என் மலர்
புதுச்சேரி

கூட்டத்தில் அரியாங்குப்பத்தொகுதி பா.ஜனதா தலைவர் செல்வகுமார் பேசிய போது எடுத்த படம்.
பா.ஜனதா செயற்குழு கூட்டம்
- புதுவை மாநில பா. ஜனதா அரியாங்குப்பம் தொகுதி செயற்குழு கூட்டம், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
- அனைத்து இல்லங்களுக்கும் நேரில் சென்று பிரதமரின் திட்டங்களை விளக்கி பா.ஜனதா கட்சிக்கு வலு சேர்க்க முடிவு செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை மாநில பா. ஜனதா அரியாங்குப்பம் தொகுதி செயற்குழு கூட்டம், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொகுதி தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ராமு, விவசாய அணி தேசிய செயற்குழு உறுப்பினர் பாரதிமோகன், மாநில மீனவர் பிரிவு அமைப்பாளர் பழனி, மாநில வக்கீல் பிரிவு அமைப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக, மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார், மாநில செயலாளரும் அரியாங்குப்பம் மாவட்ட பொறுப்பாளருமான நாகராஜ், மாவட்ட தலைவர் தெய்வசிகாமணி அலுவலக செயலாளர் மகேஷ், மற்றும் சிவ செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சட்டமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடி புதுவை மாநிலத்தை பெஸ்ட் புதுவையாக மாற்ற உறுதி அளித்ததை போலவே, பல நல்ல திட்டங்களை நமது மாநிலத்திற்கு அளித்து வருவதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மேலும் இவற்றையெல்லாம் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வருகிற 11-ந் தேதி முதல் 21-ம் தேதி வரை, புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் நேரில் சென்று பிரதமரின் திட்டங்களை விளக்கி பா.ஜனதா கட்சிக்கு வலு சேர்க்க முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் சாந்தி, செல்வராஜ், புகழேந்தி, பாண்டு, அய்யனார், முருகேசன், ரவிச்சந்திரன், ராமன், சம்பத், குமரன், ஆனந்தராஜ், சுகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் தொகுதி பொதுச்செயலாளர் . பிச்சை முத்து நன்றி கூறினார்.






