என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதாக ஆங்கிலம் பேசும் சூழலில் அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் பேச மிகவும் சிரமப்படுவதை அரசு அறியுமா?
    • பொது அறிவை வெளிப்படுத்த தயக்கம் உள்ளது. அவர்களுக்கு ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்பு நடத்தினால் எளிதில் ஆங்கிலத்தில் பேசுவார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:-

    வி.பி. ராமலிங்கம்(பா.ஜனதா): தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதாக ஆங்கிலம் பேசும் சூழலில் அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் பேச மிகவும் சிரமப்படுவதை அரசு அறியுமா? அரசு பள்ளிகளில் ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புகள் எடுக்கும் திட்டம் உள்ளதா?

    முதல்-அமைச்சர் ரங்கசாமி: ஏற்கனவே ஆரம்பக்கல்வி அறிவை வளர்ப்பது என்பது உள்ளிட்ட திட்டங்கள் நடைமுறையில் உள்ளது.

    வி.பி. ராமலிங்கம்: தனியார் பள்ளி மாணவர்களோடு ஒப்பிடும்போது, அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் பேச தடுமாறுகின்றனர். இதனால் வேலைவாய்ப்பு, பொது அறிவை வெளிப்படுத்த தயக்கம் உள்ளது. அவர்களுக்கு ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்பு நடத்தினால் எளிதில் ஆங்கிலத்தில் பேசுவார்கள். முதல்-அமைச்சர் ரங்கசாமி: மாணவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

    நாஜிம்(தி.மு.க.): 10 ஆண்டு முன்பே சி.பி.எஸ்.இ. வகுப்பு தொடங்கும்போது ஆசிரியர்களுக்கு பயிற்சி இல்லை என தெரிவித்தேன். தற்போது 6-ம் வகுப்பு முதல் சி.பி.எஸ்.இ. தொடங்க உள்ளீர்கள். எனவே ஆசிரியர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்க வேண்டும்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி: நமது ஆசிரியர்கள் திறமையானவர்கள், தகுதி யானவர்கள், அவர்களால் சி.பி.எஸ்.இ. அளவில் வகுப்புகளை எடுக்க வேண்டும். அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுவை வில்லியனூர் கணுவாப்பேட் மாதா கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரியவந்தது.
    • வாடிக்கையாளர்களை பிடிக்கும் ஏஜெண்டாக அந்தோணி செயல்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் கணுவாப்பேட் மாதா கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரியவந்தது.

    இன்ஸ்பெக்டர் வேலைய்யன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார்  அந்த பகுதியில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது ஒருவர் சந்தேகத்திற்கிடமாக செல்போனில் பேசியபடி ஒரு சில துண்டு சீட்டுகளை கையில் வைத்து எழுதி கொண்டு இருந்தார்.

    அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில், அவர் ஏற்கனவே அந்த பகுதியில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்த அந்தோணி (வயது 70) என்பது தெரியவந்தது. வில்லியனூர் பகுதியில் வாடிக்கையாளர்களை பிடிக்கும் ஏஜெண்டாக அந்தோணி செயல்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

    மேலும் இதற்கு உதவியாக செயல்பட்டு வரும் புதுவையைச் சேர்ந்த கண்ணன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அந்தோணியிடம் ரூ.15 ஆயிரம் ரொக்க பணம்,2 செல்போன்கள் மற்றும் லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர்.
    • புதுவையில் திட்டம் தோல்வி என சொல்லக்கூடாது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை விரிவுபடுத்தும் நிலையில் உள்ளோம்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:

    பிஆர்.சிவா(சுயே): சுகாதாரத்துறையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் புதுவை, காரைக்காலில் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர்? பழைய காப்பீடு திட்டத்தின் கீழ் மஞ்சள் மற்றும் சிவப்பு ரேஷன்கார்டுதாரர்களுக்கு வருமான சான்றிதழ் அடிப்படையில் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த அரசு முன்வருமா?

    முதலமைச்சர் ரங்கசாமி: ஆயுஷ்மான் காப்பீடு திட்டத்தில் புதுவையில் ரூ.20 கோடியே 25 லட்சத்தில் 34 ஆயிரத்து 327 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். காரைக்காலில் ரூ.2 கோடியே 54 லட்சத்தில் 2 ஆயிரத்து 417 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து எதிர்கட்சி வரிசையிலிருந்த தி.மு.க.-காங்கிரஸ் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் புதுவையில் எந்த நோயாளிகளும் பயனடைவதில்லை.

