என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • அதானிக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்றால் விசாரணை வைக்க ஏன் மோடி தயங்குகிறார்.
    • புதுவையில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசில் ஜிப்மருக்கு 50 ஏக்கர் நிலத்தை உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையத்துக்காக ஒதுக்கி தந்தோம்.

    புதுச்சேரி:

    முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறிய தாவது:-

    அதானிக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்றால் விசாரணை வைக்க ஏன் மோடி தயங்குகிறார். இந்திய நாடாளுமன்றம் ஒரு நாள் கூட நடக்கவில்லை. இது ஜனநாயக படுகொலை. மோடி அதானி விவகாரத்தில் பதில் தர வேண்டும். விசாரணை வைக்கும் வரை காங்கிரஸ் ஓயாது. போராட்டம் தொடரும்.

    புதுவையில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசில் ஜிப்மருக்கு 50 ஏக்கர் நிலத்தை உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையத்துக்காக ஒதுக்கி தந்தோம். இந்த பிரத்யேக மருத்துவமனை ரூ. 900 கோடியில் அமைய இருந்தது. இதற்காக நிலத்தை சேதராப்பட்டில் ஒதுக்கி தந்தோம். தற்போது அத்திட்டத்தை மத்திய அரசு வேறு மருத்துவமனைக்கு மாற்றி உள்ளது.

    தென்மாநிலங்களிலேயே முக்கியமாக அமைய இருந்த இந்த மையத்தை மாற்றி இருப்பது மூலம் புதுவையை மத்திய அரசு புறக்கணிக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் ஜிப்மரில் அனைவருக்கும் இலவச சிகிச்சை தரப்பட்டது, மருந்து தட்டுப்பாடு இல்லை. சிறப்பாக செயல்பட்ட ஜிப்மர் தற்போது சீரழிந்து விட்டது. நோயாளிகள் அலைக்கழிக்கப் படுகின்றனர்.

    தற்போது உயர்சிகிச்சைக்கும் கட்டணம் விதித்துள்ளனர். இதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி மத்திய சுகாதாரத்துறை மந்திரிக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்.

    புதுவை சட்டப்பேரவையில் பணிநிரந்தரம், ஊதிய உயர்வு என பல அறிவிப்புகளை முதல்- அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ளார். அது வரவேற்க்கத்தக்கது. ஆனால் அதற்கான நிதி எங்கே உள்ளது. ஆண்டுக்கு ரூ. 700 கோடி தேவை. ஆனால் பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை.

    இதை செய்யாமல் கோப்புகளை தயாரித்து அனுப்பும்போது தலைமை செயலாளர், செயலாளர்கள் விதிமீறி ஒப்புதல் தர மறுத்தால் அவர்கள் மீது பழிபோடுவது ரங்கசாமியின் வழக்கம். பாப்ஸ்கோ, பாசிக், கூட்டுறவு சங்க ஊழியர்கள் போல் இவர்களையும் நடுத்தெருவில் ரங்கசாமி நிறுத்தப்போகிறார்.

    அவர் விளம்பர அரசியல் செய்வது எடுபடாது. ரேஷன் கடைகளை திறந்து மானிய விலையில் பொருட்களை தருவதாகக்கூறி விட்டு ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியம் தராதது ஏன்.? நான் எழுப்பிய எந்த குற்றச்சாட்டுக்கும் ரங்கசாமி பேரவையில் வாயே திறக்கவில்லை.

    அதேபோல் புதுவையில் எத்திட்டத்திலும் பயன் அடையாத சிவப்பு ரேஷன் அட்டை வைத்துள்ள மகளிருக்கு ரூ. 1000 திட்ட விதிமுறைகளால் எந்த மகளிருக்கும் பயன் தராத வகையில் தவறான திட்டமாக உள்ளது.புதுவையில் பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கவேண்டும்

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    • புதுவை கடற்கரை காந்தி திடலில் ஸ்வ ஸ்திக் அறக்கட் டளை மற்றும் ஆத்திச்சூடி சிறப்பு பள்ளி இணை ந்து ஆட்டிசம் நோய் குறித்த விழிப்புணர்வு மாநாட்டை நடத்தியது.
    • தங்கும் இடத்துடன் கூடிய இல்லம் மற்றும் போதிய செயல்முறை மருத்துவர்கள் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரை காந்தி திடலில் ஸ்வ ஸ்திக் அறக்கட் டளை மற்றும் ஆத்திச்சூடி சிறப்பு பள்ளி இணை ந்து ஆட்டிசம் நோய் குறித்த விழிப்புணர்வு மாநாட்டை நடத்தியது.

    விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைத்ததுடன், பள்ளி தாளாளர் டாக்டர் வி.ஆர்.சத்தியவண்ணன் எழுதிய 'ஆட்டிசம் ஒரு தெளிவு' பாகம்-2 புத்தகத்தை வெளியிட்டார். அதை அரியாங்குப்பம்

    எம்.எல்.ஏ. பாஸ்கர், அரிச்சுவடி மனநல இயக்குனர் டாக்டர் ஆர்.இளவழகன், டாக்டர் நவசக்தி, டாக்டர் கலையரசி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அப்போ து சபாநாயகரிடம், ஆட்டிசம் குழந்தை களுக்காக முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம், ஆட்டிசம் குழந்தைகளின் கணக்கெடுப்பு, தங்கும் இடத்துடன் கூடிய இல்லம் மற்றும் போதிய செயல்முறை மருத்துவர்கள் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

    மாநாட்டில் டாக்டர்கள் கோபாலகிருஷ்ணன், முரளி, கீதா, தீபா, புண்ணியமூர்த்தி, மகேந்திரன், அரிச்சுவடி மனநல மைய டிரஸ்டி அரசம்மா

    தேவி ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.

    • ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை பறித்த தீர்ப்புக்கு தடை விதித்து சூரத் செசன்ஸ்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    • வட்டார தலைவர்கள் ஆறுமுகம், ரமேஷ், மகிளா காங்கிரஸ் பஞ்சகாந்தி, ரத்னா ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை பறித்த தீர்ப்புக்கு தடை விதித்து சூரத் செசன்ஸ்கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்பை வரவேற்று காமராஜர் சிலை அருகே பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி காங்கிரசார் கொண்டாடினர்.

    மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிர மணியன், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு, பொதுச்செயலாளர்கள் தனுசு, இளையராஜா, திருமுருகன், சந்திரிகா, வட்டார தலைவர்கள் ஆறுமுகம், ரமேஷ், மகிளா காங்கிரஸ் பஞ்சகாந்தி, ரத்னா ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

    • புதிய தண்ணீர் குழாய்கள் அமைக்கும் பணி, புதிய கழிவுநீர் தொட்டிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • இதையடுத்து தொகுதி எம்எல்ஏ நேரு அப்பகுதியில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை உருளை யன்பேட்டை தொகு திக்குட்பட்ட சின்ன வாய்க்கால் வீதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் வாய்க்கால் மேம்படுத்தும் பணி, புதிய மின் கேபிள்கள், புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணி, புதிய தண்ணீர் குழாய்கள் அமைக்கும் பணி, புதிய கழிவுநீர் தொட்டிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    மிக மெதுவாக பணிகள் நடப்பதாக அப்பகுதி மக்கள் புகார் கூறினர். இதையடுத்து தொகுதி எம்எல்ஏ நேரு இன்று அப்பகுதியில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். பணிகள் ஏன் மிகவும் காலதாமதமாக நடக்கிறது என அதிகாரிகளிடம் எம்எல்ஏ கேட்டறிந்தார்.

    ஆய்வின்போது பொதுப்ப ணித்துறை நீர்ப்பாசன பிரிவு உதவி பொறியாளர் சம்மந்தம், பொது சுகாதார குடிநீர் பிரிவு உதவி பொறியாளர் வாசு, கழிவுநீர் உட்பட்ட பிரிவு உதவி பொறியாளர் வைத்தியநாதன், மின்துறை உதவி பொறியாளர் கண்ணன், நகராட்சி உதவி பொறியாளர் நமச்சிவாயம், இளநிலை பொறியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தினர் உடனிருந்தனர்.

