என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • சுமார் 300 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
    • அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    புதுச்சேரி:

    லாஸ்ட்பேட்டையில் உள்ள பழமை வாய்ந்த ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதி கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை யை துறை செயலர் கேசவன் தலைமையில் அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

    லாஸ்பேட்டை முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜெகஜீவன்ராம் சிலை அருகே அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதி உள்ளது. 1971-ம் ஆண்டு பிரதமர் ஜவர்கலால் நேருவால் திறந்து வைக்கப்பட்ட ஆதிதிரா விடர் நலத்துறை மாணவர் விடுதியில் தாகூர் கலைக் கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வரும் சுமார் 300 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

    50 ஆண்டுகளுக்கு மேலான இந்த கட்டிடம் பல இடங்களில் சேதம் அடைந்து இயற்கை பேரிடர் காலங்களில் அதிகம் பாதிப்படைந்து வருகிறது. இந்நிலையில் மாணவர்கள் அந்த விடுதியில் தங்கி படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வரும் நிலையில் அந்த கட்டிடத்தினை புனரமைப்பு செய்ய அரசு ரூபாய் 27 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. பழமையான கட்டிடம் என்பதால் புனரமைப்பு செய்தாலும் அதில் நீண்ட காலத்திற்கு வலுவானதாக இருக்க வாய்ப்பில்லை என சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் அதிகாரிகளிடம் முறை யிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஆதிதிரா விடர் நலத்துறை இயக்குனராக பொறுப்பே ற்றுள்ள சாய்.இளங்கோவன் லாஸ்பேட்டை அரசு ஆதிதிராவிடர் நல விடுதியை புனரமைப்பு செய்வதா? அல்லது புதிய விடுதி கட்டுவதா?என்று அதிகாரிகளுடன் ஆலோ சனை மேற்கொ ண்டார்.

    இந்நிலையில் இன்று ஆதிதிராவிடர் நலத்துறை செயலர் கேசவன் தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் சாய்.இளங்கோவன், ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் அசோகன், மற்றும் செயற்பொறியாளர், புதுவை பொறியியல் கல்லூரி இன்ஜினியரிங் செல் பொறியாளர்கள் உடன் விடுதி கட்டிடத்தில் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்யதனர்.

    அப்போது விடுதியில் காப்பாளர் ஊழியர்களிடம் கட்டிடத்தில் உள்ள குறை பாடுகளை கேட்டறிந்தனர்.

    முழு கட்டிடத்தையும் ஆய்வு செய்ய பொறியாளர்கள் குழு அமை க்கப்பட்டு கட்டிட த்தின் முழு தரத்தையும் ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்வார்கள். அதன்பின் புது கட்டிடம் கட்டுவது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும்.

    • ஜிப்மர் இயக்குனர் அனுமதியுடன் மருத்துவ கண்காணிப்பாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
    • வானூர் ஒன்றிய செயலாளர் கலைமாறன், புதுவை சதாசிவம், ஊசுடு தொகுதி பொறுப்பாளர் இளங்கோ ஆகியோர் உடன் இருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியை கட்டணமயப்படுத்த மத்திய பா.ஜனதா அரசு முடிவெடுத்துள்ளது. 63 வகையான பரிசோதனைகளுக்கு குறைந்தது ரூ.500 ரூபாய் முதல் ரூ.12 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்க ஜிப்மர் இயக்குனர் அனுமதியுடன் மருத்துவ கண்காணிப்பாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

    கட்டண அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுற்றறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் மே 5-ந் தேதி போராட்டம் நடைபெற உள்ளது.

    போராட்ட அழைப்பிதழை கட்சியின் தேசிய தலைவர் தொல்.திருமாவளவனிடம் சென்னை வேளச்சேரி தாய்மண் அலுவலகத்தில் புதுவை முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் வழங்கினார். இந்த சந்திப்பின்போது கட்சியின் புதுவை மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் அரிமா தமிழன், முற்போக்கு மாணவர் கழக மாநில செயலாளர் தமிழ்வாணன், வெளியீட்டு மைய மாநில செயலாளர் பொன்னி வளவன், வானூர் தொகுதி செயலாளர் பால்வண்ணன், வானூர் ஒன்றிய செயலாளர் கலைமாறன், புதுவை சதாசிவம், ஊசுடு தொகுதி பொறுப்பாளர் இளங்கோ ஆகியோர் உடன் இருந்தனர். 

    • ரிச்சர்ட் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • சமூகநலத்துறை செயலர் உதயகுமார், தேசிய நிறுவன அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் மகளிர் மற்றும் மாற்றுத்தி றனாளிகள் மேம்பாட்டு க்கழகம், மாற்றுத்தி றனாளி தேசிய மேம்பாட்டு நிறுவனம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றன.

