என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
    X

    கோப்பு படம்.

    மில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

    • பேரக்குழந்தையை பார்க்க முடியாத ஏக்கத்தில் ஓய்வு பெற்ற மில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • விஷம், குடித்து, தற்கொலை,

    புதுச்சேரி:

    பேரக்குழந்தையை பார்க்க முடியாத ஏக்கத்தில் ஓய்வு பெற்ற மில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    புதுவை கோவிந்தசாலை குபேர் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள். ஓய்வு பெற்ற ரோடியர் மில் தொழிலாளி. இவரது மகன் சந்துரு. இவருக்கும் நெய்வேலியை சேர்ந்த பூவியா என்ற பெண்ணுக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இதற்கிடையே சந்துரு தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தையை பிரிந்து பெற்றோர் வீட்டில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

    ஆனால் அவ்வப்போது கலிய பெருமாள் பேரக் குழந்தையை பார்க்க நெய் வேலிக்கு பார்க்க செல்வது வழக்கம். அதுபோல் கலியபெருமாள் பேரக்குழந்தையை பார்க்க நெய்வேலிக்கு செல்வதாக தனது மனைவி ருக்குமணியிடம் கூறினார். அதற்கு ருக்குமணி ஏற்கனவே உடல்நிலை சரியில்லாததால் தற்போது அங்கு செல்ல வேண்டாம். உடல் நிலை சரியான பிறகு பேரக்குழந்தையை பார்க்க செல்லுமாறு அறிவுறுத்தினார்.

    இதனால் கலியபெரு மாள் பேரக்குழந்தையை பார்க்க முடியாமல் மனசோர்வு அடைந்தார்.

    இந்தநிலையில் கலியபெருமாள் சாப்பிட்டு விட்டு வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு தூங்க செல்வதாக கூறி சென்றார்.

    ஆனால் வெகு நேரமாகியும் டீக்குடிக்க கலியபெருமாள் எழுந்து வராததால் அவரது மனைவி ருக்குமணி மாடி அறைக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு விஷம் குடித்து கலியபெருமாள் வாயில் நுரை தள்ளியபடி பிண மாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பேரக்குழந்தையை பார்க்க முடியாத வேதனை யில் கலியபெருமாள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அவரது மனைவி ருக்குமணி கொடுத்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×