என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • பெண்களுக்கு ஓபன் பிரிவில் போட்டி நடந்தது. போட்டிகளை செல்வகணபதி எம்.பி. தொடங்கி வைத்தார்.
    • மிஸ்டராக லாஸ்பேட்டை முகமது இப்ராகிம், புதுவை மிஸ் ஆக சோனாலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை காந்தி திடலில் தமிழ்நாடு, புதுவை ஓபன் பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் 130-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். ஆண்களுக்கு 55 முதல் 85 கிலோ வரை பல பிரிவுகளில் பாடி பில்டர்ஸ் போட்டி, பெண்களுக்கு ஓபன் பிரிவில் போட்டி நடந்தது. போட்டிகளை செல்கணபதி எம்.பி. தொடங்கி வைத்தார்.

    சங்க தலைவர் பிரகதீஸ்வரன், செய லாளர் ஜெய முனுசாமி, பொருளாளர் ஏழுமலை, தமிழ்நாடு செயலாளர் நாகேஷ் பிரசாத் தலைமை யிலான குழுவினர் நடுவர்களாக இருந்து தேர்வு செய்தனர்.

    பாடிபில்டர்ஸ் போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்தவருக்கு தங்ககாசு, 2-ம் இடம் பிடித்தவருக்கு ரூ.3ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.

    சிறந்த ஆணழகனுக்கு ரூ.10ஆயிரம், புதுவை ஆணழகனுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. சாம்பி யன் ஆப் சாம்பிஷன் பட்டத்தை எல்லை பிள்ளைச்சாவடி பாஸ்கர் பெற்றார்.

    புதுவை மிஸ்டராக லாஸ்பேட்டை முகமது இப்ராகிம், புதுவை மிஸ் ஆக சோனாலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    • புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
    • ஆட்டோ டிரைவர்களுக்கும், வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    சென்னையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் புதுவைக்கு சுற்றுலா வந்து பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு கடற்கரைக்கு வந்தனர்.

    கடற்கரையை சுற்றிப் பார்த்துவிட்டு குடிபோதையில் வந்த அவர்கள் டி.ஜி.பி. அலுவலகம் அருகே வடமாநிலத்தை சேர்ந்த வியாபாரி விற்பனை செய்த சிறிய மேளத்தை இலவசமாக கேட்டனர். வியாபாரி பொருளை தர மறுத்தார். அதனால் இளைஞர்கள் வியாபாரியை தாக்கினர்.

    இதை பார்த்த ஆட்டோ டிரைவர்கள் வியாபாரியை மீட்டு இளைஞர்களை தட்டிக்கேட்டனர். இதில் ஆட்டோ டிரைவர்களுக்கும், வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மோதல் சம்பவத்தை அப்பகுதியில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர். இது வைரலாக பரவியது.

    இதுகுறித்து பெரியகடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • முத்து கிருஷ்ணன், அன்பழகன், சுப்பிரமணியன், செல்வ பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.

    புதுச்சேரி:

    புதுவை தலித் விடுதலைப் பேரவையின் 23-ம் ஆண்டிற்கான மாநில புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் தவளக்குப்பம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் ரோக.அருள்தாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதற்கான தேர்தல் அதிகாரியாக புதுவை மாநில கபடி சங்க பொதுச் செயலாளர் தமிழரசன், நிர்வாக செயலாளர் மணிவண்ணன், ஆகியோர் பங்கேற்றனர்.

    இதில் மாநிலத் தலைவராக மீண்டும் ரோக.அருள்தாஸ் தேர்வு செய்யப் பட்டார். மேலும் மாநில பொதுச் செயலாளராக பொன்னிவேல், பேரவை தலைவராக முருகையன், செயல் தலைவராக பாபு ராஜ் பொன்ரோ, அமைப்புச் செயலாளராக கண்ணன், மாநில அமைப்பாளர் ரஞ்சித், தலைமை நிலைய செயலாளர் இளவயதன், மாநில செயலாளர்கள், பாலச்சந்திரன், மாரியப்பன், ஒருங்கிணைப்பாளர் மகேந்திர வேலன், நிதி செயலாளர் காந்தி, கொள்கை பரப்பு செயலாளர் பரமசிவம், நகர அமைப்பாளர் ஹரிஹரன், நகர செயலாளர் முனியன், ஆலோசனை குழு தலைவர் முத்து என்ற ஆத்தங்கரையான்,

