என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அதிகாரிகள் ஆய்வு
    X

    லாஸ்பேட்டை ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதியில் துறையின் செயலர் கேசவன் தலைமையில் துறையின் இயக்குனர் சாய்.இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அதிகாரிகள் ஆய்வு

    • சுமார் 300 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
    • அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    புதுச்சேரி:

    லாஸ்ட்பேட்டையில் உள்ள பழமை வாய்ந்த ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதி கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை யை துறை செயலர் கேசவன் தலைமையில் அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

    லாஸ்பேட்டை முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜெகஜீவன்ராம் சிலை அருகே அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதி உள்ளது. 1971-ம் ஆண்டு பிரதமர் ஜவர்கலால் நேருவால் திறந்து வைக்கப்பட்ட ஆதிதிரா விடர் நலத்துறை மாணவர் விடுதியில் தாகூர் கலைக் கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வரும் சுமார் 300 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

    50 ஆண்டுகளுக்கு மேலான இந்த கட்டிடம் பல இடங்களில் சேதம் அடைந்து இயற்கை பேரிடர் காலங்களில் அதிகம் பாதிப்படைந்து வருகிறது. இந்நிலையில் மாணவர்கள் அந்த விடுதியில் தங்கி படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வரும் நிலையில் அந்த கட்டிடத்தினை புனரமைப்பு செய்ய அரசு ரூபாய் 27 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. பழமையான கட்டிடம் என்பதால் புனரமைப்பு செய்தாலும் அதில் நீண்ட காலத்திற்கு வலுவானதாக இருக்க வாய்ப்பில்லை என சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் அதிகாரிகளிடம் முறை யிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஆதிதிரா விடர் நலத்துறை இயக்குனராக பொறுப்பே ற்றுள்ள சாய்.இளங்கோவன் லாஸ்பேட்டை அரசு ஆதிதிராவிடர் நல விடுதியை புனரமைப்பு செய்வதா? அல்லது புதிய விடுதி கட்டுவதா?என்று அதிகாரிகளுடன் ஆலோ சனை மேற்கொ ண்டார்.

    இந்நிலையில் இன்று ஆதிதிராவிடர் நலத்துறை செயலர் கேசவன் தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் சாய்.இளங்கோவன், ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் அசோகன், மற்றும் செயற்பொறியாளர், புதுவை பொறியியல் கல்லூரி இன்ஜினியரிங் செல் பொறியாளர்கள் உடன் விடுதி கட்டிடத்தில் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்யதனர்.

    அப்போது விடுதியில் காப்பாளர் ஊழியர்களிடம் கட்டிடத்தில் உள்ள குறை பாடுகளை கேட்டறிந்தனர்.

    முழு கட்டிடத்தையும் ஆய்வு செய்ய பொறியாளர்கள் குழு அமை க்கப்பட்டு கட்டிட த்தின் முழு தரத்தையும் ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்வார்கள். அதன்பின் புது கட்டிடம் கட்டுவது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும்.

    Next Story
    ×