என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
    • மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் சீனியர் துணைத்தலைவரும், ஒருங்கிணைப்பாளருமான தேவதாசுக்கு இன்று 65-வது பிறந்தநாளாகும். காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் தனது பிறந்த நாளை தட்டாஞ்சாவடி நவசக்தி நகரில் உள்ள அவரின் இல்லத்தில்  கொண்டாடினார். புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் அளித்த 65 கிலோ கேக்கை வெட்டினார்.

    அவர்கள் தேவதாசுக்கு சால்வை, பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து தேவதாஸ் ஏழைகளுக்கு நலத்திட்டங்களை உதவிகளை வழங்கினார். விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி, மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்திலிங்கம் எம்.பி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர்கள் பெத்தபெருமாள், கமல கண்ணன், முன்னாள் துணை சபாநாயகர் பாலன், காங்கிரஸ் பொதுச்செயலா ளர்கள் திருமுருகன், வேல்முருகன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு, வக்கீல் அணி தலைவர் மருதுபாண்டியன், நிர்வாகிகள் ராஜா, குமார், திருமலை, கோபு, தியாகராஜன், ராஜேந்திரன், கிருஷ்ணராஜூ, யுனிவர்சல் சிவா, செல்வநாதன், மகளிரணி துணைத்தலைவி ஜெயலட்சுமி, காரைக்கால் மாவட்ட தலைவர் சந்திரமோகன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரஞ்சித் உள்பட பலர் பங்கேற்றனர்.

    முன்னதாக 8.30 மணியளவில் மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுத்தனர். 9.30 மணிக்கு மிஷன் வீதி மாதாகோவிலில் சிறப்பு வழிபாடு, 10 மணிக்கு முல்லா வீதி மசூதியில் சிறப்பு தொழுகை நடந்தது. மதியம் 12.30 மணியளவில் ராஜீவ்காந்தி குழந்தைகள் நல ஆஸ்பத்திரி அருகே அன்னதானம் வழங்கப்பட்டது. 4.30 மணிக்கு ஒஸ்பிஸ் கான்வென்டில் முதியோர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

    • தற்போது பஞ்சு விலை குறைந்தும் (ஸ்பின்கோ) நிர்வாகம் ஆலையை இயக்க முன்வரவில்லை.
    • ஊழியர்கள் அனைவரும் ஒன்று திரண்டு அதிரடியாக ஆலை நுழைவு போராட்டம் நடத்தினார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் திருபுவனையில் இயங்கி வந்த கூட்டுறவு நூற்பாலை (ஸ்பின்கோ) மூலப் பொருள் (பஞ்சு) விலை உயர்வை காரணமாக கடந்த 2022 ஜூன் 8-ந் தேதி முதல் ஆலை இயக்கம் நிறுத்தப்பட்டது. தற்போது பஞ்சு விலை குறைந்தும் (ஸ்பின்கோ) நிர்வாகம் ஆலையை இயக்க முன்வரவில்லை.

    இதை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்தின. இதன் விளைவாக சட்டமன்ற கூட்டத்தொடரின் போது கடந்த மார்ச் 26-ந் தேதி முதல்வர் ஏப் 1-ந் தேதிக்கு பிறகு ஆலையை இயக்க கமிட்டி அமைப்பதாக உறுதியளித்தார். ஆனால் இந்நாள் வரை கமிட்டி அமைப்பது தொடர்பாக எவ்வித முகாந்தரமும் இல்லாததால் தொடர் போராட்டம் நடத்துவதென்று அனைத்து சங்கங்களும் முடிவெடுத்து, இன்று அரசுக்கு எதிராக ஊழியர்கள் அனைவரும் ஒன்று திரண்டு அதிரடியாக ஆலை நுழைவு போராட்டம் நடத்தினார்கள்.

    இதற்கு புதுவையில் உள்ள அனைத்து அமைப்புகள் ஆதரவு தெரிவித்து ஆலையின் வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து புதுவை -விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட போது 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கைது செய்து திருபுவனை அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் வைத்திருந்தனர்.

