என் மலர்
புதுச்சேரி
- புதுவை அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் ஆண்டுதோறும் உலக மீன்வள தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
- மீனவர்களுக்கு கோலப்போட்டி, லெமன் அன்ட் ஸ்பூன், ஓட்டப்பந்தயம், வலைபின்னும் போட்டி நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் ஆண்டுதோறும் உலக மீன்வள தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
2022ம் ஆண்டுக்கான உலக மீன்வள தினவிழாவை முன்னிட்டு ராஜ்பவன் தொகுதிக்கு உட்பட்ட வைத்திக்குப்பம் மற்றும் குருசுக்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்களுக்கு கோலப்போட்டி, லெமன் அன்ட் ஸ்பூன், ஓட்டப்பந்தயம், வலைபின்னும் போட்டி நடைபெற்றது.
பின்னர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் லட்சுமி நாராயணன் வெற்றி பெற்றவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம், ஆயிரம் வீதம் என மொத்தம் ரூ.48 ஆயிரம் பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில் மீன்வளத்துறை இணை இயக்குனர் தெய்வசிகாமணி, துணை இயக்குனர் (கூடுதல் பொறுப்பு) கோவிந்தசாமி, மீன்வள உதவி ஆய்வாளர்ஆறுமுகம் மற்றும் வைத்திக்குப்பம் மற்றும் குருசுக்குப்பம் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
- புதுவையில் பிளஸ் -2 தேர்வை 12 ஆயிரத்து 332 மாணவர்களும், காரைக்காலில் 2 ஆயிரத்து 359 மாணவர்களும் எழுதுகின்றனர்.
- தேர்வு மையங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
பிளஸ் -2 மாணவர்களுக்கு அடுத்த மாதம் ஏப்ரல் 3-ந் தேதி வரையும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் 5-ந் தேதி வரையும் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது. புதுவையில் பிளஸ் -2 தேர்வை 12 ஆயிரத்து 332 மாணவர்களும், காரைக்காலில் 2 ஆயிரத்து 359 மாணவர்களும் எழுதுகின்றனர். பிளஸ் 1 தேர்வை புதுவையில் 12 ஆயிரத்து 138 மாணவர்களும், காரைக்காலில் ஆயிரத்து 979 மாணவர்களும் எழுதுகின்றனர்.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் -2 மாணவர்களுக்காக புதுவையில் 33, காரைக்காலில் 10 என மொத்தம் 43 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு ள்ளது. தேர்வு மையங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையத்திற்கு வரும் மாணவர்கள் மொபைல் போன் உள்ளிட்ட எந்த தகவல் தொடர்பு சாதனங்க ளையும் கொண்டு வர தடை விதிக்கப்ப ட்டுள்ளது.
ஹால் டிக்கெட் இல்லாத மாணவர்கள் எக்கார ணத்தைக் கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு மையத்தில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களின் குற்றத்திற்கு ஏற்ப தண்டனை அளிக்கப்படும் என பள்ளி கல்வி இணை இயக்குனர் சிவகாமி தெரிவித்துள்ளார்.
தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளுக்கு முதல்- அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
தேர்வு எழுதும் மாணவ செல்வங்கள் அனைவரும் ஆண்டு முழுவதும் வகுப்பறையில் படித்த பாடங்களை தேர்வறையில் எழுதும்போது மதிப்பெண்களாக மாறுகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த தேர்வை தங்களை நிரூபிப்பதற்கான அருமையான வாய்ப்பாக எண்ண வேண்டும். பயமோ, பதட்டமோ இன்றி உற்சாகத்தோடும், தன்னம்பிக்கையோடும் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.
பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு, நேர்மறையான சிந்தனைகளை ஏற்படுத்தி அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக நிற்க வேண்டும்.
தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறவும், எதிர்காலம் சிறப்பானதாக அமையவும் எனது அன்பான வாழ்த்துக்கள்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி குறிப்பிட்டுள்ளார்.
- பிரசித்தி பெற்ற இக்கோவிலில் அப்பகுதி மக்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கையும் செலுத்துவது வழக்கம்.
- கோவில் சூலத்துக்கு முன்பு இருந்த 3 அடி உயரமுள்ள உண்டியலை காணாமல் பூசாரி திடுக்கிட்டார்.