    • காளத்தீஸ்வரர் கோவிலின் பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • நடராஜர் நேரடி உற்சவம், 9 மணிக்கு பல்லக்கில் சந்திரசேகர் கடல் தீர்த்தவாரி நடக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவை மிஷன்வீதியில் காளத்தீஸ்வரர் வரதராஜ பெருமாள் கோவில் (செட்டிக்கோவில்) உள்ளது.

    காளத்தீஸ்வரர் கோவிலின் பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்து வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடந்தது.

    பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனத்தில் வலம் வந்தனர். நடராஜர் நேரடி உற்சவம், 9 மணிக்கு பல்லக்கில் சந்திரசேகர் கடல் தீர்த்தவாரி நடக்கிறது. காமதேமனு வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. வருகிற 7-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும், 9-ந் தேதி 108 சங்காபிஷேகமும் நடக்கிறது.

    தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சங்கர நாராயணன் தலைமையில் நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    • பட்ஜெட் தொடரில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
    • புதுவையில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் இந்த பணி வழங்கப்படும் கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை பா. ஜனதா கட்சியின் ஓ.பி.சி. அணி யின் மாநிலத் தலைவர் என்ஜினீயர் சிவகுமார் தலைமையில் அதன் அனைத்து நிர்வாகிகளும், குடிமைபொருள் வழங்க துறையில் நடந்து முடிந்த பட்ஜெட் தொடரில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    அந்தந்த பகுதியில் உள்ள பொது சேவை மையங்கள் மூலம் ரேஷன் கார்டு சேவைகளை பெற்றுக் கொள்ளலாம். 100 நாள் வேலை திட்டத்தில் சராசரியாக வேலை வழங்கும் நாட்களை இந்த ஆண்டு முதல் 50 முதல் 60 நாட்களாக அதிகப்படுத்தப்படும்.

    புதுவையில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் இந்த பணி வழங்கப்படும் கூறியுள்ளார். சாமானிய மக்களும் பயன்படும் விதமாக செயலாற்றி வரும் சாய்.ஜெ.சரவணன்குமாரை பா.ஜனதா கட்சியின் நிர்வாகிகள் பாராட்டினர்.

    • புதுவை மாநில கோஜிரியோ கராத்தே சங்கத்தின் சார்பில் தேர்வு எழுதுவதற்கான உபகரணங்கள் பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் வழங்கினார்.
    • நிகழ்ச்சி பள் ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளி பொறுப்பாசிரியை மாலா, ஆசிரியர்கள் கீதா, சோமசுந்தரம், செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை தர்மாபுரி அரசு உயர்நிலை பள்ளியில் பயிலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதுவை மாநில கோஜிரியோ கராத்தே சங்கத்தின் சார்பில் தேர்வு எழுதுவதற்கான உபகரணங்கள் பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் வழங்கினார்.

    மேலும் மாணவர்கள் பயமின்றி தேர்வு எழுதுவதற்கு விழிப்புணர்வு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியை பிரேமலதா, சாந்தி மற்றும் பள்ளி பொறுப்பாசிரியை மாலா, ஆசிரியர்கள் கீதா, சோமசுந்தரம், செந்தில்குமார் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி பேசினர்.

    • பிடிபட்டவர் பிரபல பைக் திருட்டு கும்பலின் தலைவன் புறா ஆனந்த் என்பது தெரியவந்தது.
    • தமிழக மற்றும் புதுவையில் எத்தனை வாகனங்கள் திருடப்பட்டுள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஆலந்தூரை சேர்ந்தவர் ஆனந்த் என்கிற புறா ஆனந்த்(28).

