என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    உழவர் சந்தையில் இயற்கை அங்காடி-அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் திறந்து வைத்தார்
    X

    அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் புதுவை உழவர் சந்தையில் இயற்கை அங்காடி மையத்தை திறந்த வைத்த காட்சி.

    உழவர் சந்தையில் இயற்கை அங்காடி-அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் திறந்து வைத்தார்

    • பொதுமக்கள் இயற்கை முறையில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை எளிய முறையில் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • உழவர் சந்தையில் இயற்கை அங்காடி அமைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை உழவர் சந்தையில் இயற்கை அங்காடி அமைக்கப்பட்டுள்ளது. அங்காடியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் திறந்து வைத்தார். இங்கு பொதுமக்கள் இயற்கை முறையில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை எளிய முறையில் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    புதுவை கிராமப்புற இயற்கை விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, கருங்குருவை, பூங்கா தூயமல்லி, கிச்சிடி சம்பா, சீரக சம்பா உள்ளிட்ட பாரம்பரிய அரிசி வகைகளை விற்பனை செய்ய புதுவை உழவர் சந்தையில் இயற்கை அங்காடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் அதிகாரிகள் இயற்கை விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×