என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பட்ஜெட்டை கண்டித்து 24-ந் தேதி ஆர்ப்பாட்டம்-சி.ஐ.டி.யூ.  தீர்மானம்
    X

    கோப்பு படம்.

    பட்ஜெட்டை கண்டித்து 24-ந் தேதி ஆர்ப்பாட்டம்-சி.ஐ.டி.யூ. தீர்மானம்

    • புதுவை மாநிலக்குழு சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் பிரபுராஜ் தலைமையில் நடைபெற்றது.
    • 12 ஆண்டுக்கு பிறகு தாக்கல் செய்த முழு பட்ஜெட்டில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தொழிலளார் நலன் குறித்து ஒற்றை வரியைக்கூட இடம்பெற செய்யாதது ஏமாற்றம் தருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலக்குழு சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் பிரபுராஜ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் செயலாளர் சீனுவாசன், பொருளாளர் ரவிச்சந்திரன், நிர்வாகிகள் முருகன், கொளஞ்சியப்பன், ராமசாமி, மது லிங்கேசன்வேலு, ராஜ்குமார், பச்சமுத்து, வடிவேல், மற்றும் தினேஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    12 ஆண்டுக்கு பிறகு தாக்கல் செய்த முழு பட்ஜெட்டில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தொழிலளார் நலன் குறித்து ஒற்றை வரியைக்கூட இடம்பெற செய்யாதது ஏமாற்றம் தருகிறது. ரேஷன்கடை திறப்பு அறிவிப்பு இல்லை. மின்துறை தனியார் மயம், பிரீபெய்டு மீட்டர் கைவிடுவது குறித்து அறிவிப்பு இல்லை. மூடிக்கிடக்கும் ஆலைகள் திறப்புக்கான அறிவிப்புஇல்லை.

    ஏமாற்றம் தரும் பட்ஜெட்டை கண்டித்து வருகிற 24-ந் தேதி சட்டசபை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது. அமைப்புசாரா தொழிலாளர் நலசங்கத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். பாராளுமன்றம் நோக்கி விவசாயிகள் நடத்தும்பேரணி குறித்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×