என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • விவசாயிகள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாமல், நிதி உதவியை பெற இயலவில்லை.
    • கிராம அஞ்சல் ஊழியரை அணுகி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.

    புதுச்சேரி:

    புதுவை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் துரைராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் இந்த மாதம் வழங்க உள்ள 13-வது தவணைத் தொகையை பெறுவதற்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம். எனவே விவசாயிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர்கள், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.

    மேலும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையில் பெறப்பட்ட தகவலின்படி, புதுவை அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி பகுதிகளில் சுமார் 7 ஆயிரம் விவசாயிகள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாமல், நிதி உதவியை பெற இயலவில்லை.

    அவர்கள் அனைவரும் உடனடியாக அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கினை தொடங்கி உதவித்தொகையை பெற இயலும். தபால்காரர்கள், கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோ மெட்ரிக் எந்திரம் மூலம் விவசாயிகள் தங்களின் ஆதார் மற்றும் செல்போன் எண்னை மட்டும் பயன்படுத்தி விரல் ரேகை மூலம் சில நிமிடங்களில் வங்கி கணக்கினை தொடங்கி பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திடீரென்று இருப்பிட சான்று கைப்பட எழுதிக் கொடுப்பதற்கு காரணம் என்ன?
    • கையால் பெறப்பட்ட சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆராய வேண்டும்.

    புதுச்சேரி:

    சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆஃப் இந்தியா (சுசி) மாநிலச் செயலாளர் லெனின்துரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பள்ளிக் கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர் கல்வி பெற சாதி, இருப்பிட சான்றிதழ்களை தாலுக்கா அலுவலகங்களில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வருவாய்துறை ஆன்லைன் மூலம் வழங்கி வந்தது. தற்போது ஆன்லைன் மூலம் சாதி சான்றிதழ் மட்டும் வழங்கிவிட்டு இருப்பிட சான்றுகளை கைப்பட எழுதி கொடுக்கிறார்கள்.

    திடீரென்று இருப்பிட சான்று கைப்பட எழுதிக் கொடுப்பதற்கு காரணம் என்ன? கணினி சர்வர் பாதிக்கப்பட்டு இருப்பதால் கையால் எழுதி கொடுப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

    சென்டாக் மூலம் விண்ணப்பம் கொடுப்பதற்கு ஒரு சில தினங்கள் இருக்கின்ற சூழலில் இருப்பிடச் சான்று சான்றிதழ் கையால் எழுதிக் கொடுப்பதற்கு ஏதோ உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது. கடந்த காலங்களில் சென்டாக் மாணவர் சேர்க்கையில் மோசடி செயல்கள் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ இடங்களை அபகரித்த செயல்கள் மக்களுக்கு தெரியும. அதுபோன்ற மோசடி சான்றிதழ்கள் பெறுவதற்கான முயற்சி நடக்கும் என்ற அச்சம் மக்கள் மத்தியிலே நிலவுகிறது. ஆகவே, கையால் எழுதிக் கொடுக்கும் சான்றிதழ் முறையை ரத்து செய்து ஆன்லைன் மூலம் வழங்க வேண்டும். கையால் பெறப்பட்ட சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆராய வேண்டும்.

    இவ்வாறு லெனின்துரை அறிக்கையில் கூறியுள்ளார்.

    • நோய் குணமாகவில்லை. இதனால் குப்பம்மாள் மன உளைச்சலில் இருந்து வந்தார்.
    • மனைவி தூக்கில் தொங்கு வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை உழவர்கரை 4 வது தெருவை சேர்ந்தவர் சரவணன். இவர் பொதுப்பணித்துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி குப்பம்மாள் (வயது 51) இவர் புதுவை மரியாள் நகரில் உள்ள அங்கவாடி மையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

