என் மலர்
புதுச்சேரி

மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்ற காட்சி.
வேலைவாய்ப்பு முகாம்
- காசி விஸ்வநாதன் ஆகியோர் அந்த நிறுவனத்தின் விவரங்கள், பணி செய்வதற்கு உண்டான சூழல், சம்பளம் குறித்த விவரங்களை தெரிவித்தனர்.
- எழுத்து மற்றும் நேர்முக தேர்வு ஆகிய 2 சுற்றுகளாக இந்த வளாக தேர்வில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பை பெற்று பயனடைந்தனர்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் எந்திரவியல் துறை மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் சென்னையை சேர்ந்த பிடெலிஸ் டிடெய்லிங் சொலிசன் நிறுவனத்தினர் நிர்வாக இயக்குனர் இளஞ்செழியன், இணை இயக்குனர்கள் கீர்த்திவாசன், காசி விஸ்வநாதன் ஆகியோர் அந்த நிறுவனத்தின் விவரங்கள், பணி செய்வதற்கு உண்டான சூழல், சம்பளம் குறித்த விவரங்களை தெரிவித்தனர்.
முகாமிற்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணகேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார். எழுத்து மற்றும் நேர்முக தேர்வு ஆகிய 2 சுற்றுகளாக இந்த வளாக தேர்வில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பை பெற்று பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அனைத்து துறை சார்ந்த வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.






