search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தமிழ்ச் சங்க பொது குழு கூட்டம்
    X

    கோப்பு படம்.

    தமிழ்ச் சங்க பொது குழு கூட்டம்

    • புதுவை தமிழ்ச் சங்கத்தின் ஆட்சி மன்ற குழு கூட்டம் அதன் தலைவர் முத்து தலைமையில் நடைபெற்றது.
    • புதுவை தமிழ்ச் சங்கம் அனைத்து நிலைகளிலும் ஆதரவு அளித்து மாநாட்டை வெற்றி பெற செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை தமிழ்ச் சங்கத்தின் ஆட்சி மன்ற குழு கூட்டம் அதன் தலைவர் முத்து தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வருகிற 22-ந் தேதி புதுவை தமிழ்ச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் விழுப்புரம் முதன்மை சாலையில் அமைந்துள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

    மேலும் புதுவையில் உலகத் தமிழ் மாநாடு நடத்துவது உலக தமிழ் அறிஞர்களை அழைத்து தமிழர்கள் அனைவரும் வியக்கும் வகையில் உலகத் தமிழ் மாநாடு நடத்துவது புதுவை சட்டசபையில் பட்ஜெட் தாக்கலின் போது அறிவித்த முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு பாராட்டு தெரிவிப்பது, புதுவை அரசு நடத்தும் உலகத் தமிழ் மாநாட்டிற்கு புதுவை தமிழ்ச் சங்கம் அனைத்து நிலைகளிலும் ஆதரவு அளித்து மாநாட்டை வெற்றி பெற செய்வது என்றும் தீர்மானிக்கப் பட்டது.

    புதுவை அரசு அறிவித்துள்ள தமிழ் சிறகம் அமைப்பது என்பதனை மாற்றி தமிழ் வளர்ச்சித் துறை என்ற பெயரில் ஒரு துறையை உருவாக்கி தமிழின் மேன்மையை மேலும் உயர்த்திட வழிவகை காண வேண்டும்.

    புதுவையில் அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாகவும், ஆட்சி பரப்பு மொழியாகவும் ஆக்கப்பட வேண்டும், மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.சி.) மூலம் படிக்கின்ற மாணவர்களுக்கு தமிழை கட்டாய பாடமாக கொண்டு வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக புதுவை தமிழ்சங்க தலைவர் முத்து தெரிவித்தார்.

    Next Story
    ×