புதுச்சேரி:
உருளையன்பேட்டை ராஜாநகரில் கோவில் உண்டியல் பணம் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். புதுவை பஸ் நிலையம் பின்புறம் உருளையன்பேட்டை ராஜாநகரில் அய்யனார் கோவில் வீதியில் நாகமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் அப்பகுதி மக்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கையும் செலுத்துவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி கோவிலில் பூஜை முடிந்ததும் கோவில் பூசாரி ராஜநாராயணன் கோவிலை பூட்டி விட்டு சென்றார். வழக்கம் போல் பூஜை செய்ய பூசாரி நாராயணன் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் கோவில் சூலத்துக்கு முன்பு இருந்த 3 அடி உயரமுள்ள உண்டியலை காணாமல் பூசாரி திடுக்கிட்டார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கோவிலின் பின்புறம் உள்ள புற்றின் அருகே உண்டியல் உடைக்கப்பட்டு சில்லறை காசுகள் சிதறி கிடந்தது. யாரோ மர்ம நபர் நள்ளிர வில் சுவர் ஏறி குதித்து கோவிலில் புகுந்து உண்டியலை அடியோடு பெயர்த்து எடுத்து சென்று புற்றின் அருகே உண்டியலை உடைத்து அதில் இருந்து காணிக்கை (ரூபாய் நோட்டுகள் மட்டும்) எடுத்து சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து கோவிலின் அறங்காவலர் குழு பொருளாளர் செல்வராஜ் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து தடயவியல் நிபுணரை வரவழைத்து தடயங்களை பதிவு செய்தனர். அதோடு அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து உண்டியல் கொள்ளையர்களை அடை யாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
கோவில் உண்டியல் பணம் கொள்ளைபோன இடம் எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். பஸ் நிலையம் மற்றும் ஓட்டல்கள், கடைகள் எப்போதும் செயல்பட்டு கொண்டிருக்கும் வேளை யில் மர்ம நபர்கள் துணிகர மாக கோவில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடமும், பக்தர்க ளிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- புதுவை சுற்றுலாவில் வளரும் போக்குகள் என்ற தலைப்பில் இந்திய தொழிலகங்கள் கூட்டம் நடைபெற்றது.
- ஐ.டி. தொழில் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
புதுச்சேரி:
புதுவை சுற்றுலாவில் வளரும் போக்குகள் என்ற தலைப்பில் இந்திய தொழிலகங்கள் கூட்டம் (சி.ஐ.ஐ.) அண்ணா சாலை ரெசிடென்சி ஓட்டலில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு பேசியதாவது:
கடந்த 2017 முதல் 2019ம் ஆண்டு வரை முதலீட்டாளர்களுக்கு புதுவை அரசு ரூ.25 கோடி இன்சண்ட்டிவ் கொடுத்துள்ளது. இன்னும் 42 பேருக்கு மட்டுமே கொடுக்க வேண்டும். அதற்கான கோப்பும் நிதி துறைக்கு அனுப்பி உள்ளோம். நல்ல செய்தி விரைவில் கிடைக்கும். தொழில் முதலீட்டாளர்களுக்கு பக்க பலமாக இந்த அரசு இருக்கும். கரசூர் நிலங்களை தொழில் துறையினருக்கு கொடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பிரெஞ்ச் முதலீட்டாளர்களும் இடம் கேட்கிறார்கள். அதையும் பரிசீலிக்கிறோம். ஐ.டி. தொழில் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். முதல் அமைச்சரை ஒரு குழு இதற்காக வந்து பார்த்துள்ளது. தொழில் செய்ய ஏதுவான மாநிலமாக, புதுவையை மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் சி.ஐ.ஐ. உடன் சேர்ந்து செய்வோம். இவ்வாறு அவர் கூறினார். இதில் அமைச்சர் லட்சுமிநாராயணன் மற்றும் சி.ஐ.ஐ. நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
- புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட வாணரப்பேட்டை பகுதியில் வாய்க்கால் மற்றும் தற்போதுள்ள சிமெண்டு சாலை மேம்படுத்தப்படுகிறது.
- மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளைச் செயலாளர் ராகேஷ் மற்றும் லாரன்ஸ், தி.மு.க.நிர்வாகிகள் ரகுமான் மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் உடன் இருந்தனர்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதிக் குட்பட்ட வாணரப் பேட்டை நாகமுத்து மாரியம்மன் கோவில் வீதியில் புதுவை நகராட்சி மூலம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.13 லட்சத்து 40 ஆயிரம் செலவில் வாய்க்கால் மற்றும் தற்போதுள்ள சிமெண்டு சாலை மேம்படுத்தப்படுகிறது.
இதற்கான கட்டுமான பணியினை கென்னடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியின் போது நகராட்சி செயற் பொறியாளர் சிலபாலன், துணைப்பொறியாளர் பிரபாகரன், இள நிலைப்பொறியாளர் சண்முகசுந்தரம் , மற்றும் ஊர் பொதுமக்கள் சகாயராஜ், வெங்க டேஸ்வரன், கணேசன், நடேசன், சிவக்குமார், முனுசாமி, ஜான், செங்கேணி, சுமதி, தமிழ்செல்வி, வசந்தா மற்றும் தொகுதி செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் ஆரோக்கியராஜ், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளைச் செயலாளர் ராகேஷ் மற்றும் லாரன்ஸ், தி.மு.க.நிர்வாகிகள் ரகுமான் மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் உடன் இருந்தனர்.