    இவர் தலைமையிலான 8 பேர் கொண்ட குழு மோட்டார் சைக்கிள் திருடும் கோஷ்டியாக பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றனர். புதுவையில் ஒருமுறையும், தமிழகப் பகுதியில் ஒரு முறையும் என மாற்றி மாற்றி இவர்கள் பைக்குத் திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இவர்கள் மீது பல போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்தப் பகுதியிலும் சிக்காத இவர்கள் தற்பொழுது. புதுவை உருளையன்பேட்டையில் சிக்கி உள்ளனர்.

    எங்கு திருட வேண்டும் என்று திட்டமிட்டு இவர்கள் செல்போன்களை கொண்டு செல்லாமல் எந்த ஒரு ஆதாரங்களும் இன்றி பைக்கை திருடி வந்துள்ளனர்.

    அப்படி திருடும் பைக் நம்பர் பிளேட் மாற்றி வண்ணத்தை மாற்றி ஒன்றரை லட்ச ரூபாய் வரை மதிப்பிலான பைக்கை ரூ.2 ஆயிரத்து 500-க்கு விற்றுள்ளனர். மது போதைக்கும் கஞ்சா போதைக்கும் அடிமையான இவர்கள் வாகனங்களை திருடி குறைந்த விலைக்கு விற்பதையே முக்கிய வேலையாக வைத்திருந்தனர்.

    உருளையன்பேட்டை மங்கலட்சுமி நகரை சேர்ந்த ஒருவரின் ரூ. 1 ½ லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த பைக் திருடப்பட்டதாக சி.சி.டி.வி. காட்சிகளுடன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் பதிவான உருவத்தை வைத்து போலீசார் மேலும் சில இடங்களில் தேடினார்கள். அப்பொழுது ஆட்டுப்பட்டி என்ற பகுதியில் சிறுவன் ஒருவனிடம் வாகனத்தை திருடியவர் செல்போனை வாங்கி பேசுவது பதிவாகி இருந்தது.

    அந்தப் பகுதிக்கு சென்று அந்த சிறுவனை கேட்ட பொழுது, பைக் திருடன் அவனது அம்மாவிடம் பேச வேண்டும் என கூறி போனை வாங்கியதாக கூறினார்.

    அதில் தனது அம்மாவுக்கு போன் செய்து உடல்நிலை எப்படி இருக்கு என்று கேட்டு நாளை வீட்டுக்கு வந்து சாப்பிடுவதாக கூறியுள்ளார்.

    இதையடுத்து அந்த செல்போன் எண்ணை பதிவு செய்த போலீசார் அதை கொண்டு மரக்காணம் வரை சென்று குற்றவாளியை பிடித்தனர். பிடிபட்டவர் பிரபல பைக் திருட்டு கும்பலின் தலைவன் புறா ஆனந்த் என்பது தெரியவந்தது.

    இவரது தந்தை விசுவநாதன் அப்பகுதியில் தொழிலதிபராக உள்ளார். பல கோடிக்கு சொத்து உள்ளது.

    இருப்பினும் மகன் பைக்குகளை திருடி கஞ்சா மற்றும் மது போதைக்கு செலவிட்டு வந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதனையடுத்து பைக்கை பறிமுதல் செய்த உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான குழு ஆனந்தின் கூட்டாளி புதுப்பாக்கம் அருண்(19) என்பவரையும் கைது செய்துள்ளனர்.

    இந்த கும்பலை சேர்ந்த 6 பேர் ஏற்கனவே பல்வேறு போலீஸ் நிலையங்களில் பைக் உடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழக மற்றும் புதுவையில் எத்தனை வாகனங்கள் திருடப்பட்டுள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட ஆட்டுப்பட்டி டாக்டர் அம்பேத்கர் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான கழிவறை உள்ளது.
    • தண்ணீர் தொட்டியின் மூலம் தான் இக்கழிவறைக்கு பொதுமக்கள் பயன்படுத்த தண்ணீர் வினியோகம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. செய்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட ஆட்டுப்பட்டி டாக்டர் அம்பேத்கர் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான கழிவறை உள்ளது.

    அதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு கழிவறை மூலம் வெளியேறும் கழிவு நீர் செல்லும் குழாய் உடைந்த அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கோரிக்கையின் படி உடைந்த குழாய் சீரமைக்கப்பட்டது.

    இதனை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் தொகுதி செயலாளர் சக்திவேல், கிளை செயலாளர்கள் ரவிக்குமார், ராகேஷ், ராஜ பிரபாகரன் உடன் இருந்தனர்.

    மேலும் 6 மாதம் காலத்திற்கு முன்பு கழிவறை அருகாமையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான சமுதாயக்கூடத்தில் தண்ணீர் சேகரிப்பு தொட்டி இயங்காமல் கிடந்தது.

    தண்ணீர் தொட்டியின் மூலம் தான் இக்கழிவறைக்கு பொதுமக்கள் பயன்படுத்த தண்ணீர் வினியோகம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. செய்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

    அதன் அருகாமையில் உள்ள பாழடைந்த பள்ளிக்கூடத்தில் உள்ள இலவம்பஞ்சு மரத்தை மக்களின் கோரிக்கையை ஏற்று அப்புறப்படுத்தி மேலும் அங்கு இளைஞர்கள் விளையாட இடத்தை சுத்தம் செய்து கொடுத்தார்.

    • தமிழகத்தின் கோவையில் கோவிலை தகர்க்க சதி நடந்தது.
    • புதுவையின் பிராந்தியமான கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அருகே உள்ள மாகீ பிராந்தியத்திலும் இந்து அமைப்பினர் மீதான தாக்குதல் நடந்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மங்கலம் தொகுதி பாஜக பொறுப்பாளர் செந்தில்குமரன் கடந்த 26-ந் தேதி வெடிகுண்டு வீசி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    இவர் புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் உறவினர் ஆவார். வில்லியனூர் கண்ணகி பள்ளி அருகே டீ கடையில் நின்றிருந்தபோது ஒரு கும்பல் 2 நாட்டு வெடிகுண்டை வீசி தலையில் அரிவளால் வெட்டி படுகொலை செய்தது. இந்த வீடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த படுகொலை தொடர்பாக ரவுடி நித்தியானந்தம் உட்பட 7 பேர் திருச்சி கோர்ட்டில் சரணடைந்தனர். இவர்களை வில்லியனூர் போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். கொலைக்கு பயன்படுத்த பதுக்கி வைத்திருந்த மேலும் 2 நாட்டு வெடிகுண்டுகளை கோர்க்காடு பகுதியில் உள்ள காலிமனையில் இருந்து போலீசார் மீட்டனர்.

    சரணடைந்தவர்களிடம் விசாரணை முடிந்து இன்று மீண்டும் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

    இந்த நிலையில் பா.ஜனதா பிரமுகர் கொலை குறித்து என்.ஐ.ஏ. தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் விசாரணையில் இறங்கி உள்ளனர். பெங்களூருவில் இருந்து 4 அதிகாரிகள் கொண்ட குழுவினர் புதுவைக்கு வந்தனர். புதுவையில் போலீஸ் காவலில் இருந்த நித்தியானந்தம் உட்பட 7 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

    பின்னர் சம்பவம் நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். அங்கிருந்து வெடிகுண்டு துகள்களையும் கைப்பற்றினர். புதுவை போலீசாரிடமும் விளக்கம் கேட்டறிந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளையும் பார்வையிட்டனர்.

    இன்றும் அவர்கள் 2-வது நாளாக தொடர் விசாரணை நடத்துகின்றனர். தேசிய புலனாய்வு முகாமை தானாகவே முன்வந்து பா.ஜனதா பிரமுகர் கொலையை விசாரணைக்கு எடுத்துள்ளது. ஏனெனில் தமிழகம், கேரளா மாநிலங்களில் சமீபகாலமாக தொடர்ந்து பா.ஜனதா நிர்வாகிகள், இந்து அமைப்பினர், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கொலைகள் அரங்கேறி வருகிறது.

    இந்து அமைப்பினர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளது.