    அரசியல் குழு தலை வராக முன்னாள் கவுன்சிலர் வீரசெல்வம், இளைஞர் அணி தலைவர் மாய கிருஷ்ணன், மாணவர் அணி தலைவர் தமிழ் மன்னன் தொண்டரணி தலைவர் ராஜவேலு, நிர்வாக பொது செயலாளர் போத்திராஜ், நிர்வாகத் தலைவர் ராஜா, தெற்கு மாவட்ட தலைவர் தேவேந்திரன், மாநில தொண்டரணி பொதுச் செயலாளர் அன்பு, மாநில துணை தலைவர்கள் ராஜேந்திரன், தனவேலு நிர்வாக செயலாளர் ராஜா, நிர்வாக தலைவர் கருணாகரன், நிர்வாக அமைப்பாளர் அய்யனார், மாநில பொருளாளராக பாலகிருஷ்ணன், மாநில துணை தலைவர் ஆண்டவர், மாநில துணை அமைப்பாளர் சேஷா, உள்ளிட்ட 55 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அம்பேத்கர் பேரவை தலைவர் திருமால், கலைமணி, முத்து கிருஷ்ணன், அன்பழகன், சுப்பிரமணியன், செல்வ பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.

    முடிவில் மாநிலச் செயலாளர் ரகோத்தமன் நன்றி கூறினார்.

    • ஜிப்மர் இயக்குனருக்கு எதிராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கும் புகார்கள் சென்றது.
    • இயக்குனர் பதவிக்கு தகுதியானோர் வருகிற ஜூலை 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் இயக்குனராக கடந்த 2029-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி ராகேஷ் அகர்வால் நியமிக்கப்பட்டார்.

    ஜிப்மர் இயக்குனராக ராகேஷ் அகர்வால் நியமிக்கப்பட்டப் பிறகு இந்தி கட்டாயம், இலவச மருந்து மாத்திரை விநியோகம் நிறுத்தம், மாத்திரை தட்டுப்பாடு, உயர்சிகிச்சைக்கு ஏழைகளை தவிர்த்து கட்டணம் என அறிவித்து பல சர்ச்சைக்கு உள்ளானார்.

    இதனால் ஜிப்மருக்கு எதிராக அரசியல் கட்சிகளின் போராட்டம் நடந்தது. மத்திய அரசு கூடுதல் நிதி அளித்தும் அந்த நிதியை முறையாக பயன்படுத்தி செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

    ஜிப்மர் இயக்குனருக்கு எதிராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கும் புகார்கள் சென்றது.

    இதனை தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் முன்னிலையில் ஜிப்மர் இயக்குனர் மற்றும் நிர்வாக அதிகாரிகளை அழைத்து விளக்கம் பெறப்பட்டது. கவர்னர் தமிழிசை ஜிப்மர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வும் செய்தார்.

    இந்நிலையில் புதுவை ஜிப்மர் இயக்குனர் மாற்றம் உறுதியாகி உள்ளது. தற்போதைய இயக்குனர் ராகேஷ் அகர்வால் நியமிக்கப்பட்ட காலத்தில் இருந்து 5 ஆண்டுகள் வரை பதவியில் இருக்கலாம். தற்போது அவர் பொறுப்பேற்று 4½ ஆண்டுகள் முடிந்துள்ளது.

    இந்த நிலையில் ஜிப்மர் இணையத்தளத்தில் இயக்குனர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் ஜிப்மர் இயக்குனர் பதவிக்கு தகுதியானோர் வருகிற ஜூலை 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    மருத்துவத்துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றி இருக்கவேண்டும். 10 ஆண்டுகளுக்கு குறையாமல் ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் துறையில் இருந்திருக்க வேண்டும். மருத்துவம் அல்லது அறுவை சிகிச்சை அல்லது பொது சுகாதாரத்தில் உயர் முதுகலைத்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

    சம்பளம் ரூ.2 ½ லட்சத்துக்குள் தரப்படும். ஜிப்மர் வளாகத்தில் குடியிருப்பு விடுதி தரப்படும். வயது 60-க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஜிப்மர் இயக்குனராக 65 வயது வரையிலோ, நியமனத்தில் இருந்து 5 ஆண்டுகள் வரையிலோ பதவியில் இருக்கலாம். நிர்வாக துணை இயக்குனருக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ. வழங்கினார்
    • தி.மு.க. பிரமுகர்கள் பாலா சக்திவேல், சிவப்பிரகாசம், நடராஜன், அச்சுதன், கிருபா, குருநாதன், குமார் மற்றும் தி.மு.க. மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, வில்லியனூர் தொகுதி, கொம்பாக்கம் வார்டு, துர்கா நகர், தி.மு.க. கிளை சார்பில், கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.

