என் மலர்
புதுச்சேரி
- புதுவை தமிழ்ச் சங்கத்தின் ஆட்சி மன்ற குழு கூட்டம் அதன் தலைவர் முத்து தலைமையில் நடைபெற்றது.
- புதுவை தமிழ்ச் சங்கம் அனைத்து நிலைகளிலும் ஆதரவு அளித்து மாநாட்டை வெற்றி பெற செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை தமிழ்ச் சங்கத்தின் ஆட்சி மன்ற குழு கூட்டம் அதன் தலைவர் முத்து தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வருகிற 22-ந் தேதி புதுவை தமிழ்ச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் விழுப்புரம் முதன்மை சாலையில் அமைந்துள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
மேலும் புதுவையில் உலகத் தமிழ் மாநாடு நடத்துவது உலக தமிழ் அறிஞர்களை அழைத்து தமிழர்கள் அனைவரும் வியக்கும் வகையில் உலகத் தமிழ் மாநாடு நடத்துவது புதுவை சட்டசபையில் பட்ஜெட் தாக்கலின் போது அறிவித்த முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு பாராட்டு தெரிவிப்பது, புதுவை அரசு நடத்தும் உலகத் தமிழ் மாநாட்டிற்கு புதுவை தமிழ்ச் சங்கம் அனைத்து நிலைகளிலும் ஆதரவு அளித்து மாநாட்டை வெற்றி பெற செய்வது என்றும் தீர்மானிக்கப் பட்டது.
புதுவை அரசு அறிவித்துள்ள தமிழ் சிறகம் அமைப்பது என்பதனை மாற்றி தமிழ் வளர்ச்சித் துறை என்ற பெயரில் ஒரு துறையை உருவாக்கி தமிழின் மேன்மையை மேலும் உயர்த்திட வழிவகை காண வேண்டும்.
புதுவையில் அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாகவும், ஆட்சி பரப்பு மொழியாகவும் ஆக்கப்பட வேண்டும், மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.சி.) மூலம் படிக்கின்ற மாணவர்களுக்கு தமிழை கட்டாய பாடமாக கொண்டு வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக புதுவை தமிழ்சங்க தலைவர் முத்து தெரிவித்தார்.
- புதுவை சேலியமேடு பள்ளி நுண்கலை ஆசிரியர் உமாபதி கழிவு பொருட்களை கலை பொருட்களாக மாற்ற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்.
- கிளிஞ்சல் , சங்கை எடுத்து கலைப்பொருட்களை வடிவமைக்க கற்று தந்தார்.
புதுச்சேரி:
புதுவை சேலியமேடு பள்ளி நுண்கலை ஆசிரியர் உமாபதி கழிவு பொருட்களை கலை பொருட்களாக மாற்ற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்.
புதுவை வீராம்ப ட்டினத்தில் உள்ள ஜீவரத்தினம் அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு கடலோரம் கிடைக்கும் கிளிஞ்சல் , சங்கை எடுத்து கலைப்பொருட்களை வடிவமைக்க கற்று தந்தார்.
மயில், விநாயகர், பரிசு பொருட்களை உருவாக்கும் வழிமுறைகளை மாண விகளுக்கு செய்து காண்பித்து பயிற்சி அளித்தார். இதனை மாணவிகள் கற்றுக் கொண்டு பயனற்ற பொருட்களான கிளிஞ்சல், சங்கு உள்ளிட்ட பொருட்களை கலை வடிவமாக உருவாக்கினர்.