    தமிழகத்தின் கோவையில் கோவிலை தகர்க்க சதி நடந்தது. இந்த சதி செயல் தொடர்புடையவர்களை என்.ஐ.ஏ. அமைப்பினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுவையின் பிராந்தியமான கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அருகே உள்ள மாகீ பிராந்தியத்திலும் இந்து அமைப்பினர் மீதான தாக்குதல் நடந்துள்ளது. இதனால் பா.ஜனதா பிரமுகர் செந்தில்குமரன் கொலையில் பயங்கரவாத இயக்கத்தினருக்கு தொடர்பு இருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இந்த சந்தேகத்தின் அடிப்படையிலேயே என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகளா? என்ற கேள்வி எழுந்ததின் அடிப்படையிலேயே அவர்களை தனித்தனியாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.

    என்.ஐ.ஏ. அதிகாரிகள் புதுவையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது.
    • மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தல்

    காரைக்கால்:

    நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

    இதேபோல் புதுச்சேரி, காரைக்காலிலும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கடந்த மூன்று நாட்களில் 20க்கு மேற்பட்டவருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. காரைக்காலில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், காரைக்கால் மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார். மேலும், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • கடந்த வாரம் வாடகை வீட்டிலிருந்து பொருட்களை எடுத்து கொண்டு, மாரிமுத்து தம்பதியினர் இளைய மகன் வீட்டிற்கு சென்றனர்.
    • புகாரின் அடிப்படையில் கோட்டகுப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த கோட்டகுப்பம் அருகே மாத்தூரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (69) விவசாயி. இவரது முதல் மனைவி இறந்த நிலையில், மனைவியின் தங்கையான லட்சுமியை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

    முதல் மனைவிக்கு கோவிந்தராஜ் (42) வெங்கடேஷ் (40) ஆகிய 2 மகன்களும், 2-வது மனைவிக்கு சங்கரி (35) என்ற மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு 2 மகன்கள் மற்றும் மகளுக்கு தனது விவசாய நிலத்தை பாகப்பிரிவினை செய்து எழுதி வைத்தார். இதில் மாரிமுத்து வசித்த வந்த வீட்டை, இளைய மகன் வெங்கடேசுக்கு சேர்த்து எழுதி கொடுத்தார்.

    பின்னர் 2015-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட வெங்கடேஷ் 2017-ம் ஆண்டு வயதான பெற்றோர் இருவரையும் அடித்து துன்புறுத்தி வீட்டைவிட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள வாடகை வீட்டில் குடியேறிய வயதான தம்பதியினர் தங்கள் வீட்டை மீட்டுத்தரக் கோரி விழுப்புரம் கோட்டாசியர் மற்றும் போலீசாரிடம் முறையிட்டனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய கோட்டாட்சியர், வயதான தம்பதியினரை தாங்கள் சாகும் வரை இளைய மகன் வெங்கடேஷ் தன்னுடைய வீட்டில் வைத்து பராமரிக்கவும், மகன் மற்றும் மகள் சேர்ந்து மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டனர்.

    இதனை தொடர்ந்து கடந்த வாரம் வாடகை வீட்டிலிருந்து பொருட்களை எடுத்து கொண்டு, மாரிமுத்து தம்பதியினர் இளைய மகன் வீட்டிற்கு சென்றனர்.

    அப்போது வெங்கடேஷ் இவர்களை வீட்டிற்குள் வரவிடாமல், வீட்டை பூட்டிக்கொண்டு வயதான தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்து தனது மாமியார் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதனால் செய்வதறியாமல் தவித்து வரும் வயதான தம்பதியினர், கடந்த ஒரு வாரமாக பூட்டிய வீட்டின் வெளியே கட்டில், பீரோ மற்றும் வீட்டு உபயோக பொருட்களுடன் காத்து கிடக்கின்றனர்.

    இது தொடர்பாக அவர்கள் கோட்டகுப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் கோட்டகுப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

    இந்த விவகாரத்தில் கோட்டாட்சியர் தலையிட்டு உத்தரவிட்டதால் போலீசார் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாமல் உள்ளனர்.

    ×