என் மலர்
புதுச்சேரி
- வையாபுரி மணிகண்டன் திறந்து வைத்தார்
- ஆறுமுகம், வார்டு செயலாளர் வினோத்குமார், விநாயகமூர்த்தி, பச்சையப்பன், முரளிதரன், கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை காந்தி வீதி பொன்னியம்மன் கோவில் எதிரே அ.தி.மு.க. சார்பில் நீர்,மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா இன்று நடந்தது. புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் நீர்,மோர் பந்தலை திறந்து வைத்தார். தொடர்ந்து பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையிலும், உடல் சூட்டை தணிக்கும் வகையிலும் குளிர்ந்த மண்பானை நீர், மோர், தர்பூசணி பழங்கள், வெள்ளரி பழங்கள், கிர்ணி பழங்கள், இளநீர் ஆகியவற்றை வையாபுரி மணிகண்டன் பொது மக்களுக்கு வழங்கினார்.
விழாவில் நிர்வாகிகள் மாநில இணை செயலாளர் காசிநாதன், மாநில இளைஞரணி செயலாளர் விக்னேஷ் காசிநாதன், தொகுதி செயலாளர் பழனிசாமி, கோபால், வில்லியனூர் மணி, கஜேந்திரன் நகர செயலாளர் பாஸ்கர், பொதுக்குழு உறுப்பினர் செல்வம், மோகன், ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் சங்கர் உடையார், மாநில வர்த்தக அணித் தலைவர் செல்வம், மாநில மீனவர் அணி துணை செயலாளர் விஸ்வநாதன்,
மாநில சிறுபாண்மையினர் துணை தலைவர் அந்துவான், தொகுதி இணை செயலாளர் தனலட்சுமி மற்றும் நிர்வாகிகள் சரவணன், நாதன், ஜெயபால், பாண்டு, ராஜா, குப்பன், மண்ணாங்கட்டி, முனியாண்டி, வாசு, எத்திராஜ், ஆறுமுகம், வார்டு செயலாளர் வினோத்குமார், விநாயகமூர்த்தி, பச்சையப்பன், முரளிதரன், கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- புதுவையில் உயர்த்தப்பட்ட தடைகால நிவாரணம்
- மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி:
புதுவை அரசு மீன்வளத்துறை மூலம் ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரத்து 500 வழங்கப் படும்.
இந்த தொகையை ரூ.6 ஆயிரத்து 500 ஆக உயர்த்தி 18 ஆயிரத்து 298 மீனவ குடும்பங்களுக்கு ரூ.11 கோடியே 89 லட்சத்து 37 ஆயிரம் வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட தடை கால நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி சட்டசபையில் நடந்தது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி மீனவர்களுக்கு தடைகால நிவாரணம் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மீன்வளத்துறை செயலர் நெடுஞ்செழின், இயக்குனர் பாலாஜி, இணை இணை இயக்குனர் தெய்வசிகாமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த தொகையை புதுவையில் 9 ஆயிரத்து 355, காரைக்காலில் 3 ஆயிரத்து 380, ஏனாமில் 5 ஆயிரத்து 48 குடும்பங்கள் என மொத்தம் 17 ஆயிரத்து 763 குடும்பங்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
மாகி பகுதியை சேர்ந்த 515 மீனவ குடும்பங்களுக்கு வருகிற ஜூன் முதல் வாரம் இந்த தொகை வங்கியில் செலுத்தப்பட உள்ளது.
- இயக்குனர் இளங்கோவன் தலைமையில் நடந்தது
- 1-ம் முதல் 12-ம் வகுப்பு வரை ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
புதுவை, காரைக்கால் பள்ளிகளில் படித்து வரும் ஆதிதிரா விடர் மாணவர்க ளுக்கு கல்வி உதவித்தொகை எளிமை யாக பெறுவது குறித்து கல்வி துறையுடன் இணைந்து ஆதிதிராவிடர் நலத்துறை வீடியோ கான்ப ரன்ஸிங் மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தது.
புதுவை மற்றும் காரைக்காலில் உள்ள அரசு பள்ளி, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்கு டியின மாணவர்களுக்கு 1-ம் முதல் 12-ம் வகுப்பு வரை ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தனியார் பள்ளிகளில் படித்து வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு கல்வி துறையால் நிர்ண யிக்கப்பட்ட கல்வி கட்டணத்தை ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர்களுக்கு செலுத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த கல்வியாண்டில் பள்ளி துவக்க காலத்திலேயே மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறு வதற்கான ஆலோசனை கூட்டம் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா உத்தரவின் பேரில் இயக்குனர் சாய்.இளங்கோவன் தலைமையில் வீடியோ கான்பரன்ஸிங் மூலம் நடந்தது.
