-

    கவர்னர் உரை உண்மையில் இந்த மாநிலத்திற்கு உகந்ததா? கவர்னரே வேண்டாம் என்பதுதான் தி.மு.க.வின் கொள்கை. இந்திய விடுதலை வீரர்களின் விடுதலை வேட்கைக்கு அடைக்கலம் கொடுத்த மண் புதுவை. 8 மணி நேர வேலையினை ஆசிய கண்டத்திற்கு வாங்கிக்கொடுத்த மண்.

    தற்போது மத்திய அரசின் பிரதிநிதியான கவர்னரின் அதிகாரத்திற்கு கீழ்படிந்து நடக்கும் நிலைமையில் இருக்கிறது. இதற்காகவா நாம் பிரெஞ்சு தேசத்திலிருந்து விடுதலை அடைந்தோம் என எண்ணிப்பார்க்க வேண்டும். கவர்னர் உரை மாநிலத்தில் ஆற்றிய பணிகள் 50 சதவீதம், கொள்கை விளக்கம் 50 சதவீதம் இருக்க வேண்டும்.

    இந்த உரை இந்த மாநிலத்தின் துறைகளின் செயல்களை விளக்கும் உரையாக இருக்கிறதே தவிர மக்கள் நலனை சார்ந்த உரையாக இல்லை. எந்த முன்னறிவிப்பும் இல்லாத ஒரு உரை.

    நிதி மேலாண்மை குறித்து உரையில் குறிப் பிட்டுள்ளார். மத்திய அரசு கொடுத்து வந்த ஜி.எஸ்.டி இழப்பீடு தொகை தொடர்ந்து அளிக்கப் பட்டதா என்று குறிப்பி டவில்லை.

    கடந்த ஆண்டு மத்திய அரசுக்கு முன்வைத்த ரூ.3 ஆயிரத்து 400 கோடி குறித்து ஒரு வார்த்தையும் இல்லை.

    உள்நாட்டு உற்பத்தியிலும் தனிநபர் வருமானத்திலும் குறைவாக உள்ள மாநிலங்களான கோவா, அருணாச்சலப்பிரதேசம், மிசோரம்,போன்றவை மாநில அந்தஸ்து தகுதியோடு உள்ளது. ஆனால் நமக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை? குறைந்தபட்சம் நிதிக்கமிஷனில் கூட நம்மை சேர்க்கவில்லை.

    இதுதான் மத்திய அரசின் பிரதிநிதியான கவர்னர் நம்மை வழிநடத்தும் முறையா? தமிழகம் போல புதுவை மண்ணின் புகழ் பெற்ற கவிஞர்கள் பாவேந்தர் , புதுவைசிவம், தமிழ்ஒளி ஆகியோர் பெயரில் விருதுகள் வழங்க வேண்டும். கூட்டுறவு நிறுவனங்களை புனரமைக்கும் திட்டம் ஏதும் இல்லை.

    ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் வாங்கிய காப்பீடு கார்டுக்கு மரியாதையே இல்லை. மின்துறை தனியார் மயம் ஆகாது என கவர்னர் குறிப்பிடாதது ஏமாற்றமளிக்கிறது.

    தொழில் முனைவோர் மாநாட்டில் எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வந்தன? எத்தனை தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன? எத்தனை 1000 பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டது? என எந்த விவரமும் உரையில் இடம் பெறவில்லை.

    புதுவை நகராட்சியினை மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதற்கான முடிவு இந்த உரையில் இல்லை. உழவர்கரை தாலுகாவை இண்டாகப் பிரித்து புதிய தாலுக்கா உருவாக்கும் அறிவிப்பாவது இடம் பெற வேண்டும்.

    மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தனியார் கல்வி நிறுவனங்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் கொள்கை முடிவினை எடுக்க கவர்னர் முயற்சிக்கவில்லை. மொத்தத்தில் கவர்னர் அரசின் துணை இல்லாததால் சிறக்க வில்லை. உரையில் பாரதியார், பாரதிதாசனின் தமிழோசை இருக்கிறது, ஆனால் மக்களுக்கு நன்மைதான் இசைக்கவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புதுவை அருகே தேங்காய்திட்டில் மெக்கானிக்கை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • அங்கு கிடந்த கருங்கல்லை எடுத்து ராஜாவின் தலையில் சரமாரியாக தாக்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை அருகே தேங்காய்திட்டில் மெக்கானிக்கை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை தேங்காய்திட்டு காளியம்மன் நகரை சேர்ந்தவர் ராஜா(வயது50). இவர் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் அங்குள்ள புத்துக்கோவில் அருகே கோவிந்தசாமி என்பவரிடம் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த கார்த்திக்(22) என்பவர் அந்த வழியாக சென்றார். திடீரென கார்த்திக் தன்னை ஏன் முறைத்து பார்க்கிறாய்? என ராஜாவிடம் கேட்டார். அதற்கு ராஜா நான் முறைத்து பார்க்கவில்லை என்று தெரிவித்தார்.

