என் மலர்
புதுச்சேரி
- புதுவை அருகே காலாப்பட்டு பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா நடந்து வருகிறது.
- அதேபோன்று 101 அடி உயரத்தில் கிரேன் மூலம் பக்தர்கள் அலகு குத்திக் கொண்டு பாலமுருகனின் கோபுர கலசத்திற்கு அணிவித்தனர்.
புதுச்சேரி:
காலாப்பட்டு பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா நடந்து வருகிறது. கடந்த 27-ந் தேதி பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனையும் செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து 4-ந் தேதி இரவு முதல் சாமி வீதி உலா நிகழ்சிகளும் அன்னதான நிகழ்ச்சிகளும் நடந்தது. முக்கிய நிகழ்வான இன்று காலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முருகன் கோவில் குளத்திலிருந்து 101 வேல் காவடி, மயில் காவடி ஏந்தி கிழக்கு கடற்கரை சாலை, பிள்ளையார் கோவில் தெரு, தேரோடும் வீதி ஆகிய பகுதிகளில் ஊர்வலமாக வந்தனர்.
100-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் காவடி எடுத்துச் சென்றனர். பிரம்மாண்டமான செடல் உற்சவத்தில் நடந்தது.
இதில் பக்தர்கள் பொக்லைன் எந்திரம், ராட்சத கிரேன் எந்திரம், லாரி, கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் அலகு குத்திக்கொண்டு முக்கிய வீதிகளில் பக்தர்கள் இழுத்துச் சென்றனர். அதேபோன்று 101 அடி உயரத்தில் கிரேன் மூலம் பக்தர்கள் அலகு குத்திக் கொண்டு பாலமுருகனின் கோபுர கலசத்திற்கு அணிவித்தனர்.
அதேபோன்று பல்வேறு பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கோவிலின் எதிரே அலகு குத்திக்கொண்டு ராட்டினம் இழுத்தனர், நிகழ்ச்சியைட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. தடை செய்யப்பட்டுள்ளது. பங்குனி உத்திர திருவிழாவில் காலாப்பட்டு,
சின்ன காலப்பட்டு, பிள்ளைசாவடி, கனகசட்டிகுளம், தமிழகப் பகுதியான மாத்தூர், கீழ்ப்புத்துப்பட்டு, கோட்டகுப்பம், கூனிமேடு, மரக்காணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர், அதனை தொடர்ந்து 4 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது.
நாளை தெப்பல் உற்சவம் நடக்கிறது. கோவிலை சுற்றிலும் ஏராளமான பக்தர்கள் அன்னதானம், மோர் உள்ளிட்டவை வழங்கினார்கள். பங்குனி உத்திர திருவிழாவை ஒட்டி காலாப்பட்டு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- புதுவையில் மொத்தம் 255 பேருக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 36 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
- புதுவையில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசும், சுகாதாரத்துறையும் எடுத்து வருகிறது.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா தொற்று உயர்ந்து வருகிறது.
புதுவையில் மொத்தம் 255 பேருக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 36 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 15, காரைக்காலில் 19, ஏனாமில் 2 பேர் தொற்றுடன் உள்ளனர்.
புதுவையில் 3 பேர் ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 71, காரைக்காலில் 51, ஏனாமில் 13 பேர் என மொத்தம் 135 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் உள்ளனர்.
புதுவை மாநிலத்தில் இதுவரை கொரோனாவுக்கு ஆயிரத்து 977 பேர் பலியாகியுள்ளனர். புதுவையில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசும், சுகாதாரத்துறையும் எடுத்து வருகிறது. இதுகுறித்து அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-
கொரோனாவின் தாக்கம் அதிகம் உள்ளதாக மருத்துவத்துறை அறிவுறுத்தியது. இதனால் பள்ளிகளுக்கு 10 நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. மீண்டும் மருத்துவத்துறை அறிக்கை பெற்று முதல்-அமைச்சருடன் கலந்து பேசிய உரிய முடிவை கல்வித்துறை எடுக்கும்.
ஏற்கனவே பள்ளிகள் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என உத்தரவு உள்ளது. பொது இடங்களில் முக கவசம் அணிவது அவசியம் என சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது. கட்டாயம் முக கவசம் அணிவது குறித்து முதல்-அமைச்சர் ஆலோசித்து முடிவெடுத்து அறிவிப்பார்.