    வில்லியனூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 20-–க்கும் மேற்பட்ட அணியினர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா கொம்பாக்கம் துர்கா நகரில் நடந்தது. துர்கா நகர் தி.மு.க. பிரமுகர் ரமேஷ் தலைமை தாங்கினார். எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு தொகை, சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி வாழ்த்தி பேசினார்.

    விழாவில், தி.மு.க. தொகுதி செயலாளர் மணிகண்டன், துணைச் செயலாளர் ஜெகன்மோகன், பொருளாளர் கந்தசாமி, மாநில சுற்றுச்சூழல் அணி துணைத்தலைவர் தேசிகன், கிளைச் செயலாளர் சுரேஷ் அவைத்தலைவர் தேவநாதன், தி.மு.க. பிரமுகர்கள் பாலா சக்திவேல், சிவப்பிரகாசம், நடராஜன், அச்சுதன், கிருபா, குருநாதன், குமார் மற்றும் தி.மு.க. மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • வீரர்களுக்கு சால்வை அணிவித்து அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து தெரிவித்தார்.
    • புதுவை ஒலிம்பிக் சங்க தலைமை செயல் அதிகாரி முத்துகேசவலு ஆகியோர் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் இருந்து முதல் முறையாக ரோலர் ஸ்கேட்டிங் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க புதுவையை சேர்ந்த மெர்லின்தனம், பியுஷாதரனி ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

     மேலும் உலக அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன் ஷிப் போட்டிகளில் பங்கு பெற கிரிதரன், மெர்லின்தனம், பியுஷாதரனி ஆகியோரும் தேர்வாகி உள்ளனர். இவர்கள் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். வீரர்களுக்கு சால்வை அணிவித்து அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் புதுவை ரோலர் ஸ்கேட்டிங் செயலாளர் தாமஸ், புதுவை ஒலிம்பிக் சங்க தலைமை செயல் அதிகாரி முத்துகேசவலு ஆகியோர் பங்கேற்றனர்.

    • துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.
    • தொடர்நோயால் பாதிக்கப்பட்ட 25பயனாளிகளுக்கு நிதியுதவி ஆகியவற்றை வழங்கினார்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கு ம் நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவகத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் ராஜவேலு கலந்துகொண்டு, 27 முடிதிருத்தும் பயனாளிகளுக்கு சுழலும் நாற்காளி மற்றும் உபகரணங்கள், 11 பயனாளிகளுக்கு தவில், 4 பயனாளிகளுக்கு நாதஸ்வரம், 40 பயனாளிகளுக்கு சலவைப்பெட்டி மற்றும்  25பயனாளிகளுக்கு நிதியுதவி ஆகியவற்றை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் துறை அதிகாரிகள் மற்றும் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ரூ.5 லடசத்தை தராமல் ஏமாற்றி வந்ததால் பணம் மோசடி செய்தது குறித்து ஜெயபால் மீண்டும் போலீசில் புகார் அளித்துள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து பாலுவை கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை முத்திரை யர்பாளையம் ஜெயபால் நகரை சேர்ந்தவர் ஜெயபால் என்ற செங்கேணி (வயது 48).

    இவர் நெல்லித்தோப்பு அண்ணாநகரில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் பாலு (47) மற்றும் அவரது மனைவி ஞானமணி ஆகியோரிடம் 2019-ம் ஆண்டு ரூ.1 லட்சம், ரூ.5 லட்சம் ஏலச்சீட்டு கட்டி வந்தார்.

    ஏலச்சீட்டுகள் முடிந்தும் அந்த பணத்தை ஜெய பாலிடம் பாலு தராமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.

    ஜெயபால் பலமுறை பணத்தை திருப்பி கேட்டும் தம்பதியினர் தராததால் இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் ஜெயபால் புகார் அளித்தார். போலீசார் சமரசம் பேசி, பணத்தை கொடுக்குமாறு உத்தர விட்டனர்.

    இதனையடுத்து ஜெய பாலுக்கு, பாலு ரூ.1 லட்சம் மட்டும் கொடுத்துள்ளார். ரூ.5 லடசத்தை தராமல் ஏமாற்றி வந்ததால் பணம் மோசடி செய்தது குறித்து ஜெயபால் மீண்டும் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    அதன் அடிப்படையில் உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலுவை கைது செய்தனர். தலை மறைவாக உள்ள அவரது மனைவி ஞானமணியை தேடி வருகின்றனர்.

