என் மலர்
புதுச்சேரி
- புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட புஸ்ஸி வீதியில் பாதாள வடிகாலில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு நிரம்பியது,
- கழிவுநீரை உறிஞ்செடுக்கும் நவீன இயந்திரம் மூலம் சுத்தம் செய்து கொடுத்தனர்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக் குட்பட்ட புஸ்ஸி வீதியில் பாதாள வடிகாலில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு நிரம்பியது, இதனால் கழிவு நீர் சாலைகளிலும், சைடு வாய்க்கால்களிலும் நிரம்பி வெளியேறியது.
இது குறித்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் சாலை ஓர வியாபாரிகளும், தொகுதி மக்களும் தெரிவித்தனர். உடனே பொதுப்பணித் துறை இளநிலைப் பொறியாளர் சங்கரை அணுகி விரைந்து பாதாள வடிகாலில் அடைப்புகள் நீக்கி கழிவு நீரை உறிந்து எடுக்கும் வாகனத்தை வரும்படிக்கு வலியுறுத்தினார்.
சிறிது நேரத்திலே கழிவுநீரை உறிந்து எடுக்கும் நவீன வாகனம் சம்பவ இடத்திற்கு வந்தது உடனடியாக அங்குள்ள அடைப்புகளை ஊழியர்கள் சரி செய்தனர். பின்னர் கழிவுநீரை உறிஞ்செடுக்கும் நவீன இயந்திரம் மூலம் சுத்தம் செய்து கொடுத்தனர்.
இதனால் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.க்கு நன்றி தெரிவித்தனர். உடன் தொகுதி துணை செயலாளர் ஆரோக்கியராஜ், கிளைச் செயலாளர் லாரன்ஸ், தொழில்நுட்ப அணி அரவிந்த், தி.மு.க. நிர்வாகிகள் மோரிஸ், ரகுமான், சிரஞ்சீவி, கார்த்திக், அருள், மரி ஆகியோர் செய்திருந்தனர்.
- உலகம் முழுவதும் சிட்டுக்குருவிகள் இனம் அழிவை சந்தித்து வருகிறது.சிட்டுக்குருவிகளை பாதுகாக்க பல்வேறு பறவை ஆர்வலர்கள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
- உணவு வைத்து சிட்டுக்குருவிகள் இனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
உலகம் முழுவதும் சிட்டுக்குருவிகள் இனம் அழிவை சந்தித்து வருகிறது.சிட்டுக்குருவிகளை பாதுகாக்க பல்வேறு பறவை ஆர்வலர்கள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இதுகுறித்து புதுவை பசுமை இயக்க தலைவர் அருண் தெரிவித்ததாவது:-
ஆயிரக்கணக்கான கூண்டுகள் தயாரித்து புதுவை அரசு வழங்கி பொது இடங்களான பாரதி பூங்கா, கடற்கரை சாலை, தாவரவியல்பூங்கா உட்பட பல பகுதிகளில் பொருத்தி, அதற்கு உணவு வைத்து சிட்டுக்குருவிகள் இனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உலக சிட்டுக்குரு விகள் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 8 அடி நீளம், 2 அடி அகலம் கொண்ட மெகா சிட்டுக்குருவிகள் கூண்டை தயாரித்து புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் ஒப்படைத்து, அவர் தெரிவிக்கும் இடத்தில் பொருத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இதேபோல 4 மெகா கூண்டுகள் தயாரிக்கும் பணி நடந்து வருவதாகவும், விரைவில் இது புதுவையின் முக்கிய இடங்களில் பொருத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். சிட்டுக்குருவிகள் தினத்தை யொட்டி கடலுக்கு அடியில் விழிப்புணர்வு பேனர் ஏற்றவும், தன்னார்வலர்கள், பொதுமக்களுக்கு 500 சிறிய ரக சிட்டுக்குருவிகள் கூண்டு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாப்ஸ்கோ ஊழியர்கள் ஏ.ஐ.டி.யூ.சி. சங்கம் சார்பில் 7-வது நாளாக சட்டசபை அருகே போராட்டம் நடைபெற்றது.
- பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 65 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
பாப்ஸ்கோ ஊழியர்கள் ஏ.ஐ.டி.யூ.சி. சங்கம் சார்பில் 7-வது நாளாக சட்டசபை அருகே போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் ஜெய்சங்கர், பொருளாளர் பிரபு தலைமை வகித்தனர், ஏ.ஐ.டி.யூ.சி பொதுச் செயலாளர் சேதுசெல்வம், கவுரவ தலைவர் அபிஷேகம் முன்னிலை வகித்தனர்,
சங்க நிர்வாகிகள் நடராஜன், முனுசாமி, அமுதவல்லி, பத்மநாபன், ரவி, ஏழுமலை, முருகவேல், வேலு, பாலமுருகன், கமிட்டி உறுப்பினர்கள் ஜீவரத்தினம், ராஜூ, விசுவநாதன், குமரகுரு, அமுதா, அம்சவல்லி, நக்கீரன், சத்தியசீலன், ஊழியர்கள் கோவர்தன், குணா, கெஜவரதன், நாராயணன், பாலச்சந்தர், பார்த்திபன், செந்தில், சௌந்தர்ராஜன் காரைக்கால் பகுதியை சேர்ந்த ஜார்ஜ், ஜோசப்அடைக்கலராஜ், பாலாசுப்பிரமணியன் மற்றும் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 65 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். பாப்ஸ்கோ நிறுவனத்தை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்து அனைத்து ஊழியர்களுக்கும் வேலை வழங்கி மாதம் தவறாமல் சம்பளம் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சி போராட்டம் நடத்தினர்.
- புதுவையை அடுத்த ஆரோவில்லில் இயங்கும் ரெட் எர்த் குதிரையேற்ற பயிற்சி பள்ளி ஆண்டுதோறும் குதிரையேற்ற போட்டியை நடத்தி வருகிறது.
- 3-வது நாளான அட்வான்ஸ் டிரஸ்ஏஜ் ஒருங்கிணைப்பு பிரிவில் வீரர்கள் 10 பேர் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
புதுவையை அடுத்த ஆரோவில்லில் இயங்கும் ரெட் எர்த் குதிரையேற்ற பயிற்சி பள்ளி ஆண்டுதோறும் குதிரையேற்ற போட்டியை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு 23-வது தேசிய அளவிலான குதிரை ஏற்ற போட்டி 16-ந் தேதி தொடங்கி 4 நாட்கள் நடக்கின்றது. போட்டியில் சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கோயம்புத்தூர், ஐதராபாத் மற்றும் உதகை உட்பட நாடு முழுவதும் இருந்தும் 140 பயிற்சி பெற்ற குதிரைகள் மற்றும் 150 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
முதல் நாளில் குதிரை அணிவகுப்பு மற்றும் உடல் ஆரோக்கிய பிரிவில் குதிரைகளும் வீரர்களும் பங்கேற்றனர். 2-வது நாளில் டிரஸ்சேஜ் எனப்படும் குதிரை மற்றும் வீரர்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு போட்டியும் சிறுவர்களுக்கான தடை தாண்டும் போட்டியும் நடத்தப்பட்டது.
3-வது நாளான அட்வான்ஸ் டிரஸ்ஏஜ் ஒருங்கிணைப்பு பிரிவில் வீரர்கள் 10 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து சீனியர் தடை தாண்டும் பிரிவில் போட்டி நடந்தது.
இதில் சென்னை, பெங்களூர்,கோவை, புதுவை,ஊட்டியை சேர்ந்த வீரர்கள் 10 இடங்களில் வைக்கப்பட்ட 90 செ.மீ. உயர தடைகளை தாண்டினார்கள்.
- பனை மரத்தின் தேவை- அவசியம் குறித்து தனசுந்தராம்பாள் சொசைட்டி தலைவர் பூரணாங்குப்பம் ஆனந்தன் விளக்கினார்.
