search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அமுதசுரபி ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க வேண்டும்
    X

    கோப்பு படம்.

    அமுதசுரபி ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க வேண்டும்

    • எம்.ஜி.ஆர். மக்கள் நல இயக்கம் வலியுறுத்தல்
    • புதுவை அரசை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    எம்.ஜி.ஆர். மக்கள் நல இயக்கத் தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது ;-

    புதுவை மாநி லத்தில் உள்ள கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் அமுதசுரபியில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு சில வருடங்களாக சம்பளம் தராமல் புதுவை அரசு பாக்கி வைத்துள்ளது. ஏறக்குறைய 30 மாத கால சம்பள பாக்கி உள்ளதாக அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக புதுவை அரசை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    ஆனால் அரசு தொடர்ந்து பாராமுகமாக ஊழியர்களின் போராட்டத்தை அலட்சிய ப்படுத்தி வருகின்றனர். நிலுவையில் உள்ள சம்பள பாக்கி தரக்கோரியும் பணி பாதுகாப்பு வழங்க கோரியும் நடைபெற்ற போராட்டத்தில் ஊழியர்கள் 4பேர் இனியும் இந்த புதுவை அரசை நம்பி பலனில்லை என்று கருதி தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இனியும் காலதாமதம் செய்யாமல் அமுதசுரபி ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவையில் உள்ள சம்பள பாக்கி உடனடியாக கொடுக்குமாறு புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×