    முடநீக்கு உபகரண ங்களான 3 சக்கர சைக்கிள், காதுகேட்கும் கருவி, கைத்தடி, சக்கர நாற்காலி, செயற்கை கை, கால்கள், ஊன்றுகோல் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்க ப்படுகிறது.

    பயனாளிகளை கண்டறிய குயவர்பாளையம் மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 நாள் முகாம் நடக்கிறது. முகாமை ரிச்சர்ட் எம்.எல்.ஏ.,

    தொடங்கி வைத்தார். சமூகநலத்துறை செயலர் உதயகுமார், தேசிய நிறுவன அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். துறையின் மேலாண் இயக்குனர் சாந்தி வரவேற்றார்.

    விழாவில் மாற்றுத் திறனாளிகள் மேம்பா ட்டுக்கழக ஊழியர்கள், மாவட்ட மறுவாழ்வு மைய ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அனிபால் கென்னடி எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
    • சங்கர நாராயணன், மற்றும் ராகேஷ்கவுதம், கட்சியினர் ரகுராமன், கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட அம்பேத்கர் சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே ஜே.ஆர். நகர் உள்ளது. அங்கு சுமார் 15 வருட காலமாக மின்விளக்குகள் இல்லாமல் இருந்தது.

    அப்பகுதி பொதுமக்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.வை சந்தித்து மின் விளக்கு அமைத்து தரும்படி கேட்டுக்கொண்டனர். மின்துறை உதவி செயற்பொ றியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் சுரேஷ் ஆகியோரையும் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

    இதையடுத்து கென்னடி எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்று தற்போது ஜே.ஆர். நகர் முழுவதும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டது. அதனை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் சக்திவேல், துணைத் தொகுதி செயலாளர் ராஜி, ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேல், மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயக மூர்த்தி, கிளைச் செயலாளர்கள் காந்தி, செல்வம், சங்கர நாராயணன், மற்றும் ராகேஷ்கவுதம், கட்சியினர் ரகுராமன், கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஊரகத்துறை வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    • தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் நடைபெறும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார்.

     இந்தியாவில் ஊரக வளர்ச்சித்துறையில் முதன்மை மாநிலமாக திகழும் மிசோரம் சென்று அங்குள்ள ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் லால் ருவத் கீமா மற்றும் மிசோரம் மாநில ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்தார்.

    புதுவை மாநிலத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மேம்படுத்துவதற்காகவும், மேலும் வரும் ஆண்டில் 100 நாள் வேலை நாட்களை முழமையாக வழங்கு வதற்காக மிசோரம் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் ஊரக வளர்ச்சித்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    திட்டங்களின் செயல்பாடு மிசோரம் மாநிலத்தில் செயல்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் நடைபெறும் இடத்திற்கே நேரில் சென்று எவ்வாறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்பதை துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    மேலும், அம்மாநிலத்தில் செயல்படுத்தப்படும் மற்ற ஊரக வளர்ச்சி துறை திட்டங்களையும் கேட்டறிந்ததோடு அவற்றை நமது புதுவை மாநிலத்தில் செயல்படுத்தி, ஊரக வளர்ச்சித் துறையில் முதன்மை மாநிலமாக மாற்றுவதற்காகவும் மேலும் பல ஊரக வளர்ச்சி திட்டங்களை புதுவையில் செயல்படுத்துவதற்காக அமைச்சரின் அனுமதியோடு அதிகாரிகளை புதுவைக்கு அழைத்துள்ளார்.

    • திருக்காஞ்சி கெங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் சங்கராபரணி ஆதி புஷ்கரம் நடந்து வருகிறது.
    • ‘தொண்டே’ என்ற தலைப்பில் தேசியவிருதாளர் ஆதவன், பேராசிரியர்கள் ரேவதி, அசோகன் பேசினர்.

    புதுச்சேரி:

    திருக்காஞ்சி சங்கராபரணி ஆதி புஷ்கரம் நிகழ்ச்சியில் புலவர் சீனு வேணுகோபால் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. புதுச்சேரி, திருக்காஞ்சி கெங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் சங்கராபரணி ஆதி புஷ்கரம் நடந்து வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக, 'இறைவனின் இன்னருளைப் பெற பெரிதும் துணை நிற்பது "பக்தியே" "தொண்டே" என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. புலவர் சீனு வேணுகோபால் நடுவராக பட்டிமன்றத்தில், 'பக்தியே" என்ற தலைப்பில் பேராசிரியர்கள் முருகையன், விசாலாட்சி, கவிஞர் செல்வமணி ஆகியோரும் 'தொண்டே' என்ற தலைப்பில் தேசியவிருதாளர் ஆதவன், பேராசிரியர்கள் ரேவதி, அசோகன் பேசினர்.