    • உறுதுணையாக இருந்த சமூக, பசுமை அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.
    • நகராட்சி சுகாதார துறை அதிகாரி துளசிராமன், கோத்ரெஜ் நிறுவனத்தின் மேலாளர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    இந்தியாவில் தூய்மை யான கடற்கரை நகரங்களில் ஒன்றாக புதுவையை மாற்றும் தொலைநோக்கு திட்டத்தை செயல்படுத்திட பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து தூய்மையான புதுைவயை உருவாக்க கடந்த ஆண்டு நம்ம பாண்டி கிளீன் அறிமுகம் செய்திருந்தது.

    அதன் தொடர்ச்சியாக செயல்திட்டத்தினை அறிவித்ததை போல 75-வது நிகழ்ச்சிகளை நிறைவு செய்தது. இந்நிகழ்ச்சிக்கான உறுதுணையாக இருந்த சமூக, பசுமை அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ. க்கள் அனிபால் கென்னடி, சம்பத், உள்ளாட்சித்துறை இயக்குனர் சக்திவேல், நகராட்சி ஆணையர் சிவக்குமார், நகராட்சி சுகாதார துறை அதிகாரி துளசிராமன், கோத்ரெஜ் நிறுவனத்தின் மேலாளர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • வில்லியனுார் புனித லுார்து அன்னை பள்ளி முதல்வர் அல்வின் அன்பரசு தலைமையில் திருப்பலியும் நடக்கிறது.
    • புதுவை, கடலுார் உயர்மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் பெருவிழா திருப்பலி நடக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவை ஆட்டுப்பட்டியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டு விழா மூலக்குளம் பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ், பங்குதந்தை பெர்க்மான்ஸ் பீட்டர் தலை மையில் கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    இன்று காலை 7 மணிக்கு நைனார்மண்டபம், புனித அன்னை தெரசா பதின்ம மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஆரோக்கிய ஆனந்தராஜ் தலைமையில் திருப்பலியும்,   5 மணிக்கு வில்லியனுார் புனித லுார்து அன்னை பள்ளி முதல்வர் அல்வின் அன்பரசு தலைமையில் திருப்பலியும் நடக்கிறது.

    நாளை (திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்கு தேர்பவனியும், வெள்ளக்குளம் பங்கு தந்தை ஜீவா எட்வர்டு எடி சன் தலைமையில் திருப்பலி நடக்கிறது. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 6.30 மணிக்கு பெத்தி செமினேர் மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர் ஜான்பால் தலைமையில் திருப்பலியும், மாலை 5.30 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடக்கிறது. தொடர்ந்து, 6.30 மணிக்கு புதுவை, கடலுார் உயர்மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் பெருவிழா திருப்பலி நடக்கிறது.

    • ரகு வேலை விஷயமாக லிங்காரெட்டிப்பாளையம் செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
    • காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் ராமநாதபுரம் ரைஸ்மில் ரோட்டை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி பச்சையம்மாள்.

    இவர் தனது தாய் அமலமேலு தம்பி ரகு (வயது42) ஆகியோருடன் வசித்து வருகிறார். வெல்டிங் தொழிலாளியான ரகுவிற்கு இன்னும் திருமணமாகவில்லை.  ரகு வேலை விஷயமாக லிங்காரெட்டிப்பாளையம் செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    மது போதையில் அவர் பாலத்தில் நடந்து வந்தபோது தவறி விழுந்தார். இதனை கண்டவர்கள் அவரை மீட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரகு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவில் விழாவுக்கு மின்விளக்கு அலங்காரம் செய்த போது பரிதாபம்.
    • இது குறித்து சேதராப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான வானூர் அருகே காட்ராம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் குமார். (வயது 32) இவர் சேதராப்பட்டில் உள்ள தனியார் சவுண்டு சர்வீஸ் உரிமையாளர் சங்கரிடம் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தார்.

    சேதராப்பட்டு அருகே கரசூரில் முத்து மாரியம்மன் கோவில் விழாவுக்காக நேற்று சதீஷ் குமார் மின் விளக்கு அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென மின் கசிவு ஏற்பட்டு சதீஷ்குமாரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அங்கிருந்தவர்கள்அவரை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சதீஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சேதராப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×