    • ஆஜராகாமல் 2 ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்து வந்தார்.
    • போலீசார் சென்னையில் பதுங்கி இருந்த ஜெபசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    புதுச்சேரி:

    கோட்டகுப்பம் பகுதியில் நடந்த கொள்ளை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 2 ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்து வந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

    கோட்டகுப்பம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு கூட்டுக் கொள்ளை சம்பவம் நடந்தது. வழக்கில் மூன்று பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிலையில் குற்றவாளிகளில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

    இந்நிலையில் கூட்டு கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக காஞ்சிபுரம் மாவட்டம், பெருங்குளத்தூர் நேரு நகரை சேர்ந்த அருள்ராஜ் மகன் ஜெபசேகர் வயது 40 திண்டிவனத்தில் நடந்து வரும் வழக்கில் ஆஜராகாமல் 2 ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்து வந்தார்.

    இந்நிலையில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த திண்டிவனம் நீதிமன்ற உத்தரவின் பெரில் கோட்டகுப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் சென்னையில் பதுங்கி இருந்த ஜெபசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • அமைச்சர் நமச்சிவாயத்தை மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சாமிநாதன் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்தனர்.
    • நிர்வாகிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்.

    புதுச்சேரி:

    தன்னாட்சி நிறுவனத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்ப ட்டுள்ள பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி தொடர்பாக அமைச்சர் நமச்சிவாயத்தை மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சாமிநாதன் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்தனர். அமைச்சரை சந்தித்த பின்னர் சாமிநாதன் கூறியதாவது :-

    அப்போது, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் நடந்த முதலாம்பருவ தேர்வில் மாணவிகள் பெருமளவில் தோல்வியடைந்துள்ள தகவலை அமைச்சரிடம் தெரிவித்தோம். மறு தேர்வுக்கான கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். கூடுதல் மதிப்பெண் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் தன்னாட்சி அங்கீகாரத்தை தவறவிட்டுள்து குறித்தும் சுட்டிக்காட்டினர்.

    இதுகுறித்து துறை நிர்வாகிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அதிகாரிகளுக்கு பி.சி.எஸ். என்ட்ரி கிரேடு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
    • நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பி.சி.எஸ். புதுவை அதிகாரிகளுக்கு கரன்ட் டியூட்டி சார்ஜ் (சி.டி.சி) அடிப்படையில் பி.சி.எஸ். என்ட்ரி கிரேடு பதவி உயர்வு அளிக் கப்பட்டுள்ளது.

    அதன் படி, திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறையில் கண்காணிப்பாளராக பணிபுரியும் அருள்பிர காசம், தொழிலாளர் துறை வேலைவாய்ப்பு அதிகாரி மேரி ஜோசப் பின் சித்ரா, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கண்காணிப்பாளர் வெங்கடகிருஷ்ணன், வில்லியனூர் தெற்கு (வருவாய்) துணை கலெக்டர் அலுவலகம் தாசில்தார் ஷீலா, சுகாதாரத்துறை கண்காணிப்பாளர் முகம்மது இஸ்மாயில், சமூக நலத்துறை உதவி இயக்குநர்கள் (நலம்) கலாவதி, ரத்னா. உள்ளாட்சித்துறை கண் காணிப்பாளர் சவுந்திர ராஜன், தலைமை செயலக கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய அதிகாரிகளுக்கு பிசிஎஸ் என்ட்ரி கிரேடு பதவி உயர்வு அளிக்க ப்பட்டுள்ளது.

    இதற்கான உத்தரவை அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார்.

    • திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு பெருமாளின் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பாக வழிபட்டு வருகின்றனர்.
    • திருமங்கை ஆழ்வார் திருச்சபை மற்றும் கோவில் அறங்காவலர் குழு ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    பாகூர் கொம்யூன் கிருமாம்பாக்கத்தில் எழுந்தருள் உள்ள ஸ்ரீபத்மாவதி தாயார் சமேதி சீனிவாசன் பெருமாள் சன்னதியில் அமைந்துள்ள மதத்தை மாற்றிய மகான் பாஷைக்காரர் உடையவர் எத்திராஜ் என்று பல பெயர்களால் போற்றப்படும் எம்பெருமான் ஸ்ரீ ராமானுஜர் சுவாமி 1006-ம் ஆண்டு பிறந்த நாளை சித்திரை மாதமான திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு பெருமாளின் அனைத்து சன்னதி களிலும் சிறப்பாக வழிபட்டு வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக கிருமா ம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீரா மானுஜர் சுவாமிக்கு பால், தயிர்,தேன் பன்னீர், சந்தான அபிஷே கத்தூள் போன்ற வாசனை திரவியங்கள் மூலம் திருமஞ்சனம் நடை பெற்றது.