புதுவை தொழில் தொடங்க ஏதுவான மாநிலமாக உள்ளது. புதுவையில் மருந்து நிறுவனங்கள், ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் வர தயாராக உள்ளது. பல பிரெஞ்சு நிறுவனங்கள் நேரடியாக வந்து சந்தித்துள்ளன. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத நிறுவனங்களை பிரெஞ்சு தூதரகம் சார்பில் கொண்டுவர தயாராக உள்ளனர்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் வந்துள்ளன. இந்த அரசு தொழில் முதலீட்டாளர்களுக்கு இன்சென்டிவ் வழங்கி யுள்ளது. சலுகைகளை வழங்கியுள்ளோம். இதனால் சேதராப்பட்டு நிலம் தொழில் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு தொழிற்சாலைகள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- போக்குவரத்து மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா முன்னிலையில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ரூ.32.40 லட்சம் மதிப்பில் புதிய கணினி மையத்தை திறந்து வைத்தார்.
- கணினி மையத்தின் மூலம் ஆண்டுதோறும் சுமார் 400 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவித்தனர்.
புதுச்சேரி:
புதுவை அரசு தொழிலாளர் துறையின் கீழ் புதுவை மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் அரசினர் ஆண்கள் தொழில் பயிற்சி நிலையத்தில் போக்குவரத்து மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா முன்னிலையில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ரூ.32.40 லட்சம் மதிப்பில் புதிய கணினி மையத்தை திறந்து வைத்தார்.
இதில் 40 நவீன கணினிகள், அதிவேக இன்டர்நெட் வசதியுடன் உள்ளது.
இந்த தொழில் பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கப்பட்டு அனைவரும் கணினி இயக்கும் திறன் பெறுவது மட்டுமல்லாமல் ஆண்டு இறுதியில் நடைபெறும் ஆன்லைன் கணினி அடிப்படையிலான கருத்தியல் தேர்வினை எதிர்கொள்ள முடியும்.
கணினி மையத்தின் மூலம் ஆண்டுதோறும் சுமார் 400 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவித்தனர்.
- பொதுப்பணி துறையின் அரசு நிதி மூலம் ரூ.42 லட்சத்து 22 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
- சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
பாகூர் போலீஸ் நிலையம் வளாகத்தை சுற்றி 300 மீட்டரில் புதிதாக மதில் சுவர் கட்டுவதற்காக பொதுப்பணி துறையின் அரசு நிதி மூலம் ரூ.42 லட்சத்து 22 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை செயற்பொ றியாளர் வல்லவன், உதவி பொறியாளர் ரவீந்திரன், இளநிலை பொறியாளர் ஏகாம்பரம், பாகூர் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- புதுவையில் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி இதுவரை அறிவிக்கப்படாமல் இருக்கிறது.
- பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பாதிப்பக்குள்ளாகி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை உருளை யன்பேட்டை சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்க ளுக்கு பொதுத்தேர்வு தேதி இதுவரை அறிவிக்கப்படாமல் இருக்கிறது. தற்போது கோடை காலம் தொடங்கி வெப்பம் அதிகளவில் பொது மக்களை வாட்டி வருகிறது. இதனால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பாதிப்பக்குள்ளாகி வருகிறார்கள்.
கொரோனா நோய் தாக்கம் அதிகம் பரவி வருகிறது. பெற்றோர் மற்றும் மாணவர் நலனில் அக்கறை கொண்டு 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இந்த மாதம் 15-ந் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.
இதுகுறித்து முதல்- அமைச்சர், கல்வி அமைச்சர், கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உப்பளம் பெத்தி செமினார் மேல்நிலை ப்பள்ளி ஆரம்ப பிரிவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியின் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
- முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்குஅமைச்சர் நமச்சிவாயம்பரிசுகளை வழங்கினார்.
