என் மலர்
புதுச்சேரி
- திரும்பி வராததால் முருகானந்தமும் அவரது மருமகன் சபரிநாதனும் அங்கு சென்றனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி ருக்குமணி. தம்பதிக்கு கோகுல், அசோக்குமார் என்ற 2 மகன்கள் இருந்தனர். பரமேஸ்வரி என்ற மகள் உள்ளார்.
இதில் அசோக்குமார் சற்று மனநலம் பாதிக்கபட்ட நிலையில் இருந்தார். அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்ைச பெற்று வந்தார்.
இந்த நிலையில் வீராம்பட்டினம் கடற்கரைக்கு சென்ற அசோக்குமார் நீன்ட நேரமாகியும் திரும்பி வராததால் முருகானந்தமும் அவரது மருமகன் சபரிநாதனும் அங்கு சென்றனர்.
கடற்கரையில் அசோக்குமார் வாயில் நுரை தள்ளி இறந்து கிடந்தை கண்ட அவர்கள் அரியாங்குப்பம் போலீஸ் நிலைத்தில் தனது மகன் நீச்சல் தெரியாமல் இறந்திருக்கலாம் என்று புகார் கொடுத்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோபி மகன் சென்னையில் படித்தபோது உடன்படித்த கல்லூரி மாணவியை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
- நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டி மகன், மருமகள் எங்கே உள்ளனர் என்றும் செல்போன் நம்பரை கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை மஞ்சினி நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி என்ற டெல்லி கோபி.
சென்னையில் கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட பா.ஜனதா தலைவராக இருந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களது விவாகரத்து வழக்கு புதுவை கோர்ட்டில் நடந்து வருகிறது. கோபி மகன் சென்னையில் படித்தபோது உடன்படித்த கல்லூரி மாணவியை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இந்த திருமணத்திற்கு பெண்ணின் வீட்டினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் திருமணம் செய்து கொண்ட இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 13-ந்தேதி கோபி விவகாரத்து வழக்கிற்காக புதுவைக்கு வந்தார்.
விசாரணை முடிந்து புதுவை கருவடிக்குப்பம் சிவாஜி சிலை பஸ் நிறுத்தம் அருகே பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு காரில் வந்த கும்பல் வடபழனி போலீசார் எனக்கூறி கோபியை கடத்தி சென்றனர்.
சென்னை கோவளம் முட்டுக்காடு அருகே வந்தபோது காரில் அவரை தாக்கி மகன்-மருமகள் எங்கே? என கேட்டனர். மேலும் மற்றொரு காரில் இருந்து வந்த ஒருவர் துப்பாக்கி முனையில் கோபியை மிரட்டினார். கோபி தொடர்ந்து சத்தம் போட்டதால் கானாத்தூர் பஸ் நிறுத்தம் அருகே கோபியை கீழே இறக்கிவிட்டு சென்றனர்.
இதுகுறித்து கோபி கானாத்தூர் போலீசில் புகார் அளித்தார். சம்பவம் நடந்த இடம் புதுவை என்பதால் அங்கு புகார் அளிக்குமாறு கானாத்தூர் போலீசார் கூறி புகாரை வாங்க மறுத்துவிட்டனர். இதனையடுத்து லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை
இதனால், காவல்துறை தலைமை அலுவலகத்தில் புகார் அளித்தார். பின்னர் நிருபர்களிடம் கோபி கூறியதாவது:-
எனது மகனையும், மருமகளையும் ஆணவக் கொலை செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் பெண்ணின் தந்தை, நண்பர் ஆகியோர் கூட்டு சதி செய்து போலீஸ் என கூறி என்னை கடத்தி சென்றனர். நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டி மகன், மருமகள் எங்கே உள்ளனர் என்றும் செல்போன் நம்பரை கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.
கடத்தல் சம்பவம் குறித்து லாஸ்பேட்டை போலீஸ் நிலையம் மற்றும் கவர்னர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளேன். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கடத்தல் கும்பலுக்கு ஆதரவாக போலீசார் செயல்படு கின்றனர்.