    இவர்களுக்கு காயத்திரி என்ற மகள் உள்ளார். இவர் புதுவை என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    குப்பம்மாளுக்கு கடந்த சில ஆண்டுகளாக நீரழிவு நோய் மற்றும் ரத்த அழுத்த நோய் இருந்து வந்தது. இதற்காக அவர் மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார். ஆனாலும் நோய் குணமாகவில்லை. இதனால் குப்பம்மாள் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த குப்பம்மாள் வீட்டின் மாடியில் மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார். வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய சரவணன் மனைவியை காணாததால் மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது மனைவி தூக்கில் தொங்கு வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குப்பம்மாளை தூக்கில் இருந்து மீட்டு கதிர்காமம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குப்பம்மாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் ரெட்டியார் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடலோர சமூகங்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் ஆகியோருடன் மந்திய மந்திரிகள் கலந்துரையாடினர்.
    • அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் மாகி துறைமுக பகுதியை ஆய்வு செய்தனர்.

    புதுச்சேரி:

    "சாகர் பரிக்ரமா" என்ற கடலோர பயண நிகழ்ச்சியை இந்திய அரசின் மீன்வளத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி புதுவையின் மாகி பிராந்தியத்திற்கு மத்திய மீனவர் மற்றும் கால்நடை வளர்ப்பு துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபலா மற்றும் மத்திய மீன்வளத்துறை இணை மந்திரி முருகன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மாகி சென்றனர். அவர்களை புதுவை மீனவளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் வரவேற்றார். அதனை தொடர்ந்து அங்குள்ள மீனவர்கள், கடலோர சமூகங்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் ஆகியோருடன் மந்திய மந்திரிகள் கலந்துரையாடினர்.

    அதன் பின்னர், மத்திய மந்திரிகளுடன், புதுவை மீன் வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் மாகி துறைமுக பகுதியை ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது மாகி பிராந்திய நிர்வாகி சிவ்ராஜ் மீனா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • ஊர்க்காவல் படைவீரர் தேர்வில் வெற்றி பெற்று ஊர்க்காவல் படைவீரராக பணியில் சேர்ந்தார்.
    • ஆரம்பத்தில் பயிற்சி சிரமமாக இருந்தாலும் பாடங்களைப் படிக்க படிக்க ஆர்வம் அதிகரித்தது என்றார்.

    புதுச்சேரி:

    புதுவை போலீஸ்துறையில் கடந்த 2022-ம் ஆண்டு பணியில் சேர்ந்த 382 போலீசாருக்கு கோரிமேடு போலீஸ் பயிற்சி பள்ளியில் ஓராண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

    பல்வேறு பயிற்சிகள் பெற்ற போலீசாருக்கான பயிற்சி நிறைவு விழா நடந்தது. இதில் போலீஸ் நிர்வாகம், செயல்பாடுகள், சிறப்பு சட்டங்கள் ஆகிய 3 பிரிவுகளில் ராஜேஸ்வரி என்ற பெண் போலீஸ் சிறப்பிடம் பிடித்தார். அதோடு பெஸ்ட் இன் இன்டோர் என்ற பரிசையும் ராஜேஸ்வரி வென்றார்.

    மேலும் பயிற்சி பெற்றவர்களில் பெஸ்ட் ஆல் ரவுண்டராக ராஜேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதற்கிடையே தகுதி இல்லை என நிராகரிக்கப்பட்ட பிறகும் போராடி ராஜேஸ்வரி வெற்றி பெற்றுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    புதுவை முத்திரையர் பாளையம் சாணரபேட்டை புதுதெருவை சேர்ந்த ராஜேஸ்வரி கடந்த 2015-ம் ஆண்டு நடந்த போலீஸ் மற்றும் ஊர்க்காவல் படைவீரர் தேர்வுக்கு விண்ணப்பித்தார்.

    எஸ்.எஸ்.எல்.சி. முடித்து டிப்ளமோ படித்திருந்த ராஜேஸ்வரிக்கு போலீஸ் பணிக்கு பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதால் நிராகரிக்கப்பட்டார். ஆனாலும் ஊர்க்காவல் படைவீரர் தேர்வில் வெற்றி பெற்று ஊர்க்காவல் படைவீரராக பணியில் சேர்ந்தார்.