புதுச்சேரி:
உப்பளம் பெத்தி செமினார் மேல்நிலை ப்பள்ளி ஆரம்ப பிரிவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியின் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இந்த பரிசளிப்பு விழாவிற்கு பள்ளியின் முதல்வர் பாஸ்கல்ராஜ் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
கண்காட்சியில் சிறந்த முறையில் விளக்கம் அளித்த மாணவர்களில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்குஅமைச்சர் நமச்சிவாயம்பரிசுகளை வழங்கினார்.
விழாவிற்கான ஏற்பாடு களை ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.
- புதுவை மாநிலத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு நடந்து வருகிறது.
- முதல்- அமைச்சர் ரங்கசாமி, தன்வசம் இருந்த இந்த துறையை பா.ஜனதா அமைச்சர் நமச்சிவாயத்திற்கு வழங்கியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு நடந்து வருகிறது.
புதுவை அமைச்ச ரவையில் உள்துறை, குடிமை ப்பொருள் வழங்கல்துறை அமைச்சர்களாக பா.ஜனதாவை சேர்ந்த நமச்சிவாயம், சாய். ஜெ.சரவணன்குமார் இடம்பெற்றுள்ளனர். அமைச்சர் நமச்சிவாயம் வசம் உள்துறை, மின்துறை, கல்வித்துறை, தொழில் மற்றும் வணிகத்துறை, விளையாட்டு துறை உள்ளிட்ட துறைகள் உள்ளது.
இந்த நிலையில் கூடுதலாக அமைச்சர் நமச்சிவாயத்திற்கு வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்- அமைச்சர் ரங்கசாமி, தன்வசம் இருந்த இந்த துறையை பா.ஜனதா அமைச்சர் நமச்சிவாயத்திற்கு வழங்கியுள்ளார்.
புதுவையில் புதிய தொழிற்சாலைகளை கொண்டுவர அரசுபல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்காக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான பணிகளில் அமைச்சர் நமச்சிவாயம் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர்களின் முதலீடை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இந்த துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கு கூடுதலாக ஒதுக்க ப்பட்டுள்ளது.
- புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் உப்பளம் தலைமை கழகத்தில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
- மாநில இலக்கிய அணி துணை தலைவர் தட்சிணாமூர்த்தி, தொகுதி செயலாளர்கள் கருணாநிதி, ராஜா, தொகுதி தலைவர்கள் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் உப்பளம் தலைமை கழகத்தில் நீர்மோர் பந்தல் அமைக்கப் பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவுக்கு அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், வெள்ளரிக்காய், இளநீர், தர்பூசணி, கிர்னிபழம் மற்றும் வெள்ளரி பழம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில இணை செயலாளர்கள் திருநாவுக்கரசு, வீரம்மாள், மாநில துணை செயலாளர்கள் நாகமணி, காந்தி, மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாபுசாமி, மாநில இலக்கிய அணி துணை தலைவர் தட்சிணாமூர்த்தி, தொகுதி செயலாளர்கள் கருணாநிதி, ராஜா, தொகுதி தலைவர்கள் காந்தி, ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
- திருபுவனை அருகே உள்ள திருவண்டார் கோவில் தொழிற்பேட்டையில் உள்ள ஹைட்ராலிக் பொருட்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது.
- வரிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான காப்பர் எந்திர உதிரி பாகங்களை போலீசார் கைப்பற்றினர்.
புதுச்சேரி:
திருபுவனை அருகே உள்ள திருவண்டார் கோவில் தொழிற்பேட்டையில் உள்ள ஹைட்ராலிக் பொருட்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது.
இங்கு எந்திரத்துக்கு பயன்படும் ரூ.1 லட்சம் மதிப்பிலான உதிரிபாகங்கள் திருடு போயிருந்தன. தொழிற்சாலையின் மனித வள அதிகாரி ஜீவபாலன் திருபுவனை போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார்.
புகாரினை விசாரித்த உதவி ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். திருடு போன தொழிற்சாலைக்கு நேரில் சென்று அங்கு இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.
ஒப்பந்த தொழிலாளராக பணிபுரியும் விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும் பாக்கம், திருப்புகழ் தெருவை சேர்ந்த சாமுவேல் ராஜ் (வயது 33) என்பவர் காப்பர் பொருட்களை திருடி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீசார் மடக்கி பிடித்த னர். அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான காப்பர் எந்திர உதிரி பாகங்களை போலீசார் கைப்பற்றினர்.
