என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Spinco unions strike"

    • தொழிலாளர் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    • ஓய்வுபெற்ற தொழிலா ளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை திருபுவனை ஸ்பின்கோ கூட்டுறவு நூற்பாலை பஞ்சு விலையேற்றம் காரணமாக மூடப்பட்டுள்ளது.

    அங்கு பணிபுரிந்த 350 தொழிலாளர் குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இதை கண்டித்து ஸ்பின்கோ கூட்டுறவு ஆலை தொழிலாளர் தொழிற்சங்கத்தினர் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தொழிலாளர் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர்கள் ஐ.என்.டி.யூ.சி. சிவசங்கரன், பிஎம்சி மஞ்சினி, நூற்பாலை தொழிலாளர் சங்கம் சிவகடாச்சம், தொழிலாளர் விடுதலை முன்னணி நடராஜன், ஸ்பின்கோ லேபர் யூனியன் முருகன், பாரதீய தொழிற்சங்கம் துரைலிங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    இதில் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். உடனடியாக ஆலையை திறந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலை நிறுத்தி வைக்கப்பட்ட காலத்துக்கு தொழிலா ளர்களுக்கு இழப்பீடு சம்பளம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலா ளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும்.

    மத்திய அரசின் அனுமதி பெறாமல் ஆலையை மூடிய மேலாண் இயக்குனர் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடந்தது.

    ×