    அதோடு சென்னை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்த ராஜேஸ்வரி தனது கல்வித்தகுதி பிளஸ்-2 வுக்கு சமமானது என தீர்ப்பும் பெற்றார். ஆனால் தீர்ப்புக்கு முன்பு போலீஸ் பணிக்கான தேர்வு முடிந்துவிட்டது. இருப்பினும் மனம் தளராத ராஜலட்சுமி 2015 முதல் 2022-ம் ஆண்டு வரை 7 ஆண்டுகள் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றினார்.

    இந்நிலையில் கடந்த ஆண்டு போலீஸ் பணிக்கான உடல் தகுதி தேர்வில் பங்கேற்க ராஜேஸ்வரிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த தேர்வில் வெற்றி பெற்ற ராஜேஸ்வரி கோரிமேடு போலீஸ் பயிற்சி பள்ளியில் சேர்ந்து ஓராண்டு பயிற்சி பெற்று பெஸ்ட் ஆல் ரவுண்டர் என்ற விருதையும் பெற்றுள்ளார்.

    இவரது கணவர் செந்தில் தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றுகிறார். இவர்களுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது.

    ஊர்க்காவல் படையில் இருந்த போது பல்நோக்கு பணியாளர் பணிக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் போலீசில் சேர வேண்டும் என்ற வைராக்கியத்தில் அந்த வாய்ப்பை உதறினேன். ஆரம்பத்தில் பயிற்சி சிரமமாக இருந்தாலும் பாடங்களைப் படிக்க படிக்க ஆர்வம் அதிகரித்தது என்றார். 

    • மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்றது.
    • மேம்பாட்டு துறையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் விஜயராகவன் உட்பட பேராசிரியர்கள் கலந்துகொண்டு பாராட்டு தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத்துறையை சேர்ந்த இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களான ரகுநாத் மற்றும் பாலாஜி ஆகியோர் இணைந்து அனைத்து செயல்பாடுகளும் ஒரே இணைய பக்கத்தில் மேற்கொள்ளும் வகையில் ஆல் இன் ஒன் வெப் பேஜ் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

    தகவல் தொழில்நுட்பத்துறையின் உதவி பேராசிரியை ரம்யா வழிகாட்டுதலின்படி மாணவர்கள் கண்டுபிடித்த இந்த ஆல் இன் ஒன் வெப்பேஜ் குறித்த செயல்விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மயிலம் கல்வி குழுமத்தின் தலைவர் மற்றும் மேலான் இயக்குனர் தனசேகரன், துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன். கல்லூரியின் இயக்குனர் செந்தில், முதல்வர் ராஜப்பன், தகவல் தொழில்நுட்பத்துறையின் துறைத்தலைவர் கலைவாணி கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் விஜயராகவன் உட்பட பேராசிரியர்கள் கலந்துகொண்டு பாராட்டு தெரிவித்தனர்.

    நம் அன்றாட கணினி சார்ந்த செயல்பாடுகளை ஒரே இணைய பக்கத்தில் மேற்கொள்ளும் வகையில் அனைத்து விதமான வசதிகளும் அமைந்துள்ளதால் பயனாளர்களுக்கு சிரமமின்றி எளிதில் நிறைவேற்றும் வகையிலும் இந்த ஆல் இன் ஒன் வெப்பேஜ் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை
    • தற்போது பள்ளி திறக்கும்நேரத்தில் பள்ளி மாணவர் அமைச்சரிடம் நேரடியாக புகார் கூறினார்.

    புதுச்சேரி:

    மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் 100 நாள் வேலை திட்ட பணிகளை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.

    அப்போது அமைச்சர் நமச்சிவாயத்திடம் ஒரு அரசு பள்ளி மாணவர் வந்து பேசினார். பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவு கலவை சாதம் நன்றாக உள்ளது. ஆனால் சாம்பார் சாதம் நன்றாக இல்லை. சாம்பார் சாதம் வழங்கும் நாளில் சரியாக அரிசி வேகவில்லை, சுவையும் குறைவாக உள்ளது என புகார் தெரிவித்தார்.

    ஏற்கனவே அக்சயபாத்திரம் தொண்டு நிறுவனம் அரசு பள்ளிகளுக்கு மதிய உணவை தயாரித்து வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் சைவ உணவுகளை மட்டுமே வழங்கும்.

