என் மலர்
நீங்கள் தேடியது "Scholarships for students"
- இயக்குனர் இளங்கோவன் தலைமையில் நடந்தது
- 1-ம் முதல் 12-ம் வகுப்பு வரை ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
புதுவை, காரைக்கால் பள்ளிகளில் படித்து வரும் ஆதிதிரா விடர் மாணவர்க ளுக்கு கல்வி உதவித்தொகை எளிமை யாக பெறுவது குறித்து கல்வி துறையுடன் இணைந்து ஆதிதிராவிடர் நலத்துறை வீடியோ கான்ப ரன்ஸிங் மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தது.
புதுவை மற்றும் காரைக்காலில் உள்ள அரசு பள்ளி, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்கு டியின மாணவர்களுக்கு 1-ம் முதல் 12-ம் வகுப்பு வரை ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தனியார் பள்ளிகளில் படித்து வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு கல்வி துறையால் நிர்ண யிக்கப்பட்ட கல்வி கட்டணத்தை ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர்களுக்கு செலுத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த கல்வியாண்டில் பள்ளி துவக்க காலத்திலேயே மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறு வதற்கான ஆலோசனை கூட்டம் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா உத்தரவின் பேரில் இயக்குனர் சாய்.இளங்கோவன் தலைமையில் வீடியோ கான்பரன்ஸிங் மூலம் நடந்தது.
இந்த காணொளி கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி மேற்பார்வை யில் புதுவை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களைச் சேர்ந்த முதல்வர்கள், தாளாளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களின் நலன் காக்கும் வகையிலும் கல்வி உதவித்தொகை மற்றும் அரசின் நலத்திட்டங்கள் அவர்களுக்கு எளிமையாக சென்றடையும் வகையில் அந்தந்த பள்ளிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ஆசிரியரை (நோடல் ஆபீஸராக) பொறுப்பு அலுவலராக நியமிக்க வேண்டும்.
பள்ளி துவக்க காலத்தி லேயே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறு வதற்கான விண்ணப்ப த்தினை பூர்த்தி செய்து அந்தந்த பள்ளியின் பொறு ப்பாசிரியர் ஆதி திராவிடர் நலத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
கல்வி உதவித் தொகை பெற மாணவர்கள் ஒரு முறை மட்டுமே ஜாதி சான்றிதழ் பெற்றால் போதுமானது. அரசு ஊழியர்களின் பிள்ளைகள் கல்வி உதவித்தொகை பெற அவர்கள் பணியாற்றும் துறைகளில் 'சைல்ட் எஜுகேஷன் அலவன்ஸ்' பெறவில்லை என்பதற்கான தடையில்லாச் சான்று பெற்று தந்தால் அரசு ஊழிய ர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித் தொகையை பெறலாம்.
தனியார் பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வித் துறை கட்டண நிர்ணய குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்தை முழுமையாக ஆதிதிராவிடர் நலத்துறை செலுத்தும்.
அந்த மாணவர்களுக்கு கூடுதல் கட்டணத்தை தனியார் பள்ளிகள் பெறக் கூடாது. அப்படி கட்டணம் பெறும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் பள்ளி துவக்க காலங்களில் கல்வி கட்டணங்களை கேட்டு வற்புறுத்தக் கூடாது.
ஆதிதிராவிடர் நலத்துறை யால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெரும் மாணவர்கள் விவர பட்டியலை தகவல் பலகையில் அந்தந்த பள்ளிகள் ஒட்ட வேண்டும். ஆகியவை பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.






