என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
தனியார் நிறுவன ஊழியர் மீது கல் வீசி தாக்குதல்
- இருவரும் நண்பர்களாக இருந்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர்.
- போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை சோலைநகர் கல்லறை பின்புறம் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 29).
தனியார் நிறுவன ஊழியர். இதேபோல் முத்தியால்பேட்டை காட்டாமணிக்குப்பத்தை சேர்ந்தவர் சாந்தகுமாரின் மகன் அய்யப்பன் ( 25). இருவரும் நண்பர்களாக இருந்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர்.
இதில் கிருஷ்ணமூர்த்தி, அய்யப்பனின் மனைவி யிடம் திருமணத்திற்கு முன் அய்யப்பன் ஒரு பெண்ணை காதலித்து பிரிந்த விவரத்தை கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி மகாத்மாகாந்தி வீதியில் உள்ள மதுக்கடையில் மது அருந்திவிட்டு வெளியே வந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த அய்யப்பன் என் மனைவியிடம் ஏன் நான் காதலித்த விஷயத்தை கூறினாய் ? என கேட்டு சாலையில் கிடந்த கல்லை வீசீ தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த கிருஷ்ணமூர்த்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.






