என் மலர்
புதுச்சேரி

கென்னடி எம்.எல்.ஏ. பாராட்டி பரிசுகள் வழங்கிய காட்சி.
தன்னார்வலர்களுக்கு கென்னடி எம்.எல்.ஏ. பாராட்டு
- உறுதுணையாக இருந்த சமூக, பசுமை அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.
- நகராட்சி சுகாதார துறை அதிகாரி துளசிராமன், கோத்ரெஜ் நிறுவனத்தின் மேலாளர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
இந்தியாவில் தூய்மை யான கடற்கரை நகரங்களில் ஒன்றாக புதுவையை மாற்றும் தொலைநோக்கு திட்டத்தை செயல்படுத்திட பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து தூய்மையான புதுைவயை உருவாக்க கடந்த ஆண்டு நம்ம பாண்டி கிளீன் அறிமுகம் செய்திருந்தது.
அதன் தொடர்ச்சியாக செயல்திட்டத்தினை அறிவித்ததை போல 75-வது நிகழ்ச்சிகளை நிறைவு செய்தது. இந்நிகழ்ச்சிக்கான உறுதுணையாக இருந்த சமூக, பசுமை அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ. க்கள் அனிபால் கென்னடி, சம்பத், உள்ளாட்சித்துறை இயக்குனர் சக்திவேல், நகராட்சி ஆணையர் சிவக்குமார், நகராட்சி சுகாதார துறை அதிகாரி துளசிராமன், கோத்ரெஜ் நிறுவனத்தின் மேலாளர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story






