என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பயனாளிகளுக்கு தவில், நாதஸ்வரம்
    X

    பயனாளிகளுக்கு இசை கருவிகளை துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கிய காட்சி.

    பயனாளிகளுக்கு தவில், நாதஸ்வரம்

    • துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.
    • தொடர்நோயால் பாதிக்கப்பட்ட 25பயனாளிகளுக்கு நிதியுதவி ஆகியவற்றை வழங்கினார்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கு ம் நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவகத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் ராஜவேலு கலந்துகொண்டு, 27 முடிதிருத்தும் பயனாளிகளுக்கு சுழலும் நாற்காளி மற்றும் உபகரணங்கள், 11 பயனாளிகளுக்கு தவில், 4 பயனாளிகளுக்கு நாதஸ்வரம், 40 பயனாளிகளுக்கு சலவைப்பெட்டி மற்றும் 25பயனாளிகளுக்கு நிதியுதவி ஆகியவற்றை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் துறை அதிகாரிகள் மற்றும் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×