இந்த காணொளி கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி மேற்பார்வை யில் புதுவை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களைச் சேர்ந்த முதல்வர்கள், தாளாளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களின் நலன் காக்கும் வகையிலும் கல்வி உதவித்தொகை மற்றும் அரசின் நலத்திட்டங்கள் அவர்களுக்கு எளிமையாக சென்றடையும் வகையில் அந்தந்த பள்ளிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ஆசிரியரை (நோடல் ஆபீஸராக) பொறுப்பு அலுவலராக நியமிக்க வேண்டும்.
பள்ளி துவக்க காலத்தி லேயே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறு வதற்கான விண்ணப்ப த்தினை பூர்த்தி செய்து அந்தந்த பள்ளியின் பொறு ப்பாசிரியர் ஆதி திராவிடர் நலத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
கல்வி உதவித் தொகை பெற மாணவர்கள் ஒரு முறை மட்டுமே ஜாதி சான்றிதழ் பெற்றால் போதுமானது. அரசு ஊழியர்களின் பிள்ளைகள் கல்வி உதவித்தொகை பெற அவர்கள் பணியாற்றும் துறைகளில் 'சைல்ட் எஜுகேஷன் அலவன்ஸ்' பெறவில்லை என்பதற்கான தடையில்லாச் சான்று பெற்று தந்தால் அரசு ஊழிய ர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித் தொகையை பெறலாம்.
தனியார் பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வித் துறை கட்டண நிர்ணய குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்தை முழுமையாக ஆதிதிராவிடர் நலத்துறை செலுத்தும்.
அந்த மாணவர்களுக்கு கூடுதல் கட்டணத்தை தனியார் பள்ளிகள் பெறக் கூடாது. அப்படி கட்டணம் பெறும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் பள்ளி துவக்க காலங்களில் கல்வி கட்டணங்களை கேட்டு வற்புறுத்தக் கூடாது.
ஆதிதிராவிடர் நலத்துறை யால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெரும் மாணவர்கள் விவர பட்டியலை தகவல் பலகையில் அந்தந்த பள்ளிகள் ஒட்ட வேண்டும். ஆகியவை பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
- உண்மை அறியும் குழுவினர் வலியுறுத்தல்
- பழங்குடி இருளர்கள் மீது கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளை போட்டுள்ளார்.
புதுச்சேரி:
விழுப்புரம், புதுவையை சேர்ந்த பழங்குடி இருளர்கள், 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் மீது காட்டே–ரிக்குப்பம் போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போலீசார் மீது புகார் அதோடு பழங்குடியினரை 3 நாட்கள் சட்ட விரோதமாக காவலில் வைத்து சித்ரவதை செய்து, பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக மக்கள் உரிமை கூட்டமைப்பு, பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் ஆகியவை காட்டேரிகுப்பம் போலீசார் மீது புகார் செய்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக உண்மை நிலையை அறிய மூத்த வக்கீல் மோகன், புதுவை மக்கள் உரிமைக் கூட்ட–மைப்பு செயலளார் சுகுமாரன், காரைக்குடி மக்கள் சிவில் உரிமைக் கழக சிவக்குமார், திருமாவளவன், விழுப்புரம் மக்கள் பாதுகாப்புக் கழக தலைவர் ரமேஷ், புதுவை பழங்குடி மக்கள் விடுதலை இயக்க செயலாளர் ஏனாம்பரம் ஆகியோர் அடங்கிய குழு–வினர் விசாரணை செய்தனர்.
விசாரணை அறிக்கையை வெளியிட்டு மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் கூறியதாவது:-
காட்டேரிக்குப்பம் சப்- இன்ஸ்பெக்டர் செங்கல் சூளையில் வேலை செய்த 2 சிறுவர்கள் உட்பட 7 பழங்குடியினரை பிடித்து சட்ட விரோமாக போலீஸ் நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்துள்ளார். பழங்குடி இருளர்கள் மீது கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளை போட்டுள்ளார்.
