என் மலர்
புதுச்சேரி

பா.ஜனதா புதுவை அரியாங்குப்பம் தொகுதி தலைவர் செல்வகுமார் மக்களுடன் மின்துறை பொறியாளரை சந்தித்து மனு கொடுத்த போது எடுத்த படம்.
சீரான மின்சாரம் வழங்க வேண்டும்
- பா.ஜனதா அரியாங்குப்பம் தொகுதி தலைவர் செல்வகுமார் வலியுறுத்தல்
- புதிதாக உருவாகிய நகர்களில் வீடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு வேகமாக உள்ளது.
புதுச்சேரி:
பா.ஜனதா புதுவை அரியாங்குப்பம் தொகுதி தலைவர் செல்வகுமார் மக்களுடன் மின்துறை பொறியாளரை சந்தித்து கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: -
புதுவை அரியாங்குப்பம் தொகுதியில் நகர்களின் எண்ணிக்கை அதிகரித்து புதிதாக உருவாகிய நகர்களில் வீடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு வேகமாக உள்ளது. இதன் காரணமாக மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது.
எனவே அதற்கு ஏற்றாற்போல் உள் கட்டமைப்பு வசதியையும் வேகமாக அதிகரிக்கச் செய்ய வேண்டும். குறிப்பாக அரியாங்குப்பம் தொகுதியில் தற்போது மின்துறை சார்பில் 74 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மின்சார பயன்பாடு மக்கள் தொகை எண்ணிக்கை மற்றும் ஏசி, குளிர்சாதனப்பெட்டி, வாஷிங் மெஷின், அயன் பாக்ஸ், மின்மோட்டார் போன்ற மின்சாதன பொருட்களின் எண்ணிக்கை வீடுகள்தோறும் அதிகரித்து வருவதற்கு ஏற்ப மின்சார வினியோகம் திட்டமிட்டு அதிகரிக்கப்படாமல் இருந்து வருகிறது.
இதனால் அரியாங்குப்பம் தொகுதி முழுக்க குறைந்த மின் அழுத்தம் இருந்து வருகின்றது. இதனால் வீடுகளில் மக்கள் உபயோகித்து வரும் பல்வேறு மின்சாதன பொருட்கள் பழுதாகி வீணாகிவிடுகின்றன. இதன்காரணமாக மக்கள் பொருளாதார இழப்பிற்கு ஆளாகின்றனர். இந்த கோடை காலத்தில் ஏ.சி பழுதாவதால் நோயாளிகளும், குழந்தைகளும் தூக்கத்தை இழந்து பரிதவிக்கின்றனர்.
குறிப்பாக அரியாங்குப்பம் ட்ரீம் சிட்டியில் இந்த பாதிப்பு அதிகம் உள்ளது. எனவே மக்கள் தொகை பெருக்கம் மற்றும் மின் உபயோகம் அதிகரிப்பிற்கு ஏற்ற வகையில் அரியாங்குப்பம் தொகுதி முழுவதும் மின் உபயோகம் செய்யப்பட வேண்டும். அதற்காக எந்தெந்த பகுதிகளில் புதியதாக மின்மாற்றிகள் அமைக்கப்பட வேண்டுமோ அங்கெல்லாம் அமைத்து, சீரான மின்சாரத்தை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்