    இந்த திட்டம் முறையாக புதுவையில் செயல்படுத்தவில்லை. இதனால் பலர் உரிய காலத்தில் நிதி கிடைக்காமல் இறந்துள்ளனர் என சரமாரியாக ஒரே நேரத்தில் குற்றம் சாட்டி பேசினர்.

    இதனால் சபையில் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உறுப்பினர்கள் தனித்தனியாக கருத்து தெரிவிக்கும்படி கூறினார்.

    எதிர்கட்சித்தலைவர் சிவா:-பிரதமர் மிகுந்த நல்லெண்ணத்தோடு கொண்டு வந்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் புதுவையில் அதிகாரிகள் முறையாக இதை செயல்படுத்தவில்லை. இதற்கான காப்பீடு அட்டையை மருத்துவமனைகளில் காண்பிக்கும் போது தூக்கி வீசி விடுகின்றனர். புதுவையில் இத்திட்டம் தோல்வியடைந்துள்ளது.

    கல்யாணசுந்தரம் (பா.ஜனதா): தவறு செய்த அதிகாரிகள் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் தொகுதியில் உள்ள மருத்துவமனையில் இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கின்றனர்.

    வி.பி.ராமலிங்கம் (பா.ஜனதா): நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் அதை களைய அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்.

    முதலமைச்சர் ரங்கசாமி: திட்டம் தோல்வி என சொல்லக்கூடாது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை விரிவுபடுத்தும் நிலையில் உள்ளோம். அனைவருக்குமான சுகாதார திட்டத்தின் கீழ் அனைத்து ரேஷன்கார்டு தாரர்களையும் உள்ளடக்கும் காப்பீடு திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    • மணக்குள விநாயகர் என்ஜினீயரிங்கல்லூரி, மாணவர்கள் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற ஐ.சி.டி. அகடாமி பிரிட்ஜ் 2023-ம் ஆண்டின் 50-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டனர்.
    • நேஷனல் வின்னர் கோஆர்டினேட்டர் விருது என மொத்தம் 6 விருதுகளை பெற்றது.

    புதுச்சேரி:

    மணக்குள விநாயகர் என்ஜினீயரிங்கல்லூரி, மாணவர்கள் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற ஐ.சி.டி. அகடாமி பிரிட்ஜ் 2023-ம் ஆண்டின் 50-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டனர்.

    இப்போட்டியில் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி அதிக அளவில் மென்பொருள் பாட் சமர்ப்பித்தலில் தேசிய அளவில் 2-வது இடத்திற்கான விருது, அகாடமிக் பார்ட்னர் எக்சலன்ஸ் விருது, பெஸ்ட் பார்ட்டிசிபேஷன் விருது, ஸ்கிலத்தான் 200 பாட்ஸ் கம்ளிஷன் விருது, நேஷனல் வின்னர் கோஆர்டினேட்டர் விருது என மொத்தம் 6 விருதுகளை பெற்றது.

    நிகழ்ச்சியில் அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் ஐ.சி.டி. அகாடமி தலைமை நிர்வாக அதிகாரி ஹரி பாலச்சந்திரன் ஆகியோரிடம் மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் இயக்குனர் தனசேகரன், கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வருமான டாக்டர் வெங்கடாசலபதி விருதுகளை பெற்றனர். இவர்களுக்கு துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

    இவ்விழாவில் கல்லூரியின் பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், மற்றும் டீன்கள் ஆராய்ச்சிதுறையின் டீன் வேலைவாய்ப்புத்துறை அதிகாரி, துறைத்தலை வர்கள், ஐ.சி.டி. அகடாமி ஒருங்கிணைப்பாளர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. உறுப்பினர் செந்தில் குமார் எம்.எல்.ஏ. பட்ஜெட் பொது விவாதத்தில் பேசியதாவது:-
    • மாநிலத்தை நம்பி இருக்காமல் பஞ்சாயத்து மூலமே பல வேலைகளை செய்ய முடியும் மூலதன செலவீன நிதி15 சதவீதமாக மாநில அரசு உயர்த்த வேண்டும்.