இவர்கள் மீது இதுவரை எந்த வழக்கும் இல்லை. போலீஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்ட 7 பேரையும் போலீசார் சித்ரவதை செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய தமிழகம், புதுவை காவல்துறையினர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய வேண்டும். மத்திய மாநில அரசுகள் இதில் தலையிட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்டோ–ருக்கு நிவாரண நிதி மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட போலீசாரை சஸ்பெண்டு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது பாதிக்கப்பட்ட பழங்குடியின இருளர் குடும்பத்தினர் உடனிருந்தனர்.
- பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் நிகார் ரஞ்சன் பிஸ்வாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.
- கல்லூரி வளாகம் விழாக்கோலம் போல காட்சி அளிக்கிறது.
புதுச்சேரி:
பிள்ளையார்குப்பம் மகாத்மாகாந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கல்லூரி தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஸ்ரீ பாலாஜி வித்யாபீத் நிகழ்நிலை பல்கலைக்கழகம் வேந்தர் ராஜகோபாலன் தலைமை தாங்கினார்.
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் நிகார் ரஞ்சன் பிஸ்வாஸ் முன்னிலை வகித்தார். பெங்களூரு, ராமையா பண்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பு துணை வேந்தர் பேராசிரியர் ஓம் பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2017, 2018, 2019, 2021 ஆண்டு படித்த சிறந்த மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து 28 மற்றும் 29-ந் தேதி ஆகிய இரு நாட்களில் கல்லூரி ஆண்டு விழா மற்றும் மாணவர்களின் கலை விழா நடைபெறுகிறது. இதில் ஆடல், பாடல், பேஷன் ஷோ மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் நிகார் ரஞ்சன் பிஸ்வாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.
கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் சீதேஸ் தலைமை தாங்குகிறார். இதனால் கல்லூரி வளாகம் விழாக்கோலம் போல காட்சி அளிக்கிறது.
- எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆணை வழங்கினார்
- திருப்பணிக் குழுவிற்கான ஆணையை கோவில் அறங்காவல் கமிட்டி நிர்வாகிகளிடம் வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறை மூலம் குருவப்பநாயக்கன் பாளையம் செல்வமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகளை செய்ய புதிதாக திருப்பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பணிக்குழுவில் ராமசாமி தலைவராகவும், அறங்காவல் குழு பொருளாளர் மாரி ஜெக தீசன் திருப்பணிக்குழு பொருளாளராகவும், . நாராயணசாமி, வெங்க டேசன், சீனுவாசன், ர. லோகநாதன், வீரபத்திரன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய திருப்பணிக்குழு நிர்வாகிகளுக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி வில்லியனூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்தது. இதில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா புதிய கோவில் திருப்பணிக் குழுவிற்கான ஆணையை கோவில் அறங்காவல் கமிட்டி நிர்வாகிகளிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், கோவில் அறங்காவல் குழு தலைவர் நாகப்பன், துணைத் தலைவர் பத்மநாபன், செயலாளர் நாராயணன், பொரு ளாளர் மாரிஜெகதீசன், உறுப்பினர் வீரப்பன் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- சரியான உணவு எடுத்து கொள்ளாமல் அல்சர் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
- கணவர் தூக்கில் தொங்கியதைக் கண்டு, அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் அருகே உள்ள பண்டசோழ நல்லூர் சப்தகிரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 58. இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகின்றார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்த காரணத்தினால், அதிகம் மதுபோதையில் இருந்து வந்துள்ளார். இதனால் சரியான உணவு எடுத்து கொள்ளாமல் அல்சர் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக வயிற்றுவலி அதிகமாகவே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் இருந்துள்ளார். நேற்று வலியின் தாக்கம் அதிகமாகவே, இரவு வீட்டின் பின்புறம் வராண்டாவில் அமைக்கப்பட்டிருந்த மின்விசிறியில், வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர் இவரது மனைவி மகேஸ்வரி வந்து பார்த்தபோது, கணவர் தூக்கில் தொங்கியதைக் கண்டு, அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார்.
பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆறுமுகத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து இவரது மகன் பழனிவேல் அளித்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- அனிபால் கென்னடி எம்.எல்.ஏ கோரிக்கை
- ரூ.40 லட்சம் மதிப்பில் சுனாமி நினைவு சின்னம் கட்ட நிதியை முதல்-அமைச்சர் அவர்கள் ஒதுக்கி உள்ளதாக அறிவித்தார்கள்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதி வம்பாகீரப்பாளையம் மீனவ பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி பிரார்த்தனை செய்ய வரும் டிசம்பர் மாதத்திற்குள் சுனாமி நினைவுச்சின்னம் அமைத்து கொடுக்கும்படி மீன்வளத்துறை இயக்குனரை சந்தித்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ மனு அளித்து கோரிக்கை வைத்தார் .
புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பழைய துறைமுகம் பின்புறம் சுனாமி நினைவு சின்னம் அமைத்து தருமாறு பொதுமக்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ விடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இது குறித்து பலமுறை மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜியிடமும், முதல்-அமைச்சர் ரங்கசாமியிடமும், அமைச்சரிடமும் மனு அளித்திருந்தார்.
மேலும் இதுதொடர்பாக முந்தைய ஆண்டு கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கையின் போது சுனாமி நினைவுச்சின்னம்அமைக்க வலியுறுத்தி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ கோரிக்கை வைத்திருந்தார் . அதன் அடிப்படையில் இந்த ஆண்டு பட்ஜெட் தொடரில் ரூ.40 லட்சம் மதிப்பில் சுனாமி நினைவு சின்னம் கட்ட நிதியை முதல்-அமைச்சர் அவர்கள் ஒதுக்கி உள்ளதாக அறிவித்தார்கள்.
அந்த நிதியினை உப்பளம் பகுதியில் நினைவுச்சின்னம் அமைத்து தரும்படி அப்பணத்தில் மீனவ மக்களும், மீனவ பஞ்சாயத்தினர் விரும்பும் வண்ணம் அமைத்து தரும்படி மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜியை சந்தித்து மீண்டும் மனு அளித்து வரும் டிசம்பர் மாதத்திற்குள் சுனாமி நினைவுச் சின்னம் அமைத்து அப்பகுதி பொதுமக்கள் பிரார்த்தனை செய்வதற்கு ஏற்ற வகையிலும் சுற்றுலா பயணிகளைக் கவரும் வண்ணம் நினைவுச்சின்னம் கலைநயத்துடன் அமைக்க வேண்டும் எனவும் பணிகளை உடனடியாக தொடங்குங்கள் என்று அனிபால் கென்னடி எம்.எல்.ஏ அவர்கள் கோரிக்கை வைத்தார்.
உடன் தொகுதி செயலாளர் சக்திவேல் துணைத் தொகுதி செயலாளர் ராஜி , மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி , கிளைச் செயலாளர் செல்வம் மற்றும் காளப்பன் உடன் இருந்தனர்.
- தொழிலாளர் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
- ஓய்வுபெற்ற தொழிலா ளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை திருபுவனை ஸ்பின்கோ கூட்டுறவு நூற்பாலை பஞ்சு விலையேற்றம் காரணமாக மூடப்பட்டுள்ளது.
அங்கு பணிபுரிந்த 350 தொழிலாளர் குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இதை கண்டித்து ஸ்பின்கோ கூட்டுறவு ஆலை தொழிலாளர் தொழிற்சங்கத்தினர் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தொழிலாளர் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர்கள் ஐ.என்.டி.யூ.சி. சிவசங்கரன், பிஎம்சி மஞ்சினி, நூற்பாலை தொழிலாளர் சங்கம் சிவகடாச்சம், தொழிலாளர் விடுதலை முன்னணி நடராஜன், ஸ்பின்கோ லேபர் யூனியன் முருகன், பாரதீய தொழிற்சங்கம் துரைலிங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். உடனடியாக ஆலையை திறந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலை நிறுத்தி வைக்கப்பட்ட காலத்துக்கு தொழிலா ளர்களுக்கு இழப்பீடு சம்பளம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலா ளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும்.
மத்திய அரசின் அனுமதி பெறாமல் ஆலையை மூடிய மேலாண் இயக்குனர் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடந்தது.
புதுச்சேரி:
புதுவை அரசு பொது ஆஸ்பத்திரி சட்டமன்றம் அருகில் செயல்பட்டு வருகிறது.
இங்கு நகர பகுதி, கிராம பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையை சுற்றியுள்ள தமிழக பகுதியான கடலூர், விழுப்புரம், திண்டிவனம், மரக்காணம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் இருந்தும் அரசு பொது ஆஸ்பத்திரிக்கு நோயாளிகள் சிகிச்சை பெற வருகின்றனர்.
ஒரு நாளைக்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற வருகின்றனர். வெளிப்புற சிகிச்சை பிரிவில் 5 கவுன்டர்களில் உள்ள கணினியில் திடீரென சர்வர் பழுதானது.