    ஆனால் இதனை ஏற்காமல் கார்த்திக் தகாத வார்த்தைகளால் திட்டி அங்கு கிடந்த கருங்கல்லை எடுத்து ராஜாவின் தலையில் சரமாரியாக தாக்கினார். இதனால் ராஜா அலறல் சத்தம் போட்டார்.

    இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதனை பார்த்த கார்த்திக் ராஜாவிடம் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று அங்கிருந்து தப்பியோடி விட்டார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ராஜா புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுவை அருகே பாகூரில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • இதையடுத்து இன்ஸ்பெக்டர் கணேஷ் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை அருகே பாகூரில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். புதுவையில் 3 நம்பர் மற்றும் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடையை மீறி புதுவையில் தொடர்ந்து லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வருகிறது. அவ்வபோது லாட்டரி சீட்டு விற்பவர்களை கைது செய்தாலும் லாட்டரி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் பாகூர் பங்களா தெருவில் 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக பாகூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கணேஷ் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர்.

    அப்போது பங்களா வீதியில் ரோந்து பணி சென்ற போது அங்கு நின்று இருந்த சிலர் போலீசார் வருவதை கண்டு தப்பி ஓட முயற்சித்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் ஒருவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர் பாகூர் பங்களா வீதியைச் சேர்ந்த சரவணன் (45) என்பதும், இவர் வீட்டின் அருகே ரகசியமாக 3 நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்று வந்தது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து சரவணனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தமிழகப் பகுதியான உச்சி மேடு பகுதியைச் சேர்ந்த கதிரேசன் (54) என்பவரிடம் லாட்டரி சீட்டுகள் வாங்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. பின்னர் சரவணன் கொடுத்த தகவலின் அடிப்ப டையில் அதிரடிப்படை மற்றும் பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணன் மற்றும் கதிரேசனை கைது செய்து அவர்களிடமிருந்து லாட்டரி விற்பனை செய்த ரூ.2 லட்சத்து 12ஆயிரத்து 690 ரொக்க பணமும், 3 நம்பர் லாட்டரி சீட்டுகள், லாட்டரி சீட்டுகள் அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட லேப்டாப், பிரிண்டர், 7 செல்போன் ஆகியவற்றை யும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுபோல் வாணரப்பேட்டையில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

    அப்போது அங்கு செல்போன் மூலம் வாடிக்கையாளர்க ளுக்கு லாட்டரி விற்பனை செய்த 2 பேரை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் (வயது33) மற்றும் உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்த ரமேஷ் என்ற மனோஜ்(42) என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிட மிருந்து மோட்டார் சைக்கிள் 2 செல்போன், லாட்டரி சீட்டுகள் மற்றும் லாட்டரி விற்பனை பணம் ரூ.7 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சாரம் வெங்கடேஸ்வரா நகரில் லாட்டரி சீட்டு விற்ற சக்தி நகரை சேர்ந்த ரகு 43) பழைய சாரம் பகுதியை சேர்ந்த சங்கர் 49) ஆகிய 2 பேரை கோரிமேடு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 செல்போன்கள் லாட்டரி சீட்டு விற்பனை பணம் ரூ.82 ஆயிரத்து 770 ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர்.

    • புதுவை சாரதா கங்காதரன் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
    • கல்லூரியின் செஞ்சுருள் சங்கமும், இளைஞர் செஞ்சிலுவை சங்கமும் இணைந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தியது.

    புதுச்சேரி:

    புதுவை சாரதா கங்காதரன் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி துணை தலைவர் பழனிராஜா தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர் அணுக் அராக்கல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதனை தொடர்ந்து கல்லூரியின் செஞ்சுருள் சங்கமும், இளைஞர் செஞ்சிலுவை சங்கமும் இணைந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தியது.

    ஊர்வலத்தை முன்னாள் இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் சிவராமச்சந்திரன், தமிழ்ச்செல்வி பாலகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.ஊர்வலத்தில் தன்னார்வலர், மாணவிகள் கலந்து கொண்டு வேல்ராம்பட்டு பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    விழாவில் மாணவிகளுக்கு ஆடை அலங்கார அணிவகுப்பு, நகை அலங்காரம், பூ அலங்காரம், பழங்கள், காய்கறிகளில் சிற்பம் செதுக்குதல், ரங்கோலி, மெஹந்தி, குறும்படம் மற்றும் வினாடி-வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவி கலைவாணி பெற்றார். இதில் பெண்கள் அதிகாரமளித்தல் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கீதா, துணை ஒருங்கிணைப்பாளர் செல்வதுர்கா ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் உதயசூரியன் செய்திருந்தார்.