    புதுச்சேரி:

    தி.மு.க. உறுப்பினர் செந்தில் குமார் எம்.எல்.ஏ. பட்ஜெட் பொது விவாதத்தில் பேசியதாவது:-

    பட்ஜெட்டில் 2023 - 24 ஆண்டு வருவாய் வரிகள் மூலம் ரூ 4087 கோடி என்று சொல்லப்பட்டுள்ளது 2021- 22-ல் ரூ 4661 கோடி, அடுத்த ஆண்டு ரூ.4383 கோடியாக இருந்தது. அது தற்போது 4087 கோடியாக குறைந்துள்ளது. கலால் வரி வளர்ச்சி அடைந்துள்ளது.

    விவசாயத்தை பாதுகாப்பதற்கும் பல சங்கடங்களை அனுபவிக்கிறோம் அதனால் தான் கலால் வரியில் உள்ளாட்சி வரி ஒதுக்கீடு செய்து வருமானத்தை தர வேண்டும்.மாநிலத்தை நம்பி இருக்காமல் பஞ்சாயத்து மூலமே பல வேலைகளை செய்ய முடியும் மூலதன செலவீன நிதி15 சதவீதமாக மாநில அரசு உயர்த்த வேண்டும்.மாநில அரசு மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டிய கடனை குறைக்க மத்திய அரசு உதவிட வேண்டும் குறிப்பாக நீண்ட கால கடனாக 50 ஆண்டு கால கெடுவில் கடன் வழங்கி மாநில அரசின் கடன் சுமையை போக்க வேண்டும்.

    தமிழில் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு சென்டாக்கில் தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும். கியாசுக்கு மாதம் ரூ. 300 மானியம் மாநில அரசு வழங்கும் அறிவிப்பு மத்திய அரசின் சுமையை மாநில அரசு ஏற்றதாகவே உள்ளது.

    தொழில் தொடங்க ரூ.100 கோடி முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ஒரு சதவீதம் வீதம் 5 ஆண்டு காலத்திற்கு மானியம் போதுமானது அல்ல. அதனை உயர்த்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புதுவை அரசு பொதுப்பணி துறையின் மூலமாக ரூ.44 லட்சத்து 84 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது .
    • இளநிலை பொறியாளர் தேவேந்திரன் மற்றும் ஊர் பிரமுகர்கள், சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதிக்குட்பட்ட சன்னியாசிக்குப்பம் கிராமத்தில் திருபுவனை ரைஸ் மில் முதல் சன்னியாசிக்குப்பம் வரையிலான தார் சாலையை புதுப்பிக்க சுமார் 1.67 கி.மீ. நீளமுள்ள சாலை மிகவும் பழுதடைந்து இருந்த நிலையில் அச்சாலையை புதுப்பிப்பதற்காக புதுவை அரசு பொதுப்பணி துறையின் மூலமாக ரூ.44 லட்சத்து 84 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது .

    இதில் தொகுதியின் எம்.எல்.ஏ. அங்காளன் கலந்துகொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியின் போது புதுவை அரசு பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் (வடக்கு) கோட்ட செயற்பொறியாளர் சுந்தர்ராஜ், உதவி பொறியாளர் துளசிங்கம், இளநிலை பொறியாளர் தேவேந்திரன் மற்றும் ஊர் பிரமுகர்கள், சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

    உப்பளம் தொகுதியில் பாண்லே பால் நிலையம் அமைக்க திருநங்ககைள் கென்னடி எம்.எல்.ஏ. விடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதியில் பாண்லே பால் நிலையம் அமைக்க திருநங்கைகள் கென்னடி எம்.எல்.ஏ. விடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    புதுவையில் மொத்தம் 206 திருநங்கைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் இவர்களின் வளர்ச்சிக்காக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் அக்னி சிறகுகள் திருநங்கைகள் கூட்டமைப்பு டாக்டர் ஷீத்தல் நாயக் தலைமையில் உருவாக்கப்பட்டு சுய உதவிக் குழுக்கள் இயங்கி கொண்டிருக்கின்றது.