    இதனால் மாணவர்களுக்கு முட்டை கிடைக்கவில்லை என புகார் எழுந்தது. இதனால் பகுதிநேர ஊழியர்களை கொண்டு பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்கப்பட்டு வருகிறது.

    அரசியல் கட்சியினரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சாதம் சுவையாக இல்லை என சட்டசபையில் புகார் கூறியிருந்தனர். தற்போது பள்ளி திறக்கும்நேரத்தில் பள்ளி மாணவர் அமைச்சரிடம் நேரடியாக புகார் கூறினார்.

    இதையடுத்து அமைச்சர் நமச்சிவாயம் அக்சய பாத்திரம் நிறுவனத்தினரை அழைத்து பேச இருப்பதாக தெரிவித்துள்ளார். சாம்பார் தனியாகவும், சாதம் தனியாகவும் வழங்க முடியுமா? என அமைச்சர் ஆலோசித்து வருகிறார். 

    • பேனர் வைக்கப்படுவதை தடுக்க புதுவை அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
    • கடலூர்- பாண்டி மெயின் ரோடு பகுதியில் உள்ள பேனர்களை அதிரடியாக அகற்றி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம், தவளக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திருமணம், கோவில் திருவிழா, அரசியல் தலைவர்கள் பிறந்தநாள், வரவேற்பு என பல இடங்களிலும் பேனர்கள் வைக்கப்பட்டு இருப்பதால் போக்குவரத்து இடையூறும் மற்றும் விபத்துக்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. இதனை தடுக்க நீதிமன்றம் உத்தரவை மீறி பேனர் வைக்கப்படுவதை தடுக்க புதுவை அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் உத்தரவின் பெயரில் வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், கந்தவேல், இளநிலை எழுத்தர் சி செழியன் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    அரியாங்குப்பம், தவளக்குப்பம் கடலூர்- பாண்டி மெயின் ரோடு பகுதியில் உள்ள பேனர்களை அதிரடியாக அகற்றி வருகின்றனர். மேலும் பிரச்சினை ஏதும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணியில் அறியாங்குப்பம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மக்கள் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தல்
    • புதுவையிலும் பேனர் தடை சட்டம் நடைமுறையில் இருந்தும், எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

    புதுச்சேரி:

    மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகன்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் அனுமதியின்றி பேனர் மற்றும் விளம்பரப் பலகைகள் வைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதை வரவேற்கிறோம். புதுவையிலும் பேனர் தடை சட்டம் நடைமுறையில் இருந்தும், எந்த நடவடிக்கையும் எடுப்ப தில்லை.

    தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை பின்பற்றி, புதுவையில் உள்ள அனைத்து பொது இடங்களிலும், சாலை ஓரங்களிலும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர பேனர் மற்றும் கட் அவுட்டுகளையும் போர்க்கால அடிப்படையில் தொடர்ச்சியாக அகற்றிட வேண்டும். அனுமதி இன்றி பேனர் வைத்த அனைவர் மீதும் பாகுபாடு இன்றி வழக்கு மற்றும் அபராதம் விதிக்க வேண்டும்.

    புதுவை அரசு, மாவட்ட நிர்வாகம் 15 நாட்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அனைத்து சட்டவிரோத விளம்பர கட் அவுட் பேனர்களையும் அகற்றாவிட்டால், மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

    • அனைத்து மீனவ சங்கம் தீர்மானம்
    • இது மத்திய அரசு இடஒதிக்கீட்டின் வழிக்காட்டு முறைப்படியே அமைத்துள்ளது, இதனால் இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வழியில்லை.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரை சாலை செல்வராசு செட்டியார் வளாகத்தில், அனைத்து மீனவ சங்கங்களின் கூட்ட மைப்பின் செயற்குழு கூட்டம் நடந்தது.