    அதனைத் தொடர்ந்து எம்பெ ருமான் ஸ்ரீ ராமா னுஜர் அவர்க ளுக்கு பூக்களால் அலங்கரி க்கப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ராமானுஜர் சுவாமியை வணங்கினர்.

    அதனைத் தொடர்ந்து அன்னதானமும் வழங்க ப்பட்டது இந்த ஏற்பாட்டினை திருமங்கை ஆழ்வார் திருச்சபை மற்றும் கோவில் அறங்காவலர் குழு ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
    • இணைய வழி மோசடிக்காரர்கள் தங்களை ராணுவ வீரர்கள், மத்திய அரசில் பணிபுரிகின்றேன்.

    புதுச்சேரி:

    இணையதள பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் மோசடிகளும் அதிகரித்துள்ளது. வித்தியாசமான முறையில் மக்களை ஏமாற்றி மோசடி செய்து வருகின்றனர். நான் மத்திய அரசில் பணிபுரிகிறேன். எனக்கு மாறுதல் உத்தரவு வந்துவிட்டது.

    எனவே என் வீட்டில் உள்ள பொருட்களை விற்பனை செய்ய உள்ளேன் என தகவல் வந்தால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என புதுவை சைபர் கிரைம் போலீசார் வேண்டு கோளை வைத்துள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் கூறியதாவது: -

    பழைய புதிய பொருட்களை வாங்க விற்க உதவும் உதவும் செயலிகள் மற்றும் சமூக வலைதளங்களில் இணைய வழி மோசடிக்காரர்கள் தங்களை ராணுவ வீரர்கள், மத்திய அரசில் பணிபுரிகின்றேன். எனக்கு மாறுதல் வந்து விட்டதால் நான் அடுத்த வாரம் டெல்லி செல்ல வேண்டும்.

    மேற்கண்ட பொருட்களை விற்க உள்ளேன் என புகைப்படங்களுடன் கூடிய விளம்பரங்களை வெளியி டுகின்றனர். அவர்களை தொடர்பு கொண்டால் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்ளை ரூ.90 ஆயிரத்துக்கு தருகிறேன் என கூறுகின்றனர். இதற்கு முன்பணமாக தொகையை செலுத்தியவுடன் இணைப்பை துண்டித்துவிடுவார்கள். இதுபோன்ற குறைந்த விலைகளில் பொருட்கள் கிடைக்கிறது என பொதுமக்கள் யாரும் பணத்தை மோசடி ந பர்களிடம் செலுத்தி ஏமாற வேண்டாம். இணைய வழி மோசடிக்காரர்கள், தங்களை ராணுவ வீரர்கள் அல்லது மத்திய படை பிரிவில் பணிபுரிவதாகவே சொல்கின்றனர்.

    மேலும் மோட்டார் சைக்கிள், ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், பெரிய தொலைக்காட்சி போன்றவற்றின் படத்தை போட்டு அதிக விலை உள்ள பொருட்கள் குறைந்த விலைக்கு விற்கிறோம் என்கின்றனர். பேராசை பட்டு மக்கள் பணத்தை இழக்கின்றனர். கடந்த 2 மாதங்களில் மட்டும் இதுபோன்று 14 புகார்கள் பதிவாகியுள்ளது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற மோசடிக்காரர்களிடம் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • இருவரும் நண்பர்களாக இருந்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர்.
    • போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை சோலைநகர் கல்லறை பின்புறம் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 29).

    தனியார் நிறுவன ஊழியர். இதேபோல் முத்தியால்பேட்டை காட்டாமணிக்குப்பத்தை சேர்ந்தவர் சாந்தகுமாரின் மகன் அய்யப்பன் ( 25). இருவரும் நண்பர்களாக இருந்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர்.

    இதில் கிருஷ்ணமூர்த்தி, அய்யப்பனின் மனைவி யிடம் திருமணத்திற்கு முன் அய்யப்பன் ஒரு பெண்ணை காதலித்து பிரிந்த விவரத்தை கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி மகாத்மாகாந்தி வீதியில் உள்ள மதுக்கடையில் மது அருந்திவிட்டு வெளியே வந்துள்ளார்.