- இந்தியாவில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.
- கடந்த ஜனவரி மாதம் 35 பேரும், பிப்ரவரி மாதம் 38 பேரும், இந்த மாதம் தற்போது 2 பேரும் இந்த புதிய வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி:
இந்தியாவில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. 'இன்புளூயன்சா-ஏ' வைரசின் துணை வைரசான 'எச்3 என்2' என்ற இந்த புதிய வைரசால் புதுச்சேரியில் கடந்த 3 மாதங்களில் 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.
இதன்படி கடந்த ஜனவரி மாதம் 35 பேரும், பிப்ரவரி மாதம் 38 பேரும், இந்த மாதம் தற்போது 2 பேரும் இந்த புதிய வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேர் மட்டும் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர். எச்3 என்2 வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 18 பேர் 5 வயதுக்குட்பட்டவர்கள், 18 பேர் 6 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- புதுவை மாநில இளைஞர் காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- கில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஜோஸ்னா ஜெரால்டு, சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
புதுச்சேரி:
புதுவை மாநில இளைஞர் காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக ஆனந்தபாபு நடராஜன், துணைத்தலைவர்களாக கல்யாணசுந்தரம், சேகர், ஜமீர்அகமதுஅல்பாசி, குணசேகர், ஜெயராமன், கோவளன், டேனியல்ராஜ், கயல்விழி ஆகியோரும், 23 தொகுதிகளுக்கான வட்டார தலைவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா கம்பன் கலையரங்கில் நடந்தது. அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் முன்னிலையில் உறுதிமொழி ஏற்று மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக ஆனந்தபாபு நடராஜன் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்றனர்.
பதவியேற்பு விழாவுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஜோஸ்னா ஜெரால்டு, சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
விழாவில் முன்னாள் அமைச்சர்கள் வல்சராஜ், கந்தசாமி, ஷாஜகான், கமலகண்ணன், பெத்தபெருமாள், ரமேஷ்பரம்பத்
எம்.எல்.ஏ., முன்னாள் துணை சபாநாயகர் பாலன், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திகேயன், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் செயல் தலைவர் வேல்முருகன், காங்கிரஸ் நிர்வாகிகள் தனுசு, ரகுமான், இளையராஜா, ஆர்.இ.சேகர், வீரமுத்து, குணசேகரன், வக்கீல் மருதுபாண்டி, எஸ்.எம்.ஏ. கருணாநிதி, சிறப்பு அழைப்பாளர் வினோத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக ராஜாதியேட்டர் அருகில் இருந்து புதிய நிர்வாகிகள் தலைவர் ஆனந்தபாபுநடராஜன் தலைமையில் மோட்டார்சைக்கிளில் ஊர்வலமாக வந்தனர்.
- புதுவை-தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- விழாவிற்கு வரும் பொது மக்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருதல்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே உள்ள திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவில் அமைந்துள்ள சங்கராபரணி ஆற்றங்கரையில் வருகிற ஏப்ரல் 23-ந் தேதி மகா புஷ்கரணி விழா நடைபெற உள்ளது.
இதற்காக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விழாவில் புதுவை-தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று காலை வேளாண் துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தலைமையில் அதிகாரியுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் திருக்காஞ்சி மகா புஷ்கரணி விழாவிற்கு செல்லும் சாலைகளை மேம்படுத்துதல், விழாவிற்கு வரும் பொது மக்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருதல். பொதுமக்களின் பாது காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்ளுதல், விழாவிற்கு வரும் பொது மக்கள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கான இட வசதிகளை செய்து தருதல், சங்கராபரணி ஆற்றங்கரையில் படித்துறை களை மேம்படுத்தி பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன், சுந்தரராஜ், உதவி பொறியாளர்கள் கோபி, மதிவாணன், இளநிலை பொறியாளர்கள் சங்கர், நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் அநாகரிகமான முறையில், பொது இடத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
- இது அதிகார அத்துமீறல் என்ற அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
புதுச்சேரி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை குடிமை பொருள் வழங்கல் துறை இயக்குநர், இணை இயக்குநர் மற்றும் அதிகாரிகளிடம் பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் அநாகரிகமான முறையில், பொது இடத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இணை இயக்குனரை தொலைத்து விடுவேன் என மிரட்டியுள்ளார். பா.ஜனதா அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.