விசாரணையில், குடி பழக்கம் கொண்ட அவர், தொழிற் சாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகிறார். வாங்கும் சம்பளத்தில் குடும்பம் நடத்தவே சிரமப்படும் அவருக்கு குடி பழக்கத்தை விட முடியவில்லை. அதனால் சிறிய அளவில் திருடி குடித்து வந்துள்ளார்.
தற்போது ரூ.ஒரு லட்சம் அளவுக்கு திருடும் போது சி.சி.டி.வி.யால் சிக்கியது தெரியவந்தது. குடி பழக்கத்தால் தற்போது வேலையும் பறி போனது.
- 8 மாத குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுது அவரது மனைவி இறந்து விட்டார்.
- தங்கராஜ் தங்குவதற்கு வில்லியனூரில் சிவக்குமார் அறை எடுத்து கொடுத்தார்.
புதுச்சேரி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சத்தியவதி கிராமம் பாடசாலை வீதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் தங்கராஜ் (வயது 32). ஜே.சி.பி. டிரைவர். இவருடைய மனைவி கர்ப்பிணியாக இருந்தார்.
8 மாத குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுது அவரது மனைவி இறந்து விட்டார். இந்த துக்கம் தாங்காமல் புதுவைக்கு வந்த தங்கராஜ் வில்லியனூர் அருகே உள்ள சிவக்குமார் என்பவருடைய பொக்லைன் எந்திரத்தை ஒட்டி வந்தார். தங்கராஜ் தங்குவதற்கு வில்லியனூரில் சிவக்குமார் அறை எடுத்து கொடுத்தார்.
அங்கு தங்கியிருந்த தங்கராஜ் அவரது மனைவியின் துப்பட்டாவால் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தங்கராஜ் சகோதரர் மைக்கேல்ராஜ் கொடுத்த புகார் அடிப்படையில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.
கர்ப்பிணி மனைவி இறந்த துக்கத்தில் ஜே.சி.பி. டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- சுகாதாரத்துறை மூலம் மாநிலம் முழுவதும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
- கொரோனா பரவல் குறித்து கவர்னர் தமிழிசை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த சில நாட்களாக பொது மக்களுக்கு காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் காரைக்காலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பால் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இதையடுத்து சுகாதாரத்துறை மூலம் மாநிலம் முழுவதும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. திங்கட்கிழமை நடைபெற்ற சில பரிசோதனை புதுவையில் 16, காரைக்காலில் 13, ஏனாமில் 2 என மொத்தம் 31 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே கொரோனா பரவல் குறித்து கவர்னர் தமிழிசை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குவது என முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி சண்டே மார்க்கெட், தியேட்டர்கள், மருத்துவமனைகள் ஆகிய பொது இடங்களில் பொதுமக்கள் முகக் கவசம் அணிய வலியுறுத்த வேண்டுமென சுகாதாரத் துறை சார்பில் கலெக்டருக்கு பரிந்துரைக்கப்பட்டது.
மேலும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவும் முடிவெடுக்கப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- புதுவையிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் மெதுவாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.
- புதிதாக புதுவையில் 16, காரைக்காலில் 13, ஏனாமில் 2 பேர் என மொத்தம் 31 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி:
நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.
புதுவையிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் மெதுவாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. புதுவையில் 201 பேருக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக புதுவையில் 16, காரைக்காலில் 13, ஏனாமில் 2 பேர் என மொத்தம் 31 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காரைக்கால் சுனாமி குடியிருப்பை சேர்ந்த 35 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு புதுவை ஜிப்மரில் சி கிச்சை பெற்று வந்தார்.
அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து காரைக்கால் கலெக்டர் குலோந்துங்கன், கொரோனாவை கட்டுப்படுத்த பொது இடங்களில் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.
தியேட்டர், வணிக வளாகம், மருத்துவமனை போன்ற இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம். அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனாவுக்கு பெண் பலியான சம்பவம், புதுவையில் தொற்று அதிகரிப்பால் மக்களிடையே மீண்டும் பீதி ஏற்பட்டுள்ளது.






