search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை அரசு பிரீபெய்டுமின்மீட்டர் திட்டத்தை கைவிடும்-அ.தி.மு.க. நம்பிக்கை
    X

    உறுப்பினர் உரிமை சீட்டை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வழங்கிய காட்சி.

    புதுவை அரசு பிரீபெய்டுமின்மீட்டர் திட்டத்தை கைவிடும்-அ.தி.மு.க. நம்பிக்கை

    • புதிய கட்சி உறுப்பினர் உரிமை சீட்டுகள் வழங்கும் நிகழ்ச்சி உப்பளம் அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.
    • புதுவை அரசு முடிவு செய்து பிரீபெய்டு சிஸ்டத்தை கைவிடும். அதற்கு அ.தி.மு.க. சார்பில் வாழ்த்துக்கள்.

    புதுச்சேரி:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக புதுவை மாநில நகரங்கள், தொகுதிகள், வார்டுகள் ஆகியவற்றுக்கு புதிய கட்சி உறுப்பினர் உரிமை சீட்டுகள் வழங்கும் நிகழ்ச்சி உப்பளம் அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க.வுக்கு எதிராக செயல்பட்டவர்கள், துரோகம் செய்தவர்கள் நீக்கப்பட்டு புதிதாக உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

    புதுவை மாநிலத்தில் பிரீபெய்டு மீட்டர் சிஸ்டம் கொண்டு வருவது என்பது தவறு என அ.தி.மு.க. சார்பில் முதலில் சட்டமன்றத்துக்கு வெளியே சுட்டிக்காட்டினோம்.

    இதையே சுட்டிக்காட்டி தி.மு.க. சட்டசபையில் வெளிநடப்பு நாடகத்தை நடத்தியுள்ளது. எதிர்க்கட்சி இல்லாத சட்டமன்றமாக முதல்-அமைச்சர் மாற்றியுள்ளார். புதுவை அரசு முடிவு செய்து பிரீபெய்டு சிஸ்டத்தை கைவிடும். அதற்கு அ.தி.மு.க. சார்பில் வாழ்த்துக்கள்.

    10 ஆயிரம் பேருக்கு வேலை, 5 ஆண்டு வயது தளர்வு என அ.தி.மு.க. கோரிக்கைகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்துள்ளார். அவருக்கு அ.தி.மு.க. சார்பில் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர்தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில பேரவை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப் பினருமானபாஸ்கர்,மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள்,முன்னாள் கவுன்சிலர் கணேசன், திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில கழக துணை செயலாளர் நாகமணி, கிருஷ்ணமூர்த்தி, காந்தி,மணவாளன், குமுதன், புதுவை நகர செயலாளர் அன்பழகன் உடையார், உழவர் கரை நகர செயலாளர் சித்தானந்தம், தொகுதி கழக செயலாளர்கள் சிவகுமார், கிருஷ்ணன், கமல்தாஸ்,வேலவன், சம்பத், துரை,கருணாநிதி, தர்மலிங்கம், கோபால், குணசேகரன், சண்முகதாஸ் பொது குழு உறுப்பினர்கள் சி வராமராஜா, ரவிக்குமார்,பாலன், பிரபாகரன், குணசேகரன், செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×