என் மலர்
புதுச்சேரி

அமைச்சர் சா.ஜெ.சரவணன்குமாருக்கு ஓ.பி.சி. அணி நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்த காட்சி.
அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமாருக்கு பாராட்டு
- பட்ஜெட் தொடரில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
- புதுவையில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் இந்த பணி வழங்கப்படும் கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை பா. ஜனதா கட்சியின் ஓ.பி.சி. அணி யின் மாநிலத் தலைவர் என்ஜினீயர் சிவகுமார் தலைமையில் அதன் அனைத்து நிர்வாகிகளும், குடிமைபொருள் வழங்க துறையில் நடந்து முடிந்த பட்ஜெட் தொடரில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
அந்தந்த பகுதியில் உள்ள பொது சேவை மையங்கள் மூலம் ரேஷன் கார்டு சேவைகளை பெற்றுக் கொள்ளலாம். 100 நாள் வேலை திட்டத்தில் சராசரியாக வேலை வழங்கும் நாட்களை இந்த ஆண்டு முதல் 50 முதல் 60 நாட்களாக அதிகப்படுத்தப்படும்.
புதுவையில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் இந்த பணி வழங்கப்படும் கூறியுள்ளார். சாமானிய மக்களும் பயன்படும் விதமாக செயலாற்றி வரும் சாய்.ஜெ.சரவணன்குமாரை பா.ஜனதா கட்சியின் நிர்வாகிகள் பாராட்டினர்.