- புதுவை அருகே வில்லியனூர் அருகே ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த பிரபல ரவுடி உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
- குற்ற சம்பவங்களில் ஈடுபட ஆயுதங்களை வைத்திருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த பிரபல ரவுடி உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
வில்லியனூர் இன்ஸ்பெக்டர் வேலய்யன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் வில்லியனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வில்லியனூர் மல்லிகா தியேட்டர் அருகே உள்ள சாமியார் தோப்பு பகுதியில் அங்கிருந்த இளைஞர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அவர்களில் 2 பேரை சுற்றி வளைத்த போலீசார் அவர்களது உடைமைகளை சோதனை செய்ததில் அரிவாள் வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கணுவாப் பேட்டையைச் சேர்ந்த தமிழ் என்ற தமிழ்ச்செல்வன் (வயது 23). இவர் மீது கூடப்பாக்கத்தில் பிறந்தநாள் கொண்டாடிய சிவசங்கர் என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கு, வில்லியனூர் நகரப் பகுதியில் ஒருவரை கத்தியால் குத்தி கொலை முயற்சி செய்த வழக்கு, வெடிகுண்டு வழக்கு அடிதடி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதும், இவர் கணுவாபேட்டை பகுதியில் குற்ற சம்பவங்களில் ஈடுபட ஆயுதங்களை வைத்திருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
மற்றொருவர் கணுவாப்பேட்டையை விண்ணரசன் (19) என்பது தெரியவந்தது. 2 பேரிடமும் கத்தியை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- ரூ.24 லட்சத்து 40 ஆயிரம் செலவில் உட்புற சாலைகள் மற்றும் கழிவு நீர் வாய்க்கால்கள் மேம்படுத்துவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
- உதவி பொறியாளர் மல்லிகார்ஜுணன், இளநிலை பொறியாளர் பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் திருபுவனை தொகுதி க்குட்பட்ட மதகடிப்பட்டு பாளையம் கஸ்தூரிபாய் நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.24 லட்சத்து 40 ஆயிரம் செலவில் உட்புற சாலைகள் மற்றும் கழிவு நீர் வாய்க்கால்கள் மேம்படுத்துவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அங்காளன் எம்.எல்.ஏ. தலைமையேற்று பூமி பூஜை நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன், உதவி பொறியாளர் மல்லிகார்ஜுணன், இளநிலை பொறியாளர் பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- போலி பி.எட். சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
- துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் ஏனாம் பிராந்தியம் ஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றின் முகத்துவாரத்தில் உள்ளது.
ஏனாம் பிராந்திய அரசு பணிகளில் ஆந்திர மாநில பல்கலைக்கழக கல்லூரியில் படித்தவர்கள் உள்ளனர். அரசு துறை பணிகளில் உள்ளவர்கள் போலியாக பட்டப்படிப்பு சான்றிதழ் பெற்று பணியில் சேர்ந்திருப்பதாக புகார்கள் வந்தது.
இதுதொடர்பாக அவ்வப்போது துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஏனாம் அரசு பள்ளியில் பணியாற்றிய சமூக அறிவியல் ஆசிரியர் முகமதுயாகூப் போலி பி.எட். சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
இவர் 2000-ம் ஆண்டு பி.எட். படித்ததாக சான்றிழ் அளித்துள்ளார். ஆனால் அவர் படித்த கல்லூரியில் 2003-ல் தான் பி.எட். படிப்பு தொடங்கியது என தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து ஏனாம் கல்வித்துறை அவர் மீது நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்துள்ளது.
இதனிடையே ஏனாம் தொடக்கப் பள்ளியில் 2023-ம் முதல் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் தனலட்சுமி, வெங்கடலட்சுமி, சந்தோஷி ஆகியோர் வழங்கப்பட்ட காலக்கெடுவுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வை முடிக்காததால் கோர்ட்டு உத்தரவின்படி பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- புதுவை அருகே வில்லியனூர் ஒதியம்பட்டு வண்ணார ப்பரதேசி சித்தர் சுவாமிகள் கோவில் வளாகத்தில் சுகாதாரதுறையின் மூலமாக காச நோய் கண்டுபிடிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- மாவட்ட காசநோய் மருத்துவ அதிகாரி டாக்டர் விவேகா முன்னிலை வகித்தார்.
புதுச்சேரி:
புதுவை அருகே வில்லியனூர் ஒதியம்பட்டு வண்ணாரப்பரதேசி சித்தர் சுவாமிகள் கோவில் வளாகத்தில் சுகாதாரதுறையின் மூலமாக காச நோய் கண்டுபிடிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
முகாமிற்கு காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். எதிர்க்கட்சித் தலைவர் . சிவா முகாமினை தொடங்கி வைத்து பேசினார்.
மாவட்ட காசநோய் மருத்துவ அதிகாரி டாக்டர் விவேகா முன்னிலை வகித்தார். வில்லியனூர் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் திலகம் காச நோய் அறிகுறிகள் குறித்து விளக்கினார்.
நிகழ்ச்சியில் சமூக நலத்துறை தலைமை அதிகாரி டாக்டர் வேத பிரியா, வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி செவிலியர்கள் ரத்னா, எட்வீனா, சுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
முகாமில் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் சமூக மருத்துவ துறையைச் சார்ந்த மருத்துவ அதிகாரி மற்றும் பயிற்சி மருத்துவர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று காச நோய் விவரங்களை சேகரித்தனர்.