    • கஸ்தூரிபாய் காந்தி செவிலியர் கல்லூரியில் நடைபெற்றது.
    • செவிலியர் மாணவர்கள் இயற்கை அன்னை புவியை காப்போம் என்ற உறுதி மொழியை அனைவரும் ஏற்றனர்.

    புதுச்சேரி:

    ஸ்ரீ பாலாஜி வித்யா பீத் பல்கலைக்கழக கழகத்தின் கீழ் இயங்கும் கஸ்தூரிபாய் காந்தி செவிலியர் கல்லூரியில் உலக புவி தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நாட்டு நல பணித்திட்ட அலுவலர் ரமேஷ் தலைமை தாங்கினார். பேராசிரியர் ராஜேஸ்வரி வரவேற்றார்.

    கல்லூரி துணை முதல்வர் ராணி முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் புனித ஜோஸ்பின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உலக புவி தினத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கவுரை ஆற்றினார்.

    தொடர்ந்து செவிலியர் மாணவர்கள் இயற்கை அன்னை புவியை காப்போம் என்ற உறுதி மொழியை அனைவரும் ஏற்றனர். பின்னர் கல்லூரி வளாகத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    • அப்பகுதி மக்களுக்கு இடையூறாக இருந்து வந்தது.
    • ரூ.7.50 லட்சம் செலவில் வாகனம் நிறுத்துமிடம் அமைக்க செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்தார்.

    புதுச்சேரி:

    பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து கீழ் செயல்படும் பாகூர் கமலா நேரு திருமண மண்டபத்திற்கு நீண்ட நாட்களாக வாகனம் நிறுத்துமிடம் இல்லாமல் அப்பகுதி மக்களுக்கு இடையூறாக இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து பாகூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ 7.50 லட்சம் செலவில் வாகனம் நிறுத்துமிடம் அமைக்க செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்தார்.

    இதற்கான பணி முடிந்த நிலையில் திறப்பு விழா  நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்எல்ஏ கலந்து கொண்டு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் முத்துசிவம், மேலாளர் ரவி, இளநிலை பொறியாளர் புனிதவதி, மற்றும் அப்பகுதி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • மாணவர் தொழில்/ நிறுவனத்தில் வேலைப் பயிற்சிக்காக மாணவர் பயிற்சியாளர் எனப் பணியமர்த்தப்படுவார்.
    • மாணவர் பயிற்சியாளர்களும் காப்பீடு செய்யப்படுவார்கள் மற்றும் மாணவர் பயிற்சியாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை தொழிலாளர் துறை அரசு - புதுவை திறன் மேம்பாட்டு கழகம் மூலம் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (என்.எஸ்.டி.சி) ஜெயின் பல்கலைக்கழகம் மற்றும் யுவசக்தி ஸ்கில் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய வற்றுக்கு இடையேயான வேலை ஒருங்கிணைந்த கற்றல்-திறன் கல்வித் திட்டங்களை (சம்பாதிப்ப தற்கும் கற்றுக் கொள்வதற்கும்) செயல்படுத்துவதற்கான பரஸ்பர ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதுவை இளைஞர்களின் வேலை வாய்ப்பை மேம்படுத்து வதற்காக (கிராமப்புற மற்றும் பழங்குடியினர்), மேற்கண்ட திட்டத்தில் தங்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பதாரர்களை பரிசீலிக்க இதன் மூலம் அனுமதி வழங்கப்படுகிறது.

    இதன் மூலம் வேலை ஒருங்கிணைந்த கற்றல் திட்டத்தின் கீழ், தொழில்துறை மற்றும் வணிக நிறுவனங்கள் மாணவர்-பயிற்சியாளர் களுக்கு நிதியுதவி செய்யும், மேலும் பாடநெறியின் போது மாணவர் தொழில்/ நிறுவனத்தில் வேலைப் பயிற்சிக்காக மாணவர் பயிற்சியாளர் எனப் பணியமர்த்தப்படுவார்.

    பாடத்திட்டத்தின் படி, மாணவர் பயிற்சியாளர் வேலைப் பயிற்சிக்குச் சென்று, கற்றல் மேலாண்மை அமைப்பு மூலம் ஆன்லைனில் கோட்பாடு தொடர்பான வழிமுறைகளைப் பெறுவார்.

    பங்கேற்கும் அனைத்து மாணவர் பயிற்சியாளர்களும் காப்பீடு செய்யப்படுவார்கள் மற்றும் மாணவர் பயிற்சியா ளர்களின் பாதுகாப்பு தொடர்பாக தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்.

