என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சூதாட்டத்தில் பணத்தை இழந்த அரசு ஊழியர் தற்கொலை-போலீசார் விசாரணை
    X

    கோப்பு படம்.

    சூதாட்டத்தில் பணத்தை இழந்த அரசு ஊழியர் தற்கொலை-போலீசார் விசாரணை

    • ஜெயச்சந்திரன் வாங்கிய கடன் தொகையை திருப்பி கொடுக்குமாறு கூறியுள்ளார்.
    • ரூ.4 லட்சத்திற்கு மேல் ஜெயச்சந்திரன் அவரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே குடும்பத்திற்கு தெரியாமல் கடனை வாங்கி சூதாட்டத்தில் பணத்தை பறி கொடுத்த அரசு ஊழியர் ஏரிக்கரையில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வில்லியனூர் அடுத்த கீழூர் சிவராந்தகம் பேட் அங்கன்வாடி வீதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் )(வயது 46). இவர் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசு ஊழியராக பணியாற்றி வரும் இவருக்கு கலைவாணி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

    ஜெயச்சந்திரன் நெட்டப் பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரிடம் வட்டிக்கு அடிக்கடி கடன் வாங்கி உள்ளார். சுமார் ரூ.4 லட்சத்திற்கு மேல் ஜெயச்சந்திரன் அவரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

    இந்த கடன் அனைத்தும் மனைவி மற்றும் மகன்களுக்கு தெரியாமல் வாங்கியுள்ளார். கடனை திருப்பி கேட்ட இன்ஸ்பெக்டருக்கும் , ஜெயச்சந்திரனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரனின் மனைவி கலைவாணி இடம் சென்று ஜெயச்சந்திரன் வாங்கிய கடன் தொகையை திருப்பி கொடுக்குமாறு கூறியுள்ளார்.

    இதனால் ஜெயச்சந்தி ரனுக்கும் அவரது மனைவி கலைவாணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 26-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறிய ஜெயச்சந்திரன் இரவு வீட்டுக்கு செல்லவில்லை. கலைவாணி மற்றும் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் ஜெயச்சந்திரன் இருக்கும் இடம் தெரியவில்லை.

    இந்நிலையில் நேற்று மதியம் கீழூர் அருகே உள்ள சிவரந்தகம் ஏரி கரையில் உள்ள மரத்தில் ஜெயச்சந்திரன் தூக்கில் தொங்கினார். அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து மங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் வேலயன், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசத்தியா மற்றும் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் நெட்டப்பாக்கத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் பல லட்சம் பணம் வாங்கியதும், 3-ம் நம்பர் லாட்டரி போன்ற சூதாட்டத்தில் பணத்தை இழந்ததும் தெரிய வந்தது.

    இதனால் வாங்கிய பணத்தை கொடுக்க முடியாமல் ஜெயச்சந்திரன் கடந்த 3 மாதமாக குடும்பத்தில் உள்ளவர்க ளிடம் சரியாக பேசாமல் இருந்துள்ளார். தான் வாங்கிய கடன் மனைவி மற்றும் மகன்களுக்கு தெரிய வரவே ஜெயச்சந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×