- உயர்கல்வி நிறுவனங்களின் நிலைத்தன்மையை மதிப்பீட்டு டயமண்ட் பேண்ட் ஏ பிளஸ் தரவரிசை வழங்கி வருகிறது.
- சமூக சார்ந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகள் ஆகியவற்றின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
இந்தியாவின் நிலையான நிறுவனங்களின் பசுமை தரவரிசை 2023 அங்கீகாரமானது ஆர்-உலக நிறுவன தரவரிசை அமைப்பின் மூலம் உயர்கல்வி நிறுவனங்களின் நிலைத்தன்மையை மதிப்பீட்டு டயமண்ட் பேண்ட் ஏ பிளஸ் தரவரிசை வழங்கி வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டிற்கு விநாயக மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், சென்னை ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரி வளாகம், புதுவை ஆறுபடை வீடு மருத்துவமனை வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலை டு ஹெல்த் சயின்ஸ் துறைகளுக்கு 'டயமண்ட் பேண்ட் ஏ பிளஸ்' தரவரிசை சான்று வழங்கி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார் கூறுகையில்,''எங்கள் கல்லூரியின் நிலையான பல்வேறு முயற்சிகள் மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் இந்த அங்கீகாரம் பெற்றுள்ளோம். கல்லூரியின் கட்டமைப்பு, பல்வேறு ஆற்றல் மேலாண்மையை நடை முறைபடுத்துதல், மறுசுழற்சி மேலாண்மை , சமூக சார்ந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகள் ஆகியவற்றின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையானது வெறும் கல்வி சார்ந்தது மட்டுமில்லாமல், சுற்றுச்சூழல் சமூக பாதுகாப்பு சார்ந்த பல்வேறு செயல்பாடுகளையும் மாணவர்களுக்கு அளிக்கிறது என்றார்.
இவ்விருது பெறுவதற்கு உறுதணையாக செயலாற்றிய துறையின் டீனுக்கு பல்கலைகக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கணேசன் மற்றும் இயக்குனர் டாக்டர் அனுராதா கணேசன் ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்தனர். தரவரிசை சான்றை துறையின் டீன், பல்கலைக்கழக வேந்தரிடம் கொடுத்து வாழ்த்துகளை பெற்றார்.
- புதுவை அருகே பாகூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.
- இதனை பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
புதுச்சேரி:
பாகூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இதன் மூலமாக, 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், பாகூர் தொகுதி தி.மு.க., செந்தில்குமார் எம்.எல்.ஏ. முயற்சியால், புதுவை ரிவாஜ் ரவுண்ட் டேபிள் 104, 41 இ.ஆர்.எஸ்., லெஸ்கோப்பெய்ன் 192 மற்றும் பிரான்ஸ் தமிழர்கள் சேவை சமூகம் ஆகியவை சார்பில், பாகூர் மருத்துவமனைக்கு புதியதாக ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கப்பட்டது.
இதனை பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில் சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் முரளி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு கொடியசைத்து ஆம்பு லன்ஸை பயன்பாட்டிற்கு அர்பணித்தார்.
இந்நிகழ்ச்சியில், ரவுண்ட்டேபிள் இந்தியா தேசிய செயலாளர் சந்தோஷ்ராஜ், விஜயரா கவேந்திரா, சுஜெய், குணல், விஷ்ணுபிரபாகர்பிரவேஸ் ஜெயின், சார்லஸ் டேனியல், பிரேம்ராஜ், சுரேஷ் ஜெய்ஸ்வால் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பாகூர் ஜமுனாரவி தொகுப்புரையாற்றினார். பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை டாக்டர் ஆனந்தவேலு நன்றி கூறினார்.
- முதல்-அமைச்சர் ரங்கசாமி, குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணகுமார் ஆகியோர் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்டனர்.
- 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரி:
ஊசுடு தொகுதி குருமாம்பேட் பகுதியில் எழுந்தருளியுள்ள புற்று மாரியம்மன் கோவில் மற்றும் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண விழா விமர்சையாக நடைபெற்றது.
இதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணகுமார் ஆகியோர் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்டனர்.