    இக்கூட்டத்தில் வழிகாட்டு குழு உறுப்பினர்கள் பச்சையப்பன், குமார், செல்வநாத், உத்திராடம், பாஸ்கரன், வேலு, வடிவேல், கதிரவன், ஜெயவீரன், தலைவர் குமரன், பொதுச் செயலாளர் பெரியாண்டி, பொருளாளர் தேவநாதன், அவைத் தலைவர் ஆறுமுகம், அமைப்பாளர் வெங்கடேசப்பெருமாள், துணைத் தலைவர் மூர்த்தி, இணைப் பொதுச் செயலாளர் நிர்வாகிகள் நடராஜன், அன்பரசன், வேலுமணி, சிவராமன், கனகராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் புதுவை மற்றும் காரைக்கால் மீனவர்களுக்கு ஈ.பி.சி அதாவது மிக மிக பின்தங்கிய பிரிவினர் என்ற பெயரில் 2 சதவீத இடஒதிக்கீடு புதுவை அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

    இது எம்.பி.சி மிகவும் பின்தங்கியவர் பிரிவில் இருந்து உள்ஓதிக்கீடாக பிரித்து கொடுக்கப்பட்டது. அப்படி கொடுக்கும் போது, சரியான மக்கள் தொகை கணக்கெடுத்து மக்கள் தொகைக்கேற்ப பின்னர் இந்த ஒதுக்கீடு உயர்த்திக் கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியின் பெயரில் கொடுக்கப்பட்டது.

    அதே வாக்குறுதியை தற்போது ஆட்சியில் உள்ள கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் இது உயர்த்தப் படாமலே உள்ளது. எனவே இந்த 2 சதவீத குறைந்த ஒதுக்கீட்டினால் பாதிக்கப் படுவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது.

    எம்.பி.சியிலே இருந்தி ருந்தால் நாம் பாதிப்படைந்து இருக்க மாட்டோம். அரசாங்கம் நம்மை வஞ்சித்து விட்டது என்று மீனவமக்கள் கருதத் தொடங்கி யுள்ளனர். இந்நிலையில் இந்த 2 சதவீதம் ஈ.பி.சி ஓதுக்கீடு எங்களுக்கு வேண்டாம். எங்களை மறுபடியும்

    எம்.பி.சியிலேயே சேர்த்து விடுங்கள் என்று காரைக்கால் மீனவர்கள் அனைவரும் தீர்மானித் துள்ளனர், இதுகுறித்து முன்னாள் எம்.பி. ராமதாஸ் விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    புதுவை மீனவர்களி டையேயும் இத்தகைய அதிருப்தியும் எதிர்ப்பும் அதிகரித்த வண்ணமாய் உள்ளதால், அனைத்து மீனவ இயக்கங்களின் கூட்ட மைப்பின் செயற்குழு அரசுக்கு கீழ்காணும் கோரிக்கைகளை முன் வைக்கிறது.

    உடனடியாக ஈ.பி.சி இடஒதுக்கீட்டின் அளவை 5 சதவீதம் ஆக உயர்த்த வேண்டும். மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீத மீனவர்கள் இருக்கிறார்கள். மாநிலத்தின் 3-வது பெரிய சமுதாயம் மீனவ சமுதாயம் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே அதில் 50 விழுக்காடு 5 சதவீதமாக இருப்பதால், இது மத்திய அரசு இடஒதிக்கீட்டின் வழிக்காட்டு முறைப்படியே அமைத்துள்ளது, இதனால் இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வழியில்லை.

    2-வது, ஒருவேளை 2 சதவீத இட ஒதுக்கீடு தொடர வேண்டும் என்றால், ஈ.பி.சி ஒதுக்கீட்டை எம்.பி.சி பிரிவுக்குள்ளே கிடைமட்ட ஒதுக்கீடாக வைக்க வேண்டும். அதாவது ஏ.பி.சி ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காதவர்களுக்கு

    எம்.பி.சியில் இடம் கிடைக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும். என்பன உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • அவரது வயிற்றின் அடிப்பகுதியில் மர்ம பொருள் இருப்பதை மருத்துவர்கள் கண்டு பிடித்தனர்.
    • நீதிமன்றத்தில் கைதிக்கு கஞ்சா கொடுத்தது யார் என்பது குறித்தும் நீதிமன்றத்தில் பதிவாகியுள்ள சி.சி.டி.வி காட்சியை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 300-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் 100-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் உள்ளனர்.