இதனால் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் சீட்டு பதிய முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகினர். சுமார் 2 மணி நேரம் காத்திருந்தும் பதிய முடியவில்லை. ஊழியர்கள் கையால் எழுதி தந்ததால் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் வெளிப்புற சிகிச்சை பிரிவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நாள்தோறும் காலை 8 மணிக்கு வெளிப்புற சிகிச்சை பிரிவில் சீட்டு பதிவு தொடங்கும். 10:30 மணிக்கு சீட்டு பதிவு நிறுத்தப்படும்.
சர்வர் பிரச்சனை காரணமாக சுமார் 3 மணி நேரமாக ஆன்லைன் சீட்டு பதிய முடியாமல் காலதாமதம் ஏற்பட்டது.
இதன் காரணமாக 11 மணி வரை கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. சுகாதாரத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு சர்வர் பழுது நீக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
- சாலை அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
- நில உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்து போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் தங்களுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
புதுச்சேரி:
விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினம் வரை 4 வழி தேசிய நெடுஞ்சாலை பணி தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது. சாலை அமைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ஆங்காங்கே நிலம் கையகப்படுத்தப்பட்டது.
அதேபோல் பாகூர் பகுதியில் நிலம் கையகப்ப டுத்தப்பட்டு அவர்க ளுக்கான தொகையை வழங்கியுள்ளது. பிரச்சினை இருக்கும் நிலத்திற்கு நீதிமன்றத்தில் பணத்தை செலுத்தி உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் சோரியாங்குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று சாலை அமைக்கும் பணிக்கு இடையில் இருந்து வந்தது. இதனால் சாலை அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதுசம்பத்மாக பலமுறை கடிதம் அனுப்பி இருந்தனர். இந்நிலையில் பெட்ரோல் பங்க் அப்புறப்படுத்தும் பணி மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி பாகூர் தாசில்தார் பிரதீவ்ராஜ் மேற்பார்வையில் இன்று தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் தலைமையிலான போலீசார் குவிக்கப்பட்டு சாலை பணியாளர்கள் ஈடுபட்டனர்.அப்போது அந்த பங்கு உரிமையாளர் மற்றும் நில உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்து போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் தங்களுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆனால் போலீசார் ஒரு கட்டத்தில் சம்பந்தப்பட்ட 2பேரையும் குண்டுக்கட்டாக கைது செய்து போலீசார் ஜீப்பில் ஏற்றி சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது பொக்லைன் இயந்திரம் மூலம் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பெட்ரோல் பங்கை எடுத்து வருகின்றனர்.தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
- தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ஆங்காங்கே நிலம் கையகப்படுத்தப்பட்டது.
- நில உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்து போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் தங்களுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
புதுச்சேரி:
விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினம் வரை 4 வழி தேசிய நெடுஞ்சாலை பணி தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது. சாலை அமைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ஆங்காங்கே நிலம் கையகப்படுத்தப்பட்டது.
அதேபோல் பாகூர் பகுதியில் நிலம் கையகப்ப டுத்தப்பட்டு அவர்க ளுக்கான தொகையை வழங்கியுள்ளது. பிரச்சினை இருக்கும் நிலத்திற்கு நீதிமன்றத்தில் பணத்தை செலுத்தி உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் சோரி யாங்குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று சாலை அமைக்கும் பணிக்கு இடையில் இருந்து வந்தது. இதனால் சாலை அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதுசம்பத்மாக பலமுறை கடிதம் அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில் பெட்ரோல் பங்க் அப்புறப்படுத்தும் பணி மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி பாகூர் தாசில்தார் பிரதீவ்ராஜ் மேற்பார்வையில் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் தலைமையிலான போலீசார் குவிக்கப்பட்டு சாலை பணியாளர்கள் ஈடுபட்டனர்.அப்போது அந்த பங்கு உரிமையாளர் மற்றும் நில உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்து போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் தங்களுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆனால் போலீசார் ஒரு கட்டத்தில் சம்பந்தப்பட்ட 2பேரையும் குண்டுக்கட்டாக கைது செய்து போலீசார் ஜீப்பில் ஏற்றி சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது பொக்லைன் இயந்திரம் மூலம் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பெட்ரோல் பங்கை எடுத்து வருகின்றனர்.தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.