    எனவே திருநங்கைகளின் வாழ்வாதார வளர்ச்சி குறித்து அடிப்படை வசதி இல்லாமல் அவதிக்கு உள்ளாகும் திருநங்கைகளின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் வகையில் 3 திருநங்கைகள் ஒன்றிணைந்து சுய தொழில் செய்து வறுமையை போக்கும் விதமாக கடற்கரை சுப்பையா சாலையில் பாண்லே பால் நிலையம் திறப்பதற்கான இடத்திற்கு அனுமதி வேண்டி முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அந்த தொகுதிக்கு உட்பட்ட மதிப்பிற்குரிய எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியிடம் அனுமதி வழங்க கோரி கோரிக்கை மனு முன் வைத்தனர்.

    • புதுவை மாநிலக்குழு சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் பிரபுராஜ் தலைமையில் நடைபெற்றது.
    • 12 ஆண்டுக்கு பிறகு தாக்கல் செய்த முழு பட்ஜெட்டில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தொழிலளார் நலன் குறித்து ஒற்றை வரியைக்கூட இடம்பெற செய்யாதது ஏமாற்றம் தருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலக்குழு சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் பிரபுராஜ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் செயலாளர் சீனுவாசன், பொருளாளர் ரவிச்சந்திரன், நிர்வாகிகள் முருகன், கொளஞ்சியப்பன், ராமசாமி, மது லிங்கேசன்வேலு, ராஜ்குமார், பச்சமுத்து, வடிவேல், மற்றும் தினேஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    12 ஆண்டுக்கு பிறகு தாக்கல் செய்த முழு பட்ஜெட்டில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தொழிலளார் நலன் குறித்து ஒற்றை வரியைக்கூட இடம்பெற செய்யாதது ஏமாற்றம் தருகிறது. ரேஷன்கடை திறப்பு அறிவிப்பு இல்லை. மின்துறை தனியார் மயம், பிரீபெய்டு மீட்டர் கைவிடுவது குறித்து அறிவிப்பு இல்லை. மூடிக்கிடக்கும் ஆலைகள் திறப்புக்கான அறிவிப்புஇல்லை.

    ஏமாற்றம் தரும் பட்ஜெட்டை கண்டித்து வருகிற 24-ந் தேதி சட்டசபை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது. அமைப்புசாரா தொழிலாளர் நலசங்கத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். பாராளுமன்றம் நோக்கி விவசாயிகள் நடத்தும்பேரணி குறித்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • புதுவையில் கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியின் போது பொதுப்பணித்துறையில் ஏராளமானோர் பணியில் அமர்த்தப்பட்டனர்.
    • பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு வளாகத்தினுள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியின் போது பொதுப்பணித்துறையில் ஏராளமானோர் பணியில் அமர்த்தப்பட்டனர்.

    3 மாதம் பணி செய்த அவர்களை தேர்தல் துறை பணியிலிருந்து நீக்கியது. முதல் கடந்த 7 வருடங்களாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என கோரி உண்ணாவிரதம், கடலில் இறங்கி போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் தங்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் எனக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு வளாகத்தினுள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்து வந்த அதிகாரிகள் ஊழியர்களிடம் கலைந்து போக கூறினார்.

    அப்போது ஊழியர்கள் முதல்-அமைச்சர் வந்து பேச வேண்டும், நீங்கள் பேச கூடாது அவர் உடனடியாக எங்களுக்கு பணி வழங்க வேண்டும், தற்போது நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தில் முதல்-அமைச்சர் அறிவிக்க வேண்டும் என கூறி அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    அங்கு வந்த கிழக்கு பகுதி காவல் கண்காணிப்பாளர் ஸ்வாதிசிங் தலைமையிலான் போலீசார் போராட்டத்ததை கைவிட கோரி ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்ததால், ஊழியர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    • புதிதாக கட்டும் பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதி உதவியுடன் நடைபெற்று வந்தது.
    • தற்போது மைதானம் சுற்றி இரும்பு தகடுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு பேசியதாவது:-

    புதுவை அண்ணா சாலையில் உள்ள அண்ணா திடல் விளையாட்டு மைதானம் மேம்படுத்தும் பணி மற்றும் சுற்றியுள்ள வீதிகளில் உள்ள கடைகளை புதிதாக கட்டும் பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதி உதவியுடன் நடைபெற்று வந்தது.

    காலக்கெடு முடிந்து ஓராண்டு ஆகியும் இதுவரை பணிகள் முடிவடையாமல் உள்ளது. தற்போது மைதானம் சுற்றி இரும்பு தகடுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா திடல் பகுதியை சுற்றியுள்ள வியாபாரிகள் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பாதிப்புகள் ஏற்படுகிறது.

    இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு அண்ணா திடல் விளையாட்டு மைதானம் மேம்படுத்தும் பணிகளையும், அண்ணா சாலை, லப்போர்த் வீதி , சின்ன சுப்பிராயபிள்ளை வீதி போன்ற வீதிகளில் உள்ள கடைகள் கட்டுமான பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புதிய கட்சி உறுப்பினர் உரிமை சீட்டுகள் வழங்கும் நிகழ்ச்சி உப்பளம் அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.
    • புதுவை அரசு முடிவு செய்து பிரீபெய்டு சிஸ்டத்தை கைவிடும். அதற்கு அ.தி.மு.க. சார்பில் வாழ்த்துக்கள்.

    புதுச்சேரி:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக புதுவை மாநில நகரங்கள், தொகுதிகள், வார்டுகள் ஆகியவற்றுக்கு புதிய கட்சி உறுப்பினர் உரிமை சீட்டுகள் வழங்கும் நிகழ்ச்சி உப்பளம் அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க.வுக்கு எதிராக செயல்பட்டவர்கள், துரோகம் செய்தவர்கள் நீக்கப்பட்டு புதிதாக உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

    புதுவை மாநிலத்தில் பிரீபெய்டு மீட்டர் சிஸ்டம் கொண்டு வருவது என்பது தவறு என அ.தி.மு.க. சார்பில் முதலில் சட்டமன்றத்துக்கு வெளியே சுட்டிக்காட்டினோம்.

    இதையே சுட்டிக்காட்டி தி.மு.க. சட்டசபையில் வெளிநடப்பு நாடகத்தை நடத்தியுள்ளது. எதிர்க்கட்சி இல்லாத சட்டமன்றமாக முதல்-அமைச்சர் மாற்றியுள்ளார். புதுவை அரசு முடிவு செய்து பிரீபெய்டு சிஸ்டத்தை கைவிடும். அதற்கு அ.தி.மு.க. சார்பில் வாழ்த்துக்கள்.

    10 ஆயிரம் பேருக்கு வேலை, 5 ஆண்டு வயது தளர்வு என அ.தி.மு.க. கோரிக்கைகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்துள்ளார். அவருக்கு அ.தி.மு.க. சார்பில் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர்தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில பேரவை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப் பினருமானபாஸ்கர்,மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள்,முன்னாள் கவுன்சிலர் கணேசன், திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில கழக துணை செயலாளர் நாகமணி, கிருஷ்ணமூர்த்தி, காந்தி,மணவாளன், குமுதன், புதுவை நகர செயலாளர் அன்பழகன் உடையார், உழவர் கரை நகர செயலாளர் சித்தானந்தம், தொகுதி கழக செயலாளர்கள் சிவகுமார், கிருஷ்ணன், கமல்தாஸ்,வேலவன், சம்பத், துரை,கருணாநிதி, தர்மலிங்கம், கோபால், குணசேகரன், சண்முகதாஸ் பொது குழு உறுப்பினர்கள் சி வராமராஜா, ரவிக்குமார்,பாலன், பிரபாகரன், குணசேகரன், செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கிருமாம்பாக்கத்தில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த மாணவிகள் தங்கப்பதக்கம் பெற்றனர்.
    • மாணவ- மாணவிகள் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழகம் நடத்திய 29-ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கிருமாம்பாக்கத்தில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த மாணவிகள் தங்கப்பதக்கம் பெற்றனர்.

    மேலும் 9 மாணவ- மாணவிகள் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளன. 2019-20-ம் ஆண்டு கல்வி ஆண்டில் இளநிலை மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறையைச் சேர்ந்த சுனந்தா மற்றும் முதுநிலை எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் துறையைச் சேர்ந்த சுரேகா சிலேஸ் இருவரும் தங்கப்பதக்கம் பெற்றனர்.

    இவர்களுக்கு கல்லூரியின் தாளாளர் ராஜகோபாலன் வாழ்த்து தெரிவித்தார். மேலும் கல்லூரி முதல்வர் விஜய் கிருஷ்ண ரபாகா, சாதனை படைத்த மாணவிகளை, பெற்றோர்கள் முன்னிலையில் வாழ்த்து தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகம் துணைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    ×