- மாணவி ஒருவருக்கு பனை ஓலைகளால் ஆன ஆபரண நகைகளை அணிவித்து விளக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் 7 - நாட்கள் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு பயிற்சி முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ராஜூ சுகுமார் தலைமையில், புதுவை ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அருளரசி,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பனை மரத்தின் தேவை- அவசியம் குறித்து தனசுந்தராம்பாள் சாரிடெபுள் சொசைட்டி தலைவர் பூரணாங்குப்பம் ஆனந்தன் விளக்கினார். பிரமிட் விஞ்ஞானி டாக்டர் வரதராஜன் மாணவிகள் நினைவாற்றல், பிரமிட் தியானம் மூலம் அதிகரித்தல் மற்றும் மன அழுத்தம் போக்குதல் பற்றி விரிவாக பேசினார்.
நிகழ்ச்சியில் மாணவி ஒருவருக்கு பனை ஓலைகளால் ஆன ஆபரண நகைகளை அணிவித்து விளக்கப்பட்டது. முடிவில் கல்லூரி பேராசிரியர் ஆரோக்கியமேரி நன்றி கூறினார்.நிகழ்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் 100 மாணவிகள் பங்குபெற்று பயன் பெற்றனர்.
இதற்கான ஏற்பாடு களை தன்னார்வளர்கள், வண்டிமுத்து, சந்திரசூட், டோன்ட் வேஸ்ட் புட் ஸ்டீபன் ராயப்பா. மனித உரிமை இயக்கம் சிவசந்திரன், சிறு சேமிப்பு ஆலோசகர் பிரசாத், மற்றும் கல்லூரி மாணவிகள் செய்திருந்தனர்.
- பொதுமக்கள் இயற்கை முறையில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை எளிய முறையில் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- உழவர் சந்தையில் இயற்கை அங்காடி அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை உழவர் சந்தையில் இயற்கை அங்காடி அமைக்கப்பட்டுள்ளது. அங்காடியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் திறந்து வைத்தார். இங்கு பொதுமக்கள் இயற்கை முறையில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை எளிய முறையில் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுவை கிராமப்புற இயற்கை விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, கருங்குருவை, பூங்கா தூயமல்லி, கிச்சிடி சம்பா, சீரக சம்பா உள்ளிட்ட பாரம்பரிய அரிசி வகைகளை விற்பனை செய்ய புதுவை உழவர் சந்தையில் இயற்கை அங்காடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் அதிகாரிகள் இயற்கை விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- புதுவை சட்டசபையில் பட்ஜெட் மீதான மானிய கோரிக்கையில் பா.ஜனதா எம்.எல்.ஏ. வி.பி.ராமலிங்கம் பேசியதாவது:-
- புதுவை மாநில இளைஞர்கள் வேலை வாய்ப்பை ஏற்படுத்த ஐ.டி. பார்க் அறிவிப்பு விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் பட்ஜெட் மீதான மானிய கோரிக்கையில் பா.ஜனதா எம்.எல்.ஏ. வி.பி.ராமலிங்கம் பேசியதாவது:-
புதுவையில தமிழ் மாநாடு நடத்துவது தமிழறிஞர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. புதுவை மாநில இளைஞர்கள் வேலை வாய்ப்பை ஏற்படுத்த ஐ.டி. பார்க் அறிவிப்பு விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும்.
திருக்காஞ்சி புஷ்கர ணிக்கு வருகிற பொதுமக்கள் பாதுகாப்பாக வந்து செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அட்டவணை இன பெண்களுக்கு இலவச பஸ் என்பதை மாற்றி அனைத்து பெண்களும் 4 பிராந்தியங்களிலும் உள்ள அரசு பஸ்களில் செல்ல திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
சமையல் கியாஸ் சிலிண்டர் மானியம், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் ஆகியவை மகளிரை உற்காகமடைய செய்துள்ளது.முதல்-அமைச்சர் அறிவித்த அறிவி ப்புகள் அனைத்தும் பொது மக்களால மகிழ்ச்சியுடன் ஏற்கப்பட்டுள்ளது.