    • காசி விஸ்வநாதன் ஆகியோர் அந்த நிறுவனத்தின் விவரங்கள், பணி செய்வதற்கு உண்டான சூழல், சம்பளம் குறித்த விவரங்களை தெரிவித்தனர்.
    • எழுத்து மற்றும் நேர்முக தேர்வு ஆகிய 2 சுற்றுகளாக இந்த வளாக தேர்வில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பை பெற்று பயனடைந்தனர்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் எந்திரவியல் துறை மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் சென்னையை சேர்ந்த பிடெலிஸ் டிடெய்லிங் சொலிசன் நிறுவனத்தினர் நிர்வாக இயக்குனர் இளஞ்செழியன், இணை இயக்குனர்கள் கீர்த்திவாசன், காசி விஸ்வநாதன் ஆகியோர் அந்த நிறுவனத்தின் விவரங்கள், பணி செய்வதற்கு உண்டான சூழல், சம்பளம் குறித்த விவரங்களை தெரிவித்தனர்.

    முகாமிற்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணகேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார். எழுத்து மற்றும் நேர்முக தேர்வு ஆகிய 2 சுற்றுகளாக இந்த வளாக தேர்வில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பை பெற்று பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அனைத்து துறை சார்ந்த வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

    • புதுவை மிஷன் வீதியில் மயிலம் பொம்மபுர ஆதீனம் மடத்தில் மயிலம் முருகர் சுப்ரமணியசுவாமி ஊஞ்சல் உற்சவம் விமர்சையாக நடந்தது.
    • மாசி மக தீர்த்தவாரியில் பங்கேற்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை மிஷன் வீதியில் மயிலம் பொம்மபுர ஆதீனம் மடத்தில் மயிலம் முருகர் சுப்ரமணியசுவாமி ஊஞ்சல் உற்சவம் விமர்சையாக நடந்தது. இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    புதுவையில் நடந்த மாசி மக தீர்த்த வாரியில் பங்கேற்க மயிலம் முருகன் சுப்ரமணிய சுவாமி உற்சவர் கடந்த மயிலத்தில் இருந்து புறப்பட்டு கடந்த புதுவை வைத்திக்குப்பம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் பங்கேற்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பின்னர் மிஷன் வீதியில் உள்ள மயிலம் பொம்மபுர ஆதீனம் மடத்தில் உற்சவர் வைக்கப்பட்டு மிஷன் வீதி, நேரு வீதி வழியாக சுவாமி வீதியுலா நடந்தது. மயிலம் சுப்பிரமணியரின் ஊஞ்சல் உற்சவம் விமர்சையாக நடந்தது.

    சுப்பிரமணியருக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. சன்னிதானம் சிவஞானபாலய சுவாமிகள் முன்னிலையில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சன்னிதானம் சிவஞானபாலய சுவாமிகளிடம் பொதுமக்கள் ஆசி பெற்றனர். பொம்மபுர மடத்தில் உள்ள உற்சவர் சுப்பிரமணியர் மயிலம் புறப்பட்டார்.

    • விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் சேர்மன் சந்திரசேகர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் சுமார் 100 பேருக்கு போர்வை மற்றும் தலையணை உரையை துணை பதிவாளர் பெருமாள் வழங்கினார்.

    புதுச்சேரி:

    விநாயகாமிஷன் ரிசர்ச் பவுண்டே ஷன் நிகர்நிலை பல்கலைக்கழக துணை தலைவர் மற்றும் காரைக்கால் விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் சேர்மன் சந்திரசேகர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியின் துணை பதிவாளர் பெருமாள் தலைமையில் பாகூரில் பழமை வாய்ந்த மூலநாதர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் வன்னி மரக்கன்று நடப்பட்டது. தொடர்ந்து கோவிலில் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து பெரியகாட்டுப்பாளையம் பகுதியில் உள்ள உதவும் கரங்கள் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் சுமார் 100 பேருக்கு போர்வை மற்றும் தலையணை உரையை துணை பதிவாளர் பெருமாள் வழங்கினார். தொடர்ந்து ஆதரவற்ற குழந்தை களுடன் கேக் வெட்டி, பிரியாணி விருந்து வழங்கி கொண்டாடப்பட்டது.

    மேலும் அரியாங்குப்பம், காக்காயன்தோப்பு பகுதியில் உள்ள மனநல காப்பகத்தில் அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

    ×