என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
முதியவர் தூக்கு போட்டு தற்கொலை
- சரியான உணவு எடுத்து கொள்ளாமல் அல்சர் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
- கணவர் தூக்கில் தொங்கியதைக் கண்டு, அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் அருகே உள்ள பண்டசோழ நல்லூர் சப்தகிரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 58. இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகின்றார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்த காரணத்தினால், அதிகம் மதுபோதையில் இருந்து வந்துள்ளார். இதனால் சரியான உணவு எடுத்து கொள்ளாமல் அல்சர் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக வயிற்றுவலி அதிகமாகவே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் இருந்துள்ளார். நேற்று வலியின் தாக்கம் அதிகமாகவே, இரவு வீட்டின் பின்புறம் வராண்டாவில் அமைக்கப்பட்டிருந்த மின்விசிறியில், வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர் இவரது மனைவி மகேஸ்வரி வந்து பார்த்தபோது, கணவர் தூக்கில் தொங்கியதைக் கண்டு, அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார்.
பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆறுமுகத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து இவரது மகன் பழனிவேல் அளித்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






