search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து
    X

    கோப்பு படம்.

    தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து

    • புதுவையில் பிளஸ் -2 தேர்வை 12 ஆயிரத்து 332 மாணவர்களும், காரைக்காலில் 2 ஆயிரத்து 359 மாணவர்களும் எழுதுகின்றனர்.
    • தேர்வு மையங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    பிளஸ் -2 மாணவர்களுக்கு அடுத்த மாதம் ஏப்ரல் 3-ந் தேதி வரையும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் 5-ந் தேதி வரையும் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது. புதுவையில் பிளஸ் -2 தேர்வை 12 ஆயிரத்து 332 மாணவர்களும், காரைக்காலில் 2 ஆயிரத்து 359 மாணவர்களும் எழுதுகின்றனர். பிளஸ் 1 தேர்வை புதுவையில் 12 ஆயிரத்து 138 மாணவர்களும், காரைக்காலில் ஆயிரத்து 979 மாணவர்களும் எழுதுகின்றனர்.

    பிளஸ் 1 மற்றும் பிளஸ் -2 மாணவர்களுக்காக புதுவையில் 33, காரைக்காலில் 10 என மொத்தம் 43 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு ள்ளது. தேர்வு மையங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையத்திற்கு வரும் மாணவர்கள் மொபைல் போன் உள்ளிட்ட எந்த தகவல் தொடர்பு சாதனங்க ளையும் கொண்டு வர தடை விதிக்கப்ப ட்டுள்ளது.

    ஹால் டிக்கெட் இல்லாத மாணவர்கள் எக்கார ணத்தைக் கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு மையத்தில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களின் குற்றத்திற்கு ஏற்ப தண்டனை அளிக்கப்படும் என பள்ளி கல்வி இணை இயக்குனர் சிவகாமி தெரிவித்துள்ளார்.

    தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளுக்கு முதல்- அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தேர்வு எழுதும் மாணவ செல்வங்கள் அனைவரும் ஆண்டு முழுவதும் வகுப்பறையில் படித்த பாடங்களை தேர்வறையில் எழுதும்போது மதிப்பெண்களாக மாறுகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    இந்த தேர்வை தங்களை நிரூபிப்பதற்கான அருமையான வாய்ப்பாக எண்ண வேண்டும். பயமோ, பதட்டமோ இன்றி உற்சாகத்தோடும், தன்னம்பிக்கையோடும் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.

    பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு, நேர்மறையான சிந்தனைகளை ஏற்படுத்தி அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக நிற்க வேண்டும்.

    தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறவும், எதிர்காலம் சிறப்பானதாக அமையவும் எனது அன்பான வாழ்த்துக்கள்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×