பா.ஜனதா, என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசு மிக சிறந்த பட்ஜெட்டை அளித்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- புதுவை கலிதீர்த்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப்டெக்னாலஜியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
- சிறு தானியத்தில் தயாரான உணவு பொருள்களை காட்சி படுத்தி அதில் சிறந்த உணவினை தேர்ந்தெடுக்கும் போட்டி நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை கலிதீர்த்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப்டெக்னாலஜியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவை கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் கல்விக் குழுமத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன் மற்றும் செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினர். இந்த ஆண்டின் சிறந்த மகளிருக்கான அன் சங் ஹீரோயின் என்ற தலைப்பிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக புதுவையின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெற்ற கருத்துக்கணிப்பின் அடிப்படையில் பத்து சிறந்த கிராமப்புற மகளிர் தேர்ந்தேடுக்கப்பட்டு விருது வழங்கப் பெற்றனர். விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட புதுவை ஈடன் குவாலிட்டி செயலாளர் சந்ஹிட்டா நட்கர்னி சிறப்புரையாற்றினார்.
இதனை தொடர்ந்து கல்லூரி பெண் பேராசிரியர்கள் தாங்கள் சிறு தானியத்தில் தயாரான உணவு பொருள்களை காட்சி படுத்தி அதில் சிறந்த உணவினை தேர்ந்தெடுக்கும் போட்டி நடத்தினர்.
விழா ஏற்பாடுகளை கல்லூரி ஆராய்ச்சி துறை தலைவர் வள்ளி மற்றும் வுமன் எம்பவெர்மென்ட் செல் தலைவர் பூங்குழலி ஆகியோர் செய்திருந்தனர்.
- விவசாயத்திற்கு தேவையான நவீன எந்திரங்களை அரசு மானியமாக வழங்க வேண்டும்.
- அரசு பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு பேசியதாவது:-
விவசாயத்தை பொருத்த வரை விளைநிலங்கள் அதிகளவு மனைகளாக மாறிவிட்டது. இருக்கும் விளைநிலங்களை பாது காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயத்திற்கு தேவையான நவீன எந்திரங்களை அரசு மானியமாக வழங்க வேண்டும்.
அரசு மானியத்தில் வழங்கப்படும் பசுக்கள் மூலம் பெறப்படும் பாலை பயனாளிகள் பாண்லேவுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ரேஷன் கடைகளை திறந்து அரிசி மற்றும் உணவு பொருட்களை வழங்க வேண்டும். இதன் மூலம் ஆண்டு கணக்கில் சம்பளம் இல்லாமல் பணியில் இருக்கும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு மாத சம்பளம் கிடைக்கும்.
அரசு பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். பாதாள சாக்கடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்.சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கு என்று ஒரு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
போக்குவரத்து காவலர்கள் சுற்றுலா பயணிகளிடம் கறாராக நடந்து கொள்கிறார்கள். சுற்றுலா பயணிகள் பயன்ப டுத்தும் வாகனங்களை குறி வைத்து அபராதம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும். திட்டங்களை காலத்தோடு நிறைவேற்ற அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுத்து மாநிலத்தை முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- காரைக்கால் துறை முகத்தின் செயல்பாடுகளை புதுவை அரசு கண்காணிக்க தவறியதால் கடத்தல் கேந்திரமாக மாறி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
- முதியவர்கள், குழந்தைகள் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காரைக்கால் துறை முகத்தின் செயல்பாடுகளை புதுவை அரசு கண்காணிக்க தவறியதால் கடத்தல் கேந்திரமாக மாறி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. காரைக்கால் துறை முகத்தில் அளவுக்கு அதிகமாக வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு டன் கணக்கில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.
காற்றின் மூலம் பரவும் கரி துகள்களால் காரைக்கால் மாவட்டமே நச்சுத்தன்மையாக மாறியுள்ளது. உணவுப் பொருட்களிலும் கரி துகள்கள் கலப்பதால் அதை உட்கொள்ளும் மக்கள் பலவித நோய் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றனர். முதியவர்கள், குழந்தைகள் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வருகின்றனர்.
துறைமுகத்தின் செயல்பாடுக்கு எதிராக காரைக்கால் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தும் மக்களை ஆட்சியாளர்களின் தூண்டுதலால் போலீசார் மிரட்டுவது கண்டனத்திற்குரியது.
காரைக்கால் துறைமுகம் வழியாக போதைப் பொருட்கள் கடத்தப்படு வதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. காரைக்கால் துறைமுகத்தை உடனடி யாக புதுவை அரசு கையகப்படுத்த வேண்டும். அரசே துறைமுகத்தை நடத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழகம் முழுவதும் உள்ள அரசு மாநகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.