    அப்போது அங்கு வந்த அய்யப்பன் என் மனைவியிடம் ஏன் நான் காதலித்த விஷயத்தை கூறினாய் ? என கேட்டு சாலையில் கிடந்த கல்லை வீசீ தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த கிருஷ்ணமூர்த்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 34 ஆயிரம் பெண்களுக்கு வழங்க திட்டம் நடைபெறும்.
    • குப்பை கிடங்குகளில் கொட்டப்படுவதாக சுற்றுச்சூழல் குழு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கின்களை அழிப்பது அரசுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் சுமார் 12.3 மில்லியன் பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கின் பேடுகள் குப்பை கிடங்குகளில் கொட்டப்படுவதாக சுற்றுச்சூழல் குழு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

    ஆர்கானிக் இல்லாத சானிட்டரி பேடுகள் ஒவ்வொன்றும் நான்கு பிளாஸ்டிக் பைகளுக்கு சமம். அது மக்கி அழிவதற்கு பல ஆயிரம் ஆண்டாகும்.

    இதனால் பூமியின் சுற்றுச்சூழலுக்கு பெரும் அபாயமாக மாறி வருகின்றன. நாப்கின் பேடுகளை அழிக்க மத்திய அரசு பல மாநிலங்களில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. புதுவையில் நாப்கின்களை பயன்படுத்தும் பெண்கள் அதனை குப்பையில் கொட்டாமல் தங்கள் வீடுகளிலேயே எரித்து அழிப்பதற்கு புகை ஏற்படுத்தாத சூலா மண் அடுப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மத்திய அரசு நிதியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நலிந்த மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 34 ஆயிரம் பெண்களுக்கு இலவசமாக அடுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி ஒரு அடி அகலம் ஒன்றரை அடி உயரம் கொண்ட களிமண் மூடியுடன் கூடிய இந்த மண் அடுப்பில் நாப்கினை போட்டு கொளுத்தினால் எவ்வித புகையும் ஏற்படாமல் சாம்பலாகிவிடும் சாம்பலை கீழ்ப்புறமாக எடுத்து வெளியே கொட்டி விடலாம்.

    இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இந்த அடுப்புகளை தயாரிக்கும் பணியில் டெரகோட்டா கைவினை கலைஞர் பத்மஸ்ரீ முனுசாமி குழுவினர் ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோவில் அருகே ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து முனுசாமி கூறும்போது:-

    அரசின் மூலம் பெண்களுக்கு நாப்கின் எரிக்கும் களிமண்ணால் தயார் செய்து கொடுக்கும் சூலா அடுப்பு திட்டம் வரவேற்கத்தக்கது. இதை பெண்களுக்கு செய்து கொடுப்பது பெருமிதமாக உள்ளதாக தெரிவித்தார்.

    • மாணவர்கள் கூட்டமைப்பினரிடம் அமைச்சர் சந்திரபிரியங்கா உறுதி
    • மாணவிகள் விடுதியில் உள்ள பிரச்சனை களை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    புதுச்சேரி:

    புதுவை யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் அமைப்பின் நிறுவனர் சுவாமிநாதன், மாநிலத் தலைவர் பிரவீன்பிர்லா, தமிழ்மணி, மனோஜ், முகேஷ் ஆகியோர் அமைச்சர் சந்திரபிரியங்காவை சந்தித்தனர்.

    ஆதிதிராவிட நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் மாணவர் விடுதிகளில் தரமான உணவு, தாகூர் கலை கல்லூரியில் விடுதியை திறக்க வேண்டும் மகளிர் மாணவிகள் விடுதியில் உள்ள பிரச்சனை களை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    இதனையடுத்து லாஸ்பேட்டை தாகூர் கலைக் கல்லூரி மாணவர் விடுதியை உடனடியாக கட்டி தருவது குறித்து அமைச்சர் சந்திரபிரியங்கா துறை செயலர் கேசவனை நேரில் அழைத்து விசாரித்தார்.

    பின்னர், விடுதி கட்டுமான பணிக்கான கோப்புக்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் விரை வில் மாணவர்களுக்கான விடுதி கட்டுமான பணி தொடங்கப்படும் என்று அமைச்சர் சந்திரபிரியங்கா உறுதி அளித்தார்

    மேலும், விடுதி மாணவர்களின் உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகள் தொடர்பான பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டு வர உத்தேசித்துள்ளதாகவும் விரைவில் அவை அனை த்தும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்றும் அமைச்சர் சந்திரபிரியங்கா உறுதி அளித்தார்.