பிரத்தியேகமாக உரு வாக்கப்பட்ட இடத்தில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஊசுடு தொகுதி பா.ஜனதா தலைவர் சாய்.தியாகராஜன், ஊசுடு தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள், கோவில் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- முத்தியால்பேட்டை தொகுதி முத்தைய முதலியார் வீதியில் குடிநீர் குழாய்கள் மிகவும் மோசமாக இருந்து வந்தது.
- ரூ.39 லட்சம் மதிப்பில் புதிய குழாய்கள் அமைக்கப்பட உள்ளது.
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை தொகுதி முத்தைய முதலியார் வீதியில் குடிநீர் குழாய்கள் மிகவும் மோசமாக இருந்து வந்தது.
இதனை மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் வைத்தகோரிக்கையை ஏற்று தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் நடவடிக்கையின் பேரில் ரூ.39 லட்சம் மதிப்பில் புதிய குழாய்கள் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான தொடக்க விழாவில் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பூமி பூஜை செய்து, பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், பொது சுகாதார உட்கோட்ட செயற்பொறியாளர் முருகானந்தம், உதவி பொறியாளர் வாசு, இளநிலை பொறியாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாலிபர் கீழே இறங்க மறுத்து மேலேயே நின்று கொண்டிருந்தார்.
- நீண்ட போராட்டத்துக்கு இடையே நைசாக பேசி மேலே ஏறி வாலிபரை பத்திரமாக மீட்டு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபை எதிரே அம்பேத்கர் சிலை உள்ளது. இங்கு நேற்று சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் வந்தார்.
திடீரென அதன் அருகில் உள்ள மரக்கிளைகள் வழியாக அம்பேத்கர் சிலை உச்சி பகுதிக்கு ஏறினார்.
அங்கிருந்து ஒற்றைக்கையில் தொங்கியபடி தற்கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்தார்.
தகவலறிந்த பெரிய கடை போலீசார் உடனே அங்கு விரைந்து சென்றனர். தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரிடம் கீழே இறங்கி பேசுமாறு கூறினார்.
ஆனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அந்த வாலிபர் கீழே இறங்க மறுத்து மேலேயே நின்று கொண்டிருந்தார்.
நீண்ட போராட்டத்துக்கு இடையே நைசாக பேசி மேலே ஏறி வாலிபரை பத்திரமாக மீட்டு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
அதில் அந்த வாலிபர் தனது பெயர் வெங்கடேசன், சண்முகம் என கூறியதோடு திருக்கனூர், மேட்டுப்பாளையம், பாக்கம் கூட்ரோடு என முகவரியை மாற்றி மாற்றி கூறினார்.
மேலும் கடலில் குளிக்க சென்ற தன்னை அங்கிருந்தவர்கள் தாக்கியதால் மனவேதனையடைந்தேன். இது பற்றி அம்பேத்கரிடம் நியாயம் கேட்கவே அவரது சிலை மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார்.
அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. அவரது உறவினர்களை கண்டுபிடித்து வாலிபரை ஒப்படைத்ததற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- கேமரா உள்ளிட்ட பொருட்களை ரங்காராவ் திருடிச்சென்றது தெரியவந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து ரங்காராவை வலை வீசி தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
திருவண்ணாமலை மாவட்டம் பள்ளிக்கூட வீதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 29). ஸ்டூடியோ உரிமையாளர். திருவண்ணாமலைக்கு சுற்றுலா வந்த ஆந்திராவை சேர்ந்த ரங்காராவ் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ரங்காராவ் தனது தங்கைக்கு திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்ப்பதாகவும், அதற்கு 'போட்டோ சூட்' நடத்த வேண்டும் என்று ராஜேசிடம் கூறி அவரை புதுவைக்கு அழைத்து வந்தார். இருவரும் புதுவை ஆம்பூர் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கினர். அவரது தங்கை மறுநாள் வருவதாக கூறினார்.
இந்த நிலையில் இருவரும் அண்ணாசாலைக்கு சென்றனர். ரங்காராவ் அங்கு ராஜேசை நிற்க வைத்து விட்டு இதோ வருகிறேன் என கூறிச்சென்றார். வெகு நேரம் ஆகியும் அவர் வராததால் ராேஜஷ் தான் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு சென்றார். அப்போது அங்கு வைத்திருந்த ரூ.7 லட்சத்து 78 ஆயிரம் மதிப்புள்ள கேமரா உள்ளிட்ட பொருட்களை ரங்காராவ் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரங்காராவை வலை வீசி தேடி வருகின்றனர்.