இது அதிகார அத்துமீறல் என்ற அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
பா.ஜனதா எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுவை மாநிலத்தில் வசிப்பவர்கள் அனைவரும் குடும்ப அட்டையை கவுரவத்திற்காகவே வைத்துள்ளனர். ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்குவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்ட நிலையில், பா.ஜனதா தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் குடும்ப அட்டை ஒப்படைப்பது மக்களை ஏமாளியாக்கும் செயல்.
பா.ஜனதா ஆட்சியில் விலைவாசி உயர்வு கடுமையாக உயர்ந்துள்ள சூழலில் ஏழை-எளிய மக்களும், நடுத்தர மக்களும் பொது விநியோக திட்டம் அத்தியாவசியமானதா கும். குடிமை பொருள் வழங்கல் துறையை தன் வசம் வைத்துள்ள பா.ஜனதா பொதுமக்கள் பார்வைக்கு இத்தகைய நாடகத்தை அரங்கேற்றுவது ஏமாற்று செயலாகும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- புதுவை ஹெரிடேஜ் லேடிஸ் சர்கிள் மற்றும் டொயோட்டா அண்ணாமலைஸ் குரூப் சார்பில் ஸ்மார்ட் டி.வி. வழங்கும் விழா நடைபெற்றது.
- பள்ளிக் கல்வித் துறை 2-ம் வட்ட பள்ளி துணை ஆய்வாளர் குமார் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை சவுரிராயலு அரசு பெண்கள் பள்ளியில் புதுவை ஹெரிடேஜ் லேடிஸ் சர்கிள் மற்றும் டொயோட்டா அண்ணாமலைஸ் குரூப் சார்பில் ஸ்மார்ட் டி.வி. வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் புதுவை ஹெரிடேஜ் லேடீஸ் சர்க்கிள் தலைவர் சுபாஷினி திலீப் மற்றும் பிரியா மனோஜ் பங்கேற்று டி.வி.யை வழங்கினர்.
பள்ளிக் கல்வித் துறை 2-ம் வட்ட பள்ளி துணை ஆய்வாளர் குமார் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். பள்ளி ஆசிரியர் சிவப்பிரகாசம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
பொறுப்பாசிரியை கோமதி நன்றி கூறினார் நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பள்ளியின் அனைத்து ஆசிரியர் பெருமக்களும் செய்திருந்தனர்.
- பாகூர் பகுதியை சேர்ந்த பா.ம.க.வினர் பஸ் இயக்கப்படுவதை கண்டித்து புதுவை எல்லையான முள்ளோடையில் அரசு பஸ்சை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினரை கிருமாம்பாக்கம் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
பாகூர்:
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து இன்று கடலூர் மாவட்டம் முழுவதும் பந்த் போராட்டம் நடைபெறும் என்று பா.ம.க. தலைவர் ராமதாஸ் அறிவித்தார்.
பா.ம.க.வினர் வணிக நிறுவனங்கள் கடைகளின் உரிமையாளரிடம் நோட்டீஸ் வழங்கி முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினர்.
ஆனால் கடலூரில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. புதுவையில் இருந்து கடலூர் செல்ல போலீசார் ஏற்பாடு செய்து இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பாகூர் பகுதியை சேர்ந்த பா.ம.க.வினர் பஸ் இயக்கப்படுவதை கண்டித்து புதுவை எல்லையான முள்ளோடையில் அரசு பஸ்சை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினரை கிருமாம்பாக்கம் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
- முள்ளோடை பகுதியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் கடலூர் செல்ல ஆட்டோக்களுக்கு காத்திருந்தனர்.
- புதுவையில் இருந்து கடலூர் வழியாக விருதாச்சலம், சிதம்பரம் , சீர்காழி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை.
புதுச்சேரி:
கடலூர் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிர்வாகம் 2-வது சுரங்கத்திற்க்கு நிலம் கையகப்படுத்தி வருகிறது.
கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு போதிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் கடலூர் மாவட்டத்தில் இன்று பந்த் போராட்டம் நடந்தது. இதனால் புதுவையில் இருந்து கடலூருக்கு பஸ்கள் இயக்கப்படாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.
இதன்படி புதுவை பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் தனியார் பஸ்கள் புதுவை-கடலூர் எல்லை பகுதியான முள்ளோடை பகுதி வரை மட்டுமே இயக்கப்பட்டது. முள்ளோடை பகுதியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் கடலூர் செல்ல ஆட்டோக்களுக்கு காத்திருந்தனர்.
ஆட்டோவில் செல்ல முடியாதவர்கள் நடந்தே கடலூருக்கு சென்றனர். போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்ட அரசு பஸ்களில் அதிகளவு கூட்டம் இருந்தது.
மேலும் புதுவையில் இருந்து கடலூர் வழியாக விருதாச்சலம், சிதம்பரம், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை.