    யுவசக்தி ஸ்கில் இந்தியா பிரைவேட் லிமிடெட், வேலை ஒருங்கிணைந்த திறன் கற்றல் திட்டங்களை நடத்துவதற்கு தொழிற்சாலைகளுடன் தனி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்.

    இதன் மூலம் புதுவை மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பட்டப்படிப்பு இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் வேலை வாய்ப்பு பெறுவதற்கும் திறன் மேம்பாடுகளை வளர்த்துக் கொள்வதற்கும் பெரும் உதவியாக இருக்கும்.

    இந்த பயிற்சியை நடத்துவதற்கான அனுமதியை பெற்ற ஸ்கின் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினர் சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திடம் அதற்கான அரசு அனுமதி ஆணையை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

    • தமிழக காவல்துறையினர் மனித உரிமை மீறல் செய்துள்ளனர்.
    • மாணவர் சங்க தலைவர் அரவிந்த சாமியிடம் காவல்துறையும், தமிழக அரசும் தனது வருத்தத்தை பதிவு செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் பிரவீன்பிர்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழகத்தின் கவர்னர் பங்கேற்றார். இந்த விழாவில் பட்டம் பெற வந்த மாணவர்களின் உரிமைக்காக போராடி வந்த இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் அரவிந்த்சாமியை சோதனை என்ற பெயரில் தமிழக காவல்துறையினர் மனித உரிமை மீறல் செய்துள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

    தமிழக காவல்துறை தமிழக அரசின் கட்டுப் பாட்டில் உள்ளதா? கவர்னரின் கட்டுப்பாட்டில் உள்ளதா? மாணவர்களின் நலனுக்காக போராடு பவர்களை தீவிரவாதிகள் போல உள்ளாடைகளையும் களைந்து விசாரணை நடத்துவது என்பதுதான் திராவிட மாடல் அரசின் சாதனையா? மாணவர் சங்க தலைவர் அரவிந்த சாமியிடம் காவல்துறையும், தமிழக அரசும் தனது வருத்தத்தை பதிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆலோசகர் மோகன கிருஷ்னண் தலைமையில் இணைந்து செயல்பட முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றினர்.
    • பதவி உயர்வு உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை சுற்றுலா வளர்ச்சி கழக கேட்டரிங் மற்றும் நீர்விளையாட்டு ஊழியர்கள் சங்கம், புதுவை மாநில சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மையத்துடன் இணையும் விழா முதலியார்பேட்டை பாரதி மில் அருகே உள்ள சி.ஐ.டி.யூ. அலுவலகத்தில் நடந்தது.

    கேட்டரிங் ஊழியர்கள் சங்க தலைவர் ஆதிகணேசன், நீர்விளையாட்டு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் முகுந்தன், பழனிவேல் தீர்த்தபதி ஆகியோர் தலைமையில் சி.ஐ.டி.யூ. பொறுப்பாளர்கள் சீனிவாசன், கௌஞ்சியப்பன், பிரபுராஜ் முன்னிலையில் ஆலோசகர் மோகன கிருஷ்னண் தலைமையில் இணைந்து செயல்பட முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றினர்.

    தொடர்ந்து மே தின கொண்டாட்டம், பதவி உயர்வு உட்பட கோரிக்கை களை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் பழனி, சேரன், தீர்த்தபதி, பார்த்தசாரதி, பாபு, முத்தால், வெங்கடேஷன், பழனிவேல், கருணாமூர்த்தி, எழிலரசன். பூபதி, நாகராஜ், ஜெயக்குமார், பாலசுப்ரமணி, பார்த்தசாரதி, சிவஞானம், கல்யாண சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தங்கள் பகுதியில் உள்ள குறைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் தெரிவிக்கலாம்.
    • திரளான பேர் கலந்து கொண்டு கிராமசபை கூட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: -

    அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு காக்காயன்தோப்பு, வீராம்பட்டினம், மணவெளி, நல்லவாடு, அபிஷே கப்பாக்கம், டி. என்.பாளையம் உள்ளிட்ட14 கிராம பஞ்சாயத்து பகுதிகளில் மே1-ந் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டம் 10 மணிக்கு தொடங்குகிறது.

    இதில் பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். தங்கள் பகுதியில் உள்ள குறைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து இக் கூட்டத்தில் தெரிவிக்கலாம்.

    எனவே பொதுமக்கள், மகளிர் குழு, கிராம வளர்ச்சி சங்க உறுப்பினர்கள், இளைஞர்கள் என திரளான பேர் கலந்து கொண்டு கிராமசபை கூட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    ×