    • கோடை காலம் தொடங்கி விட்டதால் மது வகைகளை விட குளிர்ச்சியான பீர்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.
    • புதுவை அண்ணா சாலையில் ஒரு தனியார் நிறுவனம் மைக்ரோ பீர் தொழிற்சாலை மூலம் பீர் தயாரிக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவை என்றவுடன் எல்லாருக்கும் நினைவுக்கு வருவது மது வகைகள் தான். இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகள் வெளிநாட்டில் இருந்து தருவிக்கப்படும் மது வகைகள் என சுமார் 900 பிராண்ட் மது வகைகள் புதுவையில் விற்பனையாகிறது.

    புதிய பிராண்டு மது வகைகளை ருசிப்பதற்காக நாடு முழுவதும் இருந்தும், பிரெஞ்சு காலனி நாடுகளின் பகுதிகளில் இருந்தும் மக்கள் புதுவைக்கு படையெடுத்து வருகின்றனர்.

    இது ஒரு புறம் இருக்க தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் மது வகைகளை விட குளிர்ச்சியான பீர்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு பீர் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்து வரும் பீர் வகைகளும் புதுவையில் விற்பனை ஆகிறது. 33 பிராண்ட் பீர்கள் புதுவையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 5 பிராண்டுகள் வெளிநாடுகளில் இருந்து நேரடியாக வருபவையாகும்.

    கோடை காலம் தொடங்கி விட்டதாலும், கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து இருப்பதாலும் மது பிரியர்கள் பீருக்கு தற்போது மாறி உள்ளனர்.

    புதுவையின் அண்டை மாநிலமான தமிழகத்தின் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பீரை ருசி பார்க்கின்றனர். இதனால் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.

    பொதுவாக வரும் அனைத்து பீர்களும் பார்லியில் செய்யப்படும். பார்லி தவிர்த்து அரிசி, கோதுமையிலும் செய்யப்படும் பீர்களும் கிடைக்கிறது. வழக்கமாக மாதத்திற்கு சுமார் 2 லட்சம் பாக்ஸ் பீர்கள் புதுவையில் விற்பனையாகும். தற்போது மாதத்திற்கு 2½ லட்சம் பாக்ஸ் பீர் என விற்பனை உயர்ந்துள்ளது.

    புதுவை அண்ணா சாலையில் ஒரு தனியார் நிறுவனம் மைக்ரோ பீர் தொழிற்சாலை மூலம் பீர் தயாரிக்கிறது. இங்கு பீர் தயாரிப்பை நேரடியாக வாடிக்கையாளர்கள் பார்த்தபடியே பீர் அருந்தலாம். இங்கு மாம்பழம், எலுமிச்சை, ஸ்ட்ராபெரி என பல வகைகளில் பீர் கிடைக்கிறது. பீர் விற்பனை தொடர்பாக மொத்த விற்பனையாளரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    வழக்கமாகவே கோடை காலத்தில் மதுவை விட பீர் விற்பனை அதிகரிக்கும். இந்த ஆண்டு கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால் பீர் விற்பனை மேலும் அதிகரித்துள்ளது. வழக்கமாக படிப்படியாக அதிகரிக்கும் பீர் விற்பனை தற்போது கோடை காலம் தொடங்கிய உடனே அதிகரித்து உள்ளது.

    இதற்காக ஜனவரி மாதத்தின் இறுதியில் இருந்து மதுபான தொழிற்சாலைகளில் பீர் ஆர்டரை அதிகரித்துள்ளோம். இந்த ஆண்டு 3 புதிய பீர்கள் அறிமுகமாகி உள்ளது. வழக்கத்தை விட சுமார் 30 முதல் 40 சதவீதம் வரை விற்பனை அதிகரித்துள்ளது. அடுத்தமாதம் பீர் விற்பனை மேலும் அதிகரிக்கும். 3 லட்சம் பாக்ஸ் பீர் விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ. ஆய்வு
    • அதிகாரிகளைக் கொண்டு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் உள்ள கொறடா அலுவலகத்தில் புதுவை அரசு கொறடாவும் இந்திரா நகர் தொகுதி ஏ.கே.டி.ஆறுமுகம் எம்.எல்.ஏ. தலைமையில் இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் பயன்பாட்டிற்கு மின்துறை, கழிவு நீர் கால்வாய், புதிய மின் இணைப்பு, புதிய குடிநீர் குழாய் அமைத்தல், புதிய சாலை அமைத்தல், பொதுப்பணித்துறை, ஆகிய துறைகளின் அதிகாரிகளைக் கொண்டு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட சாணார்பேட்டை ஞானதி யாகுநகர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 2023-2024 ஆண்டிற்கான திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது. உடன் துறை இயக்குனர் மற்றும் திட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×