என் மலர்

  புதுச்சேரி

  பாதாள வடிகாலில் கழிவுநீர் சுத்தம் செய்யும் பணி
  X

  பாதாள வடிகாலில் கழிவுநீர் சுத்தம் செய்யும் பணியை கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்ட காட்சி.

  பாதாள வடிகாலில் கழிவுநீர் சுத்தம் செய்யும் பணி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட புஸ்ஸி வீதியில் பாதாள வடிகாலில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு நிரம்பியது,
  • கழிவுநீரை உறிஞ்செடுக்கும் நவீன இயந்திரம் மூலம் சுத்தம் செய்து கொடுத்தனர்.

  புதுச்சேரி:

  உப்பளம் தொகுதிக் குட்பட்ட புஸ்ஸி வீதியில் பாதாள வடிகாலில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு நிரம்பியது, இதனால் கழிவு நீர் சாலைகளிலும், சைடு வாய்க்கால்களிலும் நிரம்பி வெளியேறியது.

  இது குறித்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் சாலை ஓர வியாபாரிகளும், தொகுதி மக்களும் தெரிவித்தனர். உடனே பொதுப்பணித் துறை இளநிலைப் பொறியாளர் சங்கரை அணுகி விரைந்து பாதாள வடிகாலில் அடைப்புகள் நீக்கி கழிவு நீரை உறிந்து எடுக்கும் வாகனத்தை வரும்படிக்கு வலியுறுத்தினார்.

  சிறிது நேரத்திலே கழிவுநீரை உறிந்து எடுக்கும் நவீன வாகனம் சம்பவ இடத்திற்கு வந்தது உடனடியாக அங்குள்ள அடைப்புகளை ஊழியர்கள் சரி செய்தனர். பின்னர் கழிவுநீரை உறிஞ்செடுக்கும் நவீன இயந்திரம் மூலம் சுத்தம் செய்து கொடுத்தனர்.

  இதனால் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.க்கு நன்றி தெரிவித்தனர். உடன் தொகுதி துணை செயலாளர் ஆரோக்கியராஜ், கிளைச் செயலாளர் லாரன்ஸ், தொழில்நுட்ப அணி அரவிந்த், தி.மு.க. நிர்வாகிகள் மோரிஸ், ரகுமான், சிரஞ்சீவி, கார்த்திக், அருள், மரி ஆகியோர் செய்திருந்தனர்.

  Next Story
  ×