    போக்சோ வழக்கில் சிறையில் உள்ள தவக்குப்பத்தைச் சேர்ந்த புண்ணியகோடி மகன் பாலமுருகன் (வயது 23), போலீஸ் பாதுகாப்புடன் வழக்கு விசாரணைக்காக  புதுச்சேரி நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

    வழக்கு விசாரணை முடிந்து பின்னர் காலாப்பட்டு மத்திய சிறைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு சிறை காவலர்கள் அவரை வழக்கம் போல் சோதனை செய்தனர். சோதனையில் பாலமுருகனின் உடலில் வழக்கத்திற்கு மாறான மாற்றம் இருந்தது.

    சந்தேகம் அடைந்த சிறை காவலர்கள் இதுகுறித்து சிறை சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு தகவல் தெரிவித்தனர். கைதி பாலமுருகனிடம் சிறை சூப்பிரண்டு பாஸ்கரன் விசாரணை நடத்திய போது அவர் எதுவும் சொல்லவில்லை. உடனே பாலமுருகனை கணபதி செட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்து வமனைக்கு அழைத்துச் சென்று அவரது உடலை ஸ்கேன் செய்தனர்.

    அப்பொழுது அவரது வயிற்றின் அடிப்பகுதியில் மர்ம பொருள் இருப்பதை மருத்துவர்கள் கண்டு பிடித்தனர்.

    அப்போதுதான் கைதி பாலமுருகன் நடந்தவற்றை கூறினார், பல்வேறு கொலை வழக்குகளில் சிறையில் உள்ள மதகடிப்பட்டு பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜனா என்கிற ஜனார்த்தனன் உத்தரவின் அடிப்படையில் கைதி பாலமுருகன் கோர்ட்டில் ஆஜராகும் பொழுது ஒருவர் 50 கிராம் கஞ்சாவை கொடுத்ததும், அந்த கஞ்சா பொட்டலத்தை நீதிமன்றத்தில் உள்ள கழிவறையில் தனது ஆசனவாய் வழியாக செலுத்தியதும் தெரிய வந்தது. நடிகர் சூர்யா படித்த அயன் திரைப்படத்தில் போதை பொருளை வெளியே எடுப்பதற்காக 'இனிமா' என்னும் மருந்தை கொடுப்பதை போல் கைதி பாலமுருகனுக்கும் மருத்து வர்கள் 'இனிமா' கொடுத்து வயிற்றின் அடிப்பகுதியில் இருந்த 50 கிராம் கஞ்சா பொட்டலத்தை வெளியே எடுத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து சிறை சூப்பிரண்டு பாஸ்கரன் கொடுத்த புகாரின் பேரில் காலாப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து கைதிகள் பாலமுருகன், ஜனா என்கிற ஜனார்த்தனன் ஆகிய 2 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

     நீதிமன்ற உத்தரவு பெற்று இருவரையும் கைது செய்கின்றனர். மேலும் நீதிமன்றத்தில் கைதிக்கு கஞ்சா கொடுத்தது யார் என்பது குறித்தும் நீதி மன்றத்தில் பதிவா கியுள்ள சி.சி.டி.வி காட்சியை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ வேலை நடக்கிறது.
    • முன்னாள் வாரிய தலைவர் பாலமுருகன் மற்றும் ஊழியர்கள் என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் மங்கலம் தொகுதிக்கு உட்பட்ட கணுவாபேட்டை, உருவையாறு ஆகிய 2 கிராமங்களில் உள்ள சாலை குளம் உள்ளிட்ட பகுதிகளை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ வேலை நடக்கிறது.

    இந்த திட்டத்தை தொகுதி எம்.எல்.ஏவும், வேளாண்துறை அமைச்சருமான தேனீ.ஜெயக்குமார் பூஜை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், வில்லியனூர் வட்டார வளர்ச்சி அதிகாரி ராஜேந்திரன், உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் தன்ராஜ், முன்னாள் வாரிய தலைவர் பாலமுருகன் மற்றும் ஊழியர்கள் என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×