என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கத்தியுடன் பதுங்கி இருந்த பிரபல ரவுடி கைது
    X

    கோப்பு படம்.

    கத்தியுடன் பதுங்கி இருந்த பிரபல ரவுடி கைது

    • புதுவை அருகே வில்லியனூர் அருகே ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த பிரபல ரவுடி உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
    • குற்ற சம்பவங்களில் ஈடுபட ஆயுதங்களை வைத்திருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த பிரபல ரவுடி உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

    வில்லியனூர் இன்ஸ்பெக்டர் வேலய்யன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் வில்லியனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வில்லியனூர் மல்லிகா தியேட்டர் அருகே உள்ள சாமியார் தோப்பு பகுதியில் அங்கிருந்த இளைஞர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அவர்களில் 2 பேரை சுற்றி வளைத்த போலீசார் அவர்களது உடைமைகளை சோதனை செய்ததில் அரிவாள் வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் கணுவாப் பேட்டையைச் சேர்ந்த தமிழ் என்ற தமிழ்ச்செல்வன் (வயது 23). இவர் மீது கூடப்பாக்கத்தில் பிறந்தநாள் கொண்டாடிய சிவசங்கர் என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கு, வில்லியனூர் நகரப் பகுதியில் ஒருவரை கத்தியால் குத்தி கொலை முயற்சி செய்த வழக்கு, வெடிகுண்டு வழக்கு அடிதடி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதும், இவர் கணுவாபேட்டை பகுதியில் குற்ற சம்பவங்களில் ஈடுபட ஆயுதங்களை வைத்திருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    மற்றொருவர் கணுவாப்பேட்டையை விண்ணரசன் (19) என்பது தெரியவந்தது. 2 பேரிடமும் கத்தியை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×