இது தொடர்பாக கோர்ட்டையும் நாட உள்ளேன். கானாத்தூரில் கடத்தல் கும்பல் என்னை விடுவித்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் என்னிடம் இருக்கிறது. எனக்கும் என் குடும்பத்திற்கும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. போலீசார் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ் புலவர்கள் மற்றும் அனைவருக்கும் மகளிர் நலம், மாந்தர் நலம், இளையோர் நலம் என்ற விழிப்புணர்வு நூல்கள் வழங்கப்பட்டது.
- மான்களுக்கு உணவளித்து பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் புதுவையில் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை தன்னம்பிக்கை கலைக்குழு சார்பில் முன்னாள் பேராசிரியரும் தமிழ் அறிஞருமான இளங்கோவின் பிறந்தநாள் விழா வனத்துறை வளாகத்தில் நடந்தது.
தன்னம்பிக்கை கலை குழு சார்பில் வேட்டி சட்டை, புடவை, மற்றும் வெற்றிலை பாக்கு, பழங்களுடன் தமிழ் அறிஞர் இளங்கோவிற்க்கு சீர்வரிசை வழங்கப்பட்டது. தொடர்ந்து வனத்துறையில் உள்ள மான்களுக்கு மாதுளை, கொய்யா, கிர்ணி பழம், தர்பூசணி, கேரட் , வெள்ளரி உள்ளிட்ட பல்வேறு காய்கள் மற்றும் பழ வகைகளை இளங்கோவன் வழங்கினார். மேலும்,வனத்துறையில் மகிழம்பு மர கன்றுகள், விதைகளையும் நட்டார்.
விழாவில் பங்கேற்ற தமிழ் அறிஞர்கள் தமிழ் புலவர்கள் மற்றும் அனைவருக்கும் மகளிர் நலம், மாந்தர் நலம், இளையோர் நலம் என்ற விழிப்புணர்வு நூல்கள் வழங்கப்பட்டது. பிறந்தநாள் என்றால் அதை ஆடம்பரமாக கொண்டாடி விளம்பரம் செய்து வருபவர்கள் மத்தியில் தமிழறிஞர் ஒருவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு வனத்துறையில் உள்ள மான்களுக்கு உணவளித்து பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் புதுவையில் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- பா.ஜனதா அரியாங்குப்பம் தொகுதி தலைவர் செல்வகுமார் வலியுறுத்தல்
- புதிதாக உருவாகிய நகர்களில் வீடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு வேகமாக உள்ளது.
புதுச்சேரி:
பா.ஜனதா புதுவை அரியாங்குப்பம் தொகுதி தலைவர் செல்வகுமார் மக்களுடன் மின்துறை பொறியாளரை சந்தித்து கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: -
புதுவை அரியாங்குப்பம் தொகுதியில் நகர்களின் எண்ணிக்கை அதிகரித்து புதிதாக உருவாகிய நகர்களில் வீடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு வேகமாக உள்ளது. இதன் காரணமாக மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது.
எனவே அதற்கு ஏற்றாற்போல் உள் கட்டமைப்பு வசதியையும் வேகமாக அதிகரிக்கச் செய்ய வேண்டும். குறிப்பாக அரியாங்குப்பம் தொகுதியில் தற்போது மின்துறை சார்பில் 74 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மின்சார பயன்பாடு மக்கள் தொகை எண்ணிக்கை மற்றும் ஏசி, குளிர்சாதனப்பெட்டி, வாஷிங் மெஷின், அயன் பாக்ஸ், மின்மோட்டார் போன்ற மின்சாதன பொருட்களின் எண்ணிக்கை வீடுகள்தோறும் அதிகரித்து வருவதற்கு ஏற்ப மின்சார வினியோகம் திட்டமிட்டு அதிகரிக்கப்படாமல் இருந்து வருகிறது.
இதனால் அரியாங்குப்பம் தொகுதி முழுக்க குறைந்த மின் அழுத்தம் இருந்து வருகின்றது. இதனால் வீடுகளில் மக்கள் உபயோகித்து வரும் பல்வேறு மின்சாதன பொருட்கள் பழுதாகி வீணாகிவிடுகின்றன. இதன்காரணமாக மக்கள் பொருளாதார இழப்பிற்கு ஆளாகின்றனர். இந்த கோடை காலத்தில் ஏ.சி பழுதாவதால் நோயாளிகளும், குழந்தைகளும் தூக்கத்தை இழந்து பரிதவிக்கின்றனர்.
குறிப்பாக அரியாங்குப்பம் ட்ரீம் சிட்டியில் இந்த பாதிப்பு அதிகம் உள்ளது. எனவே மக்கள் தொகை பெருக்கம் மற்றும் மின் உபயோகம் அதிகரிப்பிற்கு ஏற்ற வகையில் அரியாங்குப்பம் தொகுதி முழுவதும் மின் உபயோகம் செய்யப்பட வேண்டும். அதற்காக எந்தெந்த பகுதிகளில் புதியதாக மின்மாற்றிகள் அமைக்கப்பட வேண்டுமோ அங்கெல்லாம் அமைத்து, சீரான மின்சாரத்தை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்
- எம்.ஜி.ஆர். மக்கள் நல இயக்கம் வலியுறுத்தல்
- புதுவை அரசை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
எம்.ஜி.ஆர். மக்கள் நல இயக்கத் தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது ;-
புதுவை மாநி லத்தில் உள்ள கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் அமுதசுரபியில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு சில வருடங்களாக சம்பளம் தராமல் புதுவை அரசு பாக்கி வைத்துள்ளது. ஏறக்குறைய 30 மாத கால சம்பள பாக்கி உள்ளதாக அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக புதுவை அரசை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஆனால் அரசு தொடர்ந்து பாராமுகமாக ஊழியர்களின் போராட்டத்தை அலட்சிய ப்படுத்தி வருகின்றனர். நிலுவையில் உள்ள சம்பள பாக்கி தரக்கோரியும் பணி பாதுகாப்பு வழங்க கோரியும் நடைபெற்ற போராட்டத்தில் ஊழியர்கள் 4பேர் இனியும் இந்த புதுவை அரசை நம்பி பலனில்லை என்று கருதி தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இனியும் காலதாமதம் செய்யாமல் அமுதசுரபி ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவையில் உள்ள சம்பள பாக்கி உடனடியாக கொடுக்குமாறு புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அரசு ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு அனுமதி வழங்குவது தொடர்பான விவகாரம் நீண்ட காலமாக அரசின் கவனத்தை ஈர்த்தது.
- அலுவலகத்தில் பெண் அரசு ஊழியர்கள் மட்டுமே இருந்தால் அனைவரும் நிர்வாகத்தின் நலன் கருதி ஒரே நேரத்தில் இந்த சலுகை பெறக்கூடாது.
புதுச்சேரி:
புதுவை அரசு துறைகளில் பணி புரியும் பெண் ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் காலை நேரத்தில் 2 மணி நேர பணி சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
பணிச்சலுகை அறிவிப்பை புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியும், கவர்னர் தமிழிசையும் கூட்டாக வெளியிட்டனர். இந்த நிலையில் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலாளர் ஜெய்சங்கர் அனைத்து துறைகளுக்கும் அனுப்பி உள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது :-
வெள்ளிக்கிழமைகளில் பெண்களின் பாரம்பரிய வழிபாடுகள் மற்றும் பூஜையை கருத்தில் கொண்டு புதுவை அரசியல் பணிபுரியும் பெண் அரசு ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு அனுமதி வழங்குவது தொடர்பான விவகாரம் நீண்ட காலமாக அரசின் கவனத்தை ஈர்த்தது. இதனை கவனமாக பரிசீலனை செய்து கவர்னர் வெள்ளிக்கிழமைகளில் காலை 8.45 மணி முதல் 10.45 மணி வரை 2 மணி நேரம் சிறப்பு அனுமதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளார் .
காலை 10.45 மணிக்கு மேல் எந்த அனுமதியும் வழங்கப்படாது ஒரு மாதத்தில் 3 வெள்ளிக்கிழமைகள் மட்டுமே இதற்கான அனுமதி அளிக்கப்படும். சாதாரண விடுப்புக்கு அனுமதி வழங்குவதற்கு அதிகாரம் பெற்ற அதிகாரியிடம் முன் அனுமதி பெற வேண்டும். தாமதமாக வருகை தந்தால் அதற்கான பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும். அது 10.55 மணிக்கு மூடப்படும்
அரசு பணி எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது. அலுவலகத்தில் பெண் அரசு ஊழியர்கள் மட்டுமே இருந்தால் அனைவரும் நிர்வாகத்தின் நலன் கருதி ஒரே நேரத்தில் இந்த சலுகை பெறக்கூடாது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரி சுழற்சி அடிப்படையில் அவர்களுக்கு பணிநேர சலுகை கிடைக்க அனுமதிக்க வேண்டும் .
இந்தச் சலுகை சுகாதாரத்துறை காவல்துறை மற்றும் கல்வித்துறை போன்ற அத்தியாசிய சேவைகள் நேரடி பொது சேவை வழங்கும் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு கிடையாது .
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பார்வையிட்டார்
- ஆதீனமே பராமரிப்பதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப் படும் எனவும் தெரிவித்தார்.
புதுச்சேரி:
திருக்கயிலாயப் பரம் பரை தருமபுர ஆதினத்திற்கு சொந்தமான சீர்காழியில் உள்ள சட்டநாத சாமி தேவஸ்தானம் திருநிலை நாயகி அம்பாள் உடனுறை பிரம்மபுரீஸ்வரர் சாமி கோவில் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் கோவில் கும்பாபிஷேகப் பணியின் போது கோவில் வளாகத்தில் பூமிக்கடியில் இருந்து 22 பஞ்சலோக சாமி சிலைகள் மற்றும் 412 முழுமையாகவும் 84 உடைந்த நிலையில் தேவார செப்பேடு தொகுதிகள் கிடைக்கப் பெற்றன.கோவிலில் கண்டெடுக் கப்பட்ட பஞ்சலோக சாமி சிலைகள் மற்றும் செப்பேடுகளை புதுவை மாநில சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தருமபுர ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சாமிகளுடன் சென்று பார்வையிட்டு வழிபாடு செய்தார்.
பின்னர் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கோவிலில் கண்டெடுக் கப்பட்ட ஐம்பொன் சிலைகளும் செப்பேடுகளும் மத்திய அரசின் அனுமதி பெற்று கோவில் வளாகத்திலேயே வைத்து வழிபடவும் இவற்றை தருமபுர ஆதீனமே பராமரிப்பதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப் படும் எனவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது மயிலாடுதுறை மாவட்ட பா.ஜனதா தலைவர் அகோரம் , புதுவை மாநில பா.ஜனதா துணை தலைவர் அருள்முருகன், அப்பு மணிகண்டன், சிவக்குமார் ,அறிவழகன் மற்றும் ஏராளமான பா.ஜன தாவினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆய்வு
- மின்தடையின்றி இயங்க ஜெனரேட்டர்களும் பொருத்தப்பட்டு நவீனமயமாக கட்டிடம் கட்டப்படும்.
புதுச்சேரி:
புதுவை குமரகுரு பள்ளத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில் கட்டப்பட்ட குடியிருப்பு பழுதடைந்ததால் இடிக்கப்பட்டது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிதி பெற்று பொதுப்பணித்துறை மூலம் 216 குடியிருப்புகள் அடங்கிய தரை மற்றும் 12 தளம் கொண்ட 2 கட்டடங்கள் ப்ரீகாஸ்ட் முறையில் ரூ.45 ½ கோடியில் கட்ட கடந்த ஜனவரியில் பூமிபூஜை போடப்பட்டது.
இதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை பொதுப் பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறியதாவது:-
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மூலம் ஒப்புதல் சான்று பெறப்பட்டு முதல்கட்டடம் அமைக்க 130 பைல் அமைக்கப்பட உள்ளது. 38 மீட்டர் ஆழம், 2 அடி விட்டம் கொண்ட 2 பைல் பரீட்சார்த்த முறையில் போடப்பட்டு அதன் மீது லோடு ஏற்றி சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் பைல் போடும் பணி தொடங்கும்.
தரை மற்றும் 12 தளம் கொண்ட 2 கட்டிடம் கட்டப்படும். முதல் கட்டிடத்தில் ஒரு தளத்தில் 12 வீடுகள் என 144 வீடுகளும், கட்டடம் 2-ல் ஒரு தளத்தில் 6 வீடுகள் என 72 வீடுகளும் கட்டப்படும்.
ஒவ்வொரு வீடும் ஹால், படுக்கை, சமையல் அறைகள், கழிவறையோடு கூடிய குளியலறை, பால்கனி வசதியுடன் 407 சதுர அடியில் அமைக்கப்படும். தரமான பைல் பவுண்டேஷன் அமைக்கப்பட்டு பிரீகாஸ்ட் தொழில்நுட்பத்தில் கட்டடம் கட்டப்படுவதால் குறுகிய காலத்தில் பணிகளை முடிக்கலாம். 15 மாதத்தில் இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்து.
ஒவ்வொரு கட்டடத்திலும் 2 லிப்ட், தீயணைப்பு, மின்னல் தடுப்பு வசதிகள் செய்யப்படும். 2 கட்டிடத்தை சுற்றிலும் மதில் சுவர், சாலைகள், தெருவிளக்கு, பாதாள சாக்கடை அமைக்கப்பட உள்ளது. மின்தடையின்றி இயங்க ஜெனரேட்டர்களும் பொருத்தப்பட்டு நவீனமயமாக கட்டிடம் கட்டப்படும். கட்டம் 2 அமைக்க பழுதான 96 வீடுகள் உள்ள 3 கட்டடத்தை இடிக்க கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. கவர்னர் ஒப்புதல் கிடைத்தவுடன் மக்களை தற்காலிகமாக வெளியேற்றிவிட்டு, 3 கட்டி டங்களும் இடிக்கப்பட்டு, புதிய 2-ம் கட்டட கட்டுமான பணி தொடங்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது,
- மாணவர்களின் முன்னேற்றத்தில் நூலகத்தின் பங்கு என்னும் தலைப்பில் பேசினார்.
புதுச்சேரி:
மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை நூலகத் துறை சார்பில் உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டது.
உலக புத்தக தினத்தை யொட்டி மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு மருத்துவ நூல்கள் எனும் தலைப்பில் வினாடி வினா போட்டி மணக்குள விநாயகர் அறக்கட்டளை தலைவர் தனசேகரன் , துணைத் தலைவர் சுகுமாரன் , செயலாளர் நாராயணசாமி , மற்றும் பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் தலைமையில் நடந்தது. நூலகர் இளங்கோவன் வரவேற்று பேசினார்.
மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இயக்குனர் ராஜகோவிந்தன் , முதல்வர் டாக்டர் காக்னே மற்றும் டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர் ய பேசினார்கள்.
புதுவை பல்கலைக் கழக நூலகர் விஜயகுமார் மாணவர்களின் முன்னேற்றத்தில் நூலகத்தின் பங்கு என்னும் தலைப்பில் பேசினார்.
மேலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் சான்றி தழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பேராசி ரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
லட்சுமி காந்தன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை நூலகத்துறை சார்பில் துணை நூலகர் ஆனந்தன் மற்றும் நூலக ஊழியர்கள் செய்தி ருந்தனர்.
- ஜெயச்சந்திரன் வாங்கிய கடன் தொகையை திருப்பி கொடுக்குமாறு கூறியுள்ளார்.
- ரூ.4 லட்சத்திற்கு மேல் ஜெயச்சந்திரன் அவரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே குடும்பத்திற்கு தெரியாமல் கடனை வாங்கி சூதாட்டத்தில் பணத்தை பறி கொடுத்த அரசு ஊழியர் ஏரிக்கரையில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வில்லியனூர் அடுத்த கீழூர் சிவராந்தகம் பேட் அங்கன்வாடி வீதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் )(வயது 46). இவர் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசு ஊழியராக பணியாற்றி வரும் இவருக்கு கலைவாணி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.
ஜெயச்சந்திரன் நெட்டப் பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரிடம் வட்டிக்கு அடிக்கடி கடன் வாங்கி உள்ளார். சுமார் ரூ.4 லட்சத்திற்கு மேல் ஜெயச்சந்திரன் அவரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த கடன் அனைத்தும் மனைவி மற்றும் மகன்களுக்கு தெரியாமல் வாங்கியுள்ளார். கடனை திருப்பி கேட்ட இன்ஸ்பெக்டருக்கும் , ஜெயச்சந்திரனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரனின் மனைவி கலைவாணி இடம் சென்று ஜெயச்சந்திரன் வாங்கிய கடன் தொகையை திருப்பி கொடுக்குமாறு கூறியுள்ளார்.