- இளம் விதவை உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
புதுச்சேரி:
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன், மகளிருக்கான கட்டணமில்லா பஸ் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மாநகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி உள்ள பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் திட்டத்தை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் மட்டுமின்றி வீடுகளில் உள்ளவர்கள் அருகில் உள்ள பகுதிக்கு செல்லவும் உதவியாக இருப்பதால் இத்திட்டத்துக்கு அதிகமாக வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் அரசு பேருந்துகளில் பெண்கள் இனி இலவசமாக பயணம் செய்யலாம் என்று சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-
தனியார் பங்களிப்போடு கூட்டுறவு சர்க்கரை ஆலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இளம் விதவை உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
காரைக்காலில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.7,500 வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பத்திரங்களை முறையாக பதிவு செய்ய பல்வேறு விதிமுறைகளை அரசு வகுத்துள்ளது.
- டையாள அட்டைகள் ஆகியவற்றைக் கொண்டு பதிவிடும் முறை இருந்தும் இந்த முறைகேடுகள் எப்படி நடைபெறுகின்றன?
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் எதிர்கட்சித்தலைவர் சிவா பேசியதாவது:-
புதுவை பத்திரத் துறையில் பல சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தவறுகள் நடந்து நில உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக பத்திரங்களை முறையாக பதிவு செய்ய பல்வேறு விதிமுறைகளை அரசு வகுத்துள்ளது.
அதையும் மீறி முறைகேடுகள் நடப்பதாக செய்திகள் வருகின்றன. பதிவு நேரத்தில் விற்பவர், வாங்குபவர்களின் புகைப்படங்கள், கைரேகை, அடையாள அட்டைகள் ஆகியவற்றைக் கொண்டு பதிவிடும் முறை இருந்தும் இந்த முறைகேடுகள் எப்படி நடைபெறுகின்றன?
சமீபத்தில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் சொத்துக்கள் அபகரிப்பு தீர்வாக புதுவை கலெக்டர் தலைமையில் குழு அமைத்துள்ளது முறைகேடுகளுக்கு சாட்சியாக உள்ளது. பாதிக்கப்பட்ட பிரெஞ்சு குடியுரிமை வாசிகள் தூதரகத்திற்கு அளித்த புகாரின் பேரில் நமது மாநில அரசு இம்முடிவை எடுத்துள்ளது.
பதிவு செய்யும்போது சார் பதிவாளர் சர்வே எண், பெயர், முகவரி பற்றி முறையாக சரிபார்க்காமல் தவறும் நிலையில் மீண்டும் அந்த விற்பனை திருத்தல் பத்திரத்திற்கு துணை ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பத்து ஓராண்டு வரை காத்திருக்கும் நிலையும், மறுபடியும் பத்திரப் பதிவிற்கான வீண் செலவும் ஏற்படுகிறது. பதியும்போது முழுமையான ஆய்வு செய்யவும் திருத்தல் பத்திரத்திற்கான விதிமுறைகளை சுலபமாக்கவும் நடவடிக்கை தேவைப்படுகிறது.
ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான ஓராண்டு காலத்திற்கு நில மதிப்பீடு செய்யப்படுகிறது. மதிப்பீடு முடிந்தவுடன் உடன் பத்திரப்பதிவு பணி தொடங்காமல் 2 மாதம் பதிவிற்காக காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
இந்த காலதாமதம் களையப்பட்டு உடன் பத்திரப் பதிவு செய்ய வேண்டும். வீடுகட்ட மனை வாங்குபவர்கள் அனுமதிக்காக நகரத் திட்டக் குழுமத்திற்கு விண்ணப்பித்து குறித்த கட்டணத்தை செலுத்தியும் அனுமதி பெற முடியாமல் அலைகழிக்கப்படுகின்றனர்.
அங்கு லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இது முற்றிலும் களையப்பட வேண்டும். முறைகேடுகள் களையப்பட்டு, பொதுமக்களின் கோரிக்கைகளை அரசு அக்கறையோடு பரிசீலித்து பத்திரப் பதிவுத் துறையை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.