இதனால் ஜெயச்சந்தி ரனுக்கும் அவரது மனைவி கலைவாணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 26-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறிய ஜெயச்சந்திரன் இரவு வீட்டுக்கு செல்லவில்லை. கலைவாணி மற்றும் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் ஜெயச்சந்திரன் இருக்கும் இடம் தெரியவில்லை.
இந்நிலையில் நேற்று மதியம் கீழூர் அருகே உள்ள சிவரந்தகம் ஏரி கரையில் உள்ள மரத்தில் ஜெயச்சந்திரன் தூக்கில் தொங்கினார். அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து மங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் வேலயன், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசத்தியா மற்றும் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் நெட்டப்பாக்கத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் பல லட்சம் பணம் வாங்கியதும், 3-ம் நம்பர் லாட்டரி போன்ற சூதாட்டத்தில் பணத்தை இழந்ததும் தெரிய வந்தது.
இதனால் வாங்கிய பணத்தை கொடுக்க முடியாமல் ஜெயச்சந்திரன் கடந்த 3 மாதமாக குடும்பத்தில் உள்ளவர்க ளிடம் சரியாக பேசாமல் இருந்துள்ளார். தான் வாங்கிய கடன் மனைவி மற்றும் மகன்களுக்கு தெரிய வரவே ஜெயச்சந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கோபியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
- சிறிது நேரத்தில் டிரைவர் இருக்கையிலேயே திடீரென மயங்கி விழுந்தார்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே லாரி ஓட்டிய டிரைவர் ரத்த வாந்தி எடுத்து துடிதுடித்து இறந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பெரியகுளம் கிராமம் பிள்ளையார் கோயில் வீதியைச் சேர்ந்தவர் கோபி இவர் தனியார் ட்ரான்ஸ்போர்டில் லாரி டிரைவராக உள்ளார்.
கடந்த 24-ந் தேதி லோடு ஏற்றிக்கொண்டு பெங்களூர் சென்ற அவர் அங்கு லோடை இறக்கிவிட்டு பின்னர் அங்கிருந்து லாரியில் லோடு ஏற்றிக்கொண்டு புதுவை வில்லியனூர் அடுத்த ஒதியம்பட்டு தனியார் கம்பெனிக்கு வந்தார். அங்கு சிறிது நேரத்தில் டிரைவர் இருக்கையிலேயே திடீரென மயங்கி விழுந்தார்.
அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த தனியார் கம்பெனி ஊழியர்கள் அவரை மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கோபியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வில்லியனூர் போலீசார் கோபியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து கோபியின் மனைவி சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வேலு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் லோடு ஏற்றிச்செல்லும் கோபி மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு செல்வார் எனவும் தொடர்ச்சியாக குடும்ப வருமானத்திற்காக இடைவிடாமல் லாரி ஓட்டியதால் இவரது உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாக விசாரணையில் தெரியவந்தது. இறந்த கோபிக்கு 2 மகள்கள் உள்ளர் என குறிப்பிடத்தக்கது.
- கவர்னர் தமிழிசை பாராட்டு
- உடனடியாக மீட்க உதவ வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சருக்கு அவசர கடிதம் எழுதியிருந்தேன்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடான் நாட்டில் சிக்கித் தவிக்கும் புதுவை-காரைக்கால் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை பத்திரமாக மீட்க உதவுமாறு அவர்களுடைய உறவினர்கள் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, அவர்களை உடனடியாக மீட்க உதவ வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சருக்கு அவசர கடிதம் எழுதியிருந்தேன்.
அதன் பயனாக, சூடான் நாட்டில் சிக்கியிருக்கும் புதுவை-காரைக்கால் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை மீட்பதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்திருக்கிறது.
ஆபத்தான நிலையில் சிக்கி இருந்த தொழிலாளர்கள் பத்திரமான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அவர்கள் மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்திருப்பது மன நிகழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
மனிதாபிமானமிக்க இந்த செயலுக்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், மத்திய அரசு அதிகாரிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். பத்திரமாக மீட்கப்பட்ட